Thursday, December 4, 2008

காதலுடன் - 2

"வேணாம் ரமேஷ்! நான் ஏதாவது சும்மா சொல்லப்போக, அது ஏதாவது வம்பா முடிஞ்சிடும்னு பயம்மா இருக்கு"

"நான் என்ன அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லாதவனா? நான் ரொம்ப மோசமா, சந்தியா?"

"இல்லையே, ஆனால், ரமேஷ் நீங்க கொஞ்சம் சென்ஸிடிவ்தான். பொதுவா நம்மிடம் உள்ள குறைகளை நாமே ஒத்துக்கொள்வோம். ஆனால், இன்னொருவர் அதையே சொல்லும்போது கொஞ்சம் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். இங்கே என்னை வைத்து நான் உங்களைப்பற்றி சொல்றேன்"

"சரி சொல்ல வேணாம், சந்தியா. நான் என்ன நினைச்சேன்னு (strange feeling) நானே சொல்லிடவா?"

"சொல்லுங்க, ப்ளீஸ்"

"நீ கோவிச்சுக்கக்கூடாது?"

"அதெப்படி எனக்குத் தெரியும்? சரி, முயற்சிக்கிறேன். சொல்லுங்க" அவள் சிரித்தாள்.

"எனக்கு உன் கல்யாணம் தோல்வியடைந்ததை சொல்லும்போது கொஞ்சம்கூட வருத்தமாக இல்லை. மாறாக ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் என்ன "செடிஸ்டிக்கா" (sadistic) என்னனு தெரியலை"

"ஏன், ரமேஷ், உங்களுக்கு சந்தோஷம்?"

"தெரியலையே. எனக்கு விளங்கும்போது உன்னிடம் வந்து உன் காதில் யாருக்கும் கேட்காமல் ரகசியமாக சொல்றேன். சரியா?" என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னான்.

"அவ்ளோ பெரிய ரகசியமா? சரி, நான் காரணத்தை சொல்லவா?"

"சொல்லேன், பார்க்கலாம்"

"என்னோட நீங்க சண்டைபோட்டுவிட்டு, கோபமா இருந்தீங்க இல்லையா? கோபித்துக் கொண்டு இருந்ததால்தான் எனக்கு ஃபோன் நம்பர்கூட கொடுக்காமல் நியூ ஜேர்ஸி மூவ் பண்ணினீங்க, சரியா? அந்தக்கோபம் இன்னும் இருக்கு போல, ரமேஷ். இன்று தியேட்டரில்கூட உங்க கேர்ஃப்ரெண்டோட இருக்கும்போது என்னைப்பார்த்தும் ஒரு ஹாய் கூட சொல்லலை. இல்லையா? அதனால் என்னுடைய தோல்வியில் ஒருவேளை உங்களுக்கு சந்தோஷமா இருக்கலாம்."

" சே சே, நான் அந்த மாதிரி டைப்லாம் இல்லை, சந்தியா. இது வேற மாதிரி ஃபீலிங். ஏய் அவள் என் கேர்ள் ஃப்ரெண்டெல்லாம் இல்லை"

"அப்போ அவள் என்ன பாய் ஃப்ரெண்டா?"

"சும்மா ஃப்ரெண்டு. அவ்ளோதான்!"

"அதென்ன சும்மா ஃப்ரெண்டு? "சும்மா ஃப்ரெண்டு" ஒரு கேர்ளா இருந்தால் "கேர்ள் ஃப்ரெண்டு" நு சொல்லக்கூடாதா, ரமேஷ்?" ஏதோ அப்பாவிபோல கேட்டாள்.

"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"

"விட்டுப்பாருங்களேன்!"

"சரி அப்போ, நீயும் என் ஃப்ரெண்டுதானே? "கேர்ள் ஃப்ரெண்டா" நீ எனக்கு?"

"லக்ஷ்மிட்ட என்னை கேர்ள் ஃப்ரெண்டுனு சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்"

"அவள் தப்பா நெனச்சுக்கிட்டா?"

