Showing posts with label சமூ்கம். Show all posts
Showing posts with label சமூ்கம். Show all posts

Monday, December 26, 2011

விக்கிபீடியாவிலும் சாதியா? ஐயங்கார், நாடார்?

புத்தகங்களில் கஷ்டப்பட்டு தேடி எடுக்க வேண்டிய விசயங்களை எல்லாம் சும்மா கூகுல், விக்கிப்பீடியா மூலம் அதிக சிரமப்படாமல் எளிதாக தோண்டி அள்ள முடியிற அளவுக்கு பல நல்ல விசயங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.

விக்கிப்பீடியாவில் பலவிதமான விசயங்களை தொகுத்து வழங்குவதால், ஒண்ணும் தெரியாத மண்ணுகள்கூட எதையாவது படிச்சுட்டு வந்து பெரிய மேதை மாதிரி காட்டிக்கலாம். இதுபோல் முன்னேறிக்கொண்டு இருக்கிற இந்த இணையதள நாகரிக உலகத்தில், சமீபத்தில் இந்தியர்கள் சாதிச்சாயம் பூசிக்கொண்டு அலைகிறார்கள்!

தங்களுடைய "ஃபேமிலி நேம்" அல்லது "லாஸ்ட் நேம்" தன் சாதிப்பெயராக கொடுத்து தங்களைத் தாமே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்!

இப்போ விக்கியில் என்ன படிக்கப்போனாலும், அதன் மேல்ப் பகுதியில் "டொனேசன"க்காக ஒரு சிலர் தங்களைப் பற்றி சொல்லி, விக்கிக்கு உதவும்படி கேட்கிறார்கள். அதுபோல் கேட்கும் இந்திய "மேதைகள்" பலர், அவர்கள் பெயரில் அவர்கள் சாதிச்சாயத்தையும் காட்டுகிறார்கள்!!!

It’s no wonder Wikipedia is the 5th most popular and most visited site online. And it’s also no wonder why they need support every year from people like me and you. Will you pitch in $5, $20, $50 or whatever you think Wikipedia is worth to you? Thanks,

Karthik Nadar Wikipedia author


---------------------------

Last year, I submitted a note with my $25 donation and the staff asked me to write an appeal of my own. Will you donate $5, $20, $50 or whatever you can to support Wikipedia this year? It is each of our donations that help to keep Wikipedia free for all.

I hope that Wikipedia continues to grow, and remain free. I believe it is the best gift from this generation to the future ones.

Thank you,

Akshaya Iyengar

Software Developer and Wikipedia user


இந்த 21ம் நூற்றாண்டில் சாதியை வெட்கமே இல்லாமல் சொல்லிக்கிட்டுத் திரிபவர்களை எல்லாம் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் வகையில் எப்படி சேர்ப்பது? இதுபோல கேவலமாக அலைகிறானுக இந்த அரைவேக்காட்டு விக்கி தொக்குப்பாசிரியர்கள்!!

இந்த "ட்ரெண்டை" யார் ஆரம்பிச்சானு எனக்குத் தெரியலை, ஆனால் இது படுமோசமாக மாற, அதாவது, இந்த அரைவேக்காடுகளைப் பார்த்து ஆளாளுக்கு சாதிப்பட்டத்துடன் தன் பெயரை சொல்ல வாய்ப்பதிகம்னு தோனுது. இவனுக திருந்தவே மாட்டானுகளா???

Thursday, December 2, 2010

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்

ஜெயா டிவியில் எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் கருத்துக்கள் பரிமாறுவது போல் அனுஹாசன் நடத்தும் "கண்ணாடி" என்னும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதுபோல் நிகழ்ச்சிகள் நான் இதுக்கு முன்னால பார்த்ததில்லை! எச் ஐ வி பாசிடிவா இருப்பவங்க தான் பட்ட கஷ்டங்களையும், மக்கள் எந்த அளவுக்கு எயிட்ஸ் நோய் எப்படிப் பரவும் என்று தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் என்பதை சொல்ல தைரியமாக வந்து இருந்தார்கள்.

மொதல்ல இவங்களைப் பார்த்தால், இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள்னு பாவமாக இருந்தது. அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு ரொம்ப பெருமையாக இருக்கு .

இந்த நிகழ்ச்சியில் ஒரு சில கேள்விகளுக்கு அதில் பங்குபெற்ற டாக்டர் சரியா பதில் சொன்ன மாதிரி தோனலை! குறிப்பா கீழே உள்ள ஒரு கேள்வி!

ஒருவர் டாக்டரிடம்:

ஒரு எயிட்ஸ் நோயாளி அடிபட்டு ரத்தம் சிந்தஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லப்படும்போது, டாக்டர்களே அவர்களை ட்ரீட் செய்ய பயப்படுகிறார்கள். டாகடர்கள் இப்படி இருக்கலாமா? என்கிற குற்றசாட்டுடன்.

இதற்கு பதில் சொன்ன டாக்டர், கொஞ்சம் கனிவா இதில் உள்ள ரிஸ்க் களை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னவிதம் ரொம்ப rude ஆக இருந்தது.

டாக்டர் சொன்ன பதில்: ஏன் பயப்படுறாங்கனா டாக்டருக்கு ஒட்டிவிடும்! நாங்களும் எயிட்ஸ் பேஷண்ட் ஆகிவிடுவோம். எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கு! அதனால்தான் பயப்படுகிறார்கள்னு சொன்னார்.

இதைவிட அந்த டாக்டர் நல்லா பதில் சொல்லி இருக்கலாம்னு தோனுச்சு! அதாவது அதுபோல் அந்த நோயாளியிடம் இருந்து வரும் ரத்தம் டாக்டர் உடம்பில் ஏதாவது உள்ள காயத்தில் பட்டால் டாக்டருக்கும் எச் ஐ வி வந்துவிடும். அதனால் எச் ஐ வி டாக்டருக்கும் பரவும் சாண்ஸ் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் டாக்டர்கள் கொஞ்சம் கவனமா இருக்காங்கனு சொல்லி இருக்கலாம்.

நடிகர் கமலஹாசன் அவர்கள் எச் ஐ வி அவேர்நெஸ்காக செய்யும் தொண்டுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. "கண்ணாடி" போல் நெறைய டி வி நிகழ்ச்சிகள்தான் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு சொல்ல ஒரு சிறந்த வழினு தோனுது.
-------------

எச் ஐ வி சம்மந்தமா 2 வருடம் முன்னால நான் எழுதிய பதிவுக்கு லின்க் இங்கே தர்றேன். இதையும் படிச்சுப் பாருங்க!

