Tuesday, June 18, 2019

10 வருடம் ஓல்ட் இ-மெயில்கள்! அபிலாஷ் என்னும்..

நான் பொதுவாக இ-மெயில்கள் எதையும் டெலீட் செய்வதில்லை. 10 வருடம் அல்லது அதற்கு மேல் காலம் ஆன இ-மெயில்கள் இன்னும் என் பர்சனல்  இன் பாக்ஸில் இருக்கு. எதையும் அவ்வளவு எளிதில் குப்பையில் போடுவதில்லை.

நமக்குத்தான் வயதாகிக்கொண்டே போகிறது. ஆனால் இதுபோல் சேமித்து வைத்த இ-மெயில்கள் இன்னும் அதே இளமையுடன்தான் இருக்கின்றன.

காலம் மாற மாற நாமும் மாறிக்கொண்டு, அல்லது வாழ்க்கையை மாற்றிக் கொண்டே போகிறோம். பழைய நண்பர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நாம் அதிக சுயநலமாக மாறிக்கொண்டே போகிறோம். நம்முடைய வாழ்க்கையும் மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப நம் இண்டெரெஸ்ட், நட்பு வட்டம் எல்லாமே மாறுகிறது.

வாழ்க்கையை இண்டெரெஸ்டிங்காக, அல்லது போர் அடிக்காமல் வைத்திருப்பது ஒரு கலை. பணமோ, நண்பர்களோ அதைத் தரமுடியாது. எல்லாமே நம் கையில் நம் மனதில்தான் உள்ளது.

இங்கே டாக்டரிடம் போனால், ஒரு கேள்வி கேட்பார்கள்..

 Are you depressed?

நான் சிரித்துக்கொண்டே சொல்லுவேன். எனக்கு அப்ஸ் அன்ட் டவ்ன்ஸ் வரத்தான் செய்யும். ஆனால், I know how to get over with it னு. டாக்டர் ஏதோ நான் திமிரா பதில் சொல்வதுபோல் பார்ப்பார்கள். மே பி டாக்டர் இஸ் டிப்ரஸ்ஸெட் ஆக இருக்கலாம்னு நான் நினைத்துக் கொள்வேன்.

இன்னும் ஒண்ணு... ஒரு வேளை என் வாழ்வில் எதுவும் பேரிழப்பு இன்னும் வரவில்லையோ என்னவோ? நான் ஒரு வகையில் லக்கியாக இருக்கலாம். இப்போதைக்குத்தான். நாளை என்னனு தெரியவில்லை.

We are alone in this world. People come and go. We just need to know how to deal with OUR OWN ISSUES!  வாழ்க்கையில் யாருமே நிரந்தரம் இல்லை. நம்மையும் சேர்த்துத் தான்.

------------------------

கொசுறு:

அபிலாஷ் னு ஒரு பதிவர்..  

ஜெயமோகன் பிரச்சினை சம்மந்தமாக ஒரு கருத்தை இப்பதிவர் முன் வைத்துள்ளார்.  For some reason I really got annoyed..இந்தாளு  யாருனு எனக்குத் தெரியாது. யாராயிருந்தால் எனக்கென்ன? சொல்ற கருத்தைப் பார்க்கலாம்.

* முன்பொருமுறை லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு.. சுசி கணேசனை செருப்பால் அடிப்பேன் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தார். சுசிகணேசனை, தன்னிடம் தவறா நடந்து இருந்தால், லீனா மணிமேகலை என்ன வேணா செய்யட்டும். இவன் என்ன பெரிய புடுங்கியாட்டம் "செருப்பால அடிக்கிறது" னு தோனுச்சு!

* இன்னொரு முறை  மேதை சாரு நிவேதிதா பத்தி என்னவோ பீத்தி எழுத.. அதைப் பார்த்து எரிச்சலடைந்து நான் எழுதிய பின்னூட்டம் அந்தத் தளத்தில் வரவில்லை. ஆமா, அது அவர் தளம்..அதெல்லாம் தப்பே இல்லை!

அதேபோல் இது என் தளம்! வந்து வாசித்துவிட்டு பொத்திக்கிட்டு போயிடனும்!

இப்போ, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு..

இங்கே உள்ள அந்தாளூ கருத்தை வாசிங்க!
இது ஒரு வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்குமான கைகலப்பு, இதில் எழுத்தாளர் எங்கே வந்தார் என முகநூலில் சிலர் கேட்பதை கவனித்தேன். புறமே பார்க்க அப்படித் தெரியலாம்,
ஆனால் எழுத்தாளன் நுட்பமானவன், மென்மையானவன், போற்றி பாதுகாக்க வேண்டியவன், இதை நுண்ணுணர்வு கொண்ட சமூகங்கள் அறிந்திருக்கும். அவனது குழந்தைத்தனங்களை அது பொறுத்துக் கொள்ளும். அவனால் கிடைக்கும் பெருமையும் கலாச்சார பங்களிப்பும் குமரி மண்ணின் வாசனை இலக்கிய அந்தஸ்து பெறுவதும் இதற்கான பெறுமதியாக இருக்கும். இன்றும் நான் நாகர்கோயிலைப் பற்றி குறிப்பிடுகயில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் சு.ரா, ஜெ.மோ, இன்னும் சில படைப்பாளிகளின் பெயரைப் பற்றி கேட்டு எப்படி இத்தனை எழுத்தாளர்கள் ஒரே மண்ணில் இருந்து என வியப்பார்கள். இந்த மாதிரியான பெருமை தோசை மாவு விற்பவர்களால் வராது. பணத்துக்காக மட்டும் வேலை செய்பவர்களால் வராது.(REALLY?!!)

