Wednesday, December 17, 2008

செருப்பு, அமெரிக்கா, புஷ், அவமானம்!

செருப்பால அடிப்பேன் என்பது ஒருவரை அவமானப்படுத்துவது என்பது இந்திய மற்றும் மிடில்-ஈஸ்ட் கலாச்சாரத்தில்தான். அமெரிக்கர்களை பொருத்தவரையில் செருப்பு ஒரு பொருள் அவ்வளவுதான். செருப்பை வைத்து எறிந்ததால் பயங்கரமாக அவமானப்பட்டதாக சிலர் “செருப்படி” என்று பேசுவது நகைப்புக்குரியது.

இதுபோல் ஒரு கேவலமான செயல் ஈராக் நாட்டின் ஒரு குடிமகன் செய்ததை நினைத்து ஈராக மக்கள் தலைகுனியனும். தன் குடியைக்கெடுத்தவனாக இருந்தாலும் போரில்தான் ஒருவர் ஒருவருக்கு எதிரி. இதுபோல் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் இடங்களில் அல்ல!

இந்த ஒரு விசயத்தை ஒரு பெரிய வெற்றியாக வேற வேலை வெட்டியில்லாத சில தமிழர்கள் கொண்டாதுவதும் நகைப்புக்குரியது. எதைப்பார்த்து சந்தோஷப்படுவதுனே தெரியாமல் மடமையில் வாழும் தமிழர்கள்தான் இதைக் கொண்டாடுவார்கள்!

10 comments:

Brat said...

சரியாக சொல்லியுள்ளீர்கள் வருண்

வருண் said...

வாங்க ப்ராட்!

நெறைய பேர் "செருப்படி" "செருப்படி" னு சொல்வதைப் பார்த்ததும் இதை சொல்லனும்னு தோனுச்சு அவ்வளவுதான்! :-)

கயல்விழி said...

வருண்

இது பல நாட்களாக புஷ் மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன். புஷூக்கு இது அவமானமோ இல்லையோ, அவர் மீது கடும் கோபத்தில் இருந்த மக்களுக்கு ஏதோ சின்ன ஆறுதல். உலக பொருளாதாரத்தையே சிதைக்க முக்கியமான காரணமாக இருந்தவர் புஷ்.

வருண் said...

கோபத்தின் வெளிப்பாடுதான் கயல்.

புஷ், நிறைய தவ்று செய்து இருக்கிறார். ஈராக் மக்கள் அவரையும் அமெரிக்கர்களையும் வெறுப்பதில் தவறே இல்லை!

இருந்தாலும் இதுபோல் ஒரு ப்ரஸ்-மீட் ல ஒரு ஈராக் குடிமகன் நடந்துகொண்டதால், அது ஈராக் நாட்டுக்கும் மக்களுக்கும்தான் இது அவமானம். புஷ்க்கு அவமானம் அல்ல!

SK said...

ஆனால் இதை அவர்கள் பெருமையாத்தான் நினைக்குறாங்க வருண்

அந்த ஷூவை பல மில்லியன் டாலர் மதிப்பில் ஏலம் விடப்போராங்கலாம்.

இது மூலமா அவுங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல். இது சரியா தவறான்னு கூட எனக்கு சொல்ல தெரியலை.. அது தான் உண்மை :-)

வருண் said...

ஒரு முறை மறைந்த ராஜிவ் காந்தியை இலங்கையில் ஸ்ரிலங்கன் ஆர்மில துப்பாகியை வைத்து ஒருவர் அட்டாக் பண்ணினார் தெரியுமா? அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

பயங்கரவாதம் செய்பவர்களும் வீரர்கள் மற்றும் சொர்க்கத்தில் இடம் பெறுவார்கள் என்றும் ஒரு சிலர் நம்புறாங்க!

எனக்கு புஷை சுத்தமாகப் பிடிக்காது தான். ஆனால் இந்த மாதிரி செயல் பெருமைப்படக்கூடியதாகவோ, பாராட்டத்தக்கதாகவோ தோன்றவில்லை

பந்தர் அலி ஆபிதீன் said...

உலக நாடுகளின் ஒப்பற்ற தலைவராக தன்னை நினைத்துக்கொண்டு வலம்வந்த ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசியது மிகப்பெரிய அவமானமே.

(வருண்,அசடு வழியறத தொடச்சிக்கோங்க)

வருண் said...

***பந்தர் அலி ஆபிதீன் said...
உலக நாடுகளின் ஒப்பற்ற தலைவராக தன்னை நினைத்துக்கொண்டு வலம்வந்த ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசியது மிகப்பெரிய அவமானமே.**

அப்படீங்கிறாங்களா?!

நீங்க வேற! எனக்கு ஏன் ங்க் இதுக்கெல்லாம் அசடு வழியுது?

கொஞ்சம் சிரிப்புத்தான் வருது!

ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இஸ்லாமியர் பேரோட வந்து இருக்கீங்க போல! :-)

செல்வேந்திரன் said...

தன் தேசம் கண் முன்னே சூறையாடப்படுவதைக் காணப்பொறுக்காத ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனின் எதிர்வினையாகத்தான் புஷ்ஷின் மீது ஷூ ஏறியப்பட்ட சம்பவத்தைக் கருதுகிறேன். வரலாறு தன்னை மாவீரனென்று பதிவு செய்யும் என்றோ, ஓரே நாளில் உலகப்புகழ் அடைந்துவிடலாம் என்றோ நிச்சயம் அவர் இதைச் செய்திருக்க மாட்டார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அல்-ஜெய்தி நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவரது வலது காது சிகரெட் நெருப்பினால் பொசுக்கப்பட்டிருக்கிறது. பற்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது. வெற்றுத் தரையில் படுத்திருக்கும் அவர் மீது குளிர்ந்த நீர் கொட்டப்படுகிறது. இதெல்லாம் சிறையில் அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர் ஊடகத்திற்குச் சொன்னவை. மேலும் இவ்வழக்கில் அல்-ஜெய்திகு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.

நடந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ஒரு தீவிரவாதியின் தூண்டுதலில்தான் தாம் அப்படிச் செய்ததாகவும் அல்-ஜெய்தி கடிதம் எழுதி இருப்பதாக 'யுனைட்டட் ஸ்டேட் ஆஃப் ஈராக் அரசாங்கம்' தெரிவித்திருக்கிறது. ஆனால், சிறைக்கு வந்த சகோதரரிடம் உறுதியாக அதை மறுத்த அல்-ஜெய்தி , இந்த உலகத்திற்கு ஒரு செய்தியும் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது "மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் 'ஐ வில் டூ இட் அகெய்ன்' "

இந்தச் செய்தியைப் படித்ததும்,

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை
ஆனால்...
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது - என்ற பெஞ்சமின் ஸஃபானியாவின் கவிதை (சுதந்திரம்) நினைவுக்கு வந்தது.

தன் காலணி நாடு ஒன்றிலிருந்து புதிய காலணிகளோடு நாடு திரும்பிய புஷ் 'ஈராக்கியர்கள் ஷூ அணிய தடை' என்று இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒருவேளை ஓபாமா சொல்வார் என்று விட்டிருப்பாரோ?!

வருண் said...

செல்வேந்திரன்:

தன் தேசம் சூரையாடுவதை பார்த்து என்ன செய்து அமெரிக்காவை வீழ்த்தனும்? நிச்சயமாக இப்படி செருப்பெறிந்து அல்ல!

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மேல் அணுகுண்டு வீசப்பட்டது.

அதிலிருந்து ஜப்பானியர் கற்றுக்கொண்டது, செருப்பு எறிவதை அல்ல!