Tuesday, December 16, 2008

காதலுடன் -4

அன்று, வெள்ளிக்கிழமை இரவு. சந்தியாவும் அவள் தோழி கவிதாவும் டின்னர்க்கு போய் இருந்தார்கள்.

கவிதாவுக்கு சில பர்சனல் விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்பதால் சந்தியாவைத்தவிர மற்ற தோழிகள் யாரையும் அழைக்கவில்லை. சந்தியாவின் நெருங்கிய தோழி கவிதாவுக்கு கல்யாணம் ஆகி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. அவள் கணவர் கார்த்திக், ரொம்ப நல்ல டைப்த்தான். கவிதாவுக்கு அவர் எல்லா விதத்திலும் சரியாக தான் இருந்தார். காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. தெரிந்த நண்பர்கள் மூலம் அறிமுகமாகி திருமணம் நடந்தது. கல்யாண வாழ்க்கை 3 வருடங்கள் இன்பகரமாகப் போனது. ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. நிர்மலா என்று அழைத்தார்கள்.

ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து அவர்களுக்குள் தாம்பத்ய உறவு பிரச்சினை ஆரம்பித்தது. சந்தியாவிடம், அவள் கணவர் முன்புபோல் பிரியமாக இல்லை என்று புலம்பினாள், கவிதா. நாள் ஆக ஆக அவள் ரொம்பவே குறை சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் நிர்மலாவிற்கு காரத்திக் ஒரு நல்ல அன்பான தந்தை என்பதை அவள் மறுக்கவில்லை. இன்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகும் ஒரே புலம்பல், அழுகை.

"என்னடி சொல்ற கவிதா? கார்த்திக் ஏன் திடீர்னு இப்படி மாறுகிறார்?" என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் சந்தியா.

"தெரியலைடி, அவர் முன்னால்போல் இப்போது இல்லை. நான் சொல்வதை நம்புடி"

"அதுக்குள்ளேயே! உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருடம்தான் ஆகிறது?"

"எனக்கும் ஆச்சர்யம்தான்"

"சரி, அவரோட இதுபற்றி பேசினயா? நீ தனியாக அவரை எங்காவது அழைத்துச் சென்று பேசுடி. உன் தேவைகளைப்பற்றி சொல்லு. நீ அவரிடம் எதைப்பற்றியும் பேச தயங்கக்கூடாது. கணவன் மனைவிக்குள் என்ன தயக்கம்?" என்றாள் சந்தியா ஏதோ அனுபவசாலிபோல.

"நான் பேசிப் பார்த்தேன். எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை! அதைப்பற்றிப் பேசினாலே அவருக்கு பிடிக்கவில்லை" என்றாள் அழும் குரலில்.

"எனக்கு இந்த திருமண வாழ்க்கை அனுபவமில்லைடி. அதனால் என்ன சொல்றதுனு என்ன தெரியலை. ஏதாவது தெரபிஸ்ட்டிடம் ரெண்டு பேரும் போய் பேசலாம் இல்லையா? உன்னுடயை தேவைகள் என்ன என்பதை அவர் மூலமா சொல்லாம் இல்லையா?"

"சரி இதுபற்றி வேணா கார்த்திக்கிடம் பேசிப்பார்க்கிறேன் சந்தியா. சரிடி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ஒண்ணும் மாற்றமில்லை கவிதா! ரமேஷ் தெரியுமில்லையா? அவர் கால் பண்ணினார்!"

"ரியல்லி?"

"இப்போ சிகாகோவில் ஹில் சைட் ல தான் இருக்கிறாராம்"

"So, he moved back! You were always comfortable with him, Sandhya"

"எப்போதும்னு சொல்ல முடியாது! ஒவ்வொரு சமயம் ஒரு மாதிரி "ஈகோ க்ளாஷ்" மாதிரி வந்துவிடும். ஆனால் அவரோட பேசிக்கொண்டு இருந்தால் பொதுவா நல்லாத்தான் போகும். சரி, புறப்படுவோமா?" இருவரும் கிளம்பினார்கள்.

