Monday, February 22, 2010

அஜீத்தின் காட்ஃபாதர் ரஜினியா?


அஜீத்துக்கும் ரஜினிக்கும் எப்போ நட்பு ஏற்பட்டதென்று தெரியவில்லை. பில்லா படத்தில் நடித்தபிறகு அஜீத் ரஜினியின் நல்ல புத்தகத்தில் குடிபுகுந்துவிட்டார். மனதைத்திறந்து உண்மையை பளிச்னு பேசிவிடுவார் அஜீத் என்று விஜய் முதல்க்கொண்டு சொல்கிறார்கள்.

இன்றைய நிலையில் ரஜினிதான் அஜீத்தின் காட்ஃபாதராக இருக்கிறார் என்பதென்னவோ உண்மைதான். தான் கைதட்டியதுடன் கழண்டுகொள்ளாமல் முதல்வரிடம் பேசி இதை "மறப்போம் மன்னிப்போம்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இருந்தும் இதைப்பெரியவிசயமாக ஊதிக்கொண்டிருப்பதால் ஒரு "பரிதாப அலை" உருவாகி அஜீத் மற்றும் ரஜினிக்கு சாதகமாக முடியப்போவதென்னவோ உண்மைதான்!

அஜீத் பேசியதில் தவறு இருப்பதாக சொல்லும் கழக்கண்மணிக்களுக்கு பொதுமக்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகள்.

* அஜீத் சினிமாக்காரகள் கூடிய மேடையில் சினிமாக்காரனுக்கு உள்ள பிரச்சினையை முதல்வர் முன்னிலையில் பேசியது தப்புனா, பல கல்யாணங்களுக்கு போய் கல்யாணம் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திவிட்டு வராமல் அரசியல், சாதிப்பிரச்சினையை எல்லாம் பேசிவரும் அரசியல்வாதிகளை என்ன செய்வது? இதயெல்லாம் யாரும் மறக்கவில்லை! என்று நாக்கைப்புடுங்கிக் கொள்ளும அளவுக்கு கேள்வி கேக்கிறார்கள்! அரசியல்வாதி எல்லாம் என்னமோ கல்யாணத்துக்கு வந்தா மணமக்களை வாழ்த்திவிட்டுப் போகும் உத்தமர்கள் போலவும், என்னவோ அஜீத்தான் ஏதோ பேசக்கூடாத பேசியதுபோல் உளறும் சிலர் மேலே கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை என்று சொல்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

* சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர வழிவகுத்ததே நம் அரசியல்வாதிகளின் சின்னப்புள்ளத்தனமான மற்றும் கேவலமான அரசியல்தான் காரணம் என்பதை நாம் என்றுமே மறக்க வேணாம்.

No comments: