Thursday, December 2, 2010

கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்

ஜெயா டிவியில் எய்ட்ஸ் மற்றும் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் கருத்துக்கள் பரிமாறுவது போல் அனுஹாசன் நடத்தும் "கண்ணாடி" என்னும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதுபோல் நிகழ்ச்சிகள் நான் இதுக்கு முன்னால பார்த்ததில்லை! எச் ஐ வி பாசிடிவா இருப்பவங்க தான் பட்ட கஷ்டங்களையும், மக்கள் எந்த அளவுக்கு எயிட்ஸ் நோய் எப்படிப் பரவும் என்று தெரியாமல் இன்னும் இருக்கிறார்கள் என்பதை சொல்ல தைரியமாக வந்து இருந்தார்கள்.

மொதல்ல இவங்களைப் பார்த்தால், இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள்னு பாவமாக இருந்தது. அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு ரொம்ப பெருமையாக இருக்கு .

இந்த நிகழ்ச்சியில் ஒரு சில கேள்விகளுக்கு அதில் பங்குபெற்ற டாக்டர் சரியா பதில் சொன்ன மாதிரி தோனலை! குறிப்பா கீழே உள்ள ஒரு கேள்வி!

ஒருவர் டாக்டரிடம்:

ஒரு எயிட்ஸ் நோயாளி அடிபட்டு ரத்தம் சிந்தஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சொல்லப்படும்போது, டாக்டர்களே அவர்களை ட்ரீட் செய்ய பயப்படுகிறார்கள். டாகடர்கள் இப்படி இருக்கலாமா? என்கிற குற்றசாட்டுடன்.

இதற்கு பதில் சொன்ன டாக்டர், கொஞ்சம் கனிவா இதில் உள்ள ரிஸ்க் களை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னவிதம் ரொம்ப rude ஆக இருந்தது.

டாக்டர் சொன்ன பதில்: ஏன் பயப்படுறாங்கனா டாக்டருக்கு ஒட்டிவிடும்! நாங்களும் எயிட்ஸ் பேஷண்ட் ஆகிவிடுவோம். எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கு! அதனால்தான் பயப்படுகிறார்கள்னு சொன்னார்.

இதைவிட அந்த டாக்டர் நல்லா பதில் சொல்லி இருக்கலாம்னு தோனுச்சு! அதாவது அதுபோல் அந்த நோயாளியிடம் இருந்து வரும் ரத்தம் டாக்டர் உடம்பில் ஏதாவது உள்ள காயத்தில் பட்டால் டாக்டருக்கும் எச் ஐ வி வந்துவிடும். அதனால் எச் ஐ வி டாக்டருக்கும் பரவும் சாண்ஸ் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் டாக்டர்கள் கொஞ்சம் கவனமா இருக்காங்கனு சொல்லி இருக்கலாம்.

நடிகர் கமலஹாசன் அவர்கள் எச் ஐ வி அவேர்நெஸ்காக செய்யும் தொண்டுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. "கண்ணாடி" போல் நெறைய டி வி நிகழ்ச்சிகள்தான் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு சொல்ல ஒரு சிறந்த வழினு தோனுது.
-------------

எச் ஐ வி சம்மந்தமா 2 வருடம் முன்னால நான் எழுதிய பதிவுக்கு லின்க் இங்கே தர்றேன். இதையும் படிச்சுப் பாருங்க!

நீங்கள் HIV பாசிடிவா?

12 comments:

Chitra said...

People need to have the awareness (looks like including the doctors)

எஸ்.கே said...

I agree with chitra madam!

philosophy prabhakaran said...

அடப்பாவி... ஒரு மருத்துவர் அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியா பதில் சொன்னார்... ரொம்ப கொடுமை...

வருண் said...

***Chitra said...

People need to have the awareness (looks like including the doctors)

2 December 2010 10:32 AM***

மத்தபடி அந்த ஷோல எல்லாருமே நல்லாத்தான் பேசினாங்கங்க. இந்த ஒரு பதில் மட்டும் கொஞ்சம் நிதானமில்லாமல் அந்த டாக்டரிடம் இருந்து வந்தது. உங்க கருத்துக்கு நன்றிங்க, சித்ரா! :)

வருண் said...

***எஸ்.கே said...

I agree with chitra madam!

2 December 2010 1:08 PM***

நான் இப்போ (பதிவின் கடைசியில்) ஒரு லின்க் கொடுத்து இருக்கேன்? "நீங்க HIV பாசிடிவா?" னு அதையும் படிச்சுப் பாருங்க முடிஞ்சா! :)

வருண் said...

***philosophy prabhakaran said...

அடப்பாவி... ஒரு மருத்துவர் அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியா பதில் சொன்னார்... ரொம்ப கொடுமை...
2 December 2010 1:26 PM ***

மொதல்ல ஒழுங்காதான் பதில் சொல்லிண்டு இருந்தார். இந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவர் சொன்ன பதில் கொஞ்சம் நல்லா வரலை! மற்றபடி ஓ கே தான் :)

எஸ்.கே said...

தங்களின் அப்பதிவை படித்தேன் நன்றாக இருந்தது!
பலர் சுகத்திற்காக அந்த நேரம் செயல்படுகிறார்களே தவிர பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா, எதிர்விளைவுகளை பற்றி யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!

பழமைபேசி said...

சிந்தனை செய் மனமே....

வருண் said...

***எஸ்.கே said...

தங்களின் அப்பதிவை படித்தேன் நன்றாக இருந்தது!
பலர் சுகத்திற்காக அந்த நேரம் செயல்படுகிறார்களே தவிர பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா, எதிர்விளைவுகளை பற்றி யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!***

வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றிங்க, எஸ் கே! :)

வருண் said...

***பழமைபேசி said...

சிந்தனை செய் மனமே....

2 December 2010 4:03 PM***

செய்தால்?

தீவினை அகன்றிடுமே! :))))

ராமலக்ஷ்மி said...

//அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு//

உண்மைதான். பிறக்கும் குழந்தைகளையும் இந்நோய் பாதித்து வரும் கட்டத்தில் இதுபற்றிய சரியான புரிதல் அவசியமான ஒன்று.

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

//அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு//

உண்மைதான். பிறக்கும் குழந்தைகளையும் இந்நோய் பாதித்து வரும் கட்டத்தில் இதுபற்றிய சரியான புரிதல் அவசியமான ஒன்று.

2 December 2010 8:16 PM***

ஆமாங்க, எய்ட்ஸ் விழிப்புணர்வு ரொம்ப அவசியம்ங்க. இதுபோல் "ஷோ"க்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! தங்கள் கருத்துக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி!