கீழே உள்ள படங்கள் சில பிரபல ஒற்றர்களின் படங்கள்!
இவருடைய பேரு Mata Hari (Born: 1876; Died: 1917) . ஒரு நடனக்காரியாம். டச்சு நாட்டில் பிறந்த இவர் ஜெர்மனிக்காக முதல் உலகப்போர் சமயத்தில் ஒற்றுவேலை செய்தாராம். கண்டுபிடிச்சு என்ன செஞ்சாங்கனு தெரியுமா? இவர் "கில்ட்டி"னு ஊர்ஜிதம் ஆனதும், சுட்டு கொன்னுட்டாங்களாம்! அப்போ இவருக்கு வயது 41!
Julius and Ethel Rosenberg!
இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து ரஷ்யாவிற்காக அமெரிக்காவிலே இருந்துகொண்டு ஒற்றுவேலை செஞ்சாங்களாம்! கண்டுபிடிச்சு, கில்ட்டினு தெரிந்தவுடன், மின்சார நாற்காலில வச்சு எக்ஸெக்யூட் பண்ணியிருக்காங்க!
Born:
September 28, 1915 1915-09-28 (Ethel)
May 12, 1918, 1918-05-12 (Julius)
Died (Executed):
June 19, 1953(1953-06-19) (aged 37) Ethel
June 19, 1953(1953-06-19) (aged 35) Julius
Aldrich Hazen Ames (born May 26, 1941):
இவரு அமெரிக்காவில் சி ஐ எக்கு வேலை பண்ணிக்கிட்டு இருந்தாராம். எப்படியோ இவர் கே ஜி பி (ரஷ்யா) க்கு தகவல் கொடுப்பதை கண்டுபிடிச்சுட்டாங்க. அப்புறம் விசாரிச்சு இவரு குட்டு அம்பலம் ஆனதும் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்களாம். இன்னும் ஆயுள்தண்டனை கைதியா அமெரிக்கால இருக்காராம்!
4. Giacomo Casanova Born: 1725; Died: 1798:
இத்தாலியைச் சேர்ந்தவராம் இவர். பார்த்தா ஞானப்பழம் மாதிரி இருக்க இவரு, அந்தக்காலத்துல பெரிய காதல் மன்னனாம். ஸ்பை பண்ணினாரோ என்னவோ ரொம்ப பொண்ணுங்களை மயக்கி அவங்களோட வாழ்ந்தாராம்! இவர் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் வேற எழுதி இருக்காராம். இவரு உலகத்தில் க்ரேடஸ்ட் லவர்னு பேர் போனவராம்! ஒற்றுவேலை செஞ்சதாலே இவரைப் பிடிச்சு மரணதண்டனை கொடுக்காமல் நாடுகடத்திவிட்டாங்களாம். கடைசியில் ஒரு நூலகத்தில் வேலை செய்து பொழைப்பை ஓட்டினாராம்.
-தொடரும்
No comments:
Post a Comment