அதென்ன குமரி மண் பெருமை?? அங்கே இருந்து எத்தனை பேரு நோபல் பரிசு வாங்கி இருக்கான்?!!! எதைனாலும் பீத்துறானுகப்பா வெத்து வேட்டுக்கள்!

ஆக, குமரி மண்ல இருந்து புடுங்க வந்த இவன் என்ன சொல்ல வர்ரான்னா..

மாவு விக்கிறவனுக்குனு ஒரு தகுதியிருக்காம்.. அவன் படிக்காதவன்! அதனால் பண்பு இருக்காது??! 

இதுதான் இவன் குமரி மண்ல கத்தது!

ஒரு வேள அவன் பக்கம் நியாயமே இருந்தாலும், அவன் மாவு விக்கிறவன் தானே? எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு எதையாவது  உளறும் "புடுங்கி" களுக்குத்தான் உயர் தகுதினு சொல்றான். 

இதிலிருந்தே இவன் பெரிய புடுங்கினு நினைப்பு உள்ள முட்டாள்ணு தெரிகிறதா?

இதில் லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா, இந்த மேதை, அப்புறம் ஜெயமோகன் போன்ற புடுங்கிகள் அடங்குவார்களாம்!

ஒரு மாவு விக்கிறவனுக்கும், எழுத்தாளன் என்னும் புடுங்கிக்கும் ஒரு பிரச்சினைனு வந்தால், மாவு விக்கிறவன் நியாயத்தை எல்லாம் பார்க்க  வேண்டியதில்லையாம்! குமரி மண்ல இவன் ஆத்தா அப்பன் இவனுக்கு சொல்லிக் கொடுத்தது இதுதான்!

எழுத்தாளனுக்குத்தான் உருவி விடணும் (விடுவேன்)னு சொல்றான். ஏன் னா, எழுத்தாளன்னா பெரிய புடுங்கியாம்!  நியாயம் யாரு பக்கம் இருந்தாலும்!

என்னைக்கேட்டால் மாவு விக்கிறவன், ஆடு மேய்க்கிறவன்லாம் எத்தனையோ பெட்டர். அவனுக யாரையும் கெடுப்பதில்லை!  இந்த நாட்டில் தன்னாலான உதவிகள மத்தவனுகளூக்கு செய்றாங்க. இவன் வக்காலத்து வாங்கும் எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு அலையும்  புடுங்கிகள்தான் நாட்டை நாசம் பண்ணுறானுக.

 நானே ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் அரை வேக்காட்டுத்தனமான உளறல்களை பலமுறை பார்த்து, எழுதி இருக்கேன்.

குமரில இருந்து புடுங்க வந்த இவனை மாதிரி புடுங்கிகளால்தான் நம் நாட்டில் சாதி உருவாகி இருக்கு. உன் தகுதி இதுதான்னு "லேபல்" பண்ணி மனுஷனை மனுஷனாக, சமமாக மதிக்காமல், நியாயம் என்னனு பார்க்காமல் "தகுதியானவனுக்கு" ஏற்ப "நியாயம்" சொல்றது.. everything got fucked up in INDIA, I think.9 comments:

ஜோதிஜி said...

பழைய மின் அஞ்சல்களைப் பார்க்கும் போது சில சமயம் மனம் தடுமாறத் தொடங்கி விடும். அடைந்த தோல்விகள், அவமானங்கள், முயற்சித்த வெற்றிகள் என்று ஒவ்வொன்றும் ஒரு வாழ்க்கையை நமக்கு உணர்த்தும். இளையராஜா பழைய பாடல்களைக் கேட்கும் போது இது போன்ற உணர்வு எனக்குத் தோன்றும்.

வருண் said...

வாங்க ஜோதிஜி.

அந்தக்காலத்தில் டைரி எழுதுவாங்க. இந்தக் காலத்தில் பழைய பதிவுகள், பழைய பின்னூட்டங்கள், பழைய இ-மெயில்கள் வாசித்தால் பல உணர்வுகள் வர்த்தான் செய்கிறது. ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்து இருக்கிறோம்னு தோணுது..

காரிகன் said...

where are u Mr,? in India or abroad

காரிகன் said...

nee enga iruka

வருண் said...

****காரிகன் said...

where are u Mr,? in India or abroad***

நான் அமெரிக்காவில்தான் வாழ்கிறேன்? ஏன் உங்களுக்கு அட்ரெஸ் வேணுமா?

வருண் said...

***காரிகன் said...

nee enga iruka***

திடீர்னு என்ன ஆச்சு காரிகனுக்கு?!!

வருண் said...

***காரிகன் said...

nee enga iruka***

ஆமா, நீங்க என்ன சாதி காரிகன்?!!!

கிருத்தவரா?! சாதி என்ன?

காரிகன் said...

nothing like that varun. Ifelt like talking to u. u r very emotional. if u cud contain ur anger wen talking to sumone then its fine. then I can communicate. is tht ok?

வருண் said...

இது மிகப் பெரிய உலகம், காரிகன். எனக்கென்னவோ உங்க அலைவரிசையும் என் அலை வரிசையும் ஒத்துப் போகும்னு தோணவில்லை. நீங்க என்னிடம் கம்ம்யுனிக்கேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்க தரத்திற்கேற்ப நல்ல நண்பர்கள், பண்பாளர்களுடன் நீங்க கம்ம்யுனிக்கேட் செய்றதுதான் சரி. Like I said, this is a very big world, you would find wonderful people in the world for "your level". You dont have to come down to my level. Neither can I climb up to your level! Take it easy! :)