Saturday, August 16, 2008

பகிரங்க கடிதம்: லதானந்த் சித்தரின் எதிர்வினை

இன்று லதானந்த் சித்தரிடம் இருந்து எனக்கு மின்னஞ்சல் மூலமாக வந்த கடிதம்:

அன்பு கயல்!

என்னை மிகவும் நெகிழச் செய்தது ஈமெயில் மூலம் நீ அனுப்பிய இப்பதிவு.

கடித மேளாவின் தலை சிறந்த கடிதம் இது.

அந்த அற்புதப் பெண்மணிக்கு மானசீக நமஸ்காரங்கள்.

உன் பாட்டியைப் போன்றதொரு பெண்மணி - என்னுடைய பெரியம்மா இன்றும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார்.

உனது எழுத்து எளிமையாக நடையில் ஆனால் மிகவும் செறிவாக இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே நான் அவதானித்து எனது பிளாக்கில் எழுதியதை மகிழ்வுடன் இப்போது நினைவு கூர்கிறேன்,

ம்ம்ம். பிளாக் உலகம் எப்படிப் போய்க் கொண்டிருக்கு?

நீ விரும்பினால் எனது இந்தக் கடிதத்தை உன் பிளாக்கில் நீ வெளியிடலாம்.

லதானந்த்

எனது ஆதங்கம்: இனிமேல் கமெண்ட் எழுத கூட ப்ளாக் பக்கம் வரப்போவதில்லை என்று முடிவு செய்தாகிவிட்டதா? :( ஆசிரமத்தை சரியான முன் அறிவிப்பின்றி இப்படி முழுவதுமாக ஷட் டவுன் பண்ணிய லதானந்தை வருத்தத்துடன் கண்டிக்கிறேன். நீங்களும் இங்கே உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.

16 comments:

Balaji said...

ஹையோ ஹைய்யோ .... எங்க போய் இந்த கொடுமைய சொல்ல

கயல்விழி said...

என்ன கொடுமை?

கூடுதுறை said...

நீங்கள் சொல்வது நிஜமா? இல்லை எல்லோரும் போடுவது போல் மொக்கைக்கு போட்டுள்ளிர்களா?

எதோ மரியாதை சொல்லாக அக்கா என கூப்பிட்டதற்க்காக அங்கிள் எனக்கூப்பிட்டு கிண்டல் செய்து உள்ளீர்களா... இது நியாயமா?

நாமக்கல் சிபி said...

ஆசிரமத்தை ஷட் டவுன் பண்ணினதா அவரு சொல்லவே இல்லையே?

பித்தானந்தா said...

அதனாலென்னா!

நம்ம ஆசிரமத்துக்கு வருகை புரியுங்க!

கயல்விழி said...

//நீங்கள் சொல்வது நிஜமா? இல்லை எல்லோரும் போடுவது போல் மொக்கைக்கு போட்டுள்ளிர்களா?

எதோ மரியாதை சொல்லாக அக்கா என கூப்பிட்டதற்க்காக அங்கிள் எனக்கூப்பிட்டு கிண்டல் செய்து உள்ளீர்களா... இது நியாயமா?

//

எங்கே அக்கா, அங்கிள்?? நீங்க எழுதி இருப்பது புரியவில்லை கூடுதுறை.

இது மொக்கை எல்லாம் இல்லை.

கூடுதுறை said...

அக்கா அங்கிள் விசயம்..... அது எனது பதிவின் பின்னுட்டத்தில் தாங்கள் கூறியது.........

வெண்பூ said...

எனக்கு புரியலையே கயல். அவர் நிஜமாகவே பணி நிமித்தமாகத்தான் எழுதுவதை குறைத்துக் கொண்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவருக்கு நம் மீது கோபம் போல் தெரிகிறது :(

நேற்றே அவருடன் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. பேசியபின் மேல் விவரங்கள் இருந்தால் தெரியப்படுத்துகிறேன்.

