கமல் ரசிகர்கள் யாராவது தங்கள் பக்க விவாதங்களை தெரிவிப்பதென்றால் தயவு செய்து தெரிவிக்கவும்(தாக்குதல் இல்லாமல்). அதையும் இதே போல பதிக்கிறேன்.
****************************************
இதைப்பார்க்கிறதுக்காக யாராவது எல்.ஏ ட்ராபிக்கில் 3 மணி நேரம் ட்ரைவ் பண்ணுவாங்களா?
அய்ய, இன்னாங்க நீங்க, எப்டி படம் எடுத்தாலும் திட்றீங்க. ஒரு வேள, நீங்க ஒரு கலைப்பட ரசிகையோ?
ராங் சைட் டிரைவ் பண்ணா அப்டி தாங்க. இதுக்குத்தான் என்க ஊர்ல செலவு பண்ணி கீப் லெஃப்ட் அப்டின்னு போர்ட் வச்சிருக்கோம். உங்க ஊர்காராய்ங்க அத படிக்கிறதெ இல்ல போல. (அது சரி, அவய்ங்களையும் கொற சொல்ல முடியாது. படிக்க தெரிஞ்சா தான பாவம்!)
எனக்கென்ன சந்தேகம் என்றால், இதை எதற்காக 'உலகத்தரம்' என்று குறிப்பிடுகிறார்கள்? உலகத்து படங்கள் பலவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக காப்பி அடித்திருப்பதாலா?
அது அப்டி இல்லைய்ங்க. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலக நாடுகளில் கோபால் பல்பொடின்னு நீங்க வெளம்பரம் கேட்டதேயில்லயா?? அது மாறி, இது ஒலகம் எல்லாம் ஓடறதுக்கு எடுத்த படம்ங்க!
எங்க தலய்க்கு "ஒலக நாயகன்"ன்னு சும்மாவா குடுத்தாய்ங்க?? ஆஸ்டின்ல இருந்து ஆண்டிப்பட்டி வரைக்கும், கான்பெராவுலருந்து கண்ணம்மா பேட்ட வரைக்கும் எங்க தலயோட தல எல்லாருக்கும் தெரியும்ல?
விட்டால் அசினாக கூட அவரே மேக்கப் போட்டிருப்பார் போல!
இத நான் ரொம்ப வன்மையா கண்டிக்கிறேய்ங்க. நீங்க சொல்றத பாத்தா, அசின்னா நடிச்சது கமல் இல்லன்ற மாறி ஒரு அர்த்தம் வருது. மார்லன் பிராண்டோவை மார்ல பெறாண்ட விட்ட எங்க தலவர பத்தி நீங்க தப்பா எழுதிரீங்க!
கமலின் வெள்ளைக்கார மேக்கப்பையும், பாட்டி மேக்கப்பையும், இஸ்லாமிய இளைஞர் மேக்கப்பையும் பார்த்தால், ஹாலிவுட் ஹாரர் படங்களில் வரும் Zombie(இறந்த பிறகும் பேய் மாதிரி உலவுபவர்கள்) நினைவுக்கு வருகிறது, ரொம்ப பயமா இருக்கு.
அய்ய. அந்த வெள்ளக்கார மேக்கப்பு பாத்து உங்களுக்கு Michael Douglas நெனப்பு வர்ல? இதுக்குத்தாங்க, அப்பப்ப, என்ன மாறி கொஞ்சம் இங்கிலிபீசு படமும் பாக்கனுங்கறது. ( என்ன படம்னு கேக்காதீங்க. அப்புறம், தூள் படத்துல விவேக்கும், விக்ரமும் இங்கிலிபீசு படம் பாத்த மாறி நான் ஒரு கத சொல்ல வேண்டி வரும், ஆமா!)
ஜே.கே ரித்திஷே பல மடங்கு அழகாக தெரிகிறார்.
இது மட்டும் ரித்தீசுக்கு தெரிஞ்சிது, எம்புட்டு செலவானாலும் பர்வாலன்னுட்டு, நைட்டோட நைட்டா, நீங்க இருக்க ஊர்ல அவர் கட் அவுட்டோட வன்து எறங்கிடுவார். அமெரிக்காவுலருன்து இப்டி ஒரு ரசிகையா? அவரே எதிர்பார்க்கலைங்கோ!
ஹீரோயின்கள் கூட இவர் படங்களில் பெரும்பாலும் டம்மிகளே. மல்லிகா ஷெராவத், பஞ்சாபி கமலின் மனைவி, நாகேஷின் மனைவி போன்ற பெண் ரோல்களில் அசினே மேக்கப் போட்டு நடித்திருக்கலாமே, ஏன் நடிக்கவில்லை? அசின் முகமூடி போட்டால் முகத்தில் ஒட்டாதா?
இன்னாது அசினா? அலோ, அசின் நடிச்சது ஒரே ஒரு சீன் தான். மத்ததெல்லாம், எங்க தலீவர் பண்ணது. நாகேஷின் மனைவியா நடிச்சது கே.ஆர். விஜியா. (எங்க பழிய தலீவரு எம்சியார் கூட ரொம்ப படம் நடிச்சிருக்காங்கோ. உங்களுக்கு இதுவும் தெர்ல, Micheal Douglas ம் தெர்ல. இன்னாங்க நீங்க!) எங்க தலீவரு ஏன் கே.ஆர். விஜியா மாறி நடிக்கிலன்னா, அவரு நாகேஷா நடிச்சிருக்காரே? அது போதும்னு ஒரு பெர்ய மன்சு தான்.
தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்களை ஸ்டீரியோ டைப் பண்ணி இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. மாற்று மதத்தவர் அப்படியா இருக்கிறார்கள்?
இன்னாங்க நீங்க. வின்சென்ட் தலீத்னு எங்கனா வருதா?? அவ்ரு ஒரு நாடாரோ இல்ல வன்னியராவோ இல்ல மொல்லியாரவோ இருக்கக்கூடாதா? அவ்ரு ஒரு கிறிஸ்டியன் அம்புட்டு தான். அதுவும் கூட பேர வச்சி என்ன மாறி மொத ரோ கோஸ்டிங்க கெஸ் பண்றது. ஒங்கள மாறி பால்கனி பெரிய மன்சங்க இப்பிடி சொல்லலாமா??
அன்த பாட்டி எப்படி ஒருவிதமான காமெடி பாத்திரமோ அப்படி பாத்திரம் தான் அன்த நெட்டை கமல். இத நீங்க மதத்தோடு முடிச்சி போட்ட நாங்க இன்னா பண்றது??
அசினுடைய ஆண்டாள் கேரக்டரை மோசமாக சித்தரித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கும், நாயகனுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை.
ரொம்ப அக்கிரமமா இருக்குங்க. கெமிஸ்ட்ரின்ன இன்னா? (கெமிஸ்ட்ரின்னாலே, இஸ்கூல்ல மொத நாளு ஆசிட்ட குடிச்சது தான் நெனிவுக்கு வருது!). கெமிஸ்ட்ரின்னா டூயட் பாட்றதா? ஏங்க, மர்த்த சுத்தி டூயட் பாட்ற கோஸ்டின்னு திட்ரீங்க. டூயட் வெக்காட்டியும் திட்ரீங்க. என்ன தாங்க பண்றது? நாங்களும் படம் எடுக்கனுமுல்ல??
"என்ன ஜாதியோ, பெருமாளை தொடாதே!" என்று அநாகரீகமாக பேசும், தொடர்ந்து காலை வாரி விடும் பெண்ணின் மீது கமலுக்கு ஏன் காதல் வந்தது என்பது புரியாத புதிர்!
இது ஆலிவுட்டு ஸ்டைலுங்கோ! இன்த மேறி ராங் காட்ற பொண்ணுங்கள தான் எங்கள மேறி மொத ரோ கோஸ்டிக்கு ரொம்ப புடிக்கும். இது தெரியாத உங்களுக்கு? போங்க, இதுக்குத்தான் எப்பவும் பால்கனில உக்கான்து படம் பாக்க கூடாதுங்கறது!
ஆகமொத்தம் சில நல்ல பாகங்களைத்தவிர, இந்த படம் பார்த்து டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம்,
ரொம்ப அனியாயமா பேசுறிய. ஆனா, எங்க தல அடுத்து எடுக்குற மரும யோகி (எ) மருத நாயகம் (எ) கான் சாகிப் கான் பத்தி ஒழுங்கா விமர்சனம் எளுதுங்க. மரும யோகி, சரும வியாதின்னு லக்கி லுக் ஸ்டைல எளுதினீங்க, நான் எம்புட்டு செலவானாலும் பர்வாலன்னுட்டு அமெரிக்க வன்து உங்களுக்கு "வீடு" படத்தை அம்பது தடவ போட்டு காட்டுவேன். அப்புறம் நீங்க வீட்ட காலி பண்ணிட்டு ஓட வேண்டியது தான். இது என்னோட எச்சரிக்க இல்லய்ங்க, வேண்டுகோள். (இது ஒண்ணு சொல்லனும்னு சங்கத்தில இருன்து சமீபத்திய உத்தரவு).
ரஜினியைப்பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், ரஜினி கர்நாடக பிரச்சினை போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் சுயநலத்துக்காக விளையாடியதை பார்த்ததில் இருந்து ரஜினி படமே பார்ப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டேன், இலவசமாக கிடைத்தால் கூட குசேலன் பார்க்கப்போவதில்லை!
இதில் தவறு ரஜினி மீது இல்லை. ரஜினி ஒரு நடிகர். மக்கள் தலைவரோ, முதல்வரோ இல்லை. உண்மையில், அந்த மீட்டிங்கில் ரஜினி சொன்னது என்ன?
"அவங்கள ஒதைக்க வேணாமா??"
இது எந்த அர்த்தத்தில், எந்த வார்த்தைகளின் தொடர்ச்சியாக சொல்லப்பட்டது?? I am sorry Kayal, but if you take words out of its context, then you are going to get unintended meanings!
Rajini never meant to say "Attack All the Kanadigas". Anybody who listened to his speech knew this.
ரஜினி மீது கல்லெறிவது தமிழ்நாட்டில் பலருக்கு சந்தோஷம். ரஜினி தமிழன் இல்லை, தமிழன் இல்லை, என்று திருப்பி திருப்பி சொல்லி தங்கள் புண்ணை சொறிந்து கொள்வது இவர்கள் வழக்கம். எனவே, ரஜினி மீது சாணி பூச கிடைக்கும் என்த சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில்லை.
ரஜினி படம் என்பது ரஜினிக்கு மட்டுமான விஷயமில்லை. ஒரு ரஜினி படம் வெற்றி அடைந்தால், பலர் வாழ்கிறார்கள். நீங்கள் மறுத்தாலும், இது தான் உண்மை. ரஜினி படம் தோல்வி அடைந்தால் ரஜினிக்கு மட்டுமல்ல, வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், திரைப்பட தொழிலாளிகள் என்று பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடும் பிரச்சினைகள்.
Whether you agree or not, Rajini is an one man industry. As an investment banker, I hate to see any industry in trouble!
கர்னாடக விஷயத்தில், கருணாநிதி ரஜினியின் காலை வாரி விட்டதே உண்மை. நீங்கள் தமிழக அரசியலை கவனிக்கிறீர்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், கவனித்தால் ஒன்று புரியும். திரையுலகின் அந்த உண்ணாவிரதத்திற்கு முன்பே, ஒகெனக்கல் பிரச்சினையை ஒத்தி வைக்க கருணானிதி முடிவெடுத்து விட்டார். (If you doubt me, check the dates of that hunger strike, and when Karunanidhi announced that the water problem is suspended until the end of Karnataka election).
கருணானிதி போன்ற 80 வருட அரசியல்வாதிக்கு தெளிவாக தெரிந்த விஷயம், மக்களுக்கு இது பிடிக்காது என்பது. எனவே, விசயத்தை திசை திருப்ப அவர் செய்த நாடகமே, ரஜினி இந்த பிரச்சினையில் என்ன சொல்கிறார் என்பது.
அவர் நினைத்தவாறே, இப்பொழுது முழு கவனமும், ரஜினி மீது திரும்பி விட்டது. எந்த பொறுப்பிலும் இல்லாத அவர் கல்லடிகளை பெற்று கொள்ள, குடும்பத்துடன் முதல்வர் பதவியை அனுபவிக்கும் கருணாநிதி, "உளியின் ஓசை" போன்ற படங்களை வெளியிட்டு மக்களின் காதுகளிலும், கண்களிலும் உளியை பாய்ச்சுகிறார்.
கருணாநிதி தன்னை ராஜ தந்திரி என்று அக மகிழலாம். ஆனால், வல்லானுக்கு வல்லான் வருவான். எம்.ஜி.யார் 14 வருடம் ஆப்பு வைத்தது போல் மீண்டும் ஒருவன் தி.மு.க.வுக்கு வைப்பான். அது ரஜினியாக கூட இருக்கலாம். இல்லை, வேறு யாரேனும் இருக்கலாம்.
