Monday, December 22, 2008

காதலுடன் - 5

அவள் உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் டி வி பார்க்கலாம் என்று டிவியை உயிர்ப்பித்து சேனலை மாற்றினான். அமெரிக்கன் மூவி களாசிக் சேனலில், காட் ஃபாதர் பார்ட்-2 ஓடிக்கொண்டு இருந்தது. மைக்கேலின் "மாஸ்டர் மைண்ட்" ஆல், அவனை சட்டத்தால் ஒரு மாஃபியா என்று நிரூபிக்கமுடியாமல் போனவுடன், அவன் மனைவியுடன் அந்த ஹோட்டலில் நடக்கும் வாதம் ஓடிக்கொண்டு இருந்தது. புகழ்பெற்ற அந்த ஹோட்டல் காட்சியில், மைக்கேலிடம் அவன் மனைவி கே ஆடம்ஸ், தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பிரிந்து போகப்போவதாக சொல்லும் உணர்ச்சிகரமான கட்டம் அது. கே ஆடம்ஸ், தன்னுடைய கருச்சிதைவு இயற்கையானது அல்ல, மைகேலை பழிவாங்க வேண்டுமென்றே ஏற்படுத்திக்கொண்டது, மைகேலின் குழந்தைகளை இனிமேல் பெற்றுக்கொள்வது சரியல்ல என்று அவள் நினைப்பதாக சொன்னவுடன் என்று சொன்னவுடன், மைகெல் அவளை முகத்தில் அறைவான், "என் குழந்தைகளை யாரும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது" என்று கோபத்துடனும், அதே சமயம் அவனுடைய மனைவியின் பழிவாங்கும் நடவடிக்கையால் மனமுடைந்தவனாகவும் பேசும் அந்தக்காட்சி முடியும்போது ரூமிலிருந்து வெளியே வந்தாள் சந்தியா.

நல்லா தலைப்பின்னி ரொம்ப மேக்-அப் போடாமல் அழகாக இருந்தாள். சற்றுமுன்னர் ரமேஷ் கண்களுக்கு ப்ரச்சோதகமாக காட்சியளித்த அவள் இப்போது சாத்தீகமாக காட்சி அளித்தாள்!

"இப்போ எப்படி இருக்கேன், ரமேஷ்?" என்றாள் புன்னகையுடன்.

"என் ஃப்ரெண்டுனு பெருமையா சொல்லிக்கிற மாதிரி அழகா, லட்சணமா தெய்வீகமா இருக்க, சந்தியா!"

"தேங்க்ஸ், ரமேஷ்! காட்ஃபாதர் பார்க்கறீங்களா?"

"ஆமாம், இது பார்ட் 2 சந்தியா. கார்ஃபாதர் பார்ட்1, & 2 படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் என்னால் பார்க்க முடியும்"

"அப்படியா! அவ்வளவு நல்லா இருக்குமா? நான் இதுவரை பார்த்ததே இல்லை ரமேஷ்"


"இந்த படம் Chick flick இல்லை சந்தியா, இருந்தாலும் உனக்கு பிடிக்கும்"

"அதில் அப்படி என்ன இருக்கு? சண்டை, மாஃபியா, கேங்க் இதை எல்லாம் தவிர?"

"இன்னும் நிறைய இருக்கு சந்தியா! உதாரணத்துக்கு கடந்த சீனில் ஒரு மனைவி தன் கணவனை எந்த அளவுக்கு நோகடிக்க முடியும் என்பதை அழகா காட்டி இருப்பாங்க. ஒரு மனைவியால் மட்டுமே இந்த அளவுக்கு செய்ய முடியும்!
"
"ஏன் அப்படி?"

"அவளுக்கு மட்டுமே அவனுடைய வீக்கென்ஸ் நல்லா தெரியும், அதனால் தான்."

"OK, முடிந்தால் நான் இந்தப்படம் பார்க்கிறேன், ரமேஷ். அதற்கப்புறம் சொல்லுறேன். இப்போ சாப்பிடலாமா? என்று அழைத்தாள்.

இட்லி, சட்னி, சாம்பார், வெண்பொங்கல், கேசரி எல்லாம் செய்து வைத்திருந்தாள். இருவரும் எதிரெதிரே டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்.

