Monday, August 4, 2008

காதல் கல்வெட்டு-9

வந்த புதியவர் காஃபி ஆர்டெர் செய்கிற லைனுக்கு போனவுடன், கயலின் முகமாறுதல்களை கவனித்த வருண், "என்ன ஆச்சு கயல்?" என்றான்.


"ஒண்ணுமில்லை, வருண்!" என்று புன்னகைக்க முயற்சித்து தோல்வியடைந்தாள், கயல்.


"சரி, எனக்கு கொஞ்சம் Fresh Air வேணும், வெளிய போய் உன் காரில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசுவோமா, கயல்?"


"எனக்கும்தான், நல்ல ஐடியா, வருண்!" என்று சொல்லி உடனே எழுந்தாள் கயல்.


இருவரும் காஃபியை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்கள். கயலின் காரை நோக்கி அவள் நடந்தாள். வருண் மெதுவாக அவளை தொடர்ந்து அருகிலேயே அமைதியாக நடந்தான்.


"இந்த அக்யூரா டி எல் தான் உங்கடையதா? நானும் ஒரு ஹாண்டா ஃபேன் கயல், டொயோட்டா எனக்கு பிடிக்காது"


"நான் முன்னால ஒரு கரோலாதான் வைத்திருந்தேன், வருண். இப்போதான் சமீபத்தில் இதுக்கு தாவினேன்"


"நான் கரோல்லாவையும், இந்த அக்யூரா டி எல் சீரீஸையும் நிச்சயம் கம்ப்பேர் பண்ண மாட்டேன். அது ஆப்பிளையும் ஆரஞ்சையும் கம்ப்பேர் பண்ணுவதுபோல ஆயிடும். பொதுவா எனக்கு டொயோட்டாவை விட ஹாண்டா பிடிக்கும்"


"என் கார் பிடிச்சிருக்கா, வருண்?" என்று சிறுபிள்ளைபோல் கேட்டாள், கயல்.


"ரொம்ப நல்ல கார், கயல். I am glad you could afford one. நான் ட்ரைவ் பண்ணுவது ஒரு பழைய 2001 ஹாண்டா அக்கார்ட்! அதில் ஒரு 80,000 மைல்ஸ் இருக்கு அல்ரெடி"


"நிஜம்மாவா? ஏன் புதுக்கார்லாம் பிடிக்காதா?"


"எனக்கு புது கார்களில் எதுவும் அப்சஸன் கிடையாது, கயல்!. I prefer using that money elsewhere."


கார் கதவை திறந்தாள் கயல்.


"இஞ்சினை ஸ்டார்ட் பண்ணுங்க, கயல். உள்ளே உட்கார்ந்து பேசலாம். ஏசி ஆன் பண்றீங்களா?"


கயல், ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அவள் காரை ஸ்டார்ட் பண்ணினாள். வருண் அதர் சைட்ல கதவை திறந்து பாசஞ்சர் ஃப்ரண்ட் சீட்டில் உட்கார்ந்து கதவை அடைத்தான்.


"சரி யார் அந்த ஆள்? அவர் வந்ததும் உங்க முகம் மாறிவிட்டது, கயல்?" என்று விசயத்திற்கு வந்தான் வருண்.


"அவரா, வருண்? நான் ஒருமுறை அவரை டேட் பண்ணினேன், வருண். ஆனால் அவர் நிறைய பொய் சொல்லி இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதையும் மற்றும் ஒரு 10 மாத குழந்தையும் உண்டு என்பதையும் என்னிடம் வேண்டுமென்றே மறைத்துவிட்டார். ஒரு பேச்சிலர் போலவும், சீரியஸ் ரிலேஷன்ஷிப்க்காக டேட் பண்ணுவதுபோல் நடித்தார். பிறகுதான் உண்மையை கண்டு பிடித்தேன்! எனக்கு உண்மையிலேயே பெரிய ஷாக், வருண். ஏன் இப்படியெல்லாம் கீழ்தரமா செய்றாங்க வருண்?"என்றாள் வருத்ததுடன் .


"நீங்க கேள்விப்பட்டதில்லையா, கயல்? All men are Bastards! That is an exaggeration but most of them certainly are. Some of them are shameless like this guy. It is some kind of a "joke" for these people, kayal" என்றான் கோபமாக.


"என்னவோ போங்க, வருண். அரேஞ்ஜிட் மேரேஜ்லதான் ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்குனு நினைக்கிறோம். அதனால்தான் என்னை மாதிரி ஆட்களெல்லாம் டேட்டிங் போறது, ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை தேட! ஆனால் டேடிங்ல கூட இந்த மாதிரி ஏமாற்றுக்காரர்கள்தான் நிறையப்பேர் இருக்காங்க. டேட்டிங்கில் கூட இவர்களைப்பர்றி தெரிந்துக்கொள்வது ரொம்ப கஷ்டம்! நிறைய உண்மைகளை மறைக்கறாங்க, இவரை மாதிரி. I become more and more suspicious and prejudicious about men unfortunately. I am really scared of men, Varun".


"உண்மைதான், கயல். டேடிங்லயும் ஏகப்பட்ட தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.நான் டேட்டிங் எல்லாம் போவதில்லை, அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இல்லை. BTW, நான் வேணா, நல்ல அழகான, தகுதியான இளம் தமிழர்கள் பார்த்தால் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கவா? எனக்கு ஒரு சில பேர் இப்பகூட தெரியும். They are looking for serious relationship. You want to give it a try, Kayal?"


"Since when you are doing this broker job?" கயல் சிறிது கோபத்துடனே கேட்டாள்.


