Thursday, June 3, 2010

பெண் பதிவர்களுக்காக உருகும் பிரபல ஆணாதிக்கவாதிகள்!

பதிவுலகில் ஆண் - பெண் சமம் என்று ஆக்க வேண்டுமென்றால், பிரபலப் பெண்ணியவாதிகள், மற்றும் பெண்பதிவர்களுக்காக உருகுபவர்கள் பெண் பதிவர்களுக்கு வீரத்தையும், கருத்துச்சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றும், சில இக்கட்டான சூழ்நிலையில் எப்படி தூசுவைப் போல தட்டிவிட்டுப் போகவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டுமே ஒழிய பெண்களை கோழையாக்கக்கூடாது!

ஆண்-பெண் இருவரும் சரி சமம் சமானம் என்றாலும் ஆண் வேறு பெண் வேறுதான். ஆனால் தமிழ் பதிவுலகில்/கருத்துலகில் அவர்கள் சமமானவர்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், பெண்பதிவர்களை ஏதோ ஸ்பெஷல் கோட்ட்டாவில் உள்ளவர்கள் போல் சில அறியாமையில் வாழும் ஆணாதிக்கவாதிகள் நடத்துவது/ஆக்குவது மிகவும் வருத்ததிற்குரியது.

* என்னுடைய அனுபவத்தில் தங்கள் கருத்துக்கு எதிர்த்து வரும் நாகரீகமான பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்கூட பிரபலங்கள் உருகும் இன்றைய பெண் பதிவர்களில் பலர் இல்லை!

* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!

* பொதுவாக பல பெண் பதிவர்கள் பலருக்கு எதிர் கருத்தையோ, தங்கள்கருத்தில் உள்ள்பிழையை சுட்டிக்காட்டும் மாற்றுகருத்தை அனுகவே சுத்தமாகத் தெரியவில்லை!

* எதிர் கருத்துள்ள பின்னூட்டம் வந்தால், அதை வெளியிடுவதே இல்லை. நான் சொல்லுவது நாகரீகமான எதிர் கருத்துள்ள பின்னூட்டங்கள். அசிங்கமான பின்னூட்டங்கள் அல்ல!

இவர்கள் விரும்பும், வெளியிடும் பின்னூட்டங்கள்

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

* :)

* :(

என்று வரும் ஃபார்மாலிட்டி பின்னூட்டங்களும், ஜால்ரா பின்னூட்டங்களும், அட்ட்ண்டன்ஸ் பின்னூட்டங்களும்தான்.

இப்படி வருகிற பின்னூட்டங்கள் எப்படி பதிவுலகில் உள்ள பெண்களின் சிந்தனையை வளர்க்கும்? இவர்களெழுத்தைப்பதப்படுத்தும்?

சிந்தித்துப் பதில்சொல்ல வேண்டிய, இவர்கள் கருத்திலுள்ள தவறை சுட்டிக்காட்டக்கூடிய, மற்றும் பதில் சொல்ல கடினமான பின்னூட்டங்கள், மற்றும் சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள் எல்லாம் இவர்கள் வலைதளத்தில் பதித்தால் அவைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள்.

பெண்பதிவர்களுக்காக தேவையில்லாம் உருகும் செக்ஸிஸ்ட் (தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! டிக்ஷசனரி பார்க்கவும்) பிரபலங்கள்தான் தமிழ்ப் பதிவுலகில் பெண்களை அடிமையாகவே, கருத்துச்சுதந்திரம் இல்லாமல், சிந்திக்கவிடாமல், கோழையாகவே வாழ வழி செய்யும் ஆணாதிக்கவாதிகள் என்பது நான் கண்ட உண்மை! உண்மை கசக்கத்தான் செய்யும்!

52 comments:

ப.கந்தசாமி said...

நல்லா குடுத்திருக்கீங்க டோஸ். நம்மாளுங்க திருந்த மாட்டானுங்க.

குடுகுடுப்பை said...

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

Anonymous said...

பதிவில் எனக்குச் சில உடன்பாடுகளும் மறுப்பும் உண்டு.

என்றாலும் இந்தச் சமயத்தில் இந்தப் பதிவு வேண்டாமே?

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

வருண் said...

***Dr.P.Kandaswamy said...
நல்லா குடுத்திருக்கீங்க டோஸ். நம்மாளுங்க திருந்த மாட்டானுங்க.

3 June 2010 6:22 PM***

என்னுடைய அனுபவத்தைத்தாங்க எழுதி இருக்கேன். இது கர்பனையல்ல! உண்மையான அனுபவம்!

வருண் said...

****குடுகுடுப்பை said...
* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

3 June 2010 6:27 PM***

தரமான, தாட்-ப்ரவோக்கிங் பின்னூட்டம்ங்க! :)))

வருண் said...

***வடகரை வேலன் said...
பதிவில் எனக்குச் சில உடன்பாடுகளும் மறுப்பும் உண்டு.

என்றாலும் இந்தச் சமயத்தில் இந்தப் பதிவு வேண்டாமே?

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

3 June 2010 6:32 PM***

இதைப்பத்தி நான் தெளிவாக/டீட்டைல் எழுதாதற்கு காரணமே நீங்கள் "வார்ன்" செய்யும் காரணம்தான். I get irritated when women lack open-mind and pretending like bharathi to the outside world! Face the truth! Face the reality! What are you afraid of in the 21st century?

எண்ணங்கள் 13189034291840215795 said...

சரியா சொல்லியிருக்கீங்க.

சில பெண் ரவுடி பதிவர்களும் இருக்காங்கன்னு சமீபத்தில் புரிந்துகொண்டேன்...

:))

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இவர்களுக்கு பொருந்தும்..

கண்ணியமாக , தேவையான விஷயங்களை மட்டும் எழுத பழகிக்கணும்..

சில ஜொள்ளர்கள் , செக்ஸிஸ்ட் , திருத்த முடியாது...:)

நல்ல ஆண், பெண் பதிவர்கள் பிரபலமாவதற்கு ஆசைப்படுவதில்லை...ஜால்ரா அடிப்பதில்லை என்பது என் எண்ணம்..

Anonymous said...

Varun i am not afraid of anything or anyone. But i always wish to avoid issues.

Because when elephants fight it is the grass that suffers.

The above is also evident from the current issues. Take the case of mangalore siva. his character has been assassinated. neither the author nor the publisher took responsibility to clear this.

Sivaraman wishes to clarify his job title and his place of work but never even bothers to offer his version to mr Mangalore Shiva. This I call intellectual tyranny.

வருண் said...

***நல்ல ஆண், பெண் பதிவர்கள் பிரபலமாவதற்கு ஆசைப்படுவதில்லை...ஜால்ரா அடிப்பதில்லை என்பது என் எண்ணம்..***

நாகரீகமாகச் சொல்லும் மாற்றுக்கருத்தை ஆண்பதிவர்கள் போல சில பெண்பதிவர்கள் வெளியிடுவதில்லை. மாற்றுக்கருத்து சொல்கிற ஆண்களெல்லாம் மிருங்கள் அல்ல!
ஜால்ரா அடிக்கிற ஆண்கள் எல்லாம் பெரிய யோக்கியசிகாமணிகளும் அல்ல! என்பதென் எண்ணம்ங்க, புன்னகை தேசம் :)

வருண் said...

*** வடகரை வேலன் said...
Varun i am not afraid of anything or anyone. But i always wish to avoid issues.

Because when elephants fight it is the grass that suffers.

The above is also evident from the current issues. Take the case of mangalore siva. his character has been assassinated. neither the author nor the publisher took responsibility to clear this.

Sivaraman wishes to clarify his job title and his place of work but never even bothers to offer his version to mr Mangalore Shiva. This I call intellectual tyranny.

3 June 2010 8:04 PM***

நான் உங்களை சொல்லலைங்க. பெண்பதிவர்களை சொன்னேன்.

அப்புறம் சிவராமன், இப்படி முதுகில் குத்தும் துரோகிகளுக்கெல்லாம் நண்பர்கள்னு நெனச்சு இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்தால், கடவுளும் பெரியாரும் கைகோர்த்துக்கொண்டு வந்தாலும் சிவராமனை காப்பாத்த முடியாதுங்க :(

Anonymous said...

