Friday, December 19, 2008

கமல், ரஜினியாக இருந்தால்!

கமலஹாசன் கவுதமி பற்றி ஒரு கிசு கிசு, அதாவது அவர்கள் இப்போது பிரிந்துவிட்டார்கள் என்று ஒரு கேள்விக்குறியுடன் ஆரம்பித்த இடுகைக்கு, கமல் ரசிகர்கள், இல்லை இல்லை, மன்னிக்கவும் "நடுநிலைவாதிகள்" பலர் வந்து, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அநாகரீகம் என்கிறார்கள். I am certainly proud of them if and only if they respect everyone's private life!

சரி, just like that, நம்ம சாமியார் ரசினி அப்பப்போ இமயமலை போய் வருகிறார். அதுவும் அவருடைய தனிப்பட்ட வாழக்கைதான். அதை விமர்சித்தால், இதேபோல், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்று "இதே நடுநிலைவாதிகள்" சொல்வார்களா? இல்லை எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா? என்ற கேள்வி கயலின் பின்னூட்டத்திலிருந்து எழுந்து உயிர்பெற்று வந்தது.

******கயல்விழி said...

கமலஹாசனைப்பற்றி மட்டுமல்ல, ரஜினியின் தனிப்பட்ட வாழ்வை(அவரின் இமயமலை பழக்கம்) போன்றவற்றை கிண்டலடித்தும், விமர்சனம் செய்தும் பல பதிவுகள்/கட்டுரைகளை படித்திருக்கிறேன். ******

நன்றி கயல்! :-)

ரஜனியின் இமயமலைப்பயணம் அவருடைய ப்ரைவேட் பிஸினெஸ் என்று எல்லோருக்கும் புரிந்ததாக எனக்கு என்னவோ தோனவில்லை. ப்ரைவேட் லைஃப் என்றால், ஒருவருடைய படுக்கை அறை வாழ்க்கை என்கிற தவறான புரிதல், கருத்து நம்மில் இருப்பதை உணரலாம். I thought we should fix ourselves right here! We need to really understand what is the meaning of one's "private life" when we go on advise others or not?

Another thought, ஒரு வேளை, ரஜினிக்கு பல மனைவிகள் (உலகறிய), கல்யாணம் என்பதில் நம்பிக்கை இல்லாமல், லிவ்-டுகெதெர் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து இருந்தால், இதே போல் ரஜினி-ஒரு நடிகை பற்றி நான் ஒரு கிசு கிசு எழுதி இருந்தால், விமர்சனத்திற்கு, பல நடுநிலைவாதிகள் வருவார்கள் வந்து இருப்பார்கள்.

* எதற்காக அவரின் (ரஜினியின்) படுக்கை அறை பற்றி பேசுகிறாய்? என்பார்கள்.

# ஆனால் அப்படி வரும் நடுநிலைவாதிகள் நிச்சயம் இன்று கமலை டிஃபெண்ட் பண்ணும் நடுநிலைவாதிகளாக இருக்கமாட்டார்கள்!

Are we really respecting a celebrity's or anyone's private life?

Or we just LOVE an ACTOR and DEFEND his WEAKNESSES because we love him?

Unfortuantely the latter statement seems like the TRUTH! :(

34 comments:

கயல்விழி said...

இங்கே ரஜினி ரசிகர்கள் - கமல் ரசிகர்கள் என்று இரு பெரும் பிரிவுகள் இருப்பதை அறிவீர்கள்தானே?

முகமூடி said...

கிசுகிசு எழுதி அரிப்பை தீர்த்துக்கொள்ளும் பத்திரிக்கைகளுக்கு என்று எந்த தர்மமும் கிடையாது.. "ஒரு நடிகையின் கதை" என்று ஒரு நடிகையை டார்கெட் செய்து எழுதும் ஆசிரியனுக்கும் சரி, நெருப்பாற்றில் நீந்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு கிசுகிசு எழுதும் ஆசிரியனுக்கும் சரி, வாசகனை எப்படியாவது குசிப்படுத்தினால் சரி பீ விற்ற காசு நாறவா போகிறது என்பது ஒன்றே அவர்களுக்கு தெரிந்த நியதி.. அவர்கள் பொண்டாட்டியோடு அவர்கள் புணர்வது பற்றி விளக்கமாக எழுதினாலும் அதே வாசகன் குசிப்படுவான் என்பது அவர்களுக்கு தெரியும் என்றாலும் பொண்டாட்டி தனி சொத்து, நடிகை பொது சொத்து...

