Sunday, August 24, 2008

சொல்லமுடியாத நன்றி!

அன்று செல்வகுமாருடைய முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சிக்கட்டுரை "சப்மிஷன்" நாள். லெல்வக்குமார் இரவு பகல் என்று பாராமல் 5 வருடங்கள் உழைத்து செய்த ஆராய்ச்சியில் வந்த கண்டுபிடிப்புகளை எழுதி, அந்த சாராம்சத்தை உலகிற்கு எடுத்தச்சொல்லும் நாள். சக மாணவ மாணவிகளும் மற்றும் பேராசியர்களும் அந்த அறையில் ஒன்று கூடி இருந்தார்கள். எல்லோரையும் போல் சக பேராசிரியர் ராஜராஜன், அங்கு வந்து காஃபி அருந்திவிட்டு, செல்வக்குமார் தீஸிசை மேலோட்டமாகப் படித்துப்பார்த்துவிட்டு பிறகு “நன்றியுரை” பகுதியைப் பார்த்தார். அதில் செல்வகுமார், ராஜராஜன் பெயரை எங்குமே சொல்லவில்லை என்பதை கவனித்தார். செல்வக்குமாரை முறைப்படி வாழ்த்திவிட்டு தன் ஆய்வகத்துக்கு சென்றார், பேராசிரியர் ராஜராஜன்.

செல்வகுமார், பேராசிரியர் சுதர்சன் ராவ் வின் மாணவன். டாக்டர் ராவ் ஒரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல! பெரிய விஞ்ஞான அரசியல்வாதியும்கூட. இப்போதெல்லாம் அவர் விஞ்ஞானத்தில் செலவழிக்கும் நேரம் மிக குறைவு. 5 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலேயே மிகப்பெரிய “சாந்தி ஸ்வரப் பட்நாகர்” பரிசு பெற்ற பிறகு, அவருக்கு அறிவியலில் நேரம் செலுத்த முடியவில்லை! மாதத்தில் ஒரு வாரம்தான் சென்னையில் இருப்பார். அப்பொழுது தனது மாணவ மாணவிகளுடன் அவர்கள் ப்ராஜெக்ட் பற்றி பேசுவார். மேலோட்டமாக ஏதாவது ஆலோசனை கொடுப்பார். மற்ற நேரங்களில் டெல்லி, அமெரிக்கா, ஜப்பான் என்று பல இடங்களுக்கு பறந்து பல காண்ஃபரன்ஸ் போய் வருவார். அவர் அப்படி போய்வருவதால் அவருடைய மாணாக்களுக்கு எல்லாவிதமான ஆய்வக வசதிகள் அவர் ஆய்வகத்தில் இருந்தாலும் தேவையான அளவு “வழிநடத்தல்” அல்லது “கைடன்ஸ்” கிடைப்பதில்லை.

பேராசிரியர் ராவ் வின் “ஒளியில்” (ரெப்யூடேஷன்) மயங்கி வந்து அவரிடம் விழுந்த “விட்டில் பூச்சி” தான் செல்வகுமார். ராவ் வின் உண்மை சுரூபம், அதாவது நல்ல மாணவர்களை கவர்ந்து இழுத்து, பிறகு தண்ணீர் தெளித்து (“முடிந்தால் நீயாக போராடி வெற்றி அடைந்து கொள்”) விட்டுவிடுவார் என்கிற உண்மை அவரிடம் மாணவனாக சேர்ந்த பல மாதங்களுக்குப் பிறகு தான் தெரிந்தது. அவனுக்கு அந்த ஆய்வகத்தில் எல்லா விதமான வசதிகள் இருந்தாலும், தேவையான உதவி (கைடன்ஸ்) அவன் பேராசிரியரிடம் இருந்து கிடைக்கவில்லை. அவனுடைய ப்ராஜெக்ட் பல மாதங்களாக, இல்லை வருடங்களாக நகராமல் ஒரே இடத்தில் நின்றது.

சுமார் 2 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. அன்று சனிக்கிழமை என்பதால் ஆராச்சி மாணவ மாணவியர்கள் கொஞ்சம் ரிலாக்ஸெட் மூடில் இருப்பது வழக்கம். ஆய்வகத்தில் கொஞ்ச நேரமும் காண்ட்டீனில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதில் அதிக நேரமும் மாணவர்கள் செலவழிப்பது வழக்கம். ஆனால் காண்டீனிக்கு வந்து காஃபி வாங்கி வந்து தனியாக ஒரு டேபிலில் அமர்ந்திருந்த செல்வக்குமார் மனநிலை மிகவும் மோசமாக இருந்தது. 21/2 வருடம் ஆராச்சியில் நேரத்தை செலவழித்தும் அவன் ப்ராஜெக்ட் எந்தப்பக்கமும் நகர மாட்டேன் என்றது. “இன்னும் இரண்டு வருடத்தில் எப்படி நான் என் ப்ராஜெக்டை முடிப்பேன்?” என்கிற கவலை அவனுக்கு.

அந்த நேரத்தில் காண்டீன் வந்த பேராசிரியர் ராஜராஜன் தனது காஃபியை எடுத்துக்கொண்டு வந்து செல்வக்குமார் அருகில் அமர்ந்தார்,

“ப்ராஜெக்ட் எல்லாம் எப்படிப்போகுது, செல்வா?” என்றார் ராஜராஜன்.

“ரொம்ப “ஸ்டக்” ஆகி நிற்கிறது சார்” என்றான் செல்வக்குமார் உண்மையான வருத்ததுடன்.

ராஜராஜன், செல்வகுமாரிடம் அவன் ப்ராஜெக்ட் பற்றி சொல்லச்சொல்லிக்கேட்டார். தன்னுடைய ப்ராஜக்ட் பற்றியும் அதில் தான் படும் சிரமங்களையும் அவரிடம் அங்கே கிடைத்த பேப்பர் நாப்கின் மற்றும் பேனா உதவியுடன் எழுதி விளக்கினான் செல்வக்குமார்.

அதை கவனமாகப்பார்த்த ராஜராஜன், “இப்படி சொல்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க, செல்வா, இதில் நீங்க வெற்றியடைய சாண்சே இல்லை. ஏனென்றால் இந்த ரிவியூ படியுங்கள், படித்தால் நான் சொல்வது உங்களுக்கு நல்லாவே விளங்கும்” என்று ஒரு ஆர்ட்டிகிளுக்கு ரெஃபெரன்ஸ் கொடுத்தார்.

பிறகு தனக்கு தெரிந்த முறையில் அவனுடைய டார்கெட் அடைய வேறு ஒரு “ரிசேர்ச் ஸ்கீம்” கொடுத்தார்.

“இந்த முறையில் முயற்சி செய்துபாருங்கள். வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் 100% வெற்றிதான் என்றெல்லாம் அடித்து சொல்ல முடியாது” என்று சொன்னார், ராஜராஜன்.

அந்த ஆலோசனை செல்வகுமாரின் தலை எழுத்தையே மாற்றிவிட்டது. செல்வா, ஒரு புது தெம்புடன் இந்த “மிகவும் மாறுபட்ட அனுகுமுறையில்” தன் ப்ராஜக்ட்டை தொடர்ந்தான். அதிசயமாக அந்த அனுகுமுறையில் அவனுடைய ப்ராஜெக்ட் எல்லா வகையிலுமே ஒழுங்காக நகர்ந்தது. அவன் பேராசிரியர், ராவ், செல்வகுமார் அவர்கொடுத்த அனுகுமுறையை மாற்றியதைப்பற்றி கவலைப்படவில்லை. செல்வகுமார் அவர் சொன்ன டார்கெட் டை அடைந்தால் போதும் என்று மட்டும்தான் நினைத்தார். இரண்டு வருடத்தில் செல்வா, ராஜராஜன் கொடுத்த அனுகுமுறையில் முயன்று அதில் முழு வெற்றியும் அடைந்து விட்டான். பேராசிரியர் ராவ், ஏதோ ஒரு புது வகையில் தன் மாணவன் அவனுக்கு கொடுத்த “ப்ராஜெக்டை” முடித்துவிட்டான் என்பதால் சந்தோஷப்பட்டார்.

நன்றி மறப்பவனெல்லாம் இல்லை செல்வகுமார். ஆனால் செல்வக்குமாருக்கு ஒரு இக்கட்டான நிலைமை என்னவென்றால் பேராசிரியர் ராஜராஜன் பெயரைச் சொன்னாலே அவனுடைய பேராசிரியர் ராவுக்கு பிடிக்காது. ராஜராஜன்தான் அவனுடைய வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால் அவ்வளவுதான். இதை கொஞ்சம் உணர்ந்த செல்வகுமார் தீசிஸிசில் எல்லோருக்கும் நன்றி சொல்லும்போது பொதுவாக ராஜராஜன் பெயரை சொல்லி நன்றி என்று எழுதி இருந்தான். அதை மட்டும் கவனமாக கவனித்த பேராசிரியர் ராவ், பேராசிரியர் ராஜராஜன் பெயர் இங்கு தேவையில்லை என்று ஒரு மாதிரியாக மிரட்டும் தோணியில் இவனிடம் சொல்லி அதை எடுக்கச் சொன்னதும் இவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

ராஜராஜன் கொஞ்ச நேரம் தன் ஆய்வகத்தில் தன் மாணவர்களிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்து தன் கணிணியில் இ-மெயில் செக் பண்ணினார்.

Subject: Sincere Thanks!

Dear Prof. Rajarajan,
I am extremely sorry that I was not able to acknowledge you properly in my Thesis. I know I would have achieved nothing without your valuable help in my thesis work. The discussion I had with you on the Canteen changed everything about my project and my whole research work became smooth after following your scheme. I hope you will understand my inability and limitations. Besides my thanks in this e-mail letter my heartfelt thanks for you will be staying in my heart as long as I live!

Sincerely,
Selvakumar.

இ-மெயிலை படித்துவிட்டு ராஜராஜன் தனக்குள் புன்னகை புரிந்துகொண்டார்.

19 comments:

ஜோசப் பால்ராஜ் said...

நம்ம ஊரு ஆராய்ச்சிகளங்கள்ல நடக்குற மட்டமான அரசியல அப்டியே எழுதியிருக்கீங்க கயல்.
ஐஐடி களில் இந்த அரசியல் அதிகம் என்று கேள்விபட்டுள்ளேன். ஆனால் என் அண்ணண் முனைவர் பட்டத்திற்கு ஆராய்சி செய்த NIMHANS பெங்களூர்ல அவங்க துறையில இப்டி ஒரு அரசியல் இல்லவே இல்லை. எல்லா வழிகாட்டிகளும் தங்கள் மாணவர்கள் மட்டுமில்லாம மத்தவங்களுக்கும் நிறைய உதவி செய்வாங்க. அவங்க பழகுறத எல்லாம் நான் நேரிடைய பார்த்துருக்கேன். ஆச்சரியமா இருக்கும். இந்த அரசியல் எல்லாம் இல்லாம நம்ம ஊருல உருப்படியா திறமைசாலிங்கள ஊக்குவிச்சா எவ்வளவோ சாதனைகளை நம்ம மாணவர்கள் செய்வாங்க.

ஜோசப் பால்ராஜ் said...

வருண், இத எழுதுனது நீங்களா, நான் கயல்னு என்னோட பின்னூட்டத்துல குறிப்பிட்டிருந்தேன். மன்னிக்கவும். மிக அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

வருண் said...

***ஜோசப் பால்ராஜ் said...
வருண், மிக அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.**

மிகவும் நன்றி திரு. ஜோசப் பால்ராஜ். உங்க அண்ணாவுக்கு NIMHANS Bangalore ல் நல்ல திறந்தமனப்பான்மை உள்ள அறிஞர்கள் நிறைந்த சூழ்நிலை அமைந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி, திரு.பால்ராஜ்.

Ramya Ramani said...

அருமையான கரு..இந்த பாலிடிக்ஸ் இல்லாத இடமேயில்லை..ஆனால் செல்வா நன்றியோடு ஒரு மெயில் அனுப்பி உண்மையான நன்றியையும், ராஜராஜன் பெருந்தன்மையாக சென்ற விதமும் பாராட்டப்படவேண்டியது

கயல்விழி said...

நல்ல கதை வருண் :)

SK said...

இது நம்ம ஊருலே Bachelor'ல இருந்து Ph.D. வரைக்கும் நடக்கற விஷயம்.

பர்சனல் அண்ட் Professional பிரிச்சு பாக்க தெரியாம வர பிரச்சனை.

எளிமையா எழுதி இருக்கீங்க

வருண் said...

***கயல்விழி said...
நல்ல கதை வருண் :)

24 August, 2008 11:46 PM***

ஏதோ வசிஸ்டர் வாயால்...

நன்றி, கயல் :)

வருண் said...

***SK said...
இது நம்ம ஊருலே Bachelor'ல இருந்து Ph.D. வரைக்கும் நடக்கற விஷயம்.

பர்சனல் அண்ட் Professional பிரிச்சு பாக்க தெரியாம வர பிரச்சனை.

எளிமையா எழுதி இருக்கீங்க***

நன்றி எஸ் கே!

எல்லா துறையிலும் எல்லோரும் பார்க்கிற ஒண்ணுதான் இது :)

வருண் said...

*** Ramya Ramani said...
அருமையான கரு..இந்த பாலிடிக்ஸ் இல்லாத இடமேயில்லை..ஆனால் செல்வா நன்றியோடு ஒரு மெயில் அனுப்பி உண்மையான நன்றியையும், ராஜராஜன் பெருந்தன்மையாக சென்ற விதமும் பாராட்டப்படவேண்டியது>***

ஆமாம்,ரம்யா அவர்களே,

செல்வகுமார் இந்த மாதிரியாவது ஒரு நன்றி சொல்லனும், ராஜராஜன் செல்வாவின் இக்கட்டான சூழ்நிலை புரிந்துகொண்டு மேன்மேலும் தன்னால் ஆன உதவியை மாணவ மாணவிகளுக்கு செய்யனும் என்பது என் எண்ணம்!