கருமமே கட்டளைக் கல்.

Unknown said...

வருண்,

லீனா "பார்ப்பனீய" ஜாதி என்பதால் வினவு பெண் என்றும் பாராமல் திட்டி தீர்த்தார்.மற்ற் படி பெண் என்றால் பேய் என்ன வினவும் இரங்கும் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல.

எல் கே said...

i have similar expereince.. atha nan publica inga potta periya prachanai varum vendam

வருண் said...

***maruthu said...
வருண்,

லீனா "பார்ப்பனீய" ஜாதி என்பதால் வினவு பெண் என்றும் பாராமல் திட்டி தீர்த்தார்.மற்ற் படி பெண் என்றால் பேய் என்ன வினவும் இரங்கும் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல.

3 June 2010 8:44 PM ***

சந்தனமுல்லை ஒரு பார்ப்பனவகுப்பை சேர்ந்தவராயிருந்திருந்தாலும் வினவு இரங்கி இருக்கும்.

ஆனால், இந்த விசயத்தில் வினவு சாதிச்சது தன் தலையிலும் சிவரமன் தலையிலும் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டதுதான்!

முகமூடி போட்டுக்கொண்டு எல்லார் முகத்திரையையும் கிழிக்கும் இவனுகளுக்கு எதுக்கு பதிவரசியல் எல்லாம்?

வருண் said...

***LK said...
i have similar expereince.. atha nan publica inga potta periya prachanai varum vendam

3 June 2010 8:44 PM***

பேசாமல்,அடுத்த முறை, பெரிய முற்போக்குவாதி நீங்க! உங்க எழுத்துதான் பதிவுலகில் தரமானதுனு பச்சைப்பொய் சொல்லுங்க! அப்போத்தன் இவர்களுக்கு உள்ளம் குளிர்ந்து மூளை மழுங்கும்!

எல் கே said...

/பேசாமல்,அடுத்த முறை, பெரிய முற்போக்குவாதி நீங்க! உங்க எழுத்துதான் பதிவுலகில் தரமானதுனு பச்சைப்பொய் சொல்லுங்க! அப்போத்தன் இவர்களுக்கு //

enakku poi solla varathu varum. sorry for posting in tanglish. some problem in office computer

Robin said...

புகழுக்கு அடிமையாவதும், மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாமையும் பெண்களின் சுபாவம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இதில் சில விதி விளக்குகள் உண்டு என்பது உண்மையே.

பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு அவர்களை புகழ்ந்துபேசி தங்கள் வலையில் வீழ்த்தும் நயவஞ்சகர்களும் உண்டு. இவர்கள் வெளியில் பெண்ணியவாதிகளை போல காட்டிக்கொள்வர். பெண்கள் தவறு செய்தால்கூட வக்காலத்து வாங்குவதும் என்ன சொன்னாலும் இளிப்பதும் இவர்கள் வேலை. அதைப் போல சில பெண்கள், ஆண்கள் தங்களுக்கு அளிக்கும் ஆதரவை advantage ஆக எடுத்துக்கொண்டு ஏறி மிதிப்பதும் உண்டு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இது என்னுடைய பொதுவான கருத்து.

இப்படி உண்மைகளை வெளிப்படையாக சொல்பவர்கள் ஆணாதிக்கவாதிகள் என்று 'அன்போடு ' அழைக்கப்படுகிறார்கள்.

hiuhiuw said...

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

* :)

* :(

Ahamed irshad said...

:)))

nila said...
This comment has been removed by the author.
nila said...

நல்ல பதிவு வருண்.. எனக்குள்ளும் கொஞ்சம் அலசிப்பார்த்துகொண்டேன்..
ஆனால்...
"Robin said... புகழுக்கு அடிமையாவதும், மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாமையும் பெண்களின் சுபாவம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இதில் சில விதி விளக்குகள் உண்டு என்பது உண்மையே"
இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. அதற்காக புகழுக்கு அடிமையாவது மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாததும் பெண்களின் சுபாவம் என்று சொல்வது நியாயமாகாது.. ஏன்.. நான் கூட நீங்கள் சொல்லும் வரையறைக்குள் ஏதோ ஒரு புள்ளியில் வரலாம்... ஆனால்.. ஒரு சிலரை வைத்து அத்தனை போரையும் கணக்கிடுவதில் எனக்கு உடன்பாடில்லை...
மாற்றுக்கருத்துகள் நாகரிகமான முறையில் சொல்லப்படும் வரை ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை... மாற்றுக்கருத்துகள் நம் எண்ணங்களை வேறு கோணத்திலிருந்தும் பார்க்க உதவும்.. அதை ஏற்றுக்கொள்ள பெண் பதிவர்களும் பழகிக்கொள்ள வேண்டும்.. My idea is I can grow only when my ego is pinched..

சீனு said...

//சந்தனமுல்லை ஒரு பார்ப்பனவகுப்பை சேர்ந்தவராயிருந்திருந்தாலும் வினவு இரங்கி இருக்கும்.//

I don think so.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//சந்தனமுல்லை ஒரு பார்ப்பனவகுப்பை சேர்ந்தவராயிருந்திருந்தாலும் வினவு இரங்கி இருக்கும்.//---NEVER..!

அதற்கு அதாரம் அவர்களின் இடுகையே. அதில் முன்பு இதைவிட நேரிடையாக பல பெண் பதிவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் வந்திருந்த்ததையும் சொல்லி இருக்கிறார்கள்...

அப்போதெல்லாம் எங்கே போனது வினவு?

வினவைப்பொருத்தவரை மனிதர்களின் ஒவ்வொரு செயல்களுக்கும் அவர்கள் அகராதியில் வேறு அர்த்தங்கள் உள்ளன.

ஒரு அன்பான கணவன் தன் மனைவிக்காக வெயிலுக்கோ அல்லது மழைக்கோ குடைப்பிடித்தாலும்,

அது...

அந்த 'பெண்ணை' ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிறைவைக்கும் அந்த 'ஆணின்' ஆணாதிக்கம்.

அதற்கு இசைவு கொடுக்கும் பெண் அவள் என்றால் அதுதான் பெண்ணடிமைத்தனம்.

இதில் முக்கியமான விதிவிலக்கு: இதில் ஈடுபட்டவர்கள் ம.க.இ.க தம்பதியினர் எனில் அதுதான் 'தாம்பத்திய இலக்கணம்' என்பார்கள்.

சுருங்கச்சொன்னால்: அவர்களுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதி.

அவர்கள் அன்றும் இன்றும் என்றும் தவறே செய்யாதவர்கள். அவர்களை விமர்சிக்கும் யோக்கியதை (காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின்,மாவோ உட்பட...) யாருக்குமே கிடையாது...

இந்த தெளிவு எனக்கு கிடைக்க காரணமாயிருந்த வினவு உட்பட அனைவருக்கும் நன்றி.

அருவி said...

ஒரு பெண்ணை விபச்சாரி என்று சொல்வது எந்த அளவு தவறோ அதே அளவுதவறு ஒரு ஆம்பிளையை ஜொள்ளன் என்றும் சபலம் கொண்டவன் என்றும் போகிற போக்கில் சொல்வது. நர்சிம் செய்த தப்பும் பைத்தியகாரன் செய்த தப்பும் ஒரே விடயமே. உங்கள் கருத்து என்ன?

வருண் said...

*** LK said...

/பேசாமல்,அடுத்த முறை, பெரிய முற்போக்குவாதி நீங்க! உங்க எழுத்துதான் பதிவுலகில் தரமானதுனு பச்சைப்பொய் சொல்லுங்க! அப்போத்தன் இவர்களுக்கு //

enakku poi solla varathu varum. sorry for posting in tanglish. some problem in office computer

3 June 2010 9:19 PM***

பொய் சொல்ல வராதா? :))) பாவம் நீங்க :) டேக் இட் ஈஸி, எல் கே :)

வருண் said...

**Robin said...

புகழுக்கு அடிமையாவதும், மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாமையும் பெண்களின் சுபாவம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இதில் சில விதி விளக்குகள் உண்டு என்பது உண்மையே.

பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு அவர்களை புகழ்ந்துபேசி தங்கள் வலையில் வீழ்த்தும் நயவஞ்சகர்களும் உண்டு. இவர்கள் வெளியில் பெண்ணியவாதிகளை போல காட்டிக்கொள்வர். பெண்கள் தவறு செய்தால்கூட வக்காலத்து வாங்குவதும் என்ன சொன்னாலும் இளிப்பதும் இவர்கள் வேலை. அதைப் போல சில பெண்கள், ஆண்கள் தங்களுக்கு அளிக்கும் ஆதரவை advantage ஆக எடுத்துக்கொண்டு ஏறி மிதிப்பதும் உண்டு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இது என்னுடைய பொதுவான கருத்து.

இப்படி உண்மைகளை வெளிப்படையாக சொல்பவர்கள் ஆணாதிக்கவாதிகள் என்று 'அன்போடு ' அழைக்கப்படுகிறார்கள்.

3 June 2010 9:20 PM***

கருத்துக்கு நன்றி, ராபின். இது ரொம்ப காம்Pலிக்கேட்டெடான மேட்டர்ங்க!

ஒருவர், ப்லவிதமான அரசியல் காரணாங்களில் தள்லப்படுகிறார். இங்கே நடக்கும் சண்டையில் பார்த்தால் சாதி ஒழிந்ததுனு கூட சொல்லலாம். ஏன்னா நரசிம்முக்கு சப்போர்ட் பண்ணுபவர்களில் பலர் பார்ப்பனர்கள் அல்ல! இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம் :)))

வருண் said...

***Blogger ராஜன் said...

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

* :)

* :(

3 June 2010 9:40 PM***

இதை வாசிச்சு எத்தனை பேர் கடுப்பாயிருப்பாங்கனு எனக்குத் தெரியும். எத்தனை பேர் என்னை வெறுப்பாங்கனும் தெரியும். இதெல்லாம் கணக்குப்பண்ணிப்பார்த்து நான் பதிவு எழுதினால் பதிவே எழுதமுடியாது. Just express your thoughts. I am sure at least few will correct them, that is my policy, rajan :)))

வருண் said...

***அஹமது இர்ஷாத் said...

:)))

4 June 2010 12:31 AM***
தெய்வீக சிரிப்பு சார், உங்க ":)))"!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***nila said...

நல்ல பதிவு வருண்.. எனக்குள்ளும் கொஞ்சம் அலசிப்பார்த்துகொண்டேன்..
ஆனால்...***

பகிர்தலுக்கு நன்றி, நிலா :)

"Robin said... புகழுக்கு அடிமையாவதும், மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாமையும் பெண்களின் சுபாவம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இதில் சில விதி விளக்குகள் உண்டு என்பது உண்மையே"

nila continues: இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. அதற்காக புகழுக்கு அடிமையாவது மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாததும் பெண்களின் சுபாவம் என்று சொல்வது நியாயமாகாது.. ஏன்.. நான் கூட நீங்கள் சொல்லும் வரையறைக்குள் ஏதோ ஒரு புள்ளியில் வரலாம்... ஆனால்.. ஒரு சிலரை வைத்து அத்தனை போரையும் கணக்கிடுவதில் எனக்கு உடன்பாடில்லை...***

True, we can not label it is women are like that and men are completely different.

*** மாற்றுக்கருத்துகள் நாகரிகமான முறையில் சொல்லப்படும் வரை ஏற்றுக்கொள்வதில் தவறொன்றுமில்லை... மாற்றுக்கருத்துகள் நம் எண்ணங்களை வேறு கோணத்திலிருந்தும் பார்க்க உதவும்.. அதை ஏற்றுக்கொள்ள பெண் பதிவர்களும் பழகிக்கொள்ள வேண்டும்.. My idea is I can grow only when my ego is pinched..***

It is also possible they are over causious about a "stranger" who could be anybody. However if the guy/girl whose comment is unfairly moderated, the blogger is going in the bad book of that guy or girl. Because we are all cheap human beings. WE cant appreciate when we are treated unfairly for no good reason. We are going to judge or misjudge the blogger who did not publish a comment which you think as fair. :)

So, it is certainly complicated :)))

Anyway thanks for sharing your thought nila :))

வருண் said...

*** சீனு said...

//சந்தனமுல்லை ஒரு பார்ப்பனவகுப்பை சேர்ந்தவராயிருந்திருந்தாலும் வினவு இரங்கி இருக்கும்.//

I don think so.

4 June 2010 2:52 AM***

I am not sure about your judgment on this. Because so many nonbrahmins are supporting narasim because they believe everybody makes mistakes and it is narasim's turn. So, you cant keep talki9ng caste politics here!

I learn sivaraman wears a "poonool" too (as per a back-stabber called suguna). How are you going to interpret that using your "caste" labelling???

வருண் said...

*** mohamed ashik said...

//சந்தனமுல்லை ஒரு பார்ப்பனவகுப்பை சேர்ந்தவராயிருந்திருந்தாலும் வினவு இரங்கி இருக்கும்.//---NEVER..!***

You are saying vinavu has some principle?

They will sell anybody, criticize anybody for their popularity. Why not a poor brahmin girl?

They are just cheap critics and do anything in the name of "criticizing" and gaining popularity!

வருண் said...

**அருவி said...

ஒரு பெண்ணை விபச்சாரி என்று சொல்வது எந்த அளவு தவறோ அதே அளவுதவறு ஒரு ஆம்பிளையை ஜொள்ளன் என்றும் சபலம் கொண்டவன் என்றும் போகிற போக்கில் சொல்வது.***

Well, that is your opinion! :) Not many would agree with your statement.

***நர்சிம் செய்த தப்பும் பைத்தியகாரன் செய்த தப்பும் ஒரே விடயமே. உங்கள் கருத்து என்ன?

4 June 2010 5:30 AM***

Then, why sivaraman is worse than narasim??

If you can forgive narasim for his mistake then forgive sivaraaman too!

If a blogger says "I cant forgive somebody who harmed me badly" then honestly the blogger is getting into the bad book of many! Helping the "abuser" to become not guilty! imho :)

Nanditha said...

"சில இக்கட்டான சூழ்நிலையில் எப்படி தூசுவைப் போல தட்டிவிட்டுப் போகவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டுமே ஒழிய பெண்களை கோழையாக்கக்கூடாது!"
Very funny! We are not in any need to learn anything from you! Not replying back or not publishing the comments does not mean we are cowards, It is called "IGNORING" like how I Ignored you yday in a different post. I feel really sorry for you trying to get people's attention by posting what you feel as WOMEN's RIGHTS'. We know better than you to deal with issues as we are used to dealing issues from childhood. Just do what you are really good at like posting Kadalai Corner posts and be happy with it. Let me see if you publish this one. I still can't stop laughing HAHA.

வருண் said...

***cc said...

4 June 2010 2:21 PM***

Laughing is good for your HEALTH, cc. I am so HAPPY I could help you making you healthier! Take care! :)

வருண் said...

**Let me see if you publish this one. I still can't stop laughing HAHA.***

I have published it as you were DECENT. Now that everybody knows you were laughing at me! HAPPY? :)

ILA (a) இளா said...

அட இந்தக் கடை திறந்துதான் இருக்கா..

ILA (a) இளா said...

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

:)
:(

ILA (a) இளா said...

: |
:?ஓ

ILA (a) இளா said...

ஓஹோ

ILA (a) இளா said...

அப்பாடா கடைமை முடிஞ்சது

ILA (a) இளா said...

போன பின்னூட்டத்தில் ஒரு எபி. மன்னிக்க

Anonymous said...

//நாகரீகமாகச் சொல்லும் மாற்றுக்கருத்தை ஆண்பதிவர்கள் போல சில பெண்பதிவர்கள் வெளியிடுவதில்லை.//
I beg to differ. நான் போடுவேன். கொஞ்சம் மோசமாக குற்றம் சாட்டினால் நல்லா காரமாகவே பதில் போடுவேன். அநாகரிகமாகமான பின்னூட்டங்களை டிலீட் பண்ணுவேன்.

@ ரொம்பின், //புகழுக்கு அடிமையாவதும், மாற்றுக்கருத்துக்களை பொறுக்கமுடியாமையும் பெண்களின் சுபாவம். //
You are such a moron . இதுக்கு யாரும் துடப்பம்கட்டை அனுப்பமாட்டாங்களா?