அதே கண்றாவி வாந்தியை வலைப்பதிவிலும் பார்க்க நேரிடுகையில் ஒரு வேளை சொன்னால் புரியுமோ என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தாக சொல்லப்பட்ட அனைத்தையும் ரசிகர்களின் அதீத அன்பு என்று ஒரே வீச்சில் உதறும் உங்களுக்கு சத்தியமாக புரியப்போவதில்லை...

கள்/சாராயம் ஆனாலும் கணவன் ஃபுல் ஆனாலும் புருஷன் என்பதுதான் நமது கலாச்சாரம்.. பார்க்கவே பிடிக்கவில்லை என்றாலும் இருட்டில் மட்டும் புணர்ந்துகொண்டு கடமைக்காக வாழுதல்தான் கலாச்சார காவலர்களின் மொழியில் "மனிதனின்" இயல்பு. எனில் மனப்பொருத்தமா, அப்படியென்றால்? மூக்கணாங்கயிறு கொண்டு பட்டியில் அடைபட்ட மிருகத்துக்கு கூட சுதந்திரம் இருக்கலாம் ஆனால் மஞ்சள் கயிறு கொண்டு கட்டப்பட்டுவிட்டால் அவர்கள் சுதந்திரம் பற்றி அவர்கள் முடிவு எடுக்க முடியாது இல்லையா?

கமல்ஹாசனுக்கும் அவர் மனைவி/காதலி/தோழிக்கும் ஏற்படும் பிரிவு எதற்காக என்பது தெரியாது. யார் அதை விரும்பியிருப்பார்கள் என்பது தெரியாது. எத்தகைய நிர்ப்பந்தம்/சந்தர்ப்ப சூழலில் அவர்கள் அந்த முடிவை எடுப்பார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் காலம் காலமாக இருக்கும் "பெண்ணை பிரிந்தால் ஆண்தான் குற்றவாளி" எனும் பொது புத்தியின் காரணமாக தீர்ப்பு எழுதுகிறோம் என்பது புரியாது, சரி. அவன் யார் கூட வாழலாம், எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் நாம் எப்படி முடிவு செய்யமுடியும் என்பது புரியாது சரி... ஆனால்...

ஒரு காலகட்டத்திற்கு மோல் உடல் தேவை என்பது இரண்டாம்பட்சமாக போகும் என்பதை உணரும் வயது இல்லாத அரை வேக்காடு மாதிரி "பெண்களை போக பொருளாய் என்னும் ஒரு sadist இவன். இவனுடைய இரண்டு பெண்களையும் இப்படி நாலு பேருக்கு அனுப்ப சொல்லுங்கள் பார்போம்" என்பதாக பேசுகிறோமே. கமலுக்கு வெறும் போகப்பொருளுக்காக மட்டும் என்றால் சேர்ந்து வாழும் நிர்ப்பந்தம் எல்லாம் தேவையில்லை. அரை வேக்காட்டின் அம்மா முதற்கொண்டு நிறைய பேர் மூலமாக கமல் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது கூடவா புரியவில்லை?

முகமூடி said...

கயல்விழி, இங்கே ரசிகர்கள் நிலையில் இருந்து மட்டும் எல்லாரும் எழுதுவதில்லை... ரஜினி இமயமலை போவது அவரது தனிப்பட்ட விஷயம்தான். ஆனால் 2000 வயது கொண்ட ஒருவரை சந்தித்தேன் என்று சொல்லும்போது அது ஒரு சிலருக்கு நகைப்பாக இருக்கத்தான் செய்யும்.. அதை தனிப்ப்பட்ட் அவரின் வாழ்க்கை மீதான தாக்குதலாக எடுத்துக்கொண்டு அதை கமல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று எழுதும் தீர்ப்புக்கு பக்கவாத்தியமாக உபயோகப்படுத்துவது எப்படி பொருந்தும் என்பது எனக்கு புரியவில்லை...

கயல்விழி said...

