Friday, December 19, 2008

ஒருவேளை ஒபாமாவும்?

தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஜி.எம் மோட்டர்ஸ்,ஃபோர்ட் மற்றும் க்ரைஸ்லர் தொழிற்சாலைகளுக்கு, 17.4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்போவதாக புஷ் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை புஷ் வீணடிப்பது இது முதல் முறையல்ல, வழக்கமாக செய்வது தான், இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. ஈராக் பத்திரிக்கையாளர் செய்ததைப்போல எத்தனை செருப்பு பறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் புஷ் கவலைப்படவும் போவதில்லை. ஏற்கெனெவே சிலரது பேராசையால் திவால் ஆக இருந்த வால்ஸ்ட்ரீட்டை கைத்தூக்கி விட்டவர் தான் இவர். இப்படி ஏராளமான நிதி உதவியை பெறப்போகும் கார் தொழிற்சாலைகள், எப்படியும் தாக்குபிடிக்கப்போவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் சில,

1.பெட்ரோல் கம்பனிகளின் செல்லப்பிள்ளைகளாக விரும்பிய இந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள், வேண்டுமென்றே அளவில் பெரிய, Gas guzzling வாகனங்களையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. டொயோட்டா, ஹாண்டா போன்ற வெளிநாட்டு கம்பனிகளோ, அளவில் சிறிய, சிக்கனமான வாகனங்களை தயாரித்தன. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சிக்கனமான காரை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

2. அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம். மேலும் தரத்தோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு கார்களை விட தரத்தில் ரொம்ப குறைவு. பல வாடிக்கையாளர்கள் அமரிக்க வாகனங்களை திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.

3. ஜி.எம், க்ரைஸ்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்களின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ்கள், கையில் "கம்பனி திவாலாகிறது" என்ற ஒப்பாரியோடு எப்படி வந்து இறங்கினார்கள் தெரியுமா? ப்ரைவேட் ஜெட்களில்! ஊதாரித்தனத்தில் நம்ம ஊர் ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்கள். இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, "தங்களுடைய ப்ரைவேட் ஜெட் உபயோகம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது" என்று அகங்காரத்துடன் ஒரு முதலாளி குறிப்பிட்டார். டெட்ராய்ட்டில் இருந்து வாஷிங்டன் வருவதற்கான முதல் வகுப்பு விமானக்கட்டணம்: $837, இதுவே ப்ரைவேட் ஜெட் உபயோகித்தால்: $20,000- பல மடங்கு அதிகம்! அமரிக்க மக்களிடத்தும், மீடியாக்களிடத்தும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "பிச்சை பாத்திரத்துடன் ப்ரைவேட் ஜெட்டில் வந்து இறங்கிய முதலாளிகள்" என்று பத்திரிக்கைகள் அடுத்த நாள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டனர்.

விரைவில் சுதாரித்த எக்ஸிக்யூட்டிவ்கள், ஜெயலலிதா ஸ்டைலில் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதாவது, அமரிக்க அரசு பண உதவி செய்தால் இவர்கள் "ஒரு டாலர்" மட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்வதாக. இது ஒரு கேலிக்கூத்து, ஏனென்றால் இவர்களுடைய ஊதியம், சும்மா பெயருக்கு தான். இவர்களுடைய பெரும்பான்மையான வருமானம் ஸ்டாக் ஆப்ஷன் மற்றும் இன்ன பிற வழிகளில் இருந்து வருபவை, எனவே 1 டாலர் சம்பளம் வாங்கினாலும் இவர்கள் பில்லியனர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுடைய தொழிலாளர்களும் யூனியன்களின் துணையோடு மற்ற கார் தொழிலாளிகளை விட அளவுக்கதிகமான ஊதியம் பெறுகிறார்கள். இவர்கள் எதில் செலவைக்குறைக்கப்போகிறார்கள் என்பது அனைவர் மனதிலும் எழும் நியாயமான கேள்வி.

4. ஒருவேளை எட்டாவது அதிசயமாக எப்படியோ அமரிக்க கார் தொழிற்சாலைகளை பிழைக்க வைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்கள் வாகனங்களை யார் வாங்குவார்கள்? மக்கள் வாங்காமல் இருப்பதற்கு தரம் மட்டும் காரணமல்ல, வரலாறு காணாத அமரிக்க பொருளாதார பின்னடைவும் காரணம். அமரிக்க மக்கள் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பரிசுகள் வாங்கவே ரொம்ப யோசிக்கிறார்களாம், இந்த அழகில் கார் எப்படி? காருக்கு பெட்ரோல்? விந்தையாக இருக்கிறது!