அடுத்த நாள், சனிக்கிழமை காலையில் ரமேஷ் வருவார் என்று எழுந்து குளித்துவிட்டு, சாதாரனமாக ஒரு சேலையை கட்டிக்கொண்டு, வீட்டை ஒதுங்க வைத்தாள். தலை குளித்து இருந்ததால், கொஞ்சநேரம் தன் கூந்தலை கட்டாமல் காயவிட்டுவிட்டு இருந்தாள் சந்தியா. நேரம் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே போனது. இன்னும் தலை பின்னாமல் இருந்தாள். கொஞ்சம் கூந்தல் காற்றில் "ட்ரை" ஆனவுடன் தலை பின்னிக்கலாம் என்றுகொண்டை போட்டுக்கொண்டாள் சந்தியா.

சரியாக 10:55 க்கு காலிங் பெல் அடித்தது. ரமேஷ்தான் என்பதை உறுதி செய்துகொண்டு கதவைத்திறந்தாள். ரமேஷ் உள்ளே வந்ததும் கதவை அடைத்தாள்.

"வாங்க ரமேஷ்! பரவாயில்லை 2 வருடத்தில் ரொம்ப மாற்றம் இல்லை. அப்படியேதான் இருக்கீங்க!"

"நீயும் அப்படியேதான் இருக்க சந்தியா, ஆனால், ஏதோ வித்தியாசம் தெரியுது" என்றான் அவளை ஆராய்ந்துகொண்டே, தான் வாங்கிவந்த சின்ன "கிஃப்டை" அவளிடம் கொடுத்தான்.

"இதென்ன ரமேஷ்? இதெல்லாம் எதுக்கு?! என்றாள் அவன் கொடுத்த பாக்கேஜை காட்டி.

"நான் போனவுடன் ஓப்பன் பண்ணிப்பாரு, தெரியும்!"

ரமேஷ்க்கு அவளின் அதிக ஒப்பனை இல்லாத கோலம் ரொம்ப செக்ஸியாக இருந்தது. எப்போதுமே லூஸ் ஹேர்ஸ்டைல் அணிபவள், அன்று கொண்டை போட்டு இருப்பதால் ரொம்பவே கவர்ச்சியாக தெரிந்தாள். அவன் ஆராய்ச்சி பார்வை அவள் உடலின் வேறு சில இடங்களிலும் பதிந்தது.

சந்தியாவுக்கு அவன் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது. அதை சமாளிக்க,

"என்ன என்னை இப்படி பார்க்கறீங்க ரமேஷ்? புதுசா பார்க்கிற மாதிரி?" என்றாள் அவனை பார்த்தும் பார்க்காமலும்.

"கொஞ்சநேரம் சென்று சொல்றேனே? வந்ததும் விருந்தாளியை இப்படியா கேள்வி மேலே கேள்வி கேப்பாங்க?"

வந்ததும் என்னை இப்படியா வேடிக்கை பார்ப்பார்கள்! எப்படி பார்க்க்குறீங்க? ஆனால் பேசுவதைப்பாரு!

"சரி, என்ன குடிக்கிறீங்க?"

"அல்கஹால்லாம் கொடுப்பியா என்ன?"

"டின்னெர்னா தரலாம். ப்ரேக் ஃபாஸ்ட்க்கு அதெல்லாம் கிடையாது"

"பொய் தானே?"

"அஃப் கோர்ஸ். என்னைப்பத்தி உங்களுக்கு என்னதான் எண்ணம்?"

"எப்படி அது? உண்மை மாதிரியே பொய்யைக்கூட இவளோ அழகா பேசுறயே அதை எங்கே பழகின, சந்தியா? சரி, என்னோட சண்டை போடாமல், கொஞ்சம் தண்ணி தா போதும், சந்தியா!"

சந்தியா, தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். "காஃபி தர்றேன் என்றால், வேறென்ன கிடைக்கும்னு சொல்லி கேட்டு என்னை நல்லா உபசரிக்க வச்சுட்டீங்க, ரமேஷ். உங்களுக்காக கஷ்டப்பட்டு இட்லி சட்னி எல்லாம் செய்து இருக்கேன்."

"ஏய் நான் அதைபத்தி சொல்லல. சரி, க்ரைண்டர் வச்சிருக்கியா என்ன?"