"அவள் என்ன உங்க மனைவியா? தப்பா நினச்சாத்தான் என்ன? சரி, கேர்ள்-ஃப்ரெண்டுனா அப்படி என்ன தப்பு? ரொம்பத்தான் அந்த லக்ஷ்மிக்கு உருகுறீங்க"

"சரி உனக்கு இன்னொரு நாள் நேரில் பார்க்கும்போது சொல்றேன். நேரில் சொன்னால்தான் இதெல்லாம் உனக்கு புரிய வைக்க முடியும்"

"என்னைக்கு?"

"அடுத்த முறை நேரில் பார்க்கும்போது, சரியா? இப்போ என்னை ஆள விடும்மா!"

"சரி, நான் சொல்றதைக்கேளுங்க, ரமேஷ்! என் தோல்வியை நினைத்து அப்படி சந்தோஷம் வருவதால் ஒண்ணும் தப்பு இல்லை ரமேஷ். நாமெல்லாம் மனுஷங்கதானே? இதுக்காக ரொம்ப அழாதீங்க, சரியா ?" அவள் குரலில் கேலி தெரிந்தது.

"இல்லை, அது காரணம் இல்லைனு எனக்கு 100% உறுதியா தெரியும் சந்தியா!"

"சரி நீங்களே காரணத்தை சொல்லிடுங்க!"

"இப்போ உன்னோட என்ன வேணா பேசலாம். ஒருவேளை உன் கல்யாண வாழ்க்கை நல்லவிதமா போயிருந்தா இந்த அளவுக்கு உனக்கு நேரம் இருக்காது. நானும் உன்னோட இதுபோல் ஃப்ரீயா பேசமுடியாது என்கிற என்னுடய சுயநலம்தான்."

"உங்களுக்கு என்னோட பேசுவது அவ்ளோ பிடிக்குமா, ரமேஷ்?" அப்போ ஏன் நியூ ஜேர்ஸி போனதிலிருந்து ஒரு தரம் கூட என்னை கூப்பிடவில்லை? அவள் குரலில் கோபம் தெரிந்தது.

"பேசவில்லை உண்மைதான். ஆனால் உன்னைப்பற்றி நிறைய நினைப்பேனே, சந்தியா?" என்றான் அவளை சமாதானப்படுத்த.

"அப்படியா? என்ன மாதிரி நினைப்பு, அது, ரமேஷ்? சொல்லுங்க ப்ளீஸ்"

"அதெல்லாம் சொல்ல முடியாது, சந்தியா. அப்புறம் உன்னிடம் உதை யாரு வாங்கிறது?"

"அச்சச்சோ! அது என்ன ஒரு மாதிரியான நினைப்பா, ரமேஷ்? நீங்க ரொம்ப மோசமான ஆளா?"

"ஆமாம், நான் ரொம்ப கெட்டப் பையன் தான். கொஞ்சம் கவனமாவே இரு, சந்தியா"

"சரி, சும்மா சொல்லுங்க. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன்!"

"நீ வேற! இதெல்லாம் ரொம்ப ப்ரைவேட்"

"ஒழுங்கா மறைக்காம உண்மையை சொல்லுங்க, 'அந்த மாதிரியான' நினைப்பா?"

"அப்படித்தான் நு வச்சுக்கோவேன், என் மனசுக்கு நாந்தானே ராஜா?"

"அதெல்லாம் இல்லை. உங்களை ரொம்ப நல்லவர்னு நெனச்சு பழகினால், இப்படி இருக்கீங்களே, ரமேஷ்"

"எல்லாம் உன் தப்புத்தான், சந்தியா"

"அதெப்படி என் தப்பு?"

"நீ ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிற மாதிரி இருக்க? எல்லோரையும் பார்த்து அப்படியா தோனுது?"

"என்னைப் பார்த்தால் எப்படி தோணுது?"

"சொல்லிடவா?"

"வேணாம், வேணாம்! சரி, ஆம்பளைங்களுக்கு ஏன் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை, ரமேஷ்?"

"ஏன் ஆம்பளைங்கனு சுத்தி வளைக்கிற? "உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை ரமேஷ்"னு சொல்ல வேண்டியதுதானே?"

"மெளனம்"

"என்ன யோசனை?"

"இல்லை, நீங்க என்ன மாதிரி என்னைப்பற்றி நினைத்து இருப்பீங்கனு யோசித்தேன்! உங்களை மாதிரி நினைத்துப்பார்ப்பதால் இப்போ நானும் ரொம்ப கெட்டபொண்ணா ஆயிட்டேன்"

"இது ரொம்ப கண்டேஜியஸ் போலிருக்கு, சந்தியா! சரி, ராஜு நல்ல படித்த, அழகான, உன்னை மணம்முடிக்க தகுதியுள்ள ஆள் தானே? என்ன பிரச்சினை, சந்தியா?"

"வாழ்க்கையை ஆரம்பிக்குமுன், நான் ஒரு சில கேள்விகள் கேட்டேன், கண்டிஷன்ஸ் போட்டேன். அது அவருக்கு பிடிக்கலை, ரமேஷ்!"

"வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பா? கொஞ்சம் புரியிறார்ப்போல சொல்லு, சந்தியா!"

"கல்யாணம் முடிந்தவுடன், அன்று இரவு தனியாக இருக்கும்போது முதலில் எனக்கு அவருடைய எச் ஐ வி டெஸ்ட் ரிசல்ட் வேணும்னு சொன்னேன். அப்புறம் சில பொருளாதார சுதந்திரம் எனக்கு தேவைனு ஒரு மாதிரி "ப்ராப்பஸிஷன்" கொடுத்து, அவரின் "அப்ரூவல்" கேட்டேன்!"

"அது சரி!. நீ உன்னுடைய ரிசல்ட்டையும் அப்போ அவருக்கு கொடுக்கனும் இல்லையா, சந்தியா?"

"அதை கொடுக்க ரெடியா இருப்பதால்தான் கேட்டேன் ரமேஷ்! அவர் செய்த தப்புக்கு நான் சாகத்தயாரா இல்லை. அவரும் என் தப்புக்காக சாக வேண்டாம் என்கிற நல்லெண்ணம்தான் ரமேஷ்"

"அதற்கு ராஜூ என்ன சொன்னார்?"

-தொடரும்.

8 comments:

குடுகுடுப்பை said...

வில்லங்கமான ஆள் யாரு இதுல

வருண் said...

இதிலென்ன சந்தேகம்? நீங்கதான் குடுகுடுப்பை! :) :) :) :)

சும்மா ஜோக்கு!

உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி :)

நசரேயன் said...

/*"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"
*/
அது நான்தான்

வருண் said...

***நசரேயன் said...
/*"உனக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! சின்ன பாப்பா! வாயிக்குள்ளே விரலை விட்டாக்கூட கடிக்கத்தெரியாது உனக்கு!"
*/
அது நான்தான்

4 December, 2008 10:55 AM***

நிஜம்மாவா, நசரேயன்!!!

நீங்க உண்மையிலேயே அப்படித்தான் னு தோணுது.

கொஞ்சம் கவனம் நசரேயன்! இது ரொம்ப பயங்கரமான உலகம் :(

sriram said...

வருண், வர வர உங்க கதைகள் விஜய் படம் மாதிரி ஆகி போச்சு.தலைப்பு மட்டும் மாறுது .கதை ஒரே மாதிரி இருக்கு.

வருண் said...

***sriram said...
வருண், வர வர உங்க கதைகள் விஜய் படம் மாதிரி ஆகி போச்சு.தலைப்பு மட்டும் மாறுது .கதை ஒரே மாதிரி இருக்கு.

7 December, 2008 10:45 PM***

LOL!

மணிகண்டன் said...

கதை வழ வழன்னு இழுக்குது ! ஒருவேளை காதலில் இருக்கும் நம்ப மக்களுக்கு ரொம்ப பிடிச்சி போகலாம்.

ஆனா பாலச்சந்தரின் மறு உருவமா நீங்க ?

வருண் said...

வாங்க மணிகண்டன்!

இந்த கதையோட தலை எழுத்து அது! அப்டித்தான் போகும் போல இருக்கு :-)

பாலசந்தர் வள வள என்றெல்லாம் இழுக்கமாட்டார், மணிகண்டன். பாவம் அவரைவிட்டுவிடுங்க!

கதை மூலம் ஒரு சில விசயங்களை பற்றி பேசலாம்னுதான் இப்படி போகுது.

காலம்மாறிப்போச்சு இல்லையா? அதற்கேற்றார்போல் ஆண்களும் தன் நிலையை சரிப்படுத்திக்கொள்ளனும் னு எனக்கு தோனுது.