Saturday, February 20, 2010

தல அஜீத்க்கு நேரம் சரியில்லையா?

நடிகர் அஜீத் உணர்ச்சிவசப்பட்டு பேசியது ரொம்ப நல்லாத்தான் இருந்தது. ஆனால் இது பல பிரச்சினைகளை கிளப்பியுள்ளது. ரஜினி, கைதட்டியதுடன் இன்றுவரை அஜீத்க்கு முடிந்த அளவு மாரல் சப்போர்ட் தருகிறார். ஆனால் மற்ற நடிகர்கள் சப்போர்ட் தரவில்லை. எல்லா நடிகர்களும் அஜீத்க்கு சப்போர்ட் பண்ணினால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும். மற்ற நடிகர்கள் அனைவருமே அஜீத்துக்கு பக்கபலமா இல்லை. இந்தப் பிரச்சினை பெருசாகிக்கொண்டே போகுது. பல முனைகளிலிருந்து தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. மன்னிப்பு கேட்க சொல்லி நம்ம "தல" அஜீத்தை வலியுறுத்துறாங்க.

* FEFSI, அஜீத் பேச்சுக்கு ரஜினியின் கைதட்டை "condemn" பண்ணப் போறாங்களாம்.

* இந்த ஜாகுவார் தங்கம்னு ஒருத்தர் இஷ்டத்துக்கு அஜீத், ரஜினியைப் பத்தி விமர்சனம் பண்ண அஜீத் ரசிகர்கள் அவர் வீட்டை தாக்கியுள்ளார்கள். இது நம்ம "தல்"க்கு ஒரு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கு. நம்ம திருமாவளவனும் இந்த ஜாகுவார் தங்கத்திற்கு ஆதரவு.

* தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் "அசல்" சரியாக வசூல் கொடுக்கலைனு புதுசா பிரச்சினையை ஆரம்பிக்கப் போறாங்களாம்.

என்னப்பா "பேச்சுச் சுதந்திரம்", "கைதட்ட சுதந்திரம்" எல்லாம் ஜனநாயகத்தில் கிடையாதானு கேக்குறீங்களா? தனி ஒரு மனிதனுக்கு உண்டு. ஆனால் ஒரு நடிகனுக்கு கிடையாதானு தெரியலை.

ந்ல்லவேளை ரஜினி கைதட்டினார். இல்லைனா தல அஜித்க்கு நெலைமை இதைவிட மோசமாயிருக்கும்.

அனேகமா அஜித் மன்னிப்பு கேட்டே ஆகனும்ங்கிற நிலைமை விரைவில் வந்துவிடும்.

ரஜினியும் மன்னிப்பு கேட்டாலும் அதிசயம் இல்லை.

எதுக்கு? மன்னிச்சுக்கோங்க நான் கைதட்டியதற்காகனா?

21 comments:

வேலூர் ராஜா said...

இதனால் மக்களிடம்அஜித்துக்கு செல்வாக்கு பெருகுமே தவிர குறையாது!

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

மலையாளி-தமிழ்ன் என்ற பிளவு கூடும்.

அஜித்-ரஜனி போன்றோரின் செய்கையால்

தமிழனல்லாதோருக்கும் தமிழர் மீது அக்கறை வராது என்ற மக்களின் கருத்து உறுதிப்படும். அவர்கள் தம்ழரின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்ற எண்ணம் பரவலாகும்.

தமிழர்கள் அவர்களிடம் இனி எச்சரிக்கையாகி விடுவார்கள்.

Statistics said...

சமூக பொறுப்பு என்னா நடிகனுக்கு மட்டுமா இருக்கணும்? ஒவ்வொருத்தனுக்கும் இருக்கணும், ஒரு நடிகனை நடிகனா மட்டும் பாருங்கடா….. அஜித் தேவைக்கு அதிகமாவே நிறைய சமூக சேவைகள் செய்துள்ளார் (ஆனால் ஒன்றையும் வெளிகாடிகொண்டதில்லை ) மரம் நடுவதில் இருந்து, ஈழ புணர்வாழ்வு க்கு நிதி கொடுத்தது வரை நிறைய செய்துள்ளார், அனால் எதையுமே மற்றவர்கள் போல் விளம்பரத்துடன் செய்ததில்லை…..

Anonymous said...