முகமூடி

"இங்கே எழுதுபவர்கள் எல்லாம் கமல் ரசிகர்கள்" என்பது எனது கருத்து இல்லை. இருந்தாலும் சமீபத்தில், ரஜினியை தனிப்பட்டவகையில் விமர்சிப்பது பரவாயில்லை ஆனால் கமலை எக்காரணம் கொண்டும் விமர்சிக்கவே கூடாது என்ற ட்ரெண்ட் உருவாகி இருப்பதை கவனித்து வருகிறேன். It's just my personal opinion and observation.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

வருண் இதைதான் கேட்டிருந்தேன்
//எதற்க்காக கமலுடைய தனிப்பட்ட கேவலமான வாழ்கையை சொன்னவுடன் மட்டும் சிலருக்கு உடனே கோவம் வருகிறது?//
யாரை பற்றியெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கதைப்பார்கள். ஆனால் கமலுடைய அசிங்கத்தை பற்றி கதைத்தவுடன் மட்டும் கமலின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்காதே கமலை விமர்சிக்கும் நீங்கள் எல்லோரும் உத்தமர்தானர் என்பார்கள். இவர்களுக்கு கமல் கடவுள்.

Anonymous said...

ஹோமோ செக்ஸ்சுவாலிடியைப் பற்றி ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்ட மனதிற்கு, இது போன்ற தனிப்பட்ட மனிதரின் சொந்த வாழ்வை அதுவும் இருவருக்கு மட்டுமே புரியக் கூடிய விசயத்தை பந்தியில் வைத்து பேசுவது நாகரீகமில்லையென்று தெரியாமல் போனது மிக்க வருத்ததிற்குரியது.

இதே கமலே எந்த பத்திரிக்கையிலும் தான் செய்வது சரியென்றும், நியாயப் படுத்தியும் பேசியிருக்கும் தருணத்தில் இது போல அரைவேக்காடுகள் வந்து தனது வாழ்வில் என்னன்ன சந்திக்கவிருக்கிறோமெனபதனை ருசிப்பதற்கு முன்பே கருத்து வாந்தி எடுத்து வைக்கலாம். ஆனால், எங்குமே கமல் நியாயப்படுத்தியதாக தெரியவில்லையே.

ஆனால், இவர்கள் சம இடத்தில் ரஜினியின் ஹிமாலயா, பாபா விமர்னசனத்தை அவர் பொதுவில் வைத்து அதற்காக மக்களிடத்தில் கருத்து வாந்தி வாங்குவதற்கும், சொந்த ரூமுற்குள் நடைபெரும் சிக்கலான கணவன்/மனைவி/தோழி/ விசயங்களை அலசி ஆராய்வதற்கும் வித்தியாசமில்லையொன்றோ, நமக்கு எந்த முகாந்திரமுமில்லையென்றோ அறியாமல் போனது மிக்க கொடுமை.

அல்லது அப்படியே அவர்களுக்குள் உள்ள பிரச்சினையில் எது போன்ற தேவைகளையெல்லாம் நாம் நிவர்த்தித்து வைக்க முடியும்.... என்னங்கடாது, திருந்துங்கடா, முதல்ல திருமணங்கட்டி வாழ்க்கையில புருஷன் பொஞ்சாதிக்குள்ளர என்னான்ன பிரச்சினையெல்லாம் வரலாம், அதில மனப் பொருத்தத்தோட வாழ முயன்று, உண்மையா எவ்வளவு தூரம் வாழ முடியுமின்னு பாருங்கப்பு.

ஆமா, நீங்க ரெண்டு பேரும் ஒரே ஆளுதானா, சந்தேகமா இருக்கு. காதலில் தன்னை வெளிப்படுத்தும் சுதந்திரம் முழுமையா கொடுக்கணும், எந்த மாதிரியான விசயமாக இருந்தாலும், அது செக்ஸ் சம்பந்தபட்ட விசயமாவே இருந்தாலும்.. ஏதோ மஞ்சக் கயித்தை கட்டிப்புட்டோமின்னு, கட்டுத் தரியில கட்டிப் போட்ட மாதிரி வைச்சுக்க கூடாது, ரெண்டு பக்கமுமே.

சின்னப் புள்ளகளா இருக்கீங்க, ஒரு சில விசயங்கள் சொன்னா உங்களுக்கு விளங்காது.

