Sunday, June 2, 2019

ஜானகிராமன் கதைகள் விமர்சனம்-1

அம்மா வந்தாள்!  நாயகி பெயர் அலங்காரம். கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெயர். லக்‌ஷ்மி, சரஸ்வதி, கமலா என்கிற பெயரெல்லாம் விட்டு விட்டு அலங்காரம். அப்படினா லக்‌ஷ்மி, சரசுவதினு வச்சா காமம் அல்லது காதல்ல விழமாட்டாங்கனு சொல்ல வரவில்லை. ஜானகி ராமன் ஒரு ஆச்சாரமான பார்ப்பனர்தானே? அதான் கடவுள் பெயரெல்லாம் கவனமாக விட்டுவிட்டு இந்த "அலங்காரத்தை" தேர்ந்தெடுத்து தேவடியாள் னு கணவன் தண்டபாணி மூலமாக வர்ணீப்பார்.

கதை? ஒண்ணும் பெருசா இல்லை. அலங்காரத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபயர்.. சிவசு னு ஒரு பணக்கார ஆள் இடம்.  இது கணவன் தண்டபாணிக்கும் தெரியும். ஒண்ணும் செய்ய முடியவில்லை. விட்டு விட்டார் "என்னனு போ" னு. பெருந்தன்மை எல்லாம் இல்லை. வேற வழியில்லை! ஒரு வேளை தன்னால் அவள் தேவைகள் (காமம், பணம், அவள் வைக்கும் ஒப்பாரி களை எல்லாம், ஹூம் ஹூம்னு சகித்துக்கொண்டு கேட்பது போன்ற) அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லையோ? என்கிற கில்ட்டி உணர்வாக்கூட இருக்கலாம்.

ஆமா, ஆம்பளைங்களால் பெண்களை என்ன செய்ய முடியும்? ஒரு பெண் இன்னொருவரை விரும்பினாள்? அதுவும் மனைவி? காதலோ இல்லை காமமோ? இல்லை பணமோ? காரணம் எதுவாக இருந்தாலும்? உண்மை என்னனா ஒண்ணும் செய்ய முடியாது. சும்மா "பெரிய மனுஷன்" போல மூடிக்கிட்டுத்தான் இருக்கனும். ஒரு பெண் தான் எளிதாக ஒரு ஆணை அவமானப் படுத்த முடியும். நீ ஒரு உதவாக்கற னு செகிட்டில் அறைவதுபோல் சொல்ல முடியும். அதனால்தான் காலங்காலமாக பெண்களை கவனமாக அடக்கி வாழ்றாங்க இந்த "வீரர்கள்"? இல்லையா?

அலங்காரத்தின் இந்த அஃபயர் சொந்த பந்தமெல்லாம் அறிந்து கடைசியில் பெற்ற மகள் மகன்களுக்கும் தெரிய வருகிறது.  அவர்களும் எதுவும் செய்ய முடியவில்லை. யார் மனதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாதுனு ஒரு சின்ன உண்மையை புரிந்து கொள்ளனும். பொதுவாக அஃபயரில் இன்வால்வ் ஆகி யிருக்கவர்களூக்கு அவர்கள் செய்யும் தவறை உணர முடியாது. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.

அலங்காரத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை. பழகிப்போயிடுச்சா என்னனு தெரியல. செய்த தவறத் திரும்பத் திரும்ப செய்கிறாள். தொடர்கிறாள். அந்த உறவிலிருந்து வெளியே வரமுடியாத பரிதாபம். காலை சுத்துன பாம்பு போல அவ்வஉறவுனு சப்பை கட்டுகிறாள். ஆனால் அவளூக்காக அழத்தான் யாருமில்லை!

நாம் பார்க்கிறோம் இல்லையா? சிகரட் குடிப்பவர்கள், அல்கஹால் குடிக்கிறவங்க, போர்னோ கிராஃபி பார்க்கிறவர்கள் எல்லாம் அடிக்டாவதை? ஏன் சாப்பாட்டை கட்டுப் படுத்த முடியாமல் இருப்பவர்கள் கூட இருக்காங்க! செய்றது தப்புனு தெரியும்,  இருந்தாலும் விடமுடியாது. அதேபோல்தான் அலங்காரம் நிலைமை. அவளை மட்டும் தனிமைப் படுத்த முயல வேணாம். புரிந்து கொள்ளவும்.

தப்பை சரி செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்துவிட்டு காசிக்குப் போயி முழுகி சரி செய்து விடலாம்னு காசி நோக்கி பயணம் செய்து எல்லாத்தையும் கழுவி விடலாம் என்று தன் மனதையும், உடலையும், தேவைகளையும் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்கிறாள்..இப்படித்தானே மனிதன் வாழ்கிறான்? செய்றதை எல்லாம் செஞ்சுட்டு பகவானிடம் மன்னிப்பு கேக்கிறது- ரகசியமாக. இல்லைனா பரிகாரம்னு எதையாவது செய்றது.

இவ்வளவுதான் "அம்மா வந்தாள்" கதை.

இதுபோல் பெண்கள் நூற்றில் அல்லது ஆயிரத்தில் ஒருவர் இருக்கத்தான் செய்றாங்க. பொதுவாக பெண்கள், காதல் வாழ்க்கையை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு கணவனிடம் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்களுக்கு அந்த ஸ்கில்ஸ் ரொம்பவே அதிகம். அலங்காரத்தால் அது முடியவில்லை. இயலாமை . ஊர் உலகம்போல் நாம் இல்லை என்றால் பிரச்சினைதான்.

ஜானகிராமன் ஒரு ஆம்பளைதானே? ஆதனால்தானோ என்னவோ அலங்காரத்தை ஒரு மாதிரி புரியாத புதிராகவே முடித்து விடுவார். அவர் உருவாக்கிய கேரக்டரை அவரே புரிந்து கொள்ள முடியாதது போல்.

சரி, என்னதான் சொல்ல வருகிறார்?

அலங்காரத்தைப் போல் பெண்கள் இருந்தால் எல்லோருக்கும் அவமானம். அதுபோல் இருக்காதே என்றா?

இல்லைனா, நீயும் அலங்காரம்போல்தான் வாழ்றியா? இருக்கவே இருக்கு காசி. கவலையே படாமல் தொடரு. கடைசியில் ஆடி அடங்கிய பிறகு காசில போயி கழுவி விடலாம் என்றா?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நீ மட்டுமல்ல, நான்கூட ஒண்ணும் கிழிக்க முடியாது! னு தன் இயலாமையை ஒத்துக் கொள்கிறார் ஜானகி ராமன்னு கூட சொல்லலாம்.


 தொடரும்.

4 comments:

G.M Balasubramaniam said...

/இவ்வளவுதான் "அம்மா வந்தாள்" கதை./ இவ்வளவுதானா நான் கதை படித்ததில்லை

வருண் said...

வாங்க சார்! ஒரு அம்மா என்பவளும் "சாதாரண பெண்" தான். தன் உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல் போகலாம்னு பார்த்தால் இது ஒண்ணுமே இல்லைதான் சார். எத்தனை அப்பாக்கள் இதுபோல் எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபயர்ல இருக்காங்க. மனதை கட்டுப் படுத்த முடியாத அலங்காரம் பெண் என்பதால் நமது கலாச்சாரத்தில் இது ஒரு பெரிய விசயம். இதே மாதிரி தண்டபாணி யாரையாவது வச்சிருந்தாருனா ஒண்ணும் பெருசா ஊத முடியாது.

gopalasamy said...

Alankaram, Soundhiram are goddess names of Karur temple.

வருண் said...

***gopalasamy said...

Alankaram, Soundhiram are goddess names of Karur temple.***

தண்டபாணி மனைவியை பத்தி யோசித்துக்கொண்டு இருக்கும்போது..

அலங்காரம்.. பேரு வச்சிருக்காங்க பாரு. தேவடியாளுக்கு வைப்பதுபோல னு அம்மா வந்தாளில் நான் படித்த ஞாபகம்.