"ஏய், நானே எனக்கு வேண்டியதை வேண்டிய அளவு நானே எடுத்து சாப்பிடுகிறேன். சரியா?"

"ஓ கே, ரமேஷ்"

அவன் சாப்பிடும்போது ஸ்பூன் எல்லாம் பயன்படுத்தாமல் சாதாரணமாக கையை பயன்படுத்தியே சாப்பிட்டான். அவளும் அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.

"ஏன் ஸ்பூன்லாம் யூஸ் பண்ணுவதில்லையா, ரமேஷ்?"

"இட்லிலாம் ஸ்பூன் வச்சு சாப்பிட்டால் டேஸ்ட் குறைந்துவிடும். எனக்கு சாம்பார், சட்னியுடன் நல்ல மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால்தான் எனக்கு நல்லா இருக்கும், சந்தியா"

அளவா சாப்பிட்டுவிட்டு தான் சாப்பிட்ட கார்னிங் ப்ளேட்டை எடுத்து சிங்க் ல கொண்டுபோய், கழுவி வைத்தான். கையையும் கிச்சன் சிங்க் லயே கழுவிக் கொண்டான். சந்தியா காஃபி கொண்டு வந்து வைத்தாள். அவளுக்கு அவள் சமையல் எப்படி இருந்ததுனு அவன் சொல்லக் கேக்கனும்னு ஆசையாக இருந்தது.

"ஏய் ஒண்ணு செல்லம்மா சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

"சொல்லுங்க!"

"நீ நிஜம்மாவே ரொம்ப நல்லா சமைக்கிறடி, சந்தியா!"

"என்ன டீயா?"

"நீ தான் கோவிச்சுக்க மாட்டேனு நு சொன்ன இல்ல?"

"தேங்க்ஸ்டா பொறுக்கி!"

"ஏய் கோபமா?"

"இல்லையே. நல்லாத்தானே சமச்சு இருக்கேன் நு சொன்னீங்க?"

"ஆமா, எவ்வளோ நாளா என்னைப் பொறுக்கினு சொல்லனும்னு ஏங்கின? நான் என்ன பொறுக்கியா?"

"ரொம்ப நாளா! இல்லையா பின்னே? என்ன கொஞ்சம் டீசண்ஸி தெரிந்த பொறுக்கி"

"நீ வாடா போடா பொறுக்கினு சொன்னா ரொம்ப செக்ஸியா இருக்கு. அதனால் ஒழுங்கா வாங்க
போங்கனு கூப்பிட்டால் உனக்கும் நல்லது, உன் உடம்புக்கும் நல்லது. சரியா?"

"வாடா, போடானு சொன்னால் என்னடா செய்வ?"

"என்ன செய்வேனா? இரு வர்றேன்!" என்று அவன் எழுந்து சிரித்துக்கொண்டே அவளை அனுகினான்.

அந்த நேரம், அழைப்பு மணி அடித்தது..

"யாரு இந்நேரம்?" என்று சொல்லிக்கொண்டே வெளியே பார்த்தாள். அங்கே தோழி காவியா வந்து இருந்தாள். சந்தியா கதவை திறந்தாள்.

"என்னடி காவியா திடீர்னு?"

-தொடரும்

4 comments:

அதிரை ஜமால் said...

அருமையா இருக்கு

வருண் said...

***அதிரை ஜமால் said...
அருமையா இருக்கு

22 December, 2008 4:51 PM***

நன்றி, திரு.அதிரை ஜமால்! :) உங்களை முதல் முறையாக இங்கே பார்க்கிறேன் :-)

கயல்விழி said...

//சற்றுமுன்னர் ரமேஷ் கண்களுக்கு ப்ரச்சோதகமாக காட்சியளித்த அவள் இப்போது சாத்தீகமாக காட்சி அளித்தாள்!//

வருண், நீங்க ரஜினி ரசிகர் என்பதை இப்படி எல்லாம் நிரூபிக்கனுமா? :)

வருண் said...

kayal:

You are the only one who got what I wrote in that line, I guess :) :)

BTW, nAn kamal paRRi oru azhakaana katturai ezuthi, kamal rasikarkaLaiyellam ennai kamal visiRi nu nammba vaikkappOREn paaru :)