//ஒரு நடிகனை நடிகனா மட்டும் பாருங்கடா….. //

அப்படியென்றால், ஏன் அந்த நடிகன் இரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறான்? அவன் தன்னை நடிகன் என்று மட்டும் பார்த்தானா?

என்ன எதிர்பார்த்து இரசிகர் மன்றங்களை ஊக்குவிக்கிறான் நடிகன்?

Anonymous said...

இரு பின்னூட்டங்களும் நாந்தான். படம் புதியது

Anonymous said...

நடித்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு ஒரு ஊழியனைப்போன்று போகவேண்டியதுதானே? சின்னத்திரையில் நாட்கூலி போடுகிறார்கள். வாங்கிவிட்டு வீடு செல்கிறார்கள். அப்படி செய்ய்வேண்டியதுதானே இவன்? ஏன் பணத்தோடு மட்டும் நில்லாமல் புகழுக்காகவும் அலைகிறான்? இவன் ஏன் அல்டிமேட் ஸ்டார்?

ஸ்டார், சூபர் ஸ்டார், அந்த தளப்தி, இந்த தளப்தி என்ற பட்டங்களெல்லாம் இவன்களுக்கு ஏனடா?

Anonymous said...

ஏன் ஒரு நடிகனைத் திட்டும்போது கோபம் வருகிறது?

ஏனென்றால் அவனை நீ நடிகனாகப் பார்க்கவில்லை. தெய்வமாக்குகிறாய்.

இதுவே தமிழனுக்குப்பிடித்த சாபக்கேடு.

எல்லா நடிகனும் இங்கே தெய்வம்.

ஒரு சின்னத்திரையில் யாரோ ஒரு நடிகனை விமர்சிக்கும்போது உன்னை அங்கே காணவில்லை.

ஆனால் அல்டிமேட் ஸ்டாருக்கு, சுப்பர் ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும், இளைய தளப்திக்கும், மக்கள் திலகத்துக்கும், நடிகர் திலகத்தும் பின்னால் நீ நிற்கிறாய். கொடி பிடிக்கிறாய். தோரணங்கள் கட்டுகிறாய். பால்காவடி எடுக்கிறாய். கட்டவுட் மேல் ஏறினிண்டு பாலாபிசேகம் செய்கிறாய். ஆரத்தி கற்பூரம் காட்டுகிறாய்.

நீ இந்த் நடிகன்களை நடிகனாகப பார்த்தாயா?

கூத்தடித்து கூலி வாங்கி வீடு செல்ல்வேண்டியவனை, அல்டிமேட் ஸ்டார் etc. என்று கோபுரத்தில் ஏற்றி ஏன் வைத்தாய்?

அஹோரி said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ , விடுங்க. உங்க பேர பார்த்தா ஜெர்மனி காரர் மாதிரி இருக்கு . நீங்க ஏன் தமிழன பார்த்து பீல் பண்றீங்க. இனத்துரோகி குடும்பம் இருக்கும் வரை தமிழன யாராலும் காப்பாத்த முடியாது.

Anonymous said...

நன்றி. அஹோரி.

Anonymous said...

இதனால் மக்களிடம்அஜித்துக்கு செல்வாக்கு பெருகுமே தவிர குறையாது!
//

yes

வருண் said...

****வேலூர் ராஜா said...
இதனால் மக்களிடம்அஜித்துக்கு செல்வாக்கு பெருகுமே தவிர குறையாது!

20 February 2010 8:55 PM****

வாங்க வேலூர் ராஜா!

என்னால உறுதியா சொல்ல முடியலைங்க. இந்தப் பிரச்சினை எப்படி முடியுதுனு பார்ப்போம். அப்புறம்தான் தெரியும் இதன் விளைவு (இலாப நஷ்டங்கள்).

வருண் said...

***ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
மலையாளி-தமிழ்ன் என்ற பிளவு கூடும்.

அஜித்-ரஜனி போன்றோரின் செய்கையால்

தமிழனல்லாதோருக்கும் தமிழர் மீது அக்கறை வராது என்ற மக்களின் கருத்து உறுதிப்படும். அவர்கள் தம்ழரின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள் என்ற எண்ணம் பரவலாகும்.

தமிழர்கள் அவர்களிடம் இனி எச்சரிக்கையாகி விடுவார்கள்.***

வாங்க ஜோ!

