Thursday, April 30, 2015

எழில் அவர்களின் பெண்கள்தினக் கலந்துரையாடல்!

பல பெண்கள், மற்றும் ஆண்கள் பெண்ணியம் பேசுவது, பெண்கள் பிரச்சினைகள் பற்றி அலசுவது விவாதிப்பதெல்லாம் நாம் பல நேரங்களில் கண்டிருப்போம்.

* மும்பைக் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த சினிமா நடிகை குஷ்பு வந்து தானறியாத தமிழ்க் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த தமிழர் தமிழச்சிகள் கற்பு பத்தி பேசியது.

* சுஹாஷினினு இன்னொரு மேட்டுக்குடியில் பிறந்து வளர்ந்த நடிகை, மேலும் தமிழனுக்கு மட்டும் கொம்பு முளைத்துள்ளதா? என்றெல்லாம்  விமர்சித்த நடிகை, பெண்ணுரிமை பற்றி பேசுறேன்னு உளறியது.

* மனோதத்துவம் படித்த டாக்டர் ஷாலினி அவர்தளத்தில் ஏதோ பெண்கள் மனநிலையை திடப்படுத்துவதாகச் சொல்லி கட்டுரை எழுதுறேன்னு எழுதி  நல்ல மனநிலையில் உள்ள எல்லோரையும் ஏர்வாடிக்கு அனுப்ப முயல்வது.

* கல கலப் பிரியானு ஐரோப்பாவில் குடிபுகுந்த ஜீன்ஸ் போட்ட தமிழ் கவிதாயினி  இதுதாண்டா கலாச்சாரம்னு தொடர்ந்து பல "எபிசோட்"கள் எழுதி பெண்ணியம் பேசிக் கிழிச்சது

இதை எல்லாம் நாம்  பார்த்து இருக்கிறோம். பார்த்துவிட்டு பொதுவாக தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஆண்களுக்கு என்ன தோனும்னா  "இவங்க எல்லாம் பெண்ணியம் பேசாமல் இருந்தால் பெண்களை ஆண்கள் பல மடங்கு மதிப்பார்கள், அவ்ர்கள் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்வார்கள்" என்று தோன்றும்.

ஆனால், மொழிவது அறம் நிகழ்ச்சியில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடும் எழில் அவர்களும் மற்றும் அவர்கள் தோழிகளும் விவாதிப்பது , மற்றும் கலந்துரையாடுவதைக் காணும்போது, உண்மையிலேயே யாரு பெண்கள் பிரச்சினைகளை பேசத் தகுதி பெற்றவர்ளோ அவர்களே சிரத்தையுடன் இப்பிரச்சினைகளை முன் வைத்துப் பேசுவது போலிருக்கிறது. மேலும் பேசவேண்டிய பிரச்சினைகளை முன் வைத்து அழகாக கலந்துரையாடல் செய்ததுபோல் எனக்குத் தோன்றியது.

எழில் அவர்கள் இந்த காணொளியை அவர் தளத்தில் தந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தக் காணொளியைப் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி  பார்க்காதவர்கள் பலர் இதைக் காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.


 இந்த காணொளி நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக எனக்குத் தோன்றியது. உங்களுக்கு நேரம் கிடைகும்போது தயவு செய்து இந்தக் காணொளியைக் கண்டு மகிழுங்கள். உங்கள் விமர்ச்னத்தையும் இங்கு வைக்கலாம் அல்லது எழில் அவர்கள் தளத்தில் போயி நேரிடையாக அவர்களை வாழ்த்தலாம். நன்றி.

நல்வாழ்த்துகள், எழில் அவர்களே!

12 comments:

NewWorldOrder said...

Good conversation!

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிகழ்காலம் எழில் அவர்களை பதிவர் சந்திப்பில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன்.இணையப் பெண்களில் பெரியார் பற்றி எழுதியவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு வாழ்த்துகள்.

வருண் said...

***NewWorldOrder said...

Good conversation!***

Very true. ஹோஸ்ட் முதல்க்கொண்டு யாருமே விளம்பர விரும்பிகளாகத் தோனவில்லை. "ஜெனியூனாக" இந்தப் பிரச்சினையை அனுகியதுபோல் இருந்தது.

I will share my criticisms later. :)

வருண் said...

*** Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்***

நன்றி, யாழ்பாவணன். :)

வருண் said...

வாங்க முரளி.

எழிலுடைய "பெரியாரிய"ப் பதிவுகளை நான் வாசித்ததில்லை. ஆனால் சில பின்னூட்டங்களில் சக பதிவர்கள் (மைதிலி?) அதை சொல்லும்போது கவனித்து இருக்கிறேன்.

மாதொரு பாகன் கதை விமர்சனத்தில் அவருக்கு எதிர் கருத்து வைத்துள்ளேன். மற்றபடி இந்தக் காணொளி அவர் சிந்ந்தனைகளைத் தெளிவாக சொல்லுகிறது. நான் கற்றுக்கொள்கிறேன்.:)

Angel said...

ஆமாம் வருண் .அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் மிக அருமையா பேசினாங்க

வருண் said...

***Angelin said...

ஆமாம் வருண் .அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் மிக அருமையா பேசினாங்க ***

முற்றிலும் உண்மைங்க ஏஞ்சலின். தேவையான ஒரு கருத்தரங்கம். நல்ல கருத்துக்கள்.

ஹாட்ஸ் ஆஃப் டு தெம்!

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அருமை...

பதிவர் சந்திப்பில் பேசியுள்ளேன்...

சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

சகோதரி எழில் அவர்களின் வலைப் பக்கத்தில் பதிவுகளை படித்து வியந்துள்ளேன்! ஒருமுறை பதிவர் சந்திப்பிலும் சந்தித்துள்ளேன்! காணொளியை முழுமையாக பார்க்கவில்லை! நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

ezhil said...

மிக்க நன்றி வருண். என்னுடன் பேசியவர்கள் அனைவருமே ஏதோ ஒரு தளத்தில் சமூகக் நோக்குடன் இயங்கி வருபவர்களே.. அனைவரின் விவாதம் குறித்து நீங்கள் பாராட்டியமைக்கு மிக்க நன்றி. என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு நிகழ்வை விமர்சிப்பதும் அவரவரின் கண்ணோட்டம்(perception) அவர்கள் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் பரந்துபட்ட அறிவும் சார்ந்ததாக உணர்கிறேன். எனவே என்னுடைய எண்ணமே என்றாலும் அதன் எல்லைகள் ஏன்,எதுவென்று உணர்கிறேன். அதனால் கருத்துச் சார்ந்த மோதல்கள் இயல்பே. அதிலிருந்து யார் வளர்ந்து வளார்த்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பகிர்தலுக்கு மிக்க நன்றி. நிகழ்வைப் பார்த்துக் கருத்திட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி

SathyaPriyan said...

அருமையான காணொளி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

இறைவி அவர்கள் தேவதாசி முறையை பற்றி சொன்னது பொட்டில் அடித்தது போல இருந்தது.