கயல்விழி said...

//அக்கா அங்கிள் விசயம்..... அது எனது பதிவின் பின்னுட்டத்தில் தாங்கள் கூறியது.........

//

அது சும்மா விளையாட்டுக்கு எழுதியது, சீரியசாக எடுக்க வேண்டாம். நீங்கள் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்

கயல்விழி said...

வெண்பூ

அவருக்கு நம் மேல் கோபம் இருப்பதாக தெரியவில்லை. ஏதாவது விஷமிகள் தொல்லை படுத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.

வேளராசி said...

நான அவரது பதிவை படித்தவுடனே எனது வருத்தத்தையும்,கண்டனத்தையும் தொலைபேசியில் தெரிவித்தேன்.

கூடுதுறை said...

//அது சும்மா விளையாட்டுக்கு எழுதியது, சீரியசாக எடுக்க வேண்டாம். நீங்கள் புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்//

இல்லை இல்லை சீரியசாக ஆகவில்லை.... ஆனால் மன்னிப்பேல்லாம் வேண்டாம். ஆனால் உங்களுக்கு தண்டனை உண்டு....... ஆம் எனது இந்த பதிவு http://scssundar.blogspot.com விலாசத்தை உங்கள் புக்மார்க் செய்தோ அல்லது ரீடரில் இணைத்து எனது அனைத்து பதிவுகளூக்கும் பின்னுட்டம் போடவேண்டும்..

இதுவே தண்டனை... சரியா???

பரிசல்காரன் said...

//ஏதாவது விஷமிகள் தொல்லை படுத்தி இருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.//

ஏதோ கொஞ்சம் பழகியிருந்தலும் அவரை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

அவருடைய வயதிற்கும், அனுபவத்திற்கும், பண்புக்கும், (பதவிக்கும் கூட) அவரை யாராலும் தொல்லைப் படுத்த முடியாது!

ஆரம்பத்திலேயே இப்படி, `எப்பவாவது எழுதறேனே' என்று டிமிக்கி கொடுத்தபோது, நாங்களெல்லாம் மிரட்டி ‘எழுது வாத்யாரே' என்று மௌனத்தைக் கலைக்கவைத்தோம்.

இப்போது பணி உயர்வு, வேறிடம் செல்லும் வேலைகள், ஏற்றுக்கொண்ட பத்திரிக்கைப் பணிகளென பிஸியாக இருப்பதால் அவரது உணர்வை, பளுவைப் புரிந்து கொண்டு அமைதி காக்கிறோம்!

அவர் கண்டிப்பாக எழுதுவார்!

கயல்விழி said...

ஒரு ச்சின்ன மிஸ்டேக்குக்கு இத்தனை பெரிய பனிஷ்மெண்டா கூடுதுறை?வ்:) :)

கயல்விழி said...

பரிசல்

அவர் எழுதுவதை நிறுத்துவதாக சொல்வதற்கு முன் ஒரு அனானி அவர் பெயரிலேயே(போலி லதானந்த்) பின்னூட்டம் போட்டு தொல்லை படுத்தியது மட்டுமில்லாமல் அவர் பதிவை தமிழ் மணத்தில் நகைச்சுவை என்றும் சேர்த்து வம்பு பண்ணினார்.

மேலும் பகிரங்க கடித்ததுக்கு வந்த எதிர் வினையும்(நீங்களல்ல)காரணமாக இருக்கலாம். மேலும் உங்களுக்கெல்லாம் தெரிந்தபடியே சித்தர் ரொம்ப சென்சிடிவ் டைப்.

வேலை பளு என்பது நிஜமான காரணமா என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. உண்மையான காரணம் என்றால் மகிழ்ச்சியே :)

Anonymous said...

என்ன ஆனந்தச்சித்தர் எழுதறத நிறுத்திட்டாரா?? ஒரு வேளை நெசமாலுமே அவருக்கு வேலை ஜாஸ்தியோ என்னமோ