அஜீத் தமிழர்களை எதுவும் சொல்லவில்லைங்க. தமிழர்கள் இல்லாமல் அவர் பொழைப்பு எப்படிங்க ஓடும்?

இது நடிகர் சங்கம், பெப்ஸி போன்ற சங்களுக்குள் உள்ள பிரச்சினைனு நெனைக்கிறேன்.

நான் கடவுள்ல இவர் நடிக்க இருந்ததும் இவர் விலகியதும் இவரை மிரட்டியதாகவும் என்னஎன்னவோ சொன்னார்கள். நமக்கு உண்மையில் என்ன நடந்ததுனு தெரியாதுங்க. அதன் எதிரொளி(லி)யாத்தான் அஜீத் இப்படிப் பேசினாரோ? தெரியலை

------

தமிழ்மக்கள் இதிலிருந்து எச்சரிக்கை ஆவார்களா? அதெல்லாம் ஆக மாட்டாங்ககங்க. பாவம் அஜீத்துனு நினைக்கவும் வாய்ப்பிருக்குங்க!

வருண் said...

*** Statistics said...
சமூக பொறுப்பு என்னா நடிகனுக்கு மட்டுமா இருக்கணும்? ஒவ்வொருத்தனுக்கும் இருக்கணும், ஒரு நடிகனை நடிகனா மட்டும் பாருங்கடா…..***

அய்யோ, கிளப்புறீங்கண்ணா!

*** அஜித் தேவைக்கு அதிகமாவே நிறைய சமூக சேவைகள் செய்துள்ளார் (ஆனால் ஒன்றையும் வெளிகாடிகொண்டதில்லை ) மரம் நடுவதில் இருந்து, ஈழ புணர்வாழ்வு க்கு நிதி கொடுத்தது வரை நிறைய செய்துள்ளார், அனால் எதையுமே மற்றவர்கள் போல் விளம்பரத்துடன் செய்ததில்லை…..***

அப்படியா? இதுபோல் செய்திருந்தால் அவரை இவைகளுக்காக பாராட்டுவதில் தப்பில்லைங்க, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் :)

வருண் said...

*** Jo Amalan Rayen Fernando said...
//ஒரு நடிகனை நடிகனா மட்டும் பாருங்கடா….. //

அப்படியென்றால், ஏன் அந்த நடிகன் இரசிகர் மன்றங்கள் வைத்திருக்கிறான்? அவன் தன்னை நடிகன் என்று மட்டும் பார்த்தானா?

என்ன எதிர்பார்த்து இரசிகர் மன்றங்களை ஊக்குவிக்கிறான் நடிகன்?***

மன்னிக்கனும், நடிகனுக்கு மக்கள்தான் ரசிகர் மன்றம் வைக்கிறார்கள். நடிகன் அதை வைக்கக்கூடாதுனு சொன்னா அவன் மேல் கோபங்கொண்டு மக்கள் அவன் படத்தை பார்க்க மாட்டாங்க. பொழைப்பு ஓடாது. அதனால் அது பிடிக்குதோ இல்லையோ அவன் கண்டுக்காம போறதைத் தவிர வேற வழியில்லைனு நினைக்கிறேன்.

வருண் said...

****Jo Amalan Rayen Fernando said...
நடித்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு ஒரு ஊழியனைப்போன்று போகவேண்டியதுதானே? சின்னத்திரையில் நாட்கூலி போடுகிறார்கள். வாங்கிவிட்டு வீடு செல்கிறார்கள். அப்படி செய்ய்வேண்டியதுதானே இவன்? ஏன் பணத்தோடு மட்டும் நில்லாமல் புகழுக்காகவும் அலைகிறான்? இவன் ஏன் அல்டிமேட் ஸ்டார்?***

புகழுக்கு ஆசைப்படாதவர் புத்தர் மட்டும்தான். மனுஷ ஜென்மம் எல்லாமே புகழுக்கு அடிமைதான். நடிகனும் மனுஷன் தானேங்க, ஜோ?

***ஸ்டார், சூபர் ஸ்டார், அந்த தளப்தி, இந்த தளப்தி என்ற பட்டங்களெல்லாம் இவன்களுக்கு ஏனடா?***

இந்தக் கேள்வி மக்களுக்கு! நடிகர்களுக்கல்ல! மக்கள் கொடுத்த பட்டங்கள்!