மேலே இன்னொரு அனானி சொன்ன மாதிரி, உடல் சுகம் மட்டும்தான் பிராதாம்னா இவிங்களுக்கு என்னத்திலயா குறைச்சல், நினைச்சா நினைச்ச இடத்தில ஆள் கிடைக்கும் - இல்லியா?

கயல்விழி said...

அனானி அண்ணா

நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்? சத்தியமாக புரியவில்லை.

வருண் said...

அனானி:

வணங்காமுடியும் நீங்களும் என்னை வம்பில் மாட்டி விட்டுட்டீங்க, சார்!

கமலை தேவை இல்லாமல் தாக்க வேண்டியதில்லை, பாருங்க!

எனக்கு அந்த வதந்தி உண்மையானு தெரிய வேண்டியதிருந்தது, அவ்ளோதான்.

கமலுக்கு இந்த பிரிவு வரும்னு தெரிந்துதான் கல்யாணம் செய்யாமல் இருந்தார் என்றால், நல்லதுதானே?

Anonymous said...

ஒரே வரியில பதில் சொல்லிட்டீங்க.

//ஹோமோ செக்ஸ்சுவாலிடியைப் பற்றி ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்ட மனதிற்கு,//

வருணை கேளுங்க தெரியும். கொஞ்ச நாட்களுக்கு முன்ன ரொம்ப மும்முரமா ஒரு ஹோமோ செக்ஸ் பதிவில வருண் கும்மியடிச்ச நியாபகம்.

வேற என்ன புரியல.

//"கமல், ரஜினியாக இருந்தால்!"// அவரு(எவரோட) குடும்ப விசயத்திலும் அதே நிலைதான் எடுப்பேன். குடும்பமாக ஏதாவது வியாபார சம்பந்தமா சர்ச்சையில் மாட்டி முழிக்க நேர்ந்தால் அது வேறு இல்லையா..

அதே அனானி.

வருண் said...

***முகமூடி said...
கிசுகிசு எழுதி அரிப்பை தீர்த்துக்கொள்ளும் பத்திரிக்கைகளுக்கு என்று எந்த தர்மமும் கிடையாது.. ***

முகமூடி:

என்ன சொல்றீங்க? ஜோதிகா- சூரியா காதலும் கிசு கிசுவாக வந்த ஒண்ணுதான். அஹ்டு உண்மையாக ஆகவில்லையா என்ன?

கிசு கிசு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கு பத்திரிக்கை தர்மம் தெரியும்னு சொல்றீங்க?

பிறபல க்ரிடிக் கள் மட்டும் பெரிய தர்மம் தெரிந்தவர்களா என்ன?!

சன் நெட் வொர்க், எந்திரன் தயாரிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் ரஜினி ஜால்ராவை இனிமேல் பார்க்கவும்.

யாரிடம் பத்திரிக்கை தர்மம் இருக்கு?

வருண் said...

***முகமூடி said...
கயல்விழி, இங்கே ரசிகர்கள் நிலையில் இருந்து மட்டும் எல்லாரும் எழுதுவதில்லை... ரஜினி இமயமலை போவது அவரது தனிப்பட்ட விஷயம்தான். ஆனால் 2000 வயது கொண்ட ஒருவரை சந்தித்தேன் என்று சொல்லும்போது அது ஒரு சிலருக்கு நகைப்பாக இருக்கத்தான் செய்யும்.. அதை தனிப்ப்பட்ட் அவரின் வாழ்க்கை மீதான தாக்குதலாக எடுத்துக்கொண்டு அதை கமல் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று எழுதும் தீர்ப்புக்கு பக்கவாத்தியமாக உபயோகப்படுத்துவது எப்படி பொருந்தும் என்பது எனக்கு புரியவில்லை...****

உங்களுக்கு என்ன புரியவில்லைனு தெரியலை. எனக்கு நீங்க என்ன சொல்றீங்கனு புரியுது. சரி விடுங்க! உங்க வருகைக்கும் பின்னூட்டதிற்கும் ரொம்ப நன்றி!

வருண் said...