நீங்கள் HIV பாசிடிவா?

Thursday, June 3, 2010

பெண் பதிவர்களுக்காக உருகும் பிரபல ஆணாதிக்கவாதிகள்!

பதிவுலகில் ஆண் - பெண் சமம் என்று ஆக்க வேண்டுமென்றால், பிரபலப் பெண்ணியவாதிகள், மற்றும் பெண்பதிவர்களுக்காக உருகுபவர்கள் பெண் பதிவர்களுக்கு வீரத்தையும், கருத்துச்சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றும், சில இக்கட்டான சூழ்நிலையில் எப்படி தூசுவைப் போல தட்டிவிட்டுப் போகவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டுமே ஒழிய பெண்களை கோழையாக்கக்கூடாது!

ஆண்-பெண் இருவரும் சரி சமம் சமானம் என்றாலும் ஆண் வேறு பெண் வேறுதான். ஆனால் தமிழ் பதிவுலகில்/கருத்துலகில் அவர்கள் சமமானவர்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், பெண்பதிவர்களை ஏதோ ஸ்பெஷல் கோட்ட்டாவில் உள்ளவர்கள் போல் சில அறியாமையில் வாழும் ஆணாதிக்கவாதிகள் நடத்துவது/ஆக்குவது மிகவும் வருத்ததிற்குரியது.

* என்னுடைய அனுபவத்தில் தங்கள் கருத்துக்கு எதிர்த்து வரும் நாகரீகமான பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்கூட பிரபலங்கள் உருகும் இன்றைய பெண் பதிவர்களில் பலர் இல்லை!

* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!

* பொதுவாக பல பெண் பதிவர்கள் பலருக்கு எதிர் கருத்தையோ, தங்கள்கருத்தில் உள்ள்பிழையை சுட்டிக்காட்டும் மாற்றுகருத்தை அனுகவே சுத்தமாகத் தெரியவில்லை!

* எதிர் கருத்துள்ள பின்னூட்டம் வந்தால், அதை வெளியிடுவதே இல்லை. நான் சொல்லுவது நாகரீகமான எதிர் கருத்துள்ள பின்னூட்டங்கள். அசிங்கமான பின்னூட்டங்கள் அல்ல!

இவர்கள் விரும்பும், வெளியிடும் பின்னூட்டங்கள்

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

* :)

* :(

என்று வரும் ஃபார்மாலிட்டி பின்னூட்டங்களும், ஜால்ரா பின்னூட்டங்களும், அட்ட்ண்டன்ஸ் பின்னூட்டங்களும்தான்.

இப்படி வருகிற பின்னூட்டங்கள் எப்படி பதிவுலகில் உள்ள பெண்களின் சிந்தனையை வளர்க்கும்? இவர்களெழுத்தைப்பதப்படுத்தும்?

சிந்தித்துப் பதில்சொல்ல வேண்டிய, இவர்கள் கருத்திலுள்ள தவறை சுட்டிக்காட்டக்கூடிய, மற்றும் பதில் சொல்ல கடினமான பின்னூட்டங்கள், மற்றும் சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள் எல்லாம் இவர்கள் வலைதளத்தில் பதித்தால் அவைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள்.

பெண்பதிவர்களுக்காக தேவையில்லாம் உருகும் செக்ஸிஸ்ட் (தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! டிக்ஷசனரி பார்க்கவும்) பிரபலங்கள்தான் தமிழ்ப் பதிவுலகில் பெண்களை அடிமையாகவே, கருத்துச்சுதந்திரம் இல்லாமல், சிந்திக்கவிடாமல், கோழையாகவே வாழ வழி செய்யும் ஆணாதிக்கவாதிகள் என்பது நான் கண்ட உண்மை! உண்மை கசக்கத்தான் செய்யும்!

Tuesday, May 4, 2010

கொறிப்பதற்கு நொறுக்குகள் (யு கே-வில் சுறா)!


* யு கே பாக்ஸ் ஆஃபிஸில் விஜயின் 50 வது படமான சுறா, கலக்சன் ஓ கே யா இருக்கு! இந்தப்படம் 7 திரையரங்குகளில் திரையிடப்பட்டு (7 X 6331), 44318 பவுண்ட்ஸ் கலக்சன் ஆகி இந்த வாரம் யு கேவில் 22 இடத்தைப் பெற்றுள்ளது. இது ஏற்க்குறைய வேட்டைக்காரன் கலக்சன் அளவுதான். ஆனால் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டு அதே அளவு கலக்சன் வந்திருக்கு. ஈழத் தமிழர்களுக்கு அவர் மேலிருந்த கோபம் குறைந்துவிட்டதா?




* நியூயார்க் டைம் ஸ்கொயர் ல குண்டுவைக்க முயன்ற பயங்கரவாதி என நம்பப்படும் Mr. Faisal Shahzad, பிடிபட்டு உள்ளார். இவர், தன்னை பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் 5 மாதங்கள் ட்ரயின் பண்ணியதாக ஒத்துக்கொண்டார். இவர் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவ்ருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உண்டு.

* குஷ்புவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்கள்/அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஒண்ணு இருக்கு. நம்ம கடவுள்களே ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிட்டாங்கனு சொல்லி உச்சநீதிமன்றம் ஜஸ்டிஃபை பண்ணியது படுகேவலமான ஒண்ணு. கடவுள்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிற்கவைக்க முடியாது. Unlike human beings Gods do not have to obey or follow law!

* கமலஹாசன் முதல்வருக்கு சோப் அடித்ததை பெருசுபடுத்துவது ரொம்ப அதிகம்னு தோனறுகிறது. ஒருவரைப் பற்றி மேடையில் பேசனும்னா சோப் அடிக்காமல் வெளக்கெண்ணையா கொடுக்க முடியும்? வயதில் முதிர்ந்த திரு கருணாநிதியை அவர் தமிழ் அறிவைச் சொல்லிப் பாராட்டுவதில் எனக்கெதுவும் தவறாக தோணவில்லை! அஜீத் பேசியதை முதல்வர் பெருசுபடுத்தாமல் விட்டு இருக்கலாம்தான். அதுக்காக பாராட்டுமேடையில் போய் கமலஹாசனும் முதல்வரை திட்டனும்னு எதிர்பார்க்கிறதெல்லாம்...

* ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான கார்கள் லிஸ்ட் இங்கே!
Top 10 Best-Selling Cars April 2010:

Ford F-Series: 40,946
Honda Accord: 31,766 (including 2,455 Crosstours)
Chevrolet Silverado: 29,618
Toyota Corolla: 27,932
Toyota Camry: 27,914
Honda Civic: 25,042
Ford Escape: 19,146
Ford Fusion: 18,971
Hyundai Sonata: 18,536
Honda CR-V: 16,661

கடந்த மாதம் மேலே இருந்த டொயோட்டா கேம்ரி இந்த மாதம் ஹாண்டா அக்கார்ட் க்கு கீழே போய்விட்டது!

Sunday, May 2, 2010

திருநங்கை! ஹி இல்லை, ஷி!!

"என்னம்மா அமெரிக்காவிலிருந்துகொண்டு விஜய் டிவி பார்க்கிற, பத்மா? அதுவும் கம்ப்யூட்டரிலேயே!" என்றார் சம்மர்க்கும் அமெரிக்கா வந்திருந்த வயதான மாமனார்.

"இல்ல மாமா "இப்படிக்கு ரோஸ்"னு ஒரு ஷோ. நம்ம ஊரில் உள்ள பிரச்சினைகளையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது. நல்லாயிருக்கும்! சும்மா ஆண்லைன்லயே பார்க்கலாம்"

"தப்பா நெனச்சுக்காதே இந்த ரோஸ்.. இவரை பெண்பால்தான் என்று ஏற்றுக்கொண்டார்களா? ஆணா பிறந்து ஏன் பெண்ணாகிவிட்டார் இவர்?"

"இவர் ஆணாகப் பிறந்தாலும் தன்னை பெண்ணுனு உணர்கிறார் போல, மாமா! இவரைப்போல் இருப்பவர்களை ட்ரேன்ஸ்ஜெண்டர்னு சொல்றாங்க. தமிழ்ல திருநங்கைனு சொல்றாங்க! இவரை "ஷி" னுதான் சொல்லனும் "ஹி" இல்லை, மாமா"

"நான் இந்த ஷோவே பார்க்கிறது இல்லைம்மா!"

"ஏன் உங்களுக்குப் பிடிக்கலை?"

"இல்லம்மா இவரைப் பார்க்கும்போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருதும்மா! அதான் பார்க்கிறது இல்லை!" அவர் குரல் தழுதழுத்தது.

"பழசா? என்னனு கொஞ்சம் விபர்மா சொல்லுங்களேன்?"

"இது 35 வருசத்துக்கு முன்னால நடந்த கதைம்மா, பத்மா. உன் ஹஸ்பண்ட் சுந்தருக்கு ஒரு அண்ணன் இருந்தாம்மா. அவன்தான் எனக்கு மூத்த மகன். பேரு சேகர்!"

"ஏதோ கொஞ்ச வயதில் தற்கொலை செய்து இறந்துட்டதாக சுந்தர் சொல்லியிருக்காரு மாமா!"

"ஆமாம்மா. 21 வய்திலேயே இந்த உலகத்தைவிட்டுப் போயிட்டான். தற்கொலை என்பதால போஸ்ட்மார்ட்டம் பண்ணி, போலிஸெல்லாம் வந்து எல்லாரையும் விசாரிச்சு.. ஒருவழியா எல்லாத்தையும் சரிக்கட்டி எப்படியோ முடிஞ்சது."

"தற்கொலை கேஸ்னா போஸ்ட்மார்ட்டம் பண்ணித்தானே ஆகனும், மாமா?"

"ஆமாம்மா. சேகரும் இந்த ரோஸ் மாதிரித்தான் இருந்தாம்மா, பத்மா. பொண்ணு மாதிரி சேலை கட்டி டாண்ஸ் ஆடுறது, பொண்ணு மாதிரி மேக்-அப் போடுவது, தலையில் பூ வைத்துக்கொளவ்து, இப்படி வித்தியாச மாகத்தான் இருந்தான்ம்மா. சுந்தர் மாதிரி அவன் கெடையாதும்மா"

"ஒருவேளை அவரும் ட்ரேண்ஸ்ஜெண்டரா இருந்திருக்கலாமா மாமா?!"

"அப்படித்தான் இப்ப தோனுதும்மா. ஆனா முப்பதஞ்சு வருடம் முன்னால அவனை யாராலையும் புரிஞ்சுக்க முடியலை! அவனை தெருவில், பள்ளியிலே, காலேஜிலே எல்லா இடத்திலேயும் பலவிதமாக கேலி பண்ணி நரக வேதனை அனுபவிச்சாம்மா, பத்மா!"

"நீங்களாவது புரிஞ்சுக்கிட்டிங்களா மாமா?"

"எனக்குக்கூட ஒரே குழப்பம்மா. ஏன் இப்படி இருக்கான்? அவனை வச்சு என்ன பண்ணுறதுனே தெரியலை. அவனுக்கு எப்படி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது? யார்ட்டப்போயி பொண்ணு கேக்கிறது? என்ன செய்றதுனே புரியலைம்மா!"

"நம்ம ஊர்ல இதையெல்லாம் இப்பக்கூட புரிஞ்சிக்கிறதில்லை மாமா. இது இயற்கையிலேயே வருகிற ஒண்ணு. "

"இல்லம்மா ஆணா பிறந்தவன், ஆண் உடலுறுப்புகள் உள்ள ஒருவன், பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவதைப் பிடிக்காமல் நானே ஒவ்வொருதர்ம் ரொம்ப திட்டி இருக்கேன்ம்மா! அப்புறம் மனசுக்கு கஷ்டமா இருக்கும்."

"நம்ம ஊர்ல இடதுகை பழக்கம் உள்ளவர்களைக்கூட, இடது கை பழக்கம் உள்ளவர்களாக வர விடுவதில்லையே மாமா! ஒரு ஆண் பெண்போல நடந்தால் எப்படி புரிஞ்சிக்குவாங்க? இதை புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்! வித்தியாசமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ்க்கை கஷ்டம்தான்"

"நானாவது அவனை புரிந்து நடந்து இருக்கனும். இப்போ யோசித்துப் பார்த்தால் அவன் தற்கொலைக்கு நானும் ஒரு காரணம்தான்ம்மா!"

"அவரை சரியா புரிந்துகொள்ளாமல்த்தான மாமா திட்டி இருக்கீங்க? என்னவோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் வருகிற ட்ரேண்ஸ்ஜெண்டர்களை (திருநங்கைகளை) யாவது சரியாகப் புரிந்து கொள்ளுவோம் மாமா!"

"ஆமாம்மா காலம் கடந்து வந்த ஞானோதயம்தான்!" என்றார் கண்ணீரோடு.

"இப்போ எல்லாம் நம்ம ஊர்களிலேயே இவர்களை புரிஞ்சு நடந்துக்கிறாங்க மாமா!"

"உண்மைதான்ம்மா பத்மா! 40 வருடம் முன்னாலே இப்படி ஒரு ரோஸை ப்ரோக்ராம் கொடுக்க வச்சிருக்க மாட்டாங்க!"

"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"

Friday, April 16, 2010

சுழியம் என்கிற மதவெறியனின் பிதற்றல்கள்!

கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! ஆனால் மதவெறி பிடித்தவர்களுக்கு விளங்காது! மதவெறி தலைக்கேறிவிட்டால், யாரையும் , யாருடைய செயலையும் பகுத்தறிய முடியாது! ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.

அது பழைய விசயம் என்றெல்லாம் விட்டுவிடமுடியாது! இதுபோல் மதவெறியர்கள் இன்னைக்கும் இருக்கார்கள் என்பதை இந்த "சுழியம்" என்கிற ஒரு மதவெறியரின் தொடர் பின்னூட்டங்களில் இருந்து அறியலாம்!

ஆன்மீகம் பற்றி திருமதி உஷா அவர்கள் ஒரு பதிவு எழுதியுள்ளார்கள். எங்கே இவர் சிந்தனையத்தான் பார்ப்போமேனு போய் பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டமிட்டேன்.

சரி வேற என்ன பின்னூட்டங்கள் இருக்குனு பார்ப்போம்னு பார்த்தால்...

தன்னால் முடிந்த அளவுக்கு திறந்தமனதுடன் எழுதிய திருமதி உஷாவின் பதிவில் இந்த மத வெறியர் (சுழியம்)போட்ட பின்னூட்டங்களில் ஒரு சின்னப் பகுதி இது! இந்தக்குப்பையை வாசிக்காமல் விட்டுட்டு மேலேயும் போகலாம்!

---------------------------------

****சுழியம் சொல்வது...

அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிற, பிறசாதியினருக்கும் மரியாதை தருகின்ற, தலித்துகளின் குடிசைகளுக்குச் செல்லுகின்ற இந்த சங்கராச்சாரியாரைக் கேவலப்படுத்துவதில் பல சடங்காச்சார பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுகூட நியாயம்தான்.

ஆனால், இப்படி தலித்துகள் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து, அவர்களுக்கு உதவி செய்ய அமைப்புகளையும் ஏற்படுத்திய ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மேல் கிறுத்துவ அமைப்புகள் பொய்யான புகார்களைப் போட்டு அழிக்கின்றன என்பது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.

அவரின்மேல் உள்ள ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் போய்விட்டன. இருந்தாலும், அவர் குற்றமற்றவர் என்ற உண்மையைச் சொல்லாமல் தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. கேஸ் இழுத்தடிக்கப்படுகிறது.

எல்லாம் பகவான் பார்த்துக்கொடுதான் இருக்கார்! சங்கர் ராமன், அனுராதா ரமணன், நம்ம செயேந்திரர் எல்லாரையும் ஒண்ணாக்கூட்டிப் பேசி, ஒரு முடிவுக்கு வருவார்!

அவர் மேல் உள்ள கேஸ் வாபஸ் செய்ய வேண்டும் என்றால், அவர் மடத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பேரம் பேசிய இந்து பத்திரிகை அதிபர் பற்றி யாரும் பேசப் போவதில்லை. ஜனகல்யாண் அமைப்பின் சாதனைகளைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை.

அவருடைய நிலைக்கு இணையான ஒரு போப்பை விடுங்கள், தமிழ் நாட்டில் சிறுவர்களைப் புணரும் கிறுத்துவப் பாதிரியார்கள் மேல் இத்தகைய பிரச்சாரங்கள் தொடருகின்றனவா? வாரம் இரண்டு கொலைகளைச் செய்யும் இசுலாமிய சகோதரர்களைப் பற்றி...?

அத்னால இவரையும் விட்டுடுடனுமா?

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை. ஆதரவற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைப்பது முற்போக்கு என்று போதிக்கப்பட்டால் அதையும் செய்பவர்கள்தான், காஞ்சி மடாதிபதியையும் கேவலப் படுத்திப் பேசி, எழுதி கைதட்டு வாங்கிக்கொள்ளுகிறார்கள்.

தீப்பொறி ஆறுமுகம் பேச்சிற்குக் கைதட்டும் மக்கள்தான் இதற்கும் கைதட்டுகிறார்கள்.

அடுத்ததாக, மகாப் பெரியவரின்மேல் மரியாதை எனக்கு இருக்கிறது, மகாப் பெரியவரும், பெரியாரும் என்றெல்லாம் கட்டுரை எழுதி இருக்கிறேன் என்று சொல்லி உங்களது நடுநிலைமையைப் பறை சாற்றியது குறித்து.

மகாப் பெரியவரின் வாரிசு தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். பள்ளிகளும், மருத்துவமனைகளும், சமூக சேவை அமைப்புகளும் ஏற்படுத்தினார். கலைஞர்களையும், அறிஞர்களையும் கௌரவித்தார்.

அவரைப் பின்பற்றும் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்களை அதிகம் செய்கின்றனர். தமிழ்நாட்டுக் காவல் நிலையங்களில் உள்ள வன்கொடுமைப் புகார்கள் எதுவும் இந்தப் பார்ப்பனர்கள் மேல் இல்லை.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அதற்குத் தீர்வாக ஒரு நேர்மறையான மாற்றுப் போக்கை முன்வைத்தார்கள். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்கள். எதையும் அழிக்கவோ உடைக்கவோ சொல்லவில்லை.

ஆனால், ஈவேரா என்ற அந்தப் பிறவி இதுவரை பேசியதில் வளர்ச்சிப் பணிகள் பற்றி ஏதேனும் பேசியிருக்கிறதா ?