இதைப்படிப்பவர்களுக்கு, அமரிக்க அரசு இந்தப்பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கக்கூடாது என்ற கேள்வி எழலாம். மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் கார் வாங்குவார்கள், வீடு வாங்குவார்கள். இது முதலாளிகளுக்கு லாபம் தானே? அது மட்டும் நிச்சயம் நடக்காது, எந்தக்காரணம் கொண்டும் அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி. அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது, நடப்பைப்பார்த்தால் அமரிக்காவும் அதே பாதையில் போவதை தவிர வேறு வழி இருக்காது என்று நினைக்கிறேன்.

5. "அமரிக்க கம்பனிகள் திவாலாகுவதே நியாயமானது" என்று சில பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மற்ற வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது, அதுவரை இருக்கவே இருக்கிறது "அன் எம்ப்ளாய்மெண்ட்". இத்தனை காலம் அவுட்சோர்சிங்குக்கு பெருமாதரவு கொடுத்து வந்த அமரிக்க முதலாளிகள், இன்று தங்களுக்கு ஆபத்து என்று வரும் போது திடீரென்று தேசப்பற்றாளர் வேடம் அணிந்து அமரிக்க மக்களிடத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அமரிக்க அரசும் மக்களை விட "யாரோ சிலரை" திருப்திப்படுத்தவே அதிகம் முனைகிறது. பேசாமல் "Of the people, for the people and by the people" என்பதை "Of the rich, for the rich and by the rich" என் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.

இதில் வியப்பளிப்பது என்னவென்றால், சமீபத்தில் தேர்தலில் வென்ற வருங்கால அமரிக்க ஜனாதிபதியான ஒபாமாவும் ஆரம்பத்திலிருந்தே இந்த "பெயிலவுட்" திட்டத்தை ஆதரித்து வருவதேயாகும். உருப்படாமல் போகும் என்று தெரிந்தே உதவி செய்வதை ஒபாமாவும் ஆதரிப்பது ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. மெத்தப்படித்த புத்திசாலியான ஒபாமாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! ஒபாமாவும் விலைபோய்விட்டால் அவருக்கு ஓட்டுப்போட்டவர்கள் வருத்தப்படப்போவது உறுதி. வழக்கமாக இப்படி நினைப்பதில்லை, ஆனால் இந்தமுறை என்னுடைய மேற்கண்ட கருத்துக்கள் தவறாக இருக்க வேண்டும் என ரொம்ப ரொம்ப விரும்புகிறேன்.

48 comments:

வருண் said...

ஒபாமா நிச்சயம் இந்த விசயத்தில் "பெயில் அவுட்" க்கு ஆதரவுதான் கயல்!

கயல்விழி said...

வருண்,

அவர் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார் என்று கவனித்தேன். இதில் ரொம்ப ஏமாற்றம்!

Anonymous said...

யக்கா வந்துகினியா? நீ இல்லாம படா பேஜாராப்போச்சு

கயல்விழி said...

சென்னைத்தமிழில் வரவேற்பு(?) கொடுத்திருக்கீங்க, நன்றி அனானி அண்ணா. :)

Anonymous said...

//உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.//
Honda,Toyota வாங்க விரும்புவது உங்கள் தனிப்பட்டவிருப்பம் அல்லவா?

கயல்விழி said...

ஆமாம், தனிப்பட்ட விருப்பம் தான். ஒரு உதாரணமாக தான் குறிப்பிட்டு இருக்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் பலரும் அமரிக்க தயாரிப்புகளை விரும்புவதில்லை.

அது சரி(18185106603874041862) said...

உங்களுக்கு நானே பரவாயில்லை...ஒரு வாரத்துக்கு ஒரு பதிவாவது செய்றேன்...இத்தினி நாளு எங்க போனீங்கன்னு கேக்குறது வேஸ்டு,அதனால என்ன திடீர்னு வந்திருக்கீங்க...இந்த ஒரு பதிவு சரி, அடுத்த பதிவு இன்னும் ஆறு மாசம் கழிச்சா??

நீங்க அடுத்த பதிவு எழுதறதுக்குள்ள ஓபாமா பதவி காலம் முடிஞ்சி, அடுத்த பிரசிடென்டே வந்துருவாரு :0))

கயல்விழி said...

ஹாய் அதுசரி

வாங்க :) :)

அதிகமா எழுத ட்ரை பண்றேன்.

அது சரி(18185106603874041862) said...

இன்னைக்கு எனக்கு ரொம்ப பேட் டேவான்னு தெரியலை...படிக்கிற பதிவெல்லாம் நான் நெனைக்கிறதுக்கு எதிராவே இருக்கு...அதனால எதிர் கருத்துக்கு முன்கூட்டியே ஸாரி கேட்டுக்கிறேன்....
=========================
//
தோல்வியின் விளிம்பில் நிற்கும் ஜி.எம் மோட்டர்ஸ்,ஃபோர்ட் மற்றும் க்ரைஸ்லர் தொழிற்சாலைகளுக்கு, 17.4 பில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்போவதாக புஷ் அரசு தீர்மானித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை புஷ் வீணடிப்பது இது முதல் முறையல்ல, வழக்கமாக செய்வது தான், இதில் வியப்படைய ஒன்றுமே இல்லை. ஈராக் பத்திரிக்கையாளர் செய்ததைப்போல எத்தனை செருப்பு பறந்தாலும் அதைப்பற்றி எல்லாம் புஷ் கவலைப்படவும் போவதில்லை. ஏற்கெனெவே சிலரது பேராசையால் திவால் ஆக இருந்த வால்ஸ்ட்ரீட்டை கைத்தூக்கி விட்டவர் தான் இவர். இப்படி ஏராளமான நிதி உதவியை பெறப்போகும் கார் தொழிற்சாலைகள், எப்படியும் தாக்குபிடிக்கப்போவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன
//