மிருகங்களில் கொடிய மிருகம் எது தெரியுமா?? சிங்கமல்ல, அது சோம்பேறி மிருகம். உண்மையில், எதற்கும் அசராத, அதே சமய்ம் நிதானமான மிருகம் புலி. அதை விட கொடுமையான மிருகம் பசித்த புலி. அந்த புலியே அஞ்சி ஒதுங்கும் ஒரு மிருகம் உண்டென்றால், அது பசித்து, காயம்பட்ட ஒரு புலி!
If you corner a wounded, hungry tiger, then be prepared to payback!
ரஜினி தனது அப்பாவி தனத்தாலும், கருணானிதி மீது வைத்திருக்கும் மரியாதையாலும் இந்த பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். அவர் புரிந்து கொள்ளும் நாள் வரும். அப்பொழுது கருணானிதிக்கும், அமைச்சர் என்ற போர்வையில் உலவும் ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ரவுடிகளுக்கும் ஒரு பெரிய ஆப்பு நிச்சயம்.
அந்த ஆப்பை ரஜினி வைக்கவிட்டாலும், கருணானிதியின் குடும்ப பிரச்சினையில் அவர்களே ஆப்பை ரெடி செய்து கொள்வார்கள்!
23 comments:
மீ த பர்ஸ்டூ...
//இது மட்டும் ரித்தீசுக்கு தெரிஞ்சிது, எம்புட்டு செலவானாலும் பர்வாலன்னுட்டு, நைட்டோட நைட்டா, நீங்க இருக்க ஊர்ல அவர் கட் அவுட்டோட வன்து எறங்கிடுவார். அமெரிக்காவுலருன்து இப்டி ஒரு ரசிகையா? அவரே எதிர்பார்க்கலைங்கோ!//
இது தான் சூப்பர் ....
கயல்,
பிரச்சினை எங்கயோ ஆரம்பித்து எங்கயோ போய் முடிந்திருக்கிறது.
பயப்படாமல் பதிவை மறுபதிவு செய்திருக்கும் தைரியத்தை பாராட்டுகிறேன்..
நன்றி கூடுதுறை.
செம காமெடி இல்லையா? :)
உண்மைத்தமிழன்
முதலில் விளையாட்டாக ஆரம்பித்த பதிவின் ரெஸ்பான்ஸ் பார்த்து வியந்ததால் வந்த வினை.
கூடுதுறை, உண்மைத்தமிழன் - உங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)
//எம்புட்டு செலவானாலும் பர்வாலன்னுட்டு அமெரிக்க வன்து உங்களுக்கு "வீடு" படத்தை அம்பது தடவ போட்டு காட்டுவேன். அப்புறம் நீங்க வீட்ட காலி பண்ணிட்டு ஓட வேண்டியது தான். இது என்னோட எச்சரிக்க இல்லய்ங்க, வேண்டுகோள். (இது ஒண்ணு சொல்லனும்னு சங்கத்தில இருன்து சமீபத்திய உத்தரவு).//
இது என் சாய்ஸ்...
வாங்க யட்சன். :)
வீடு படம் அத்தனை தரம் பார்ப்பது மாதிரி கற்பனை பண்ணி ரொம்ப சிரிச்சேன்
மிகவும் ரசிக்கும்படி இருந்தது, அவருக்கு என் பாராட்டுக்கள்
//எம்.ஜி.யார் 14 வருடம் ஆப்பு வைத்தது போல் மீண்டும் ஒருவன் தி.மு.க.வுக்கு வைப்பான். அது ரஜினியாக கூட இருக்கலாம்// :-(
அடடா,பின்னூட்டமே பதிவாகி, படிக்க நல்லா இருக்கு.
யார் எழுதினாங்கன்னு சொல்லவே இல்லையே கயல்!!
http://mangalore-siva.blogspot.com/2008/08/blog-post_23.html
இது போன்ற பதிவுகளில் செலவிடும் நேரத்தை நல்ல சிறுகதைகள் எழுதுவதில் நீங்கள் செல்விடலாமே? "சரியா"?
என்னங்க கயல்விழி, இப்டி இன்ப அதிர்ச்சி குடுக்கிறீங்க?? நான் போட்ட பின்னூட்டத்த பதிவாவே போட்டுட்டீங்களா??
நேத்து பின்னூட்டத்தில "இத நான் தனிபதிவா போடலாம்னு நெனைக்கிறேன்" அப்பிடின்னு நீங்க சொன்னப்ப, நான் நெசமாலுமே நீங்க "ரசினி கன்னடா வாட்டர் மேட்டர்" பத்தி தனிப்பதிவு போடப்போறீங்கன்னு நெனச்சேன். நாலு ரவுண்டு வேற போயிருந்ததா, அதனால, என்ன எழுதுறோம்னு சரியா தெரியாமா இதெல்லாம் எளுதிருக்கேன்!