தலித் பெண்கள் ஜாக்கெட் போட்டதால்தான் துணி விலை ஏறியது என்று பேசி இருக்கிறது. அதனது சாதிக்காரர்கள் தலித்துகளை ஒட்டுமொத்தமாக எரித்தபோது கண்டுகொள்ளாமல் போனது. சாதிப் புத்தி உண்டு அது மாறாது என்று வலியுறுத்தி இருக்கிறது. காசு கொடுக்காதவரைத் திட்டிப் பேசுவது, கேவலப்படுத்துவது என்ற கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தது அது. பாதிரியார்கள் இந்து மதத்தைப் பற்றி தெருக்களில் செய்த வசவை, காசு வாங்கிக்கொண்டு மேடையில் செய்து பெரும்பணம் ஈட்டியது அது. கிறுத்துவப் பாதிரிகள் பேசியதைத்தான் நானும் பேசுகிறேன் என்று சொல்லாமல், இதெல்லாம் நானே சொந்தமாக யோசித்துக் கண்டுபிடித்தக் கேள்விகள் என்று வெட்கம் இல்லாமல் ஒவ்வொரு முறையும் பொய் சொன்னது. அதன் வாரிசுகளும் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். உன் புத்தியில் தோன்றியதைச் செய் என்று மேடையில் பேசிவிட்டு, நான் சொல்லுவதைக் கேட்கும் முட்டாள்தான் எனக்கு வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் பேசியது இந்த ஈவேரா. நாடகமாட மேடை, மேடையில் சொன்னதை செயல்படுத்தாத நடைமுறை இதுதான் ஈவேரா. அதன் மேடைப் பேச்சைப் படித்துப் பாராட்டவும் பத்து இளிச்சவாயர்கள்.

அதனது வாரிசுகள்தான் திண்ணியத்தில் மலத்தை மனிதர் வாயில் திணிக்கிறார்கள். சாதிப் பெயரில் ஓட்டு வாங்குகிறார்கள். அவர்களிடையே கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு. வன்கொடுமை சட்டத்தின் மேல் அவர்கள்மேல்தான் புகார்கள் இருக்கின்றன.

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் திராவிட கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுவும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின்புதான் இந்தக் கொடுமைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஈவேரா என்பது சாதி வெறியின் கௌரவத் தோற்றம். அந்த மலத்தோடு, மகாப் பெரியவர் என்னும் மலரை ஒப்பிடாதீர்கள். நுனிப்புல் மேயாமல் சற்று விஷயங்களைத் தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

சுழியம் சொல்வது...
தவறான வாக்கிய அமைப்பு:

அரசியல் செல்வாக்கு இல்லாத, சாதி வெறி பிடித்த, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது எளிமையான வேலை.

சரியான வாக்கியம்:

அரசியல் செல்வாக்கு இல்லாத, மக்களின் ஆதரவு இல்லாத ஒருவரைக் கேவலப்படுத்துவது சாதி வெறி பிடித்தவர்களுக்கு எளிமையான வேலை.****
-----------------------------

Now, let us analyze the responses of this hindu fanatic!

This fanatic's responses are 10 times bigger than ORIGINAL POST, in which no sane person would find any fault!!! Believe it are NOT, this guy(cuziyam) is really SCARY! He filled that responses column of that blog with all his fanatic garbage and irrational thoughts!

Look at the words he uses to compare a rationalist EVR with a guy who has been accused of murdering late Sankar Raman and accused of misbehaving with a writer, anuradha ramanan!

Trust me, these religious fanatics are several folds worse than any rationalist!

They will try cover an elephant's huge butt with their tiny hand and think that they can fool the world by lying!

சரி, ஈ வெ ரா வை என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும். இந்த மதவெறியனுக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதை மதிப்போம்!

* சங்கர் ராமனை யார் கொன்னது? கிறுத்தவ பாதிரியார்களா இல்லை இஸ்லாமியர் களா?

இந்துக்கள்!

* தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக சொன்ன அனுராதா ரமணன் ஒரு கிறுத்தவரா இல்லை இஸ்லாமியர்ரா?

இந்து!

மதவெறி தலைக்கேறினால் யோசிக்க முடியாது. சுழியம் இன்னொரு தளத்தில் போய் இதுபோல் பின்னூட்டங்களால், யானையை பூனையாக்க முயன்று இதுபோல் பிதற்ற மட்டும்தான் முடியும்!

Friday, March 5, 2010

மேடம்! உங்க பேண்ட்ஸ்ல "ஸிப்" திறந்திருக்கு!

சரவணனுக்கு சிறுவதிலிருந்தே இந்தப்பழக்கம் உண்டு. தெருவில் நடுரோட்டில் வாழைப்பழத் தோல் கிடந்தால் அதை கவனமாக எடுத்து குப்பையில் போடும் வழக்கம் . உடைந்த கண்ணாடி கிடந்தாலோ அல்லது ஒரு ஆணி கிடந்தாலோ அதை குனிந்து கவனமாக எடுத்துக்கொண்டு போய் ஓரமாகப் போடுவான். ஒரு சில நண்பர்கள் இதெல்லாம் தேவையில்லை என்று நினைப்பதையும் பார்த்து இருக்கான். இதெல்லாம் ஒரு ஹாபிட். அவனுக்கு பழகிவிட்டது.

இன்று காலையில் சிகாகோவில் வேலைக்கு புறப்பட்டு மெட்ரோ ரயிலில் ஏறி வந்து உட்கார இடம்தேடும்போது கூட்டம் அதிகமில்லை. எல்லா இருக்கைகளிலும் இருவர் அல்லது ஒருவர் அ மர்ந்திருந்தார்கள். ஒரு இருக்கையில் மட்டும் யாரும் இல்லை என்பதால் தன் பேக்- பாக் கை அருகில் வைத்து அமர்ந்தான். இப்போது மணி எட்டு நாற்பத்தைந்து. அவனுக்கு ஒன்பதரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. இந்த ட்ரயினில் போனால் ஒன்பது பதினைந்துக்கு இவன் ஆஃபிஸில் இருக்கலாம்.

அடுத்த ஸ்டாப்பில் ஒரு சுமார் முப்பது வய்திருக்கும் அழகான கவர்ச்சியான வெள்ளைக்காரப் பெண் ஏறி வந்தாள், உடனே இவன் தன்னுடைய பேக் பாக்கை எடுத்துவிட்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவளுக்கு இடம் கொடுக்கும்போதுதான் கவனித்தான், அவள் அவசரத்தில் பேண்ட்ஸ் zipப்பை மாட்ட மறந்திருந்தாள்! முன்னால் அந்தப் பகுதியில் அவளுடையை சிவப்பு பேண்டிஸை நல்லாவே பார்க்க முடிந்தது! அவளோ அதை சுத்தமாக உணராமல் அவன் அருகில் அமர்ந்து ஏதோ ஒரு கதைப்புத்தகத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.

