Wednesday, January 5, 2011

கடவுளுக்கு ஹார்ட் அட்டாக் வருமா?

நம்ம கடவுள் சத்ய சாய்பாபா அவர்களைப் பத்தி அப்பப்போ யோசிப்பேன். இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் (நிரூபிக்கப்படாதவைகள்தான்) இருந்தாலும் இன்னும் இவரை வணங்குபவர்கள் கோடிக்கணக்கில் இருக்காங்கனு சொல்றாங்க. எனக்குத் தெரிய நெறையப் படித்தவர்கள் பலர் இவரை கடவுளா வணங்குகிறார்கள். இதில் பல லட்சக்கணக்கான பெண்களும் இவரை கடவுளாக வணங்குகிறாங்க என்பது குறிப்பிடத்தக்கது. என்னிடம் வந்து சில நண்பர்கள் இவரை "தர்ஷிக்க" வர்ச் சொல்லும்போது, "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை" என்று நழுவிவிடுவது வழக்கம்.

மனுஷனுக்கு பிரச்சினைனு வரும்போது கடவுள் இல்லைனா கஷ்டம்தான். பேசாத கடவுள் எல்லாம் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை போல இருக்கு. அதான் இப்படி பேசுற, தான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுகிற "கடவுள்" களை உருவாக்கிக்கொண்டு இருக்காங்க நம்ம மக்கள்.

சரி, நம்ம சாய்பாபாவைக் கடவுளுக்கு இணையா சொல்றாங்களே, இவருக்கும் மனிதருக்கு மாதிரி சாதாரண வியாதியெல்லாம் வருமா? னு ஒரு பெரிய கேள்வி என்னுள்எழுந்தது.

கொஞ்சம் ஆராய்ச்சி செய்து தேடி எடுத்தேன்.

* 1963 ல இவருக்கு 4 முறை ஹார்ட் அட்டாக வந்ததாம்.

என்ன இவரெல்லாம் பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு டயட்டில் இருப்பவர். இவருக்கு ஏன்ப்பா ஹார்ட் அட்டாக்லாம் வருது?

* 1988 - 2003 ல இவருக்கு 3 விபத்துக்கள் நடந்து உள்ளனவாம். இதில் ஏதோ கண் பார்வையும் பாதிக்கப்பட்டதாக சொல்றாங்க.


வயதாகும்போது மனித உடல் பழுதாவது இயற்கை. வயதாக ஆக சிறுநீரகம் வேலை செய்வது குறைய ஆரம்பிக்கும். கொலெஸ்டிரால், சுகர், பி பி எல்லாம் ஒண்ணு பின்னால ஒண்ணு தொத்திக்கிட்டு வரும். இதயத்தில் "க்லாக்" ஆகி, ஹார்ட் அட்டாக் வரும். இதுதான் மனித வாழ்க்கை.

இது எல்லாமே நம்ம "கடவுள்" சாய்பாபாவுக்கும் வந்துகொண்டுதான் இருக்கு.

ஆக மனிதர்களுக்குப் பிறந்து, மனிதனாகவே வாழ்ந்து இறக்கப்போகும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த சாய்பாபா! ஆனால் கோடிக்கணக்கான மக்களால் இவர் வாழ்ந்த போது கடவுளாகப் பார்க்கப் பட்டுக்கொண்டுயிருக்கிறார். இன்னும் ஒரு 100 ஆண்டுகள் பிறகு "இந்த நம்பிக்கை" (இவர் கடவுளாக வாழ்ந்த வரலாறு) என்ன ஆகும்னு யோசிக்கவே பயம்மா இருக்கு!

போதாக்குறைக்கு, மக்கள்தான் அறியாமையில் இருக்கானுகனு இவராவது, "நான் கடவுள் எல்லாம் இல்லை, எனக்கும் டெய்லி பசிக்குது. எல்லாம் தேவைப்படுது, வியாதி வருது, நானும் உங்களைப்போல ஒருவந்தான்" னு உண்மையைச் சொல்லலாம். அப்படி உண்மையைச் சொல்லாமல் "தாந்தான் கடவுள் அவதாராம்" அது இதுனு சொல்லி ஊரை ஏமாற்றி வாழும் இவரை எப்படி உண்மையான கடவுளுக்குப் பிடிக்கும்னு தெரியலை. ஒரு வேளை இவர் செத்ததும் நம்ம நிஜக்கடவுள் "சாய்பாபா அவர்கள் தாந்தான் கடவுள் என்று மனிதர்களை நம்பவைத்து ஏமாற்றியதற்காக" இவரை நரகத்துக்கு அனுப்புவாரோ? அனுப்பனும் இல்லையா?

சரி, சாய்பாபா கடவுளா இருந்தால் ஏன்ப்பா ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்லாம் வருது? ஏன் கண் பார்வையெல்லாம் போகுது? திருந்துங்கப்பா இந்த 2011 வருடத்திலாவது!

23 comments:

Philosophy Prabhakaran said...

அருமையான போஸ்ட்... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... ஒரு சிறிய வேண்டுகோள்... எனது அலுவலக நண்பர்கள் சுமார் பத்து பேர் கொண்ட குழுவுக்கு இந்த இடுகையை அனுப்ப விரும்புகிறேன்... (அலுவலகத்தில் blogspot தடைசெய்யப்பட்டு இருப்பதால் காப்பி - பேஸ்ட் செய்து மெயிலில் அனுப்புவேன்). அதற்கு உங்களுடைய அனுமதி தேவை...

வருண் said...

தல: உங்களுக்கு இல்லாததா? :) அள்ளிக்கோங்க!

tamilan said...

CLICK AND READ:

பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.
...

வருண் said...

***Blogger tamilan said...

CLICK AND READ:

பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.
...

5 January 2011 6:05 PM***

வாசிச்சேன்! :)))

துளசி கோபால் said...

மனித அவதாரம் அதனால் மனிதன் படும் கஷ்டங்கள் அனைத்தையும் பட்டுக் காட்டுனார் ன்னு அவர் அடிபொடிகள் சொல்வாங்க.


நான் சாமி மனுசனா என் எதிரில் வந்து நின்னு 'பேசினால்' நம்ப மாட்டேன்.

Chitra said...

ஆஜர்...ஆஜர்.... ஆஜர்..... என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். :-))

Yoga.s.FR said...

சாட்டையடி!வாழ்த்துக்கள்!

Unknown said...

உண்மைதான், ஆனால் அவரது சமூக சேவைகளை மட்டும் நான் ஆதரிக்கிறேன், யூ டியூபில் லிங்கம் வரவைக்கும் வீடியோ பார்த்து பலமுறை சிரித்து இருக்கிறேன் :-)

Nagasubramanian said...

//மனுஷனுக்கு பிரச்சினைனு வரும்போது கடவுள் இல்லைனா கஷ்டம்தான். பேசாத கடவுள் எல்லாம் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை போல இருக்கு. அதான் இப்படி பேசுற, தான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுகிற "கடவுள்" களை உருவாக்கிக்கொண்டு இருக்காங்க நம்ம மக்கள்.//
Punch!

பழமைபேசி said...

கடவுளை ஒருவாட்டி என்கூடப் பேசச் சொல்லுங்க... தளபதிக்கு நெறையப் பணம் வேணும்!

வருண் said...

***துளசி கோபால் said...

மனித அவதாரம் அதனால் மனிதன் படும் கஷ்டங்கள் அனைத்தையும் பட்டுக் காட்டுனார் ன்னு அவர் அடிபொடிகள் சொல்வாங்க.


நான் சாமி மனுசனா என் எதிரில் வந்து நின்னு 'பேசினால்' நம்ப மாட்டேன்.***

வாங்க டீச்சர்! :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

வருண் said...

***Chitra said...

ஆஜர்...ஆஜர்.... ஆஜர்..... என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். :-))

5 January 2011 9:39 PM***

Happy New Year, Chitra! :)

வருண் said...

***Blogger இரவு வானம் said...

உண்மைதான், ஆனால் அவரது சமூக சேவைகளை மட்டும் நான் ஆதரிக்கிறேன், யூ டியூபில் லிங்கம் வரவைக்கும் வீடியோ பார்த்து பலமுறை சிரித்து இருக்கிறேன் :-)

5 January 2011 11:39 PM***

ஆமாங்க அவருடைய சமூக சேவை பாராட்டத்தக்கதுதான் :)

வருண் said...

***Blogger Nagasubramanian said...

//மனுஷனுக்கு பிரச்சினைனு வரும்போது கடவுள் இல்லைனா கஷ்டம்தான். பேசாத கடவுள் எல்லாம் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை போல இருக்கு. அதான் இப்படி பேசுற, தான் கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லுகிற "கடவுள்" களை உருவாக்கிக்கொண்டு இருக்காங்க நம்ம மக்கள்.//
Punch!

6 January 2011 1:54 AM***

புத்தாண்டு வாழ்த்துக்கள் நாகசுப்ரமணியன்! :)

வருண் said...

***பழமைபேசி said...

கடவுளை ஒருவாட்டி என்கூடப் பேசச் சொல்லுங்க... தளபதிக்கு நெறையப் பணம் வேணும்!

6 January 2011 4:16 AM***

தளபதிக்கா? அவரை அனுப்பி வைங்க! கடவுளை அறிமுகப்படுத்தி வைப்போம் :)

தர்ஷன் said...

சமூக சேவையா?
ஊரை ஏய்த்து உலையில் போட்டதில் ஒரு சின்னப் பங்கு ச்சும்மா கிள்ளிப் போடுகிறார் அவ்வளவே நல்லப் பதிவு வருண்

குடுகுடுப்பை said...

சூப்பரப்பு.

வருண் said...

***தர்ஷன் said...

சமூக சேவையா?
ஊரை ஏய்த்து உலையில் போட்டதில் ஒரு சின்னப் பங்கு ச்சும்மா கிள்ளிப் போடுகிறார்***

எப்படியோ அவர் செய்ற பாவத்தைக் கொஞ்சம் கழுவிக்கிறார். அவ்வளவு சொத்தை வச்சுக்கிட்டு கருமியா இருந்தா உலகம் தூற்றும்னு அவருக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். :)

*** நல்லப் பதிவு வருண்
6 January 2011 9:47 AM ***

நன்றி தர்ஷன்! உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வருண் said...

**Blogger குடுகுடுப்பை said...

சூப்பரப்பு.

6 January 2011 10:19 AM**

வாங்க வாங்க, கு கு :)))

Philosophy Prabhakaran said...

@ வருண்
// தல: உங்களுக்கு இல்லாததா? :) அள்ளிக்கோங்க! //

நன்றி நண்பரே....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சங்காராச்சாரி கூட சிறையில் இருந்து கொண்டு எனக்கு சுகர் பிரச்சனை இருக்கென அழுதுதே!
பிரேமானந்தா... சுகராம், இருதய கோளாறாம்.

இவங்கள் கடவுளாம், அவதாரமாம்
முக்காலமும் உணர்ந்த நித்திக்கு அறையுள் விடியோ இருந்தது தெரியாது.
இவர்களில் எந்தப் பிழையும் இல்லை.
பின்னால் அலையும் மந்தைகளில் உள்ள தவறே இவை.

வருண் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சங்காராச்சாரி கூட சிறையில் இருந்து கொண்டு எனக்கு சுகர் பிரச்சனை இருக்கென அழுதுதே!
பிரேமானந்தா... சுகராம், இருதய கோளாறாம்.

இவங்கள் கடவுளாம், அவதாரமாம்
முக்காலமும் உணர்ந்த நித்திக்கு அறையுள் விடியோ இருந்தது தெரியாது.
இவர்களில் எந்தப் பிழையும் இல்லை.
பின்னால் அலையும் மந்தைகளில் உள்ள தவறே இவை.


அதென்னவோ முற்றிலும் உண்மைதான். :(

johnson said...

super message