First of all, a President's job is to see the bigger picture.Not yesterday, not today, not even tomorrow...Project your vision to next 50 years...next century!....If The President of The USA is one Ms.Kayal, which option will she choose? $17.4 Bn for auto industry or a massive unemployment (running into millions) in the middle of never ever seen recession? Which one you'll choose Kayal?

It's fair and fine to let the auto industry die, but what about the long term impact? What about all those jobs? If Ford/GM/Chrysler is destroyed, there won't be any auto industry, only assembling plants. And they are manufactured in Japan. And even Japan can't survive a massive unemployment in the USA or Europe...They will go bankrupt as well..Then what??

And as a President, would you choose to kill your one of the biggest industries for ever?

It's not just the auto industry or certain fat cats are being saved..It's the future of millions of people as well...I am just happy that millions of people across the world don't really know the true picture...The picture that makes my blood stop flowing...The picture that made grown up men wet their pants...The picture that made a 50+ year old Wall Street trader to become lunatic....The picture that made British Prime Minister Gordon Brown to lose his sleep for weeks..And he is not alone!

We are not trying to avoid a recession...We are fighting to avoid another Great Depression, that the current generation has never experienced and dont want to experience!

And it's not just America that's being saved, but it's the entire world economy that's being saved...or at least we are trying to save....We are trying to stop anarchy in the streets...We are trying to stop run on our banks, your banks, and every bank in the world...Heard of Domino effect? House of Cards??

I am really sorry...but when you spend sleepless nights...for weeks and even months...trying to save one bank to another...one industry to another...trying to stop one country to another going bankrupt...flying across the world...spending your life in damn flights across the world....and then you are stoned as a fat cat....It feels really bad...It's a difficult and thankless job...At the end of the day you are left with serious jet lag, broken marriage, complaining kids, forgotten relationships... and nothing else...Sometimes you dont even know which country you are in and what the damn language the other guy is speaking....

So, please please please....don't just blame a President...Of course, he can't really share all his doings with the public...But his job is not a cake walk...There is an other side which nobody would like to talk about!

அது சரி(18185106603874041862) said...

//
1.பெட்ரோல் கம்பனிகளின் செல்லப்பிள்ளைகளாக விரும்பிய இந்த அமரிக்க கார் தயாரிப்பாளர்கள், வேண்டுமென்றே அளவில் பெரிய, Gas guzzling வாகனங்களையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. டொயோட்டா, ஹாண்டா போன்ற வெளிநாட்டு கம்பனிகளோ, அளவில் சிறிய, சிக்கனமான வாகனங்களை தயாரித்தன. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் சிக்கனமான காரை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
//

பெட்ரோல் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வேண்டும் என ஆசையில்லை..வேண்டுமென்றே பெரிய வாகனங்களை தயாரித்தார்கள் என்றும் சொல்ல முடியாது...டொயோட்டோவின் பிராண்ட் சிறிய வாகனங்கள்...அமெரிக்க கம்பெனிகளின் ப்ராண்ட் பெரிய வாகனங்கள்...பெட்ரோல் விலை ஏற்றம் கடந்த ஒரு வருடத்தில் நடந்தது...ஆனால் ஒரு புதிய மாடல் காரை டிசைன் செய்து, அதை ப்ரடக்ஷன் கொண்டு வர ஆகும் காலம் என்ன? அசெம்பிளி லைனுக்கே பல மாதங்கள் தேவைப்படும்.....

பெட்ரோல் விலை மிக அதிகமாக ஏற ஆரம்பித்தது 2007 ஆரம்பத்தில் தான்..அப்பொழுதிருந்தே அவர்களும் தீவிரமாக முயற்சி செய்தாலும் அதில் பல பிரச்சினைகள் உள்ளன..GM போன்ற ஒரு பெரிய கம்பெனி நினைத்த மாத்திரத்தில் மாற முடியாது....Size is a problem!

ஹைப்ரிட் கார்களை பற்றி பேசுகிறீர்கள்...உண்மையில் அடுத்து பெரிய அடி வாங்கப்போவது ஹைப்ரிட் கார்களும், சுற்றுப்புற சூழ்நிலை கார்களும் தான்...கொஞ்சம் பொறுங்கள்...டொயோட்டோ அதன் சரித்திரத்தில் எந்த நாளும் இல்லாமல் இந்த முறை நஷ்ட கணக்கை காண்பிக்கப் போகிறது...