சரவணனைத்தவிர யாரும் அவள் இந்தக் கோலத்தை கவனிக்கவில்லை! அவனுக்கு ஒரே "டிலெமா" அவளிடம் அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவளை சரி செய்ய சொல்லுவோமா? இல்லை வேண்டாமா? என்று. ஒன்ஸ் அவள் இதை "ரியலைஸ்" செய்யும்போது எத்தனை பேர் என்னை இப்படிப் பார்த்தார்களோ? என்றுதான் அவள் யோசிப்பாள். சரி "பொலைட்"டாக அவளிடம் சொல்லிவிடலாம் என்று திரும்பினான்!

ஆனால் அவனுக்கு சக்கண்ட் தாட் ..அவள் யாருனே இவனுக்குத் தெரியாது. அவளிடம் சொல்வதால் இவன் பார்த்துவிட்டானே என்று அவள் எம்பாரஸ் ஆகலாம். இவனுடைய இந்த "உதவி"யை அவள் வேறு மாதிரி எடுத்துக் கொண்டால்? அதாவது நான் உன் உள்ளாடையைப் பார்த்துவிட்டேன் என்று இவன் சொல்வதாக.. அவ என்ன மாதிரி டைப்போ, யாரோ?

இதுபோல் அவனுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் டயானா என்று ஒருத்தி இதுபோல மறந்ததையும், அதை யாரோ ஒரு பாய் "ஃப்ரெண்ட்" சரிசெய்யச் சொன்னதையும் சொன்னாள். அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்தாள் என்று சொன்னவரிகளை அவன் இன்னும் மறக்கவில்லை.

"Oh gosh, the panty thing is the worst. That happened to me when I was in Texas, and it was a male friend who told me. I was so embarrassed."

தன் தோழர் சொன்னதுக்கே அவள் அப்படி ஃபீல் பண்ணியதாக சொன்னாள், நம்ம எதுக்கு சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள என்று மனதை மாற்றிக் கொண்டான்.

இவ்வளவு வளர்ந்த பின்னும் அவனுக்கு இதுபோல் விசய்ங்களில் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. இன்னொரு முறை அவன் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் இவன் அறையிலிருந்து பார்த்தால் நல்லாத் தெரியும். பக்கத்தில் உள்ள சேரியில் உள்ள சில பொறுக்கிப் பசங்க இரவு 7-8 மணிப்போல வந்து லேடீஸ் ஹாஸ்டலில் உள்ள வெண்டிலேட்டர் மூலம் பாத்ரூமில் எட்டி பார்ப்பதை பார்த்த இவனும் இவன் நண்பர்களும், ஒரு சின்ன சத்தம் போட்டதும் அவர்கள் ஓடி விட்டார்கள். அது போதாதென்று அடுத்த நாள் அவனுடைய சகமாணவி மாலினியிடம், இதைப்பத்தி சொல்லி கவனமாக வெண்டிலேட்டரை அடைத்து வைத்துக்கொள்ளும்படி இவன் சொன்னான். அதற்கு அவளிடமிருந்து வந்த ரியாக்ஷன் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! என்னவோ இவனே எட்டிப்பார்த்தது போல ஒரு கேவலமான தேங்க்ஸுடன் போனாள். சரவணனுக்கு எதுக்குடா இதைப்போயி சொன்னோம்னு ஆகிவிட்டது. இவளுகளை நிர்வாணமா பார்த்தால் என்ன? இல்லை கற்பழித்தால்தான் நமக்கென்ன? என்று நினைத்தான்.

அவன் ஸ்டாப் அதற்குள் வந்துவிட்டது. அவளிடம் எதுவும் சொல்லாமல் இறங்கி தன் வேலை செய்யும் இடத்திற்குப் போனான். எவ எப்படிப்போனா நமக்கென்ன? உதவி செய்கிறோம் என்று வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டான், சரவணன்.

Friday, February 26, 2010

ஜப்பானிய ஆண்களும் கேவலமானவர்கள்தான்!

பஸ்ல கூட்டமாக இருந்தால் பெண்கள் மேலே கை வைக்கும் கேவலமான ஆண்கள் நிறைந்தது நம் தமிழ்நாடு. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. பொதுவாக கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் நடக்கும். இந்த உலகத்தில் எந்த ஆம்பளையைத்தான் நம்புறதுனு தெரியலைனு பெண்கள் குழம்பி ஆண் இனத்தையே வெறுப்பதும் உண்டு.

ஜப்பான் என்றால் கார் தயாரிப்பு, சுறுசுறுப்பு போன்ற நல்ல விசயங்களுக்குத்தான் பேர் போனது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் ஜப்பானிய ஆண்கள் நம்ம மக்களைவிட கேவலமானவர்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜப்பானில் அதுவும் டோக்கியோவில் படுவேகமாகப் போகும் ரயிலில் பயங்கர கூட்டம் இருப்பதுண்டு. அதனால் இளம்பெண்கள், டீனேஜர்களை ஜப்பானிய ஆண்கள் “க்ரோபிங்” மற்றும் “மொலெஸ்ட்டிங்” செய்வது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோல் நடக்கும் குற்றங்களை ஜப்பானிய காவல்துறையினரால் இன்றுவரை முழுமையாக நிறுத்த முடியவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், ஒரு பெண் இதுபோல் கற்பழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் போகும் ஆண்கள் ஜப்பானில் மிகமிக அதிகமாம்!

இதில் பலியாவது, கொஞ்ச வயது டீனேஜர்கள், ஹை ஸ்கூலில் படிக்கும் மாணவிகள். 2006ல் எடுத்த ஒரு சர்வேயின் படி ரயிலில் பயண்ம செய்யும் 70% மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். 17% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

இதனால் சமீபத்தில் “பெண்கள் மட்டும்” பெட்டிகள் விடப்பட்டது! இதில் பயணம் செய்யும்போது இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் இந்த பெண்கள் பெட்டி விட்டபிறகு இன்னொரு பிரச்சினை என்னவென்றால் பெண்கள் மட்டும் பெட்டியில் போகாமல் வேறு பெட்டியில் ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஏறிவிட்டால், அந்தப்பெண்ணை “க்ரோப்பிங்” “மொலெஸ்டிங்” “ரேப்பிங்” பண்ணுவது சர்வசாதாரணம்.