வருண் said...

*** Jo Amalan Rayen Fernando said...
ஏன் ஒரு நடிகனைத் திட்டும்போது கோபம் வருகிறது?

ஏனென்றால் அவனை நீ நடிகனாகப் பார்க்கவில்லை. தெய்வமாக்குகிறாய்.

இதுவே தமிழனுக்குப்பிடித்த சாபக்கேடு.

எல்லா நடிகனும் இங்கே தெய்வம்.

ஒரு சின்னத்திரையில் யாரோ ஒரு நடிகனை விமர்சிக்கும்போது உன்னை அங்கே காணவில்லை.

ஆனால் அல்டிமேட் ஸ்டாருக்கு, சுப்பர் ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும், இளைய தளப்திக்கும், மக்கள் திலகத்துக்கும், நடிகர் திலகத்தும் பின்னால் நீ நிற்கிறாய். கொடி பிடிக்கிறாய். தோரணங்கள் கட்டுகிறாய். பால்காவடி எடுக்கிறாய். கட்டவுட் மேல் ஏறினிண்டு பாலாபிசேகம் செய்கிறாய். ஆரத்தி கற்பூரம் காட்டுகிறாய்.

நீ இந்த் நடிகன்களை நடிகனாகப பார்த்தாயா?***

நல்ல கேள்விதான், ஜோ.

இதுபோல் வெறிபிடித்து அலைபவர்களில் எத்தனை விழுக்காடு மக்கள் அடங்குவாங்க?

வருண் said...

***அஹோரி said...
ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ , விடுங்க. உங்க பேர பார்த்தா ஜெர்மனி காரர் மாதிரி இருக்கு . நீங்க ஏன் தமிழன பார்த்து பீல் பண்றீங்க. இனத்துரோகி குடும்பம் இருக்கும் வரை தமிழன யாராலும் காப்பாத்த முடியாது.

21 February 2010 2:37 AM***

வாங்க அஹோரி!

உங்க கருத்துக்கு நன்றிங்க!

வருண் said...

***கடையம் ஆனந்த் said...
இதனால் மக்களிடம்அஜித்துக்கு செல்வாக்கு பெருகுமே தவிர குறையாது!
//

yes

21 February 2010 3:12 AM***

வாங்க கடையம் ஆனந்த்! நீங்களும் இதை நம்புறீங்களா? :)

LK said...

en sir nadigan manusan illaya. avanuku 1000 work irukm cinemala nadikaratha tavirthu. oru kilavruku varam oru vizha edupanga, ivangalukaga venumna oru porattam nadtuvanga. udane athukuavan varunuma. avanum manusanthan .
ithula tamilan tamilan llainu problem enga irunthu vanduchi???

வருண் said...

*** LK said...
en sir nadigan manusan illaya. avanuku 1000 work irukm cinemala nadikaratha tavirthu. oru kilavruku varam oru vizha edupanga, ivangalukaga venumna oru porattam nadtuvanga. udane athukuavan varunuma. avanum manusanthan .
ithula tamilan tamilan llainu problem enga irunthu vanduchi???***

அஜீத் பேசியது முதல்வருக்குப் பிடிக்கவில்லையாம். அதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்கிறார்கள்.

thiru said...

Mr.ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ ,

என்னங்க நீங்க,
இவ்வளவு பீல் பண்ற அளவுக்கா தமிழர்கள் இருக்காங்க.
ஓட்டு போடக்கூட பணம் தந்தாக வேண்டிய நெலமையில கட்சிகள வெச்சிருக்காங்க, நீங்க ஏன் அவங்களப் பத்தி கவலைப்படுறீங்க.
அஜீத்-தும், ரஜினியும், அப்படி என்ன தமிழர் இரத்தத்தை உறிஞ்சி வாழறாங்க ?
படத்துல நடிக்கறதோட அவங்க பொழப்பு முடிஞ்சுடுது. என்னமோ, அவங்க தினம் வந்து, தமிழர்கள் கிட்ட எல்லாம் காசு பிடுங்கிகிட்டு போன மாதிரி பேசுறீங்க. இங்க இருக்கிற X-டிவி க்கள் அடிக்கிற கூத்த விடவா...