அது சரி(18185106603874041862) said...

//
2. அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம். மேலும் தரத்தோடு ஒப்பிட்டால் வெளிநாட்டு கார்களை விட தரத்தில் ரொம்ப குறைவு. பல வாடிக்கையாளர்கள் அமரிக்க வாகனங்களை திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு, ஹாண்டா, டொயோட்டா போன்ற கார்களைத்தவிர வேறெந்த காரையும் நான் கன்சிடர் கூட பண்ணியதில்லை.
//

நான் அமெரிக்காவில் இல்லாததால் எனக்கு உதிரி பாக நிலவரம் தெரியவில்லை...ஆனால் Ford பற்றி இங்கு எந்த பிரச்சினையும் இல்லை..அதுவில்லாமல் அது விலையும் மிகக் குறைவு!

டொயோட்டா....Half OK....But Honda????? It shakes pretty badly at 70miles/hour....Uphills...pretty difficult to do..Won't survive a crash with a Ford Focus or even with Ford Ka...Certainly wont survive a.... Roundabout....You must be really joking :))

அது சரி(18185106603874041862) said...

//
3. ஜி.எம், க்ரைஸ்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்களின் சீஃப் எக்ஸிக்யூட்டிவ்கள், கையில் "கம்பனி திவாலாகிறது" என்ற ஒப்பாரியோடு எப்படி வந்து இறங்கினார்கள் தெரியுமா? ப்ரைவேட் ஜெட்களில்! ஊதாரித்தனத்தில் நம்ம ஊர் ஜெயலலிதாவையே மிஞ்சி விட்டார்கள். இதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, "தங்களுடைய ப்ரைவேட் ஜெட் உபயோகம் விவாதத்திற்கு அப்பாற்பட்டது" என்று அகங்காரத்துடன் ஒரு முதலாளி குறிப்பிட்டார். டெட்ராய்ட்டில் இருந்து வாஷிங்டன் வருவதற்கான முதல் வகுப்பு விமானக்கட்டணம்: $837, இதுவே ப்ரைவேட் ஜெட் உபயோகித்தால்: $20,000- பல மடங்கு அதிகம்! அமரிக்க மக்களிடத்தும், மீடியாக்களிடத்தும் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. "பிச்சை பாத்திரத்துடன் ப்ரைவேட் ஜெட்டில் வந்து இறங்கிய முதலாளிகள்" என்று பத்திரிக்கைகள் அடுத்த நாள் தலைப்புச்செய்தியாக வெளியிட்டனர்.
//

இதற்கு என்ன சொல்வது?? ஒரு கம்பெனியின் சீஃப் எக்சிகியூடிவ்வுக்கு மிக முக்கியமானது டைம்... பொது விமானத்தில் போவதில் தவறில்லை....ஆனால் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும்...காத்திருப்ப‌தில் த‌வ‌றில்லை...ஆனால் அந்த‌ நேர‌ம் வேண்டுமே?

10:00 to 11:30 Meeting Senator XYZ, 11:30 to 12:30 Meeting labor union leaders....12:30 to 1:00 quick lunch with Bankers to extend the line of credit....oh dear, an important meeting in Washington at 1:45...Flying time is 35 mins...I must make it....What can I do???....

Flying in a private jet is not a luxury (at least in most of the cases)...It's a necessity..

வருண் said...

***டொயோட்டா....Half OK....But Honda????? It shakes pretty badly at 70miles/hour....Uphills...pretty difficult to do..Won't survive a crash with a Ford Focus or even with Ford Ka...Certainly wont survive a.... Roundabout....You must be really joking :))***

Toyota Camry and Honda Accord are sort of same and the accord has a better safety rating I think.

There are higher models, athu sari, like Acura (from Honda) and Lexus (from toyota), which wont vibrate as they are very heavy and luxury cars.

Also it dpends on which freeway we talking about :)

அது சரி(18185106603874041862) said...

//
இதைப்படிப்பவர்களுக்கு, அமரிக்க அரசு இந்தப்பணத்தை ஏன் மக்களுக்கு வழங்கக்கூடாது என்ற கேள்வி எழலாம். மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் கார் வாங்குவார்கள், வீடு வாங்குவார்கள். இது முதலாளிகளுக்கு லாபம் தானே? அது மட்டும் நிச்சயம் நடக்காது, எந்தக்காரணம் கொண்டும் அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி.
//

பணத்தை நேரடியாக மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் வீடு வாங்குவார்கள், கார் வாங்குவார்கள்...ஆனால் வேலை இல்லாமல் வீட்டில் என்ன செய்வார்கள்? காசில்லாமல் காரை வைத்து என்ன செய்ய? மாட்டு வண்டியாக இருந்தால் மாடில்லா விட்டாலும் இழுக்கலாம்...காரை என்ன செய்ய?

ஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது உத்தமம்...இலவச சோறு போடுவதை விட அந்த சோற்றை சம்பாதிக்க வழி செய்வது தான் ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது...

I am not a forteller..So I can't say whether the capitalism will survive...But I can tell you this...We will fight for its survival as long as we survive!

//
அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது, நடப்பைப்பார்த்தால் அமரிக்காவும் அதே பாதையில் போவதை தவிர வேறு வழி இருக்காது என்று நினைக்கிறேன்.
//

அப்ப‌ க‌ம்யூனிச‌ம் நிஜமாவே ஒரு கெட்ட‌ வார்த்தை இல்லியா? :0))

கயல்விழி said...

//It's fair and fine to let the auto industry die, but what about the long term impact? What about all those jobs? If Ford/GM/Chrysler is destroyed, there won't be any auto industry, only assembling plants. And they are manufactured in Japan. And even Japan can't survive a massive unemployment in the USA or Europe...They will go bankrupt as well..Then what??//

I don't mind bailing them out if it really works. But will it work? I am not sure. Most probably the big 3 won't survive in the future. Why the bail out? Sounds like a waste to me.

I really hope the president elect does something good, I really do.

Why they never bail out people? In CA, the foreclosures have reached phenomenal rates. At least 2-3 homes in a street are being foreclosed by the banks.

கயல்விழி said...

//I am really sorry...but when you spend sleepless nights...for weeks and even months...trying to save one bank to another...one industry to another...trying to stop one country to another going bankrupt...flying across the world...spending your life in damn flights across the world....and then you are stoned as a fat cat....It feels really bad...It's a difficult and thankless job...At the end of the day you are left with serious jet lag, broken marriage, complaining kids, forgotten relationships... and nothing else...Sometimes you dont even know which country you are in and what the damn language the other guy is speaking....//

The problems mentioned above are common for everyone, not just the 'fat cats'. That doesn't mean they can travel in private jets while firing 1000s of workers.

கயல்விழி said...

//பெட்ரோல் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வேண்டும் என ஆசையில்லை..வேண்டுமென்றே பெரிய வாகனங்களை தயாரித்தார்கள் என்றும் சொல்ல முடியாது...டொயோட்டோவின் பிராண்ட் சிறிய வாகனங்கள்...அமெரிக்க கம்பெனிகளின் ப்ராண்ட் பெரிய வாகனங்கள்...பெட்ரோல் விலை ஏற்றம் கடந்த ஒரு வருடத்தில் நடந்தது...ஆனால் ஒரு புதிய மாடல் காரை டிசைன் செய்து, அதை ப்ரடக்ஷன் கொண்டு வர ஆகும் காலம் என்ன? அசெம்பிளி லைனுக்கே பல மாதங்கள் தேவைப்படும்.....
//

இவர்கள் energy efficient வாகனங்களை தயாரிக்கவில்லை என்பது அவர்களே ஒப்புக்கொள்ளும் குற்றச்சாட்டு. அவர்களே ஒப்புக்கொள்வதை நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்களா?

2004 ஆண்டிலிருந்தே பெட்ரோல் விலையேறத்துவங்கிவிட்டது.

கயல்விழி said...

//But Honda????? It shakes pretty badly at 70miles/hour....Uphills...pretty difficult to do..Won't survive a crash with a Ford Focus or even with Ford Ka...Certainly wont survive a.... Roundabout....You must be really joking :))//

Are you serious? I have a honda and it drives fine, never gave me any problems and very energy efficient.

அது சரி(18185106603874041862) said...

//
5. "அமரிக்க கம்பனிகள் திவாலாகுவதே நியாயமானது" என்று சில பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மற்ற வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது, அதுவரை இருக்கவே இருக்கிறது "அன் எம்ப்ளாய்மெண்ட்". இத்தனை காலம் அவுட்சோர்சிங்குக்கு பெருமாதரவு கொடுத்து வந்த அமரிக்க முதலாளிகள், இன்று தங்களுக்கு ஆபத்து என்று வரும் போது திடீரென்று தேசப்பற்றாளர் வேடம் அணிந்து அமரிக்க மக்களிடத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். அமரிக்க அரசும் மக்களை விட "யாரோ சிலரை" திருப்திப்படுத்தவே அதிகம் முனைகிறது. பேசாமல் "Of the people, for the people and by the people" என்பதை "Of the rich, for the rich and by the rich" என் மாற்றிவிட்டால் சரியாக இருக்கும்.
//

அப்படி திவாலானால் அதே So Called பொருளாதார வல்லுனர்கள் கவலைப்பட போவதில்லை... எது நியாயம் என்பதை விட எது முக்கியம் என்பது அவசியமானது...