வருண் said...

என்னவோ போங்கப்பா! ஏதோ எல்லாரும் இந்தப் பிரச்சினையை விட்டுட்ட மாதிரியும் நான் ஒரு ஆளுதான் பிடிச்சு தொங்கிற மாதிரி செய்றீங்களே!

பரிந்துரைக்கப்படுகிற இடுகை எல்லாமே இந்த எழவாத்தான் இருக்கு!
எனக்கு மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்?

சரி, விடுங்க!

ஹாவ் எ நைஸ் வீக் எண்ட், இளா :)

வருண் said...

அனாமிகா துவாரகன் said...
//நாகரீகமாகச் சொல்லும் மாற்றுக்கருத்தை ஆண்பதிவர்கள் போல சில பெண்பதிவர்கள் வெளியிடுவதில்லை.//
I beg to differ. நான் போடுவேன். கொஞ்சம் மோசமாக குற்றம் சாட்டினால் நல்லா காரமாகவே பதில் போடுவேன். அநாகரிகமாகமான பின்னூட்டங்களை டிலீட் பண்ணுவேன். ****

வாங்க அனாமிகா துவாரகன்! உங்களை நான் இப்போத்தான் முதன்முதலா ச்ந்திக்கிறேங்க!

என்னுடைய பதிவில் ஒரு பகுதியை கீழே கொடுக்கிறேன்!

* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!

நீங்க இதில் அடங்குவீர்கள்னு நெனைக்கிறேன் :)

Anonymous said...

நான் மச்சூவர் இல்லைன்னு எனக்குத் தெரியும். So again you are wrong.In fact, நான் போட்ட எல்லா எதிர் பின்னூட்டங்களையும் அந்த பதிவர்கள் போட்டுத்தான் இருக்கிறாங்க.

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
நான் மச்சூவர் இல்லைன்னு எனக்குத் தெரியும். So again you are wrong.In fact, நான் போட்ட எல்லா எதிர் பின்னூட்டங்களையும் அந்த பதிவர்கள் போட்டுத்தான் இருக்கிறாங்க.

4 June 2010 5:46 PM***

உங்களை நீங்க எப்படிவேணா "லேபல்" பண்ணிக்கோங்க! உங்களுக்குத்தான் நீங்க யாருனு தெரியும்.

ஆனால் நான் எப்படி ராங்னு சொல்றீங்கனு தெரியலை. உங்க எதிர் பின்னூட்டங்களை வெளியிட்டதால நான் சொன்னது எப்படி தப்பாகும்?

உங்களை நான் நம்புறேன். ஆனால் நீங்க என்னை நம்பமாட்டீங்க அப்படித்தானே?

Anonymous said...

Why dont you believe me when I say that many female bloggers publish such comments. =((

Anonymous said...

I a new young blogger. I dont have any maturity. =))You dont have to be matured to publish comments. You just have to be in good mood to accept them. =))

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
Why dont you believe me when I say that many female bloggers publish such comments. =((

4 June 2010 5:56 PM***

OK, then it is only my ignorance!

வருண் said...

*** அனாமிகா துவாரகன் said...
I a new young blogger. I dont have any maturity. =))You dont have to be matured to publish comments. You just have to be in good mood to accept them. =))

4 June 2010 5:57 PM***

OK :)

BIGLE ! பிகில் said...

லீனா "பார்ப்பனீய" ஜாதி என்பதால் வினவு பெண் என்றும் பாராமல் திட்டி தீர்த்தார்.//////

லீனா பார்ப்பனர் அல்ல! லீனாவுக்கும் வினவுக்கும் அரசியல் பிரச்சனை! வினவு லீனாவை திட்டித்தீர்க்கவில்லை, அவரது பணமோசடி விவகாரங்களை அம்பலப்படுத்தியது.
வெளிநாட்டில் லீனா எவ்வளவு பெரிய பிராட் என்பது தெரியும்,. இந்தியாவில் தெரியாமல் போனது ஆச்சரியம்தான். தேசம் நெட் வெப்சைட்டில் லீனாவையும் சோபாவையும் முழுக்க கிழித்திருக்கிறார்கள் பாருங்கள்