Monday, December 29, 2008

தற்கொலை! சுயநலமும் தியாகமும்!!!

ஒரு வகை!

எனக்குத்தெரிய ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த “ஜான்” என்ற “நண்பன்” தொங்கிவிட்டான்.

பிரச்சினை என்னவென்றால், அவன் ஒரு அழகான பெண்ணிடம் தன் மனதை பறிகொடுத்துவிட்டான். அவள், அவனுடைய ஜூனியர், மற்றும் அவனுடைய ஆய்வகத்தில் வேலை செய்பவள். இவன் கொடுத்த இதயத்தை அவள் வாங்க மறுத்துவிட்டாள். இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?

ஜானின் இதயம் அவள் வாங்க மறுத்ததால் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. இதயத்தை உடைத்த இவனால் அதிகமான நாட்கள் வாழ முடியவில்லை. தூக்குப்போட்டுக்கொண்டு தொங்கிவிட்டான்.

அவன் உடலைப்பெற அவனுடைய ,அப்பா அம்மா வந்து இருந்தார்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்திற்கும் கீழே உள்ள ஒரு பரிதாபமான நிலைமை. அவர்களின் ஒரே "ஹோப்" இவந்தான் என்று விளங்கியது! மகன் படித்துவிட்டான்! இனிமேல் மகன் சம்பாரித்து அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கப்போகிறான் என்று நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்.

இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! இது ஒரு வகை தற்கொலை!

இன்னொரு வகை!

இது என்னுடைய பாஸ் சொன்னார். அவர் அப்பாவுக்கு இப்போது வயது 89. இன்னும் அவராவே கார் ஓட்டிச்சென்று, அவரை அவரே கவனித்துக்கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு 90 வயது ஆள், அவர் என் பாஸ் அப்பாவுக்கு நண்பர் மாதிரி. அருகில் வசித்து வந்தவர். இந்த முறை என் பாஸ், அவருடைய அப்பாவை கிருஸ்துமஸ்க்கு அழைதுவர போனபோது, அவர் அப்பாவின் ந்ண்பர் இறந்துவிட்டதாக அவர் அப்பா சொன்னதும், என்ன ஆச்சு? என்று கேட்டாராம்!

கிடைத்த பதில் இதுதான். துப்பாக்கி எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டாராம் அந்த 90 வயது ஆள். காரணம்? அவருக்கு சாகும் அளவுக்கு எதுவும் பெரிய வியாதி இல்லை. இருந்தாலும், அவருக்கு சில வியாதிகள் இருந்தன. அதனால் தொடர்ந்து சில உதவிகள் தன் மகன்மற்றும் மகளிடம் இருந்து தேவைப்பட்டுக்கொண்டு இருந்ததாம். அது அவருக்கு தவறாக தோன்றியதாம். தன் குழந்தைகளுக்கு கடைசிக்காலத்தில் தான் பெரிய பாரமாக இருக்க வேண்டாம் என்று தன் உயிரை தானே மாய்த்து கொண்டாராம் அந்த பெரியவர். இதுவும் தற்கொலைதான்! இதில், சுயநலத்தைவிட, நம்மால் தன் குழந்தைகளுக்கு அளவில்லாத கஷ்டம் எதற்கு? என்கிற தியாக மனப்பான்மைதான் அவரிடம் இருந்தது.

In US, people who are in sixties are taking care of their father and mother who are in 80s or 90s. I know several cases. Some people are too healthy and they dont die even if they want to. Mainly bcos of the medical developments in dealing with heart diseases, controlling cancer and so on.

Who says Americans are selfish?

Who says Americans don't have much family value?

That is not what I see here! They take care of their old parents better than us in several cases I know of.

11 comments:

ராமலக்ஷ்மி said...

//அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை!//

நேரம் கிடைத்தால் (முடிந்தால் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு) இங்கே பாருங்களேன்.

//Who says Americans don't have much family value?//

கூட்டுக் குடும்பம் என்கிற ஒன்றுதான் அவர்கள் கலாச்சாரத்தில் இல்லையே தவிர வயதான பெற்றோரை வார இறுதியில் தவறாமல் சென்று பார்ப்பதிலும் தேவைகளைக் கருத்துடன் கவனிப்பதிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை மறுப்பதற்கில்லை. நமது ஊரில் நாம் பெருமையாகக் கருதும் கூட்டுக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதையும் பெற்றோரை சரிவரக் கவனியாது போவது பெருகி வருவதையும் மறுப்பதற்கில்லை.

விதிவிலக்குகளும் எங்கும் எதிலும் இருக்கக் கூடும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான், இல்லையா வருண்?

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
//அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை!//

நேரம் கிடைத்தால் (முடிந்தால் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு) இங்கே பாருங்களேன்.***


வாங்க ராம்லக்ஷ்மி! :)

கட்டாயம் நான் போய் வாசிக்கிறேன். படித்துவிட்டு கருத்தை சொல்கிறேன்.

-------------
***விதிவிலக்குகளும் எங்கும் எதிலும் இருக்கக் கூடும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான், இல்லையா வருண்?***

உண்மைதாங்க! :)

ஆளவந்தான் said...

இவங்க ரெண்டு பேரோட தற்கொலைக்கும் நம்ம கலாசாரத்துக்கு எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இவஙக் அமெரிக்காவில் இருந்தாலும் இதே தான் நடந்து இருக்கும்

வருண் said...

வாங்க ஆள்!

இந்த முதல் தற்கொலை நடந்தது இந்தியாவில். ஜான் என்பவர் ந்ம்ம ஊர் இந்துதான். பேர் மட்டும்தான் ஜான் :-)

இதிலே எனக்கு என்ன புதுசுனா, வய்தானவர்கள் தற்கொலை செய்வது!
:-(

செந்தழல் ரவி said...

///இந்த முதல் தற்கொலை நடந்தது இந்தியாவில். ஜான் என்பவர் ந்ம்ம ஊர் இந்துதான். பேர் மட்டும்தான் ஜான் :-)///

நம்ப முடியலையே ?

வருண் said...

திரு ரவி.

எதை நம்பமுடியவில்லை?

தற்கொலையையா? இல்லை இந்து கிருஷ்டியன் பெயர் வைத்து இருப்பதா?

அது சரி said...

//
இவனுக்கு அவளைப் பிடித்ததுபோல் அவளுக்கும் யாரையாவது பிடிக்கும் இல்லையா?
//

அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப் பார்த்து சிரிப்பாள்

அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து சிரிப்பாள்??

புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...

ஒண்ணுமில்ல, ஒரு பழைய பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சி...

வருண் said...

நல்ல பாடல்!!

நீங்க நம்ம பிரபலங்களிடம் இதை பாடிக்காட்டனும்! :) :) :)

அது சரி said...

//
வருண் said...
நல்ல பாடல்!!

நீங்க நம்ம பிரபலங்களிடம் இதை பாடிக்காட்டனும்! :) :) :)
//

நல்ல ஐடியா....அப்பிடியாவது எனக்கு நாலு காசு சேந்தா சரி :))

Sundar said...

//இந்த தற்கொலையில் சுயநலம், தன்னலம், தகுதிக்குமீறிய ஆசை, மற்றும் அடுத்தவர்களும் தன்னைப்போல் தான், அவர்களுக்கும் ஆசை இருக்கும், அதையும் நாம் மதிக்கனும் என்ற எண்ணமில்லாமை. இதைத்தான் பார்த்தேன். அவனுக்காக நான் பரிதாபப்படவில்லை! எரிச்சல்தான் வந்தது! //
Well said!

I agree with your view on western way of life. those who look down on others values usually dont see the reality.

வருண் said...

வாங்க சுந்தர்! :-)

***Well said!

I agree with your view on western way of life. those who look down on others values usually dont see the reality.***

Thanks, Sundar!

But lots of people I know think that we should feel for them becos people like "john" lost themselves before they commit suicide.

I was told that he must have had a serious psychological problem to act like that or of that sort!