இது சம்மந்தமான ஒரு ஆர்ட்டிக்கிள் இந்த டைம் ல வந்துள்ளதையும் பார்க்கவும்!

Saturday, January 30, 2010

சாருவின் “கடவுளைக்கண்டேனி”ல் கடவுளைக் காணவில்லை!

நான் அறிவியல்த்துறையில் உள்ளவன். பெரிய அறிவியல் மேதையெல்லாம் இல்லை. சும்மா சாதாரண கற்றுக்குட்டி! ஆனால் எதையும் எளிதில் நம்பும் மனபாவம் எனக்குக் கிடையாது. அதுவும் இந்தச் சாமியார்கள் மேட்டர்ல நான் ரொம்பவே மோசம். இந்த சாய்பாபா, சங்கராச்சார்யா, நித்யானந்தா இவர்கள் மேலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன். சமீபத்தில் எழுத்தாளர் சாரு அவருடைய ஒரு கடவுளைக்கண்டேன் பதிப்பில் ஒரு பெரிய அதிசய்ம் பற்றி எழுதியுள்ளார்.

ஒருவருக்கு ஏதோ கட்டி (கேன்சர்) இருந்ததாம். டாக்டர்கள் எல்லாம் கைவிட்டுவிட்டார்களாம். அவர் உடனே சுவாமி நித்யானந்தாவிடம் சென்றாராம். உடனே சுவாமி நித்யா அந்த கேன்சர் செல்களை மேலே வளரவிடாமல் நிறுத்திவிட்டாராம்!

சரி அவர் கட்டியை எப்படி இந்த சாமியார் க்யூர் பண்ணினார்? கொஞ்சமாவது நம்பும்படியாக உள்ளதா பார்ப்போம்!

* மெடிட்டேஷன்ல, தியானத்தில், மனக்கட்டுப்பாட்டில் அந்த நபருடைய பயத்தை போக்கி அவருக்கு நிம்மதி வழங்கினார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அதுபோல் அவர் செய்யவில்லை!

* ஒரு லேகியம், பச்சிலை (ஐ மீன் ஒரு கெமிக்கல்) கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு அதிலிருந்து அவர் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. அதுபோலும் சுவாமி செய்யவில்லை!

அப்போ அந்த சாமியார் நித்யானந்தா என்ன செய்தார்????

நோயாளியிடம் அவர் சொன்னது!

“அந்த கவலையை விடுங்கள்! நேராக உங்கள் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். சரியாக அரை மணி நேரத்தில் I will enter your body and cleanse your tumor."

அதேபோல் செய்து அந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியை நிறுத்திவிட்டாராம் சுவாமி நித்யானந்தா!!!

என்னங்க இது? இந்த 21 ம் நூற்றாண்டில் ஒரு பிரபல எழுத்தாளர் இப்படி ஒரு வரியை எழுதுகிறார்? கேன்சர் செல்களின் வளர்ச்சியை ஒருவர் இப்படி தடுக்க முடியுமா என்ன? It is IMPOSSIBLE if you ask me!

We cant let this go as THIS IS NOT one of his FICTIONS! He claims that it is like "TRUE STORY"!

First of all I am not sure whether what he had was a malignant tumor. It could have been a benign one!

We have not achieved anything great in Medical field or in Science as far as I know. I am talking about the ORIGINAL contribution. In this situation, the claimed achievement (curing cancer) of Swamy Nithyanandha can take us much higher than the level of Harvard University Scientists IF IT IS TRUE!

I wonder why can not he publish his work and this procedure of treating cancer to the world? Why do anyone in the world has to waste his time in doing Cancer research and Chemotherapy if Swamy Nithyanandha can accomplish this kind of break throughs without going through any Radiology or Chemotherapy treatment?

சாரு நிவேதிதா, இப்படியெல்லாம் "உண்மைக்கதை" எழுதி இந்த சாமியார்க்கு ஒரு கமர்சியல் (advertisement) கொடுக்கிறாரா என்பதே என் சந்தேகம். இதுபோல் "கதை" எழுதுவதே இந்த சாமியாருக்கு ஒரு பாப்புளாரிட்டி உருவாக்க இவர் ஒரு நல்ல "கமர்சியல்" கொடுக்கிறார். இதுபோல அதிசயங்களை சாதிக்க முடியும் ஒரு கடவுளுக்கே இந்தக்காலத்தில் இது போல் கமர்சியல் கொடுக்க வேண்டியுள்ளதுதான் இதில் பரிதாபம்.
கொஞ்ச நாளைக்கு முன்பு தரமான தன் புத்தகங்கள் 25,000 பிரதிகள் போல விற்றால்தான் கொஞ்சமாவது மரியாதையா இருக்கும் என்றார் திரு சாரு. சுவாமி நித்யானந்தாவால் இதுபோல் தரமான புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க உதவுமுடியாது போலும். சரி, கேன்சர் செல் வளர்ச்சியை மட்டும்தான் இவரால் கட்டுப்படுத்த முடியுமோ? இல்லை எச் ஐ வி வைரஸையும் இனப்பெருக்கம் பண்ணவிடாமல் நிறுத்தி டமுடியுமா? என்னனு தெரியலை.

நான் இவர் கதையில் நான் கடவுளைக் காணவில்லை! ஆனால் சுவாமி நித்யாந்தாவிற்கு பாப்புளாரிட்டி அதிகமாக்க ஒரு நல்ல “கமர்சியல்” தான் பார்த்தேன்!

It is unfortunate, only in India we have these kind of saamiyaar belief for thousands of years. That is one of the reasons we could not achieve anything in science. I don't know how many thousand years this kind of nonsenses are going to continue like this. It is our responsibility to SERIOUSLY criticize such misleading fraudulent statements and stories and false claims by challenging them no matter who he/she is!

Wednesday, January 13, 2010

தென் அமெரிக்காவில் ஹெய்ட்டியில் நிலநடுக்கம்!


தென் அமெரிக்க தீவுகளில் ஒன்றான ஹெயிட்டியில் நேற்று வரலாறு காணாத மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது (7 மேக்னிட்டூட்)!

ஹெயிட்டியின்

மக்கள் தொகை: 9 மில்லியன்

மக்கள் இனம்: 95% கருப்பர்கள்

மதம்: ரோமன் கத்தோலிக்கர்கள்

பேசும் மொழி: பிரன்சு

ஹெயிட்டி ஒரு ஏழை நாடு. நிலையான அரசியல்வாதிகளோ, நல்ல தலைவர்களோ இல்லாமல் பல அரசியல் குழப்பங்கள் நிறைந்த நாடு. தென் அமெரிக்காவிலேயே மிகவும் ஏழையான நாடு.