தங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி :)

Anonymous said...

super varun nalla iruku.. ammam edho kadhal kalvetunu onu ezhuthitu iruntheengale adhu ena achu??????

வருண் said...

*** uthira said...
# super varun nalla iruku..

* ammam edho kadhal kalvetunu onu ezhuthitu iruntheengale adhu ena achu??????***

# நன்றி, uthira !

* காதல் கல்வெட்டு-10 இன்னும் பல மணி நேரங்களில் வெளி வரும்ங்க! :-)

Sundar சுந்தர் said...

நல்லா சொல்லியிருக்கீங்க வருண். அறிவியல் ஆராய்ச்சி மட்டும் அல்ல - எல்லா அறிவு சார்ந்த துறைகளிலேயும் இது சர்வ சாதாரணம் தான். எங்கெங்கெல்லாம் அரசியல் வாழ்கிறதோ, அங்கெல்லாம் பல நேரங்களில் யோசனை வாழ வேண்டுமானால் யோசனை தருபவர்கள் தனக்கு பேர் வேண்டியதில்லை என்று நினைக்க வேண்டியது ரொம்ப அவசியம். வெறும் யோசனைகளால் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்க முடியாது. அதற்கு, அதிகாரம் (authority) மற்றும் பல வளங்கள் (resources) தேவை படும். buy-in is critical to the survival of most ideas. its easier to seek buy-in when you share/give away credit. அதற்காக நம் யோசனைகள் எல்லாம் வேறொருவருக்கு விட்டு கொடுக்கணும் என்பது அர்த்தமல்ல. பெரும்பாலான தொழில் சார்ந்த யோசனைகள், if threatened for survival, and if death of that idea is more affecting oneself or the common greater good than giving away credit then its okay. (மன்னிக்கவும்,மொக்கை கருத்துக்களை ஆங்கிலத்தில் பரிமாறுவது எனக்கு எளிதாக இருக்கு.)

வருண் said...

வாங்க சுந்தர்! :-)

உங்க காமெண்ட் டை இன்னொரு தரம் படித்துப்பார்த்து ரெஸ்பாண்ட் பண்ணுறேன்! :)

வருண் said...

***Sundar said...
எங்கெங்கெல்லாம் அரசியல் வாழ்கிறதோ, அங்கெல்லாம் பல நேரங்களில் யோசனை வாழ வேண்டுமானால் யோசனை தருபவர்கள் தனக்கு பேர் வேண்டியதில்லை என்று நினைக்க வேண்டியது ரொம்ப அவசியம். ****

சுந்தர்!

மேலே நீங்கள் சொன்னதை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்!

வருண் said...

***வெறும் யோசனைகளால் பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்க முடியாது. அதற்கு, அதிகாரம் (authority) மற்றும் பல வளங்கள் (resources) தேவை படும். buy-in is critical to the survival of most ideas. its easier to seek buy-in when you share/give away credit. அதற்காக நம் யோசனைகள் எல்லாம் வேறொருவருக்கு விட்டு கொடுக்கணும் என்பது அர்த்தமல்ல. பெரும்பாலான தொழில் சார்ந்த யோசனைகள், if threatened for survival, and if death of that idea is more affecting oneself or the common greater good than giving away credit then its okay. (மன்னிக்கவும்,மொக்கை கருத்துக்களை ஆங்கிலத்தில் பரிமாறுவது எனக்கு எளிதாக இருக்கு.)***

I am not I will agree with you completely on this Sundar. Anyway, here is something else!

I know some people who go do yoga and meditation and follow "hinduism". I am talking about white people who are obsessed with some concepts of hinduism such as karma or yoga.

They say, if you expect something back (any kind of credit) for a favor you are doing to someone, then you are not doing the favor for that person. You are rather doing it for yourself. You are favoring yourself! :)

Selva Kumar said...

//லெல்வக்குமார் //

??

Selva Kumar said...

//நன்றி மறப்பவனெல்லாம் இல்லை செல்வகுமார்.//

nanri..nanri

வருண் said...

நீங்களும் ஒரு "செல்வக்குமாரா"??

நீங்கள் நன்றி மறப்பதில்லைனு எனக்கு நல்லாவே தெரியும், வழிப்போக்கன்!;-)

அது சரி said...

ம்ம்ம். டிரை பண்ணேன். ரிசர்ச்சு எல்லாம் நமக்கு புரியலப்பா. மொத்தத்துல, அவருக்கு போஸ்டர் அடிக்கல. ஈமெயில் அனுப்பி என்ன புண்ணியம்? நமக்கெல்லாம் கட் அவுட் வச்சாதான் கொஞ்சமாவது திருப்தி!