மில்லியன் மக்கள் வேலையிழந்து, மார்ட்கேஜ் கட்ட முடியாமல் போனால் இவர்களுக்கு கவலையில்லை...

தன் கணிப்பு தவறாக போனால் எந்த பொருளாதார மேதை மன்னிப்பு கேட்பார்? அப்படி கேட்டாலும் என்ன புண்ணியம்?? உண்மையில் பொருளாதார மேதைகள் தெருவுக்கு நாலு பேர்...இந்தியாவில் கிளி ஜோசியமும் ஒன்று, அமெரிக்காவின் So Called பொருளாதார மேதையும் ஒன்று....

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார்...."ஊசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கறானுங்க..."...அது போல், வாழ்க்கையில் ஒரு நாளும் டிரேடிங் செய்யாதவர்களும், CDS, CDO பற்றி புத்தகத்தில் படித்தவர்களும் ஒரு டி.வி. நினைத்தால் பொருளாதார மேதை ஆகிவிடுகிறார்கள்!

டெமாக்ரஸி என்பது மக்களின் நலனுக்காக செயல்படுவதே தவிர மக்களை எப்பொழுதும் கேட்டு செயல்படுவது அல்ல...எல்லா நேரங்களிலும் அது சாத்தியமும் அல்ல..So, this is, "Of the people, by the people, and for the people, even if they dont like it...sometimes!" :0))

கயல்விழி said...

//பணத்தை நேரடியாக மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் வீடு வாங்குவார்கள், கார் வாங்குவார்கள்...ஆனால் வேலை இல்லாமல் வீட்டில் என்ன செய்வார்கள்? காசில்லாமல் காரை வைத்து என்ன செய்ய? மாட்டு வண்டியாக இருந்தால் மாடில்லா விட்டாலும் இழுக்கலாம்...காரை என்ன செய்ய?

ஒருவனுக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது உத்தமம்...இலவச சோறு போடுவதை விட அந்த சோற்றை சம்பாதிக்க வழி செய்வது தான் ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது...
//

மக்களுக்கு பணமாக கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எத்தனையோ வகையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம். அமரிக்காவில் நடுத்தரவர்க்கமே முற்றிலுமாக அழிந்து விடும் அபாயத்தில் இருக்கிறது.

கயல்விழி said...

//I am not a forteller..So I can't say whether the capitalism will survive...But I can tell you this...We will fight for its survival as long as we survive!//

I really hope that you are right and I am wrong here :)

கயல்விழி said...

//ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார்...."ஊசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபர்னு சொல்லிக்கறானுங்க..."...அது போல், வாழ்க்கையில் ஒரு நாளும் டிரேடிங் செய்யாதவர்களும், CDS, CDO பற்றி புத்தகத்தில் படித்தவர்களும் ஒரு டி.வி. நினைத்தால் பொருளாதார மேதை ஆகிவிடுகிறார்கள்!//

இப்படி அனைவர் கருத்தையும் புறம் தள்ளிவிட முடியாது. ரிசெஷனை 2007-ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே சரியாக கணித்துச்சொன்ன பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு சரியான கணிப்பாகிவிட்டது இல்லையா?

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
//I don't mind bailing them out if it really works. But will it work? I am not sure. Most probably the big 3 won't survive in the future. Why the bail out? Sounds like a waste to me.

I really hope the president elect does something good, I really do.

Why they never bail out people? In CA, the foreclosures have reached phenomenal rates. At least 2-3 homes in a street are being foreclosed by the banks.

//

Don't mind bailing them out? Glad to hear that...I really am! Thought you have become a communist :))

Granted, the bail out may work/may not work....and it's bad....but it's a sincere attempt to avoid the worst..

I too really hope the President Elect does something really good....But it does'nt mean the current president shouldn't try to sort out the problem as much as he can...does it?

Why they never bailout people? It's because administering such a grand scale program will spend more money on managing rather than helping the people. That's why there is no direct bailout for individuals..Every attempt is made to help the individuals indirectly...And keeping someone in job...I believe is the best way of bailing out someone. No?

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
Are you serious? I have a honda and it drives fine, never gave me any problems and very energy efficient.

//

It must be a really, really exceptional Honda :)).

I had one few years back, ran over a round about...I survived...but the car didn't. :0))

Toyota is (Half) OK, but I had bad experience with Honda,even before that accident...So didn't bother about that car...I am talking about Honda Accord...It really vibrates pretty badly...may be, I intentionally ran over it on that round about!

கயல்விழி said...

//Why they never bailout people? It's because administering such a grand scale program will spend more money on managing rather than helping the people. That's why there is no direct bailout for individuals..Every attempt is made to help the individuals indirectly...And keeping someone in job...I believe is the best way of bailing out someone. No?//

Wall Street and AIG bailouts didn't help anybody but them. They used most of the Government funds for merging and held the rest of it for some 'rainy day'. People didn’t get any advantage whatsoever from those bailouts.
Foreclosures are still going on, even as we speak (write). They are predicting more foreclosures next year also, disastrous news for real estate.