யு என் $10 மில்லியன் நிதி உதவி செய்கிறது. அமெரிக்காவும் பண உதவியுடன், மீட்புப்பணிக்கு தங்கள் படையை அனுப்பி உதவுகிறது. ரோமன் கத்தோலிக்க சங்கங்கள் $5 மில்லியன் கொடுத்து உதவியுள்ளார்கள்.

பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. போதுமான மருத்துவ வசதியில்லாமல் மக்கள் பயங்கர கஷ்டப்படுகிறார்கள்.

Friday, January 8, 2010

திரட்டிகளை புறக்கணிக்கும் வலைதளங்கள் சாகின்றன!

வலைதளங்களை வளர்ப்பதுடன் தன்னையும் வளர்த்துக்கொள்பவைதான் திரட்டிகள். வலைதளங்கள் இல்லை என்றால் திரட்டிகளும் தேவையில்லை என்பதும் எல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் வலைதளங்களும் திரட்டிகளும் ஒருவருக்கொருவர் ம்யூச்சுவல் ரெஸ்பக்ட் வச்சிருக்கனும் என்பது வலை உலகில் புரிந்துகொள்ள வேண்டிய, வெளியில் சத்தமாக சொல்லப்படாத, எழுதப்படாத ஒரு சட்டம்.

பொது நன்மைக்காக திரட்டிகளில் நாளுக்கு நாள் மாற்றப்பட்டுவரும் சில, பல சட்டதிட்டங்களையும், மாற்றங்களையும் வலைதளங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக, இல்லை என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்டிகள் உதவியில்லாமலே சாதிக்கும் என்ற தப்புக்கணக்கு போட்டு திரட்டிகளை புறக்கணிக்கும் சில வலைதளங்களில் ட்ராஃபிக் மந்தமாகி விசிட்டர்கள் குறைந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.

சரி, முழு எழுத்துச் சுதந்திரம் என்பது உண்மையிலேயே யாருக்கும் இருக்கிறதா?

முழு எழுத்துச்சுதந்திரம் என்பது எந்தப் பெரிய எழுத்தாளன், க்ரிட்டிக்கும் கிடையாது என்பது எழுத்து உலகம் அறியும். அந்தச் சுதந்திரம் பத்திரிக்கைகளில் பல பிரபலங்களுக்குக்கூட இல்லாததால்தான் ஞாநி விகடனிலிருந்து குமுதம் போனார்.

வலைதளத்தில் எழுதும் ஃப்ரஃபெஷனல் எழுத்தாளர்கள்கூட தன் விசிறிகளை என்றுமே மனதில் கொண்டு, அவர்களை அனுசரித்தே எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசிறிகள் இல்லைனா வலைதளம் ஏது? அதனால் தன் வாசகர்களை இழக்க பயந்துகொண்டு தன் சுதந்திரத்தை இழப்பதும் உண்டு. வலைதளங்களில்கூட ஒருவரும் முழுச்சுதந்திரம் கிடையாது.

சமீபகாலமாக, தன் வலைதளத்தில் நானே ராஜா என்ற அகந்தையுடன் பொய்யையும், ஜோடிக்கப்பட்ட புரட்டுக்ளையும் எழுதி நடந்த உண்மையை மறைத்து எழுதுபவர்கள் நிலைமை இப்போது கேலிக்கூத்தாகிறது. இவர்கள் எழுதும் பொய்களை, உண்மை தெரிந்த பலர் விமர்சிப்பதால் இவர்கள் வலைதளம் இப்போது பெரிதும் பாதிக்க்கப்படுகிறது. இவர்களுக்கு வலைதள உலகில் இருந்த மரியாதை காற்றில் பறக்கிறது. இவ்வளவு நாள் சம்பாரித்த இவர்களுடைய ரெப்யுட்டேஷன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

"எனக்கும் என் வலைதளத்துக்கும் முழு எழுத்துச்சுதந்திரம் வேணும்" என்று மனப்பால் குடிப்பவர்கள், தாங்களே எழுதி தாங்களே படிச்சுக்க வேண்டியதுதான். திரட்டிகளின் சட்ட திட்டங்களையும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு திரட்டிகளின் உதவியுடன் வலைதளம் நடத்துபவர்கள்தான் புத்திசாலி!

Thursday, November 12, 2009

இந்திய பேராசிரியர்களின் அயோக்கியத்தனம்!

“நம்ம சேர்மன் புதுசா ஒரு மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வாங்குறாரு. இன்னும் 6 மாதத்தில் வந்துவிடும்னு சொல்றாங்க! அதனுடைய விலை மூனு கோடியே ஐம்பது லட்சமாம்”

“அவருக்கு எத்தனை பர்சண்ட் கமிஷன் தர்றானாம் அந்த ஃபாரின் கம்பெனி?”

“கமிஷனா? என்னடா சொல்ற?”

“நிச்சயம் 15-20% வாங்கி அவர் பைக்குள்ளே போட்டுக்குவாரு! இந்தியாவில் மட்டும்தான் இதுபோல் நடக்குது. அமெரிக்காவில் நடந்தால் அந்த பேராசிரியரை உடனே ஃபயர் பண்ணிடுவாங்க. You should not get some money and put it in your pocket for buying an instrument for an Institution. போஃபோர்ஸ் லகூட இதுபோல்தான் நடந்தது இல்லையா?”

“ஏன் நம்ம நாட்டிலேமட்டும் லஞ்சத்தையும் ஊழலையும் வெள்ளைக்காரர்கள் இப்படி விதைக்கிறார்கள்?”

“தெரிலைப்பா. நான் இதைப்பத்தி ஒரு சில அமெரிக்கர்களிடம் சொன்னேன். அவர்கள் நம்மள கேவலமா பார்க்கிறார்கள்!”

“யாருடைய பணம் இவர்கள் பைக்குள்ள போகுது?”

“இவங்க அப்பன்வீட்டுப் பணமா என்ன? சாதாரண ஏழை மக்களின் “வரிப் பணம்” தான் இவர்கள் பாக்கட்டில் போகுது. படிச்சவன், பெரிய பேராசிரியர்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் முதல் துரோகியா இருக்கான். என்னத்தை சொல்லச் சொல்ற போ!”