"Come on, Kayal! What is wrong in suggesting some good guys I know to you? Especially who can be a good match for you and your status? Moreover, I know for sure, they are not really liars like this bastard"


"I am sorry, varun. I don't want you to. And I know how to find some dates for me!"


"Take it easy, Kayal. You don't have to get mad at me for this!"


"எனக்கு பிடிக்கலை வருண்!" என்றாள் அவள், அவன் முகத்தைப்பார்க்காமல்.


வருண், அவள் சீட் அருகில் வந்தான். தன் வலதுகரத்தை கொண்டு கயலின் நாடி மற்றும் இரண்டு கன்னத்தையும் சேர்த்து பிடித்தான், பிறகு மெதுவாக, அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். அவள் கண்கள் கலங்கி இருந்தன.


"Hey! OK, I apologize, Kayal. I am sorry I said that! I promise it wont happen again"


"Thank you for understanding me varun. What is time now?"


"1 மணியாகிவிட்டது, கயல். நானும் புறப்படனும். தேங்க்ஸ் கயல் ஃபார் தி நைஸ் டைம்". காரிலிருந்து இறங்கி கதவை அடைத்தான்.


"பை, வருண்" என்றாள் கயல்.


பை சொல்லிவிட்டு, வருண் அவன் காரை நோக்கி சென்றான். அவன் காரை ஸ்டார்ட் பண்ணி அடுத்த வினாடியே பறந்துவிட்டான், வருண். கயல், கொஞ்ச நேரம் அப்படியே பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அது வருணுடன் அவளுடைய முதல் ஆர்க்யூமெண்ட்!


-தொடரும்

17 comments:

MSK / Saravana said...

இந்த பகுதி கொஞ்சம் சீரியஸ் ஆவே இருந்துச்சு...

Go ahead..

Anonymous said...

Very Nice tale ..

கயல்விழி said...

//அவருக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதையும் மற்றும் ஒரு 10 மாத குழந்தையும் உண்டு என்பதையும் என்னிடம் வேண்டுமென்றே மறைத்துவிட்டார்.//

இவரைப்பற்றி நானே என் கற்பு பதிவில் எழுத இருந்தேன், நீங்களே மென்ஷன் பண்ணிட்டீங்க :)

நல்ல பதிவு வருண்.

வருண் said...

*** M.Saravana Kumar said...
இந்த பகுதி கொஞ்சம் சீரியஸ் ஆவே இருந்துச்சு...

Go ahead..**

நன்றி, சரவணக்குமார்! ;-)

வருண் said...

*** Paithiyam said...
Very Nice tale ..

4 August, 2008 11:05 AM ***

Thanks for finding time to read it! :-)

வருண் said...

*** கயல்விழி said...
//அவருக்கு கல்யாணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதையும் மற்றும் ஒரு 10 மாத குழந்தையும் உண்டு என்பதையும் என்னிடம் வேண்டுமென்றே மறைத்துவிட்டார்.//

இவரைப்பற்றி நானே என் கற்பு பதிவில் எழுத இருந்தேன், நீங்களே மென்ஷன் பண்ணிட்டீங்க :)


4 August, 2008 11:19 AM ***

கற்பு பகுதியில் எழுதலாம்னு இருந்தியா? சாரி கயல்! :(


-----
***நல்ல பதிவு வருண்.***


நன்றி, கயல்! :-)

Anonymous said...

ahh..the flow of the story is getting sloowwwwer now...

வருண் said...

உண்மைதானுங்க அனானி! :-)

manikandan said...

வருண்,

உங்களுக்கு உண்மையிலயே ஆண்கள் மீதான கண்ணோட்டம் இது தானா ?

இல்லேன்னா அந்த சமயம் உங்களுக்கு வந்த உணர்வுகள எழுதறீங்களா ?

கயல்விழி said...

//உங்களுக்கு உண்மையிலயே ஆண்கள் மீதான கண்ணோட்டம் இது தானா ?

இல்லேன்னா அந்த சமயம் உங்களுக்கு வந்த உணர்வுகள எழுதறீங்களா ?
//

நல்ல கேள்வி.

எனக்கும் அது ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிந்தது வருண்.

ஜி said...

:)))

வருண் said...

**** அவனும் அவளும் said...
வருண்,

உங்களுக்கு உண்மையிலயே ஆண்கள் மீதான கண்ணோட்டம் இது தானா ?

இல்லேன்னா அந்த சமயம் உங்களுக்கு வந்த உணர்வுகள எழுதறீங்களா ?

5 August, 2008 8:58 AM ***

நிச்சயம் அந்த நிமிடம் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் உணர்வும்தான்!

* பெண்களை நம்பாதே!

* கண்ணைப்படைத்து பெண்ணைப்படைத்த இறைவன் கொடியவனே!

* பெண்களே! பெண்களே! வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்!

அப்படியெல்லாம் எழுதுறாங்க இல்லையா? அது மாதிரித்தான்! :-)

Anonymous said...

ur style is good. nice to read some good tamil...keep it up. - Sundar.

வருண் said...

****Anonymous said...
ur style is good. nice to read some good tamil...keep it up. - Sundar.***

Thanks, Sundar! :-)

வருண் said...

*** ஜி said...
:)))

5 August, 2008 10:00 AM***

வாங்க ஜி! :)

manikandan said...

/////// * பெண்களை நம்பாதே!

* பெண்களே! பெண்களே! வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்! ///////

அப்படினா இது எல்லாம் உண்மை இல்லையா !!!!!!

வருண் said...

*** அவனும் அவளும் said...
அப்படினா இது எல்லாம் உண்மை இல்லையா !!!!!! ***

LOL!