கயல்விழி said...

//Toyota is (Half) OK, but I had bad experience with Honda,even before that accident...So didn't bother about that car...I am talking about Honda Accord...It really vibrates pretty badly...may be, I intentionally ran over it on that round about!//

Trust me, this is the first time I hear something like this.

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

இப்படி அனைவர் கருத்தையும் புறம் தள்ளிவிட முடியாது. ரிசெஷனை 2007-ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே சரியாக கணித்துச்சொன்ன பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு சரியான கணிப்பாகிவிட்டது இல்லையா?

//

சரியான பாய்ண்ட்...2007லியே சொல்லிட்டாங்களா?? :0))

2007லில் ரிசெஷன் ஆரம்பிக்கும் என்று கிட்டத்தட்ட 2004லியே உள்ளிருந்து கவனிப்பவர்களுக்கு தெரியும்...ஆனால் மேதைகளுக்கு 2007லில் தான் தெரிகிறது...என்ன செய்ய?

ஆனால் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்..ரிசெஷன் எந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று கணிப்பது கடினமாக இருந்தது...பல காரணங்கள்...ஆனாலும் முழுமையாக கணிக்க முடியாத தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்!

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
//
Wall Street and AIG bailouts didn't help anybody but them. They used most of the Government funds for merging and held the rest of it for some 'rainy day'. People didn’t get any advantage whatsoever from those bailouts.
Foreclosures are still going on, even as we speak (write). They are predicting more foreclosures next year also, disastrous news for real estate.

//

Kayal,

Talking about AIG story, personally I do know some reasons why it was bailed out...when it was bailed out, we DO know the bailout won't be felt by people...sametime, what we do know was, if it was not bailed out, the problem will affect a lot of people...It's because credit, counter credit, pension funds, asset dumping, loss of confidence, real cost of borrowing, LIBOR, reduced business acitivity, chain reaction...etc etc...You have to see the full picture to understand why AIG was bailed out..

As I said, the real intention of bailouts is not to help the companies or the fat cats, but we are really scared of the impact of such a failure.

அது சரி(18185106603874041862) said...

Finally,

I am just trying to say the other side of the story..I know, through and through my opinion was against yours..but I really hope, you didn't take it wrong...It's just a dicussion...Good to discuss with you after a long time...

Keep writing good articles like this...It's really interesting!

கயல்விழி said...

அதுசரி

உண்மையிலேயே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் என்ன, நம்பத்தான் முடியவில்லை :)

கயல்விழி said...

//I am just trying to say the other side of the story..I know, through and through my opinion was against yours..but I really hope, you didn't take it wrong...It's just a dicussion...Good to discuss with you after a long time...//
Of course, I am not offended. I appreciate your time and effort in this discussion.

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...
அதுசரி

உண்மையிலேயே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் என்ன, நம்பத்தான் முடியவில்லை :)

//

நம்புங்கள்...எல்லாரும் உத்தமர்கள், நடப்பது எல்லாம் நாட்டு நன்மைக்கே என்று என்னால் சொல்ல முடியாது...ஆனால், உண்மையாகவே இதை விட பெரிய பிரச்சினைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்/கொண்டிருக்கிறோம்..

பெயில் அவுட் என்பதை ஏற்க முடியாவிட்டாலும், இதை செய்யாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதே முக்கிய காரணம்..

(No bail out என்பது உதவவில்லை...உதாரணம், லீமன் பிரதர்ஸ்)

அது சரி(18185106603874041862) said...

//
கயல்விழி said...

Of course, I am not offended. I appreciate your time and effort in this discussion.

//

நன்றி!

அப்படியே டைம் கெடைச்சா நம்ம பெட்டிக்கடை பக்கமும் வந்துட்டு போங்க :))

Brat said...

//சிறிய மாடல் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை, சுற்று சூழலை அதிகம் மாசுப்படுத்தாத ஹைப்ரிட் வகை கார்களையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை//
//அமரிக்க கார் உற்பத்தியாளர்களின் உதிரி பாகங்கள் கிடைப்பது அரிது, விலையும் அதிகம்//
//1 டாலர் சம்பளம் வாங்கினாலும் இவர்கள் பில்லியனர்களாகத்தான் இருப்பார்கள்//

I certainly agree with these points (sorry for typing in eng, I couldn't use the tamil software)

Brat said...

//அமரிக்கா "முதலாளித்துவத்தை" விட்டுக்கொடுக்காது, ஆனால் இந்த முதலாளித்துவம் ரொம்ப நாள் நிலைக்காது என்பது மட்டும் உறுதி//

Capitalism is the one which has made the US to stand tall in the world and enabled the quality of life which allures everyone around the world

In every policy there should be some hurdle, when we overcome those hurdles, we understand it better and this is the second testing time for capitalism, but certainly not going to be the end of the road

Brat said...