***Anonymous said...
வருண் இதைதான் கேட்டிருந்தேன்
//எதற்க்காக கமலுடைய தனிப்பட்ட கேவலமான வாழ்கையை சொன்னவுடன் மட்டும் சிலருக்கு உடனே கோவம் வருகிறது?//
யாரை பற்றியெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து கதைப்பார்கள். ஆனால் கமலுடைய அசிங்கத்தை பற்றி கதைத்தவுடன் மட்டும் கமலின் தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்காதே கமலை விமர்சிக்கும் நீங்கள் எல்லோரும் உத்தமர்தானர் என்பார்கள். இவர்களுக்கு கமல் கடவுள்.

19 December, 2008 12:59 PM ***

என்னத்தை சொல்ல?!

அவர் ரிலேஷன்ஷிப்பை, அசிங்கம் என்று நான் எங்கும் சொல்லவில்லை.

அவர் பிரிவதையும் தவறாக நான் சொல்லவில்லை. அவர் இஷ்டம். இது உண்மையா என்பதுதான் கேள்வி. அவளோதான்! :) இது பெரிய அநாகரிக கேள்வி என்றால்??இருந்தாலும் இருக்கலாம்.:)

SK said...

தலைவா வருண்,

ப்ரீ விடுங்க இந்த விடயத்தை. பாருங்க இது பேசினதுனாலே உங்க காதலனுடன் பகுதி நாலு கவினிப்பின்றி இருக்கு.

வருண் said...

****SK said...
தலைவா வருண்,

ப்ரீ விடுங்க இந்த விடயத்தை. பாருங்க இது பேசினதுனாலே உங்க காதலனுடன் பகுதி நாலு கவினிப்பின்றி இருக்கு.***

வாங்க எஸ் கே!

என்ன பண்ணுறது?

இது மாதிரி வம்புதான் நிறையப்பேருக்கு பிடிக்குது.

திரு ராஜ நடராஜன் சொன்னார் கதை படிச்சா தூங்கிவிடுவாராம்.

அப்புறம் ஸ்ரிதர்கண்ணன் சொல்றார், ஏதாவது சீரியலுக்கு கதை எழுதலாம்னு

கமல்-ரஜினி பத்தி எழுதினால்தான் நிறையப்பேருக்கு தூக்கம் வராது எஸ் கே :):)

SK said...

:) :)

இதுல நான் சொல்ல ஒண்ணும் இல்லை. :-)

ப்ரிய விடு ப்ரிய விடு மாமே.. அம்புடுதேன்.. :-)

வருண் said...

***அதே அனானி said...
ஒரே வரியில பதில் சொல்லிட்டீங்க.

//ஹோமோ செக்ஸ்சுவாலிடியைப் பற்றி ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்ட மனதிற்கு,//

வருணை கேளுங்க தெரியும். கொஞ்ச நாட்களுக்கு முன்ன ரொம்ப மும்முரமா ஒரு ஹோமோ செக்ஸ் பதிவில வருண் கும்மியடிச்ச நியாபகம்.

வேற என்ன புரியல.

//"கமல், ரஜினியாக இருந்தால்!"// அவரு(எவரோட) குடும்ப விசயத்திலும் அதே நிலைதான் எடுப்பேன். குடும்பமாக ஏதாவது வியாபார சம்பந்தமா சர்ச்சையில் மாட்டி முழிக்க நேர்ந்தால் அது வேறு இல்லையா..

அதே அனானி.

19 December, 2008 1:37 PM ****


அதே அனானி!

ஹோமோ செக்ஸூவல் பற்றி கோவி கண்ணன் ப்ளாக் ல பேசியதாக நியாபகம் இருக்கு. அங்கே உங்களை பார்த்ததாக ஞாபகம் இல்லை! :)

இங்கே ஒரு நடிகரின் வியாபார யுக்தியையோ, அல்லது 2000 ஆண்டு ஒரு ஆள் வாழ்கிறார் நம்புங்கனு சொன்னதற்கோ நான் ஆதரவோ, வக்காலத்தோ வாங்கவில்லை.

ஒருவரின் நம்பிக்கை, அவரின் இறைவழிபாடு அவர்களின் "ப்ரைவேட் மேட்டர்" என்றும், அதையும் நாம் புரிந்துகொள்ளனும்னுதான் சொல்றேன்.

கமலஹாஷன் ரிலேஷன்ஷிப்பையோ, அது முறிவதையோ நான் இகழ்வாக எதுவும் சொல்லவில்லை என்று திரும்பவும் சொல்றேன் :)

வருண் said...