ச்சே, ஒண்ணாங்கிளாஸ் பரிச்சயிலருந்து இப்பிடி என்ன எழுதுறோம்னு தெரியாம எளுதறதே எனக்கு பொழப்பா போச்சி!
//
இது போன்ற பதிவுகளில் செலவிடும் நேரத்தை நல்ல சிறுகதைகள் எழுதுவதில் நீங்கள் செல்விடலாமே? "சரியா"?
//
அனானி அண்ணாச்சி, நீங்க யாருக்கு சொல்றீங்கன்னு புரியல. "சரியா"ன்னு கேட்டுருக்கதால, எனக்கு சொல்றீங்களோன்னு தோணுது.
நாம கத எளுதறதா?? ம்க்கும், நம்ம கதையே பெருங்கதையா சந்தி சிரிக்குது. இதுல நம்ம வேற இனிம "சிறு" கத எளுதனுமா?? இந்தா, இப்பவே, அவனவன் ரெண்டு லாரி கல்லுக்கு ஆர்டர் பண்ணிட்டதா நூஸ் வந்திரிக்கு. கல்லடி வாங்க நான் ரெடி இல்லய்ங்க!
ஆனா, நமக்கும் சொந்தமா ஒரு ப்ளாக் கட இருக்கு. முடிஞ்சா வந்து பாருங்க!
ஒருவேள, நீங்க கயல்விழிக்கு கேட்டிருந்தீங்கனா, அவங்க தான் அப்பப்ப கத எளுதறாங்கல்ல? இந்தா, இப்பக்கூட, மங்க உள்ளம் பொங்குதுன்னு ஒரு கத எளுதிருக்காங்க. படிக்கலயா நீங்க?
நன்றி பாபு, அனானி, மங்களூர் சிவா :)
வல்லி மேடம்
அந்த பதிவரின் பெயரே "அது சரி" லிங்கும் கொடுத்திருக்கிறேன்(அவர் பெயரை க்ளிக் பண்ணினாலே அவர் ப்ளாக் போகும்)
வருகைக்கு நன்றி :)
அதுசரி
ஒரு வேளை நீங்க "குடியும்" குடித்தனமுமாக எழுதினால் தான் நகைச்சுவை நன்றாக வருமோ? :) :)
பின்னூட்டம் ரொம்ப சிரிக்க வைத்ததால் தனிப்பதிவாகவே பதித்தேன்
//
அதுசரி
ஒரு வேளை நீங்க "குடியும்" குடித்தனமுமாக எழுதினால் தான் நகைச்சுவை நன்றாக வருமோ? :) :)
பின்னூட்டம் ரொம்ப சிரிக்க வைத்ததால் தனிப்பதிவாகவே பதித்தேன்
//
அப்டில்லாம் ஒண்ணுமில்லீங்க. ச்சும்மா பேருக்குத்தான் ப்ளாக்ல குவாட்டர் பத்தி எழுதறனே தவிர, நான் எப்பனாதான் குடிப்பேன். ரொம்ப சந்தோஷமா இருந்தாலோ, இல்ல ரொம்ப துக்கமா இருந்தாலோ, இல்ல இது ரெண்டும் இல்லாம இருந்தாலோ தான் தண்ணி!
(சரி, அப்படியே என்னோட விளம்பர பிட்டையும் ஓட்டிக்கிறேன். விக்கிரமாதித்தன் கதைகள்னு புதுசா மூணு பதிவு போட்ருக்கேன். டைம் கெடைச்சா வந்து பாருங்க!)
செல்லா அண்ணாவின் புதிய அவதாரத்துக்கு வணக்கம்! :-)
அதுசரி,
உடனே படிக்கிறேன் :)
வணக்கம் லக்கிலுக். :)
யாரது செல்வா அண்ணா?
// கயல்விழி said...
வணக்கம் லக்கிலுக். :)
யாரது செல்வா அண்ணா?//
அட செல்லா விற்கு வந்த சோதனையைப்பாருங்களேன்...
அவர்தான் ஓசைசெல்லா...
கூகிளில் ஓசைசெல்லா என்று கொடுத்து தேடிப்பாருங்கள்... அசந்து போவீர்கள்
இல்லை, உங்களுக்கு தான் செல்லா நல்ல நண்பர் போல தெரிகிறதே, அவரையே நேரடியாக கேட்கலாம் இல்லையா?
then chella :)_))
Post a Comment