//அமரிக்காவில் "கம்ப்யூனிசம்" என்பது ஏதோ ஒரு கெட்டவார்த்தையாகவே பாவிக்கப்படுகிறது//

Sure it is... Not even a single country has come up & sustained with the so called communism. Even after the fall of USSR, just by encashing the oil wealth without any infrastructure, Russia has been managing it and though it is known as a communist country, we all know what happens in China, in terms of quality of human life and rights

Brat said...

//வெளிநாட்டு கம்பனிகள் விரிவடைந்து, வேலை இழந்தவர்களுக்கு வேலை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது//

This is not at all possible, since with the fall of US economy, the other countries including the japanese & koreans will also come down. No longer the world is independent of US and most of the countries have their safe filled with dollars, including Saudi which has the highest dollar saving. When the card falls down in US, one by one all these countries will be slashed down. It doesn't matter whether it is the auto industry or the finance or the other, we got to bring the economy back to the road to avoid this world wide catastrophe

Brat said...

//ஒபாமாவும் ஆரம்பத்திலிருந்தே இந்த "பெயிலவுட்" திட்டத்தை ஆதரித்து வருவதேயாகும். உருப்படாமல் போகும் என்று தெரிந்தே உதவி செய்வதை ஒபாமாவும் ஆதரிப்பது ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. மெத்தப்படித்த புத்திசாலியான ஒபாமாவுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை!//

Obama supports it, coz (as 'Adhu Sari said") as a president he has to see the big picture, the vision for the country for the next 50 or 100 years. Just think of a condition when millions of labours without any work and millions of losers on the street. Bailouts are not going to bring anything to public, but this will avoid such a critical point where nothing can be controlled

By passing this, we are not only saving one of the big industries in US but also saving lots of other countries around and I just want to remind the fall of sensex since the start of this recession and the recent big one was on the day after the auto bailout was defeated first. Why is it so? even though the politicians continue to say that Indian economy won’t be affected by the changes in US

Brat said...

// அது சரி said...

the bail out may work/may not work....and it's bad....but it's a sincere attempt to avoid the worst//

the pragmatic approach

வால்பையன் said...

அருமையான அலசல்!
இதே போல் பொருளாதார பதிவுகள் அதிகல் எழுதுமாறு வேண்டுகிறேன்.
என்னை போல் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது

கயல்விழி said...

வாங்க ப்ராட் :)

அப்படியே டிபிகல் அமரிக்கன் அப்ரோச்சுடன் எழுதி இருக்கீங்க :)

ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன், நான் பார்த்தவரையில், அமரிக்கர்களை விட, நம்மை மாதிரி இந்தியர்கள் தான் அமரிக்க பாலிசிகளை தீவிரமாக நம்புவது :)

கயல்விழி said...

வாங்க வால்பையன், நன்றி :)

Anonymous said...

Ford is not getting any $

Sundar சுந்தர் said...

well said!
இங்கே ஒரு பத்திரிகையில், தங்க ரதத்தில் வந்த பிச்சைக்காரர்கள் என்று ஒருவர் எழுதி இருந்தார்.

Brat said...

//நான் பார்த்தவரையில், அமரிக்கர்களை விட, நம்மை மாதிரி இந்தியர்கள் தான் அமரிக்க பாலிசிகளை தீவிரமாக நம்புவது :)//

நான் அமெரிக்காவின் பாலிசிகளை அப்படியே ஆதரிப்பதுமில்லை. எனது முதல் பின்னூட்டத்திலேயே இந்த நிலை வந்ததற்கான காரணங்களாக நீங்கள் கூறியுள்ளதையே ஒத்துக்கொண்டுள்ளேன்

கண்டிப்பாக இந்த நிலைக்கு காரணம் "கேப்பிடலிசம்" பாலிசியில் இருக்கும் குறைபாடே, ஆனால் இந்த நிலை வந்தபின், "பெயிலவுட்" (மக்களை தற்போதைக்கு பாதிக்கும் விஷயமாக இருந்தாலும்) செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை அரசாலும், மக்களாலும் தாங்கமுடியாது என்று, "பெயிலவுட்" எதற்காக தேவை என்பதற்கான காரணங்களையே எனது பார்வையில் சொன்னேன்

Brat said...

//ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்//

நானெல்லாம் கும்மி அடிக்கிறதையே குலத்தொழிலா வெச்சிருப்பவன், கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னே தெரியாது. அதனால நீங்க தாராளமா ஒன்றல்ல நூறே சொல்லலாம் :))))

கயல்விழி said...

வாங்க சுந்தர் :)

மீண்டும் வரூகைக்கு நன்றி ப்ராட் :)

Brat said...

Hope this feedbak is not too late for this post :)

Its just to share the news which I went through and pl. check this news about Toyota... http://ph.news.yahoo.com/rtrs/20090103/tbs-toyota-thailand-russia-5b757e1.html