*** SK said...
:) :)

இதுல நான் சொல்ல ஒண்ணும் இல்லை. :-)

ப்ரிய விடு ப்ரிய விடு மாமே.. அம்புடுதேன்.. :-)

19 December, 2008 6:42 PM ***

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது, எஸ் கே (ஆறு பாடல்)!! :-)

SK said...

இல்லீங்க ஒரே ஒரு பாட்டு தான் :-)

வருண் said...

எஸ் கே!

சிரிக்கிறேன் :-)

SK said...

என்னைய பாத்தா உங்களுக்கு சிரிப்பா இருக்க வருண் :( :(

வருண் said...

எஸ் கே!

நீங்க வம்பு பண்ண நான் தான் கிடச்சனா இன்னைக்கு?

சரி, நான் போய் அந்த கதையை ஏதாவது சுவாரஸ்மா எழுதலாமானு யோசிச்சு பார்க்கிறேன். இல்லைனா எல்லோரும் வாசிக்க காசு கேப்பாங்க போல இருக்கு :-)

SK said...

:-) :-)

புரிஞ்சுகிட்டீங்களே :-)

நல்ல யோசிங்க. எதாவது பாக்யராஜ் மற்றும் விசு படம் பாருங்க ஒரு மாதிரியான சிந்தனை வருண். நல்ல புதுசா இருக்கும் :-)

வருண் said...

***SK said...

நல்ல யோசிங்க. எதாவது பாக்யராஜ் மற்றும் விசு படம் பாருங்க ஒரு மாதிரியான சிந்தனை வருண். நல்ல புதுசா இருக்கும் :-)***

LOL!

அய்யோ! யாரையும் காப்பியெல்லாம் அடிக்க கூடாது. ஒரு மாதிரி கதை மண்ணா இருந்தாலும் ஒரிஜினலா இருக்கனும்.

வாசிக்க வேண்டியது உங்க தலை எழுத்து! பாவம் நீங்க! :):)

வாக்காளன் said...

but Rajini made it a habit to take a reporter with him to his himalayas trip.. after return that press reporter writes a detailed cover story with photos .. is it happening or not??

then how come Rajini's himalaya visit is personal?

வருண் said...

***வாக்காளன் said...
but Rajini made it a habit to take a reporter with him to his himalayas trip.. after return that press reporter writes a detailed cover story with photos .. is it happening or not??

then how come Rajini's himalaya visit is personal?

20 December, 2008 6:34 AM***

I did not know he was taking reporter to take a video when he was doing his yoga or whatever he does there.

One's belief is his personal.

One might go do yoga to relax and other might spend time with his friend.

Actually I am kamal's type. I rather talk/chat with my friend than doing yoga. I am only trying to respect someone's feeling who finds "peace of mind" in a way which I cant understand or wont work for me :) It is just an attempt!

கிரி said...

//ஒருவரின் நம்பிக்கை, அவரின் இறைவழிபாடு அவர்களின் "ப்ரைவேட் மேட்டர்" என்றும், அதையும் நாம் புரிந்துகொள்ளனும்னுதான் சொல்றேன்//

வழிமொழிகிறேன்

வருண் said...

நன்றி, கிரி :-)

வால்பையன் said...

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ உரிமையுண்டு!

அவர்கள் சுதந்திரம் ந்ன் மூக்கை தொடாதவரை நாம் மூக்கை நுழைப்பது தேவையற்றது என்பது என் கருத்து.

ஒரு நடிகரின் சினிமாவை விமர்சிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று நம்புகிறேன்.

வருண் said...

***வால்பையன் said...
எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ உரிமையுண்டு!

அவர்கள் சுதந்திரம் ந்ன் மூக்கை தொடாதவரை நாம் மூக்கை நுழைப்பது தேவையற்றது என்பது என் கருத்து.

ஒரு நடிகரின் சினிமாவை விமர்சிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று நம்புகிறேன்.

23 December, 2008 11:06 PM***

அப்படியா?

தசாவதாரம் பின்னூட்டங்களில் நீங்கள் மற்றவர் கருத்தை எற்றுக்கொண்டீர்களா?

இல்லை, அந்தப்படத்தில் உள்ள ஒவ்வொரு குறையையும் நிறையாக்க முயற்சித்தீர்களா என்று அந்த திரியில் போய் உங்கள் பின்னூட்டங்களை பார்க்கவும்!

ஆளவந்தான் said...

//
சரி, just like that, நம்ம சாமியார் ரசினி அப்பப்போ இமயமலை போய் வருகிறார். அதுவும் அவருடைய தனிப்பட்ட வாழக்கைதான். அதை விமர்சித்தால், இதேபோல், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்று "இதே நடுநிலைவாதிகள்" சொல்வார்களா?
//

தனிப்பட்ட வாழ்க்கைய சொல்லும் ”நோக்கம்” தான் முக்கியம்.

வருண் said...

ஆளவந்தான்:

நீங்க என்ன சொல்றீங்கனு சரியா புரியலை. :-(

ஆளவந்தான் said...

//
நீங்க என்ன சொல்றீங்கனு சரியா புரியலை. :-(
//

உண்மையை போட்டு உடைச்சதுக்கு நன்றி.

கமலஹாசன் கவுதமி பற்றி ஒரு கிசு கிசு, அதாவது அவர்கள் இப்போது பிரிந்துவிட்டார்கள்

இந்த செய்தியின் நோக்கம் என்ன. அவர்களை காயப்படுத்துவதன்றி வேறன்ன இருக்க முடியும்.. பிரிஞ்சதுனால அவங்களே சங்கடத்தில் இருக்கலாம்.. இந்த செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்

//நம்ம சாமியார் ரசினி அப்பப்போ இமயமலை போய் வருகிறார்.//

இந்த செய்தியின் நோக்கமென்ன, அவரின் ஆன்மீக உணர்வை தெரியப்படுத்துவது. இது நல்லது தானே.

சுருக்கமா சொன்னா, மயிலிறகு வித்யாசம் தான்.

அடுத்தவர் படுக்கயறையை எட்டிப் பார்ப்பதற்கு, கதவை தட்டி திறந்து பார்ப்பதற்கும் உள்ள வித்யாசம்.. நீங்க(அட உங்கள சொல்லல) பார்ப்பது படுக்கயறையா இருந்தாலும் நோக்கம் வேறு தானே.

சொல்லும் போது எனக்கே கண்ண கட்டுதே.. உங்க நிலைமைய நினச்சா..... அய்யோ பாவம்.

வருண் said...

***சொல்லும் போது எனக்கே கண்ண கட்டுதே.. உங்க நிலைமைய நினச்சா..... அய்யோ பாவம்.***

LOL!

priyamudanprabu said...

நடிகனின் நடிப்பை மட்டும் விமர்சிக்கும் அறிவும் தெளிவும் சிலருக்கு இல்லை என்ன செய்ய?

பலர் விமர்சித்தும் கூட கமல் கவிதமியோடு இன்னைந்து விழக்களுக்கு வருவதையோ , அவர்களின் குழந்தைகள் ஒன்றாக வருவதையோ தவிற்த்ததில்லை
காரணம் சில பொழப்பத்தவன் பேச்சை பற்றி கவலையில்லாமல் தன் வாழ்வை வாழ கமல் பழகிகொண்டார்

வருன் நீங்கள் ரசினியை பற்றி கூறினீர்கள்
அவரை எந்தமாநிலத்தை சேர்ந்தவர் என்று விமர்சிப்பது முட்டாள் தனம்

ஆனாலும் அடிக்கடி அவர் செய்யும் அரசியல் நாடகங்களுக்கு எதிராக கண்டிப்பாக கருத்துகள் வரும் . காரணம் அரசியலில் காருத்து சொல்ல தகுதி எதிர்பார்க்க படுகிறது
அது சரியே
அரசியலுக்கு வருவேன் மாட்டேன் என்று ஏதாவது ஒன்று சொல்லும் வரை அது தொடரும்

அவரும் தன் வாழ்வை பற்றி அதிகம் மறைத்ததில்லை "ஒருகாலத்தில் இரவில்புதுபுது பெண்கள் இல்லையென்றால் இருக்க முடியாது , அதெல்லாம் ஒருகாலம்" என்று தன்னை பற்றி ரஜினியே கூறியுள்ளார்
இடையில் பத்திரிக்கைகள் செய்யும் வியபாரமே கிசு கிசு