"அதைப்பத்தி சொல்லலயா? எனக்கு தெரியாதா என்ன? நீங்க நினைப்பதெல்லாம் இப்போ கிடைக்காது சார். என்னிடம் க்ரைண்டர்லாம் இல்லை, ரமேஷ்! மிக்ஸி வைத்தே அரைச்சேன்".

"புதுசா இட்லி அவியவச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிப்பார்க்கிறாயா? நான் தான் கிடைச்சேனா?"

"அதெல்லாம் இல்லை. நல்லா வந்திருக்குனுதான் நினனக்கிறேன். சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க! சரி என்னிடம் என்ன வித்தியாசம்? கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கேனா?"

"இருக்கலாம். நீ வெயிட் போட்டு இருந்தால் அப்படி இருப்பது நல்லாத்தான் இருக்கு!"

"நல்லானா எப்படி, ரமேஷ்?"

"இதையெல்லாம் எப்படி விலாவரியா சொல்றது? நீ இப்போ இருக்கிற "கெட் அப்" ல உன்னை கொஞ்சம் வேற மாதிரி காட்டுது"

"வேற மாதிரினா, எப்படி? குண்டாவா? ஒல்லியாவா?"

"சொல்லத்தான் வேணுமா? இங்கே காதைக்கொடு சொல்றேன்!"

"இங்கே வேற யார் இருக்கா? சும்மா சத்தமா சொல்லுங்க!" அவள் சிரித்தாள்.

"நான் சொல்லுவது எனக்கே கேட்கக்கூடாது! அதான்.." அது சரி, நீ என்னை மாதிரி ஆட்களை இன்வைட் பண்னும்போது இப்படியெல்லாம் இருக்காதே! பேசாமல் தலை பின்னி விட்டு வந்திடேன், ப்ளீஸ்?"

"நான் என்ன "நேக்கடாவா" இருக்கேன்? என்னை ரொம்ப குழப்பாதீங்க? ஏன் தலை பின்னி வரனும்?"

"எதற்கெடுத்தாலும் ஏன் நு கேட்டால் நான் என்ன செய்றது? போய் தலை பின்னிட்டு வா, ப்ளீஸ்!"

"சொன்னால்தான் போவேன். சரி காதில் சொல்லி தொலைங்க! இல்லைனா எனக்கு தலையே வெடிச்சுடும்" என்று ரமேஷ் அருகில் சோஃபாவில் வந்து அமர்ந்தாள். அமர்ந்து அவள் காதை அவன் முகம் அருகில் கொண்டுவந்தாள்.

இயற்கையிலேயே சந்தியா ரொம்ப அழகு, அவளுடன் தனியாக இருக்கவே பயப்படுவான் ரமேஷ். அவனைப்பொறுத்தமட்டில் ஒரு ஆண் தன்னை நம்பும் பெண்ணிடம் கன்னியமாக நடந்துக்கனும். அப்போத்தான் அவன் ஒரு நல்ல ஆண்மகன். ஆனால் இப்போ அவன் மேலேயே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அவள் அருகில் அமர்ந்தது அவனுக்கு ரொம்ப ஒரு மாதிரியாக இருந்தது. சந்தியாவின் உடலில் இருந்து என்னவென்றே சொல்ல முடியாத நறுமணம் அவனை மயக்கியது. அவள் வலதுகாதின் அருகில் உதட்டை கொண்டு சென்றான். சூடான அவன் மூச்சுக்காற்று அவள் காதில் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் அவள் அப்படியே இருந்து இருந்தால், அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் மற்றும் அழகான அவள் காதிலும் பதிந்து இருக்கும்.

அவளின் அருகாமையால் ரமேஷிடம் ஏற்படும் தடுமாற்றத்தை உணர்ந்த சந்தியாவின் நிலைமை அதைவிட மோசமாக ஆகிக்கொண்டு இருந்தது. காதருகில்படும் அவன் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. அவள் காதில் ஏதோ மெதுவாகச்சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட உடனே அதிர்ச்சியில் உடனே எழுந்தாள்.

"நிஜம்மாவா? உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்" என்று எழுந்து தன் அறைக்குள் ஓடினாள்.


-தொடரும்

No comments: