Thursday, February 18, 2010

கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!

சரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிறன வீம்புக்குக் கேட்டால், உடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு சொல்வாங்க.

மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும்.

அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.

உங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா? என்ன ஆளு நீங்க? ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!

அடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறாங்க.

இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.

இப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!

அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?


சமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா? பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க!

சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!

என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?

ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge anybody's intelligence based on their taste!

15 comments:

பத்மநாபன் said...

///ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை ///
வருண் இந்த வரி மட்டும் தான் புரிந்தது .. கமல்ஹாசனையும் , சுஜாதாவையும் தமிழ் ன்னு ஒரு மொழி இருக்கறவரைக்கும்
என்ன அரி அரித்தாலும் தமிழ் கூறும் நல்லுலகத்திடம் இருந்து பிரிக்கமுடியாது.

பொன் மாலை பொழுது said...

It is true, The Sun is neither a planet nor a firing ball.

வருண் said...

***பத்மநாபன் said...

///ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை ///
வருண் இந்த வரி மட்டும் தான் புரிந்தது .. கமல்ஹாசனையும் , சுஜாதாவையும் தமிழ் ன்னு ஒரு மொழி இருக்கறவரைக்கும்
என்ன அரி அரித்தாலும் தமிழ் கூறும் நல்லுலகத்திடம் இருந்து பிரிக்கமுடியாது.***

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, திரு. பத்மநாபன். :)

வருண் said...

*** கக்கு - மாணிக்கம் said...

It is true, The Sun is neither a planet nor a firing ball.

18 February 2010 10:28 AM***

ஆமா, மாணிக்கம் சார்! I believe, Sun is the star of our solar system! :-)

Good citizen said...

எந்தக் கேனையோ சொன்னதைப் பதிவாகவெளியிட்டிருக்கிறீர்களெ,,(ஒருவேளை நீங்களும் கேனையோ்???,
,சுஜாதாவை ரசிக்க வைத்த்து முதலில் அவரின் அறிவு
கூர்மை,, அடுத்து அவரின் சமுக அக்க்றை,,பின் அவரின் எளிமை,,அவர் ஒரு பன்முக எழுத்தாளர்,,அனேகமாக த்மிழில் அவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்,,தன் இறுதி நாட்கள்வரை அவரின் ரசிகர்களுக்கு
அவர் சொன்னது ,,படியுங்கள்,படியுங்கள்,நிறையப் படியுங்கள் என்பதுதான்,,அவரின் எத்தனையோ நாவல்களில் கடைசிப்
பக்கங்களில் அவர் அந்த நாவலைக்
கையால அவர் குறிப்பெடுத்த புத்தகங்களின் பெயரைச் சொல்லி இருப்பார் ,,மேலும் சில புத்தகங்களின்
பெயர்களை சொல்லி நம்மை முடிந்தால் படித்து பாருங்கள் என்று,,
எத்தனை எழுத்தாளர்கள் இப்படி சம்பந்தப்பட்ட புத்த்களை இப்படி படிக்கசொல்லி இருக்கிறார்கள்???பதில் சொல்லுங்கள்,, தியானம் பன்னௌங்கள் என்று வேண்டுமானால்
சொல்லீருப்பார்கள்,,நீங்கள் சொன்னதுபோல் ஜெயகாந்தன்,
ஜானகிராமன்,,பாலகுமாரன் எல்லாம்
சிறந்த சமுக எழுத்தாளர்கள்தான்,,
அவர்கள் எல்லாம் கதாபாத்திரத்தின்
எண்ண ஓட்டங்களிலேயே கதையை சொல்லும் திற்மை படைத்தவர்கல்தான்
அனால் இவர்கள் அனைவரும் சமூகக்
கதைகளை விட்டு வெலியே வராதவர்கள்,,அனால் சுஜாதா அப்ப்டியில்லை,சமூககதைகளா,,
சஸ்பென்ஸா,,கட்வுள் சர்ச்சையா,,
இலக்கியமா,,,சரித்திரமா,மனோத்தத்துவமா எந்த சப்ஜெக்ட் வேண்டும்
அவரிடம் எல்லாம் கிடைக்கும்,,
அவரின் புத்தகங்களைப் படிப்பதற்கே
ஒரு ஸ்டண்டர்டு வேண்டும்,,அது முதலில் உங்களிடம் இருக்கிறதா
என்று அவ்ரின் புத்த்கங்கள் ஒன்றையாவது படித்து தெறிழ்துக்
கொள்ளுங்கள்

Unknown said...

கமலைப் பற்றி நீங்கள் எழுதுவதுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் சுஜாதாவைப் பற்றி எழுதியதை ஒத்துக் கொள்ள முடியாது..

முக்கியமான காரணம், சுஜாதா, நான் நாத்திகன், நான் திராவிடன், நான் மதச்சார்பற்றவன் - என்று எந்தக் காலத்திலும் சொல்லிக் கொண்டு திரிந்ததில்லை.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

உங்கள் பதிவுகளின் தரம் வரவர மிகச் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது... நாளை இளம் பதிவர்கள் உங்களது எழுத்துநடையை பின்பற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை..

நடிப்புக்கு கமலையும் புத்தக எழுத்துக்கு சுஜாதாவையும் போல வலைப்பதிவிற்கு உங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் நாள் வெகு தொலைவிலில்லை..

வாழ்த்துக்கள் வருண்...

வருண் said...

moulefrite said...

அவரின் புத்தகங்களைப் படிப்பதற்கே
ஒரு ஸ்டண்டர்டு வேண்டும்,,அது முதலில் உங்களிடம் இருக்கிறதா
என்று அவ்ரின் புத்த்கங்கள் ஒன்றையாவது படித்து தெறிழ்துக்
கொள்ளுங்கள்***

அப்படிங்களா? நல்லதுங்க! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

வருண் said...

***முகிலன் said...

கமலைப் பற்றி நீங்கள் எழுதுவதுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் சுஜாதாவைப் பற்றி எழுதியதை ஒத்துக் கொள்ள முடியாது..

முக்கியமான காரணம், சுஜாதா, நான் நாத்திகன், நான் திராவிடன், நான் மதச்சார்பற்றவன் - என்று எந்தக் காலத்திலும் சொல்லிக் கொண்டு திரிந்ததில்லை.

19 February 2010 5:13 AM***

பகிர்தலுக்கு நன்றி, முகிலன் :)

வருண் said...

*** மதுவதனன் மௌ. / cowboymathu said...

உங்கள் பதிவுகளின் தரம் வரவர மிகச் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது... நாளை இளம் பதிவர்கள் உங்களது எழுத்துநடையை பின்பற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை..

நடிப்புக்கு கமலையும் புத்தக எழுத்துக்கு சுஜாதாவையும் போல வலைப்பதிவிற்கு உங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் நாள் வெகு தொலைவிலில்லை..

வாழ்த்துக்கள் வருண்...

19 February 2010 6:24 AM***

வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க, மதுவதனன் மௌ.

kuruvi said...

// இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!//

அப்படின்னா அன்பே சிவம் படத்தில கிறிஸ்தவ மதத்தை நல்லவிதமாகவும் இந்து மதத்தை கொடியவர்களின் மதமாகவும் சித்தரித்தாரே அது என்ன வகை??!!
படத்தை படமா பாருங்க.. படத்தை விட்டுட்டு படம் எடுக்கும் போது இயக்குனர் என்ன கோவணம் கட்டியிருந்தார் என்று ஆராயவேண்டாம்.

வருண் said...

குருவி!

படத்தை படமாப் பார்ர்க்கனும் நல்ல அறிவுரைதான்.

உலகநாயகனேனு என்னத்துக்கு பாட்டு?? தசாவதாரத்திற்கும் "உலகநாயகனே" க்கும் என்ன சம்மந்தம்??

There is NO SUCH character calling
"ஒலகநாயகன்" in Dasavatharam!

சும்மா ஒரு ID தயாரிச்சு வந்து எதையாவது கோவணம் ஜட்டினு குப்பைப் பேச்சுல திறமையைக்காட்டுறது!

Unknown said...

தமிழ் கூறும் நல்லுலகத்தில் பெரும்பான்மை கருத்துக்கு-அது சரியானதாக இருந்தாலும்- முரணாகவே பேசி தம்மை அறிவு ஜீவிகளாக காட்டிக்கொண்டு சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் ஒரு சிறு கூட்டம் உண்டு.அதில் தங்களுக்கும் ஒரு சிறப்பான இடம் நிச்சயம் உண்டு.

வருண் said...

***B said...
தமிழ் கூறும் நல்லுலகத்தில் பெரும்பான்மை கருத்துக்கு-அது சரியானதாக இருந்தாலும்- முரணாகவே பேசி தம்மை அறிவு ஜீவிகளாக காட்டிக்கொண்டு சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் ஒரு சிறு கூட்டம் உண்டு.அதில் தங்களுக்கும் ஒரு சிறப்பான இடம் நிச்சயம் உண்டு.

20 February 2010 4:00 AM ***

I am learning about myself from your comment! Thanks, B. :-)

Vijayashankar said...



சிலீகானில் சில்லு புரட்சி எப்போது தொடராக வந்தது? இணயத்தில் படி கிட்டுமா?