Saturday, January 8, 2011

பாலா அவர்களே! இதெல்லாம் நல்லாவாயிருக்கு?!

ஊருக்கு உபதேசம் என்பதுதான் உலகம்னு ஆயிப்போச்சு. "நான் கடவுள்" படத்தை ரசிக்க முடியாத சராசரி மனிதர்களில் நானும் ஒருவன். என்னனு தெரியலை இயக்குனர் பாலா மேலே என்றுமே பெரிய மரியாதை இருந்ததில்லை! சரி என்னை விடுங்க, ஹூ கேர்ஸ் வாட் ஐ திங்க்?

ஊனமுற்ற பிச்சைக்காரர்களை வைத்து கலைத்தொண்டு செய்ததாக பலரும் விமர்சிச்சாங்க. பாலாவுக்கு நேஷனல் அவார்ட் ம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு, பாலாவும் இப்போது அடுத்த படத்திற்காக "கலைத்தொண்டு" செய்ய ஆயத்தமாகிவிட்டார்.

ஆனால், நான் கடவுள் படத்தில் ஊனமுற்றவராக நடித்த, உண்மையிலேயே உடல் ஊனமுற்ற ஒரு கலைஞர் "கிருஷ்ண மூர்த்தி" க்கு கொடுக்க வேண்டிய ரூ 85 ஆயிரம் இன்னும் அவருக்குப் போய்ச் சேரவில்லையாம்!

கீழே வாசிங்க!

‘‘நீங்கள் பாலாவிடம் கேட்டீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘பலமுறை இயக்குநர் பாலாவை தொடர்புகொண்டேன். ஆனால், அவருடைய உதவியாளர்கள் மட்டும்தான் என்னிடம் பேசினார்கள். கேட்கும் போதெல்லாம், இன்று தந்துவிடுவோம், நாளை தந்துவிடுவோம் என்ற பதில்தான். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை.

படத்தின் கருவே, என்னை போன்றவர்களும் மனநலம் குன்றியவர்களும் தீய சக்திகளிடம் சிக்கி, படும் அவஸ்தை என்ன என்பதுதான். இதுபோன்ற படம் எடுத்த பாலாவே இப்படி செய்தால், என்ன சொல்வது? ஏற்கெனவே உடலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களின், உள்ளமும் பாதிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்’’ என்று கண்ணீர் மல்கினார் கிருஷ்ணமூர்த்தி.

இதுபற்றி ‘நான் கடவுள்’ படத்தின் தயாரிப்பாளர் சிவ சீனிவாசனிடம் பேசினோம். ‘‘நான் ஃபர்ஸ்ட் காப்பி புரட்யூசர்தான். சம்பள விஷயத்தை எல்லாம் பாலாதான் கவனித்துக்கொண்டார்...’’ என்று சொல்லி, பாலாவை நோக்கி கைகாட்டினார்.

பாலாவைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியாததால்... நான் கடவுள் படத்தின் புரொடக்ஷன் மேனேஜரும், இப்போது பாலா இயக்கும், ‘அவன் இவன்’ படத்தின் புரொடக்ஷன் மேனேஜருமான வெங்கட் மாணிக்கத்தைத் தொடர்பு கொண்டோம்.

விவரங்களைக் கேட்டுக்கொண்ட பின்... ‘பிரச்னையை நான் நன்கு அறிவேன். இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். பிறகு பேசுங்கள்’ என்றார். பிறகு அவரோடு பேசியபோது, ‘‘இது பற்றியெல்லாம் விளக்கமாக பேச முடியாது’’ என்று முடித்துக் கொண்டார்.

இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் கோடிகளில் சம்பளத்தைக் கேட்டு வாங்கும் இன்றைய திரையுலகில்... கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் சம்பளப் போராட்டத்துக்கு பாலா என்ன பதில் சொல்லப் போகிறார்?

இந்த செய்தியை வாசிக்கும்போது ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிருந்தது. இந்த மாதிரி ஒரு பிறவியில் ஊனமாகப்பிறந்த ஒரு மனிதருக்கு, மனிதாபிமானம் உள்ள ஒரு மனுஷன் எப்படி கொடுக்கவேண்டிய தொகையை கொடுக்காமல் இருக்க முடியும்?

பாலாவும் ஜெயமோஹனும்தான் இவர்கள் வாழ்க்கையைப்பற்றி சிரத்தையுடன் கவலைப்பட்டு உலகிற்கு எடுத்துக்காட்டியதாக சொல்லப் பட்டது.

ஆனால் இதிலிருந்து என்ன தெரியுது? ஊனமுற்றோர் உணர்ச்சியை எல்லாம் மதிக்கத் தெரிந்தவர் இல்லை பாலா! நான் ஏற்கனவே சொன்னதுபோல் "பிச்சைக்காரர்களை" வைத்து தான் புகழும் பேரும் எப்படி சம்பாரிக்கலாம் என்பது ஒன்றே இவர்கள் குறிக்கோள்!

என்ன ஒரு கேவலமான ஜென்மங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

இதுதான் என்னுடைய கேள்வி!


If you cant afford to pay, why the HELL are you promising this poor guy that you would pay 1 lakh as a salary?

So Rs. 15 000 is not advance? It is the whole salary?

The movie won a national award!!! We are all proud of you!

What a f*cking achievement, Mr. Bala, using a poor guy like Mr. Krishnamoorthy!!!

NOW, Have a GOOD LOOK at Mr. Krishnamoorthy!




‘‘என் அப்பா, அம்மாவுக்கு ஐந்தாவதாக பிறந்தவன் நான். பிறக்கும்போதே இரண்டு கைகளும், இடுப்புக்கு கீழ் உடல் உறுப்புகளும் இல்லாமலே பிறந்தேன். சிறு வயதில் இருந்தே என் அண்ணன் ராஜகோபால்தான் என்னை கரிசனத்துடன் பார்த்துக் கொண்டார். இன்றும் அவருடன்தான் வாழ்ந்து வருகிறேன்.

என் பெற்றோரும் சகோதர, சகோதரிகளும் என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர். பள்ளிக்குச் செல்ல முடியாததால், வீட்டில் இருந்தபடியே பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். சின்ன வயதிலிருந்தே பாட்டு மேல் ஈர்ப்பு... அதனால் பாட்டு கற்றேன். அதன்பிறகு பல கச்சேரிகளில் கலந்துகொண்டு பாடல்கள் பாடி, எனது வருமானத்தை நானே தேடிக்கொண்டேன்.

இப்படிப்பட்ட ஒரு ஆளை ஏமாற்றுகிற கலைத்தொண்டு செய்யும் மேதைகளை எல்லாம் உடனே புடிச்சு உள்ள போடனும்!

இந்த தொடுப்பைப் பாருங்கள்(ORIGINAL SOURCE): கிருஷ்ணமூர்த்தி

20 comments:

பழமைபேசி said...

//If you cant afford to pay, why the HELL are you promising this poor guy that you would pay 1 lakh as a salary?

So Rs. 15 000 is not advance? It is the whole salary?

The movie won a national award!!! We are all proud of you!

What a f*cking achievement, Mr. Bala, using a poor guy like Mr. Krishnamoorthy!!!

NOW, Have a GOOD LOOK at Mr. Krishnamoorthy!//

தமிழ் மொழியில் அறியக் கொடுத்தால்,நாங்களும் வாசித்து அறிவோம் நீங்கள் என்ன சொல்ல வ்ருகிறீர்கள் எனத் தளபதியின் சார்பில்,

பாமரன்,
பழமைபேசி.

வருண் said...

வாங்க மணியண்ணா!

கோபம் வந்தா, தொரைநாட்டு மொழியிலேதான் திட்ட வருது. தமிழ்மொழியின் அழகை பாதுகாக்கத்தான்! :)

ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கிற தகவல்:(!

செய்தியாக வெளிவந்த பிறகாவது அவருக்கு உரிய தொகையைக் கொடுப்பார்களா?

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கிற தகவல்:(!

செய்தியாக வெளிவந்த பிறகாவது அவருக்கு உரிய தொகையைக் கொடுப்பார்களா?

8 January 2011 6:01 PM***

எனக்கென்னமோ அவருக்கு தரவேண்டிய பணம் போய்ச் சேரும்னு தோணலைங்க. "பாலா" என்கிற இயக்குனரைத்தான் பலருக்கும் தெரியும். பாலா எப்படிப்பட்ட மனிதர்னு நமக்குத்தெரியாது. நான் கவனித்த வரைக்கும் பாலா ஒரு நல்ல மனிதாபமுள்ள மனிதர்னு எனக்குத் தோனலை. I wish I am wrong. :(

எல் கே said...

முகமூடி அணிந்த மனிதர்கள் பலர் உள்ளனர் வருண். அதில் பாலாவும் ஒருவர்

Bruno said...

//கோபம் வந்தா, தொரைநாட்டு மொழியிலேதான் திட்ட வருது. தமிழ்மொழியின் அழகை பாதுகாக்கத்தான்! :)//

ஹி ஹி ஹி

Bruno said...

//If you cant afford to pay, why the HELL are you promising this poor guy that you would pay 1 lakh as a salary?

So Rs. 15 000 is not advance? It is the whole salary?

What a f*cking achievement, Mr. Bala, using a poor guy like Mr. Krishnamoorthy!!!//

சாட்டையடி

ஆமினா said...

இந்த செய்தியை நானும் படித்தேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு!!!!

உணர்வுகளை மதிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்ல. அதை நசுக்க துணீயலாமா?

தங்கராசு நாகேந்திரன் said...

வருத்தமான செய்தி பகர்வுக்கு நன்றி

Unknown said...

ஹும்ம் சினிமாகாரர்கள்

Ram said...

ஏற்கனவே இந்த சம்பவம் பற்றி நான் அறிந்திருந்தேன்.. இதுபற்றியே பேச்சே அவர்களிடத்து எடுக்கமுடியவில்லை.. எப்படியாவது அவருக்கு நியாயம் கிடைத்தால் சரி...

Sairam said...

மனிதபிமானம் இருக்கிறதா இவர்களுக்கு நான் இந்த படம் பார்த்த பின் ஊனமுற்றவர்களின் நிலை இப்படி இருக்கிறதா என இரண்டு நாட்கள் தூங்கவேயில்லை ஆனால் இவர்கள் உழைத்த கூலி கூட கொடுக்காமல் இருப்பது மனது மிகவும் வேதனை தருகிறது

Sairam said...

ஏமாறுகிறவன் இருக்கிறவரை ஏமாற்றுகிறவன் இருப்பான் ஜாக்கிரதை

Jayadev Das said...

ஐயா பாலா, தயவு பண்ணி அந்த பணத்தை செட்டில் பண்ணிடுங்கையா!

//தமிழ் மொழியில் அறியக் கொடுத்தால்,நாங்களும் வாசித்து அறிவோம் நீங்கள் என்ன சொல்ல வ்ருகிறீர்கள் எனத் தளபதியின் சார்பில்,
பாமரன்,
பழமைபேசி.//
இதோ ஏதோ என்னால முடிஞ்சது!
உன்னால சம்பளம் சரியா குடுக்க முடியாதுன்னா என்னா மயி...குய்யா அவருக்கு ஒரு லட்சம் தரேன்னு சொல்லி ஏமாத்தினீறு, நீர் குடுத்த ரூ.15000/- அட்வான்ஸ்தானா இல்ல மொத்த சம்பளமுமே அம்புட்டுதேன்னு சொல்லப் போறீரா? படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு, நாங்க எல்லோரும் சந்தோஷப் படுறோம், ஆனா கிருஷ்ணமூர்த்தி மாதிரி ஒரு ஆளை எமாத்திய பின் இந்த விருது, புண்.... எல்லாம் எதுக்கு? இப்போ திரு. கிஷ்ணமூர்த்திய ஒரு தரம் நல்லா பாரு, [இப்படிப் பட்ட மனுஷனையா ஏமாத்தணும்?] [பின் குறிப்பு: புண்....=புண்ணாக்கு.. ஹி......ஹி......ஹி......]

Ramesh said...

ஆம் எனக்கும் அந்தப் படத்தை முழுதாக பார்க்கவே முடியவில்லை... பரிதாபத்தை மக்களிடம் ஏற்படுத்தி.. அந்தக் காசைத் திங்கும் ஆசைதான் அதில் அதிகம் தெரிந்தது.. இதில் இந்தப் படம் எனக்குப் புடிக்கலை என்று சொன்னால்.. நீயெல்லாம்.. வாழவே லாயக்கில்லாத ஜந்து என்பது போல் சுற்றியிருப்பவர்களின் பார்வை வேறு...

பாவம் கிருஷ்ணமூர்த்தி... பாலாவால் பகடைக்காயாக உருட்டப்பட்டிருக்கிறார்..

Madurai pandi said...

முழுதாக பார்க்க முடியாத பாலா படம்!! பாக்கியை பாலா குடுத்து விடுவார் என்று நம்புவோம்!!!

பழமைபேசி said...

இன்னைக்கு கடை சாத்தியாச்சு போல இருக்கு...

வருண் said...

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, எல் கே, டாக்டர் புருனோ, ஆமீனா அவர்கள், தங்கராசு நாகேந்திரன், நா. மணிவண்ணன், தம்பி கூர்மதியான், சாய்ராம், ஜெயதேவ் தாஸ், பிரியமுடன் ரமேஷ், மதுரைப்பாண்டி!

-----------------

வாங்க, பிளாசபி prabha மற்றும் மணியண்ணா!

வருண் said...

***பழமைபேசி said...

இன்னைக்கு கடை சாத்தியாச்சு போல இருக்கு...

10 January 2011 4:41 PM***

அப்படித்தான் போல :))))

வருண் said...

***நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

10 January 2011 2:45 PM***

பதிவைக் காணோம்! :(