Friday, September 30, 2011

புத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்!

சிறுவயதில் பளிங்கு அல்லது பம்பரம் அல்லது கிட்டியோ வெளையாடும்போது என்ன தப்பு செய்தேன்னு தெரியவில்லை. ஒரு பெரியவர் வாயிலே விழுந்தேன். எப்படியோ தெரியாமல் அவர் மேலே மோதிட்டனோ, அல்லது நான் வெளையாடும் பொருள் (பந்து அல்லது பம்பரம்) அவர் மேலே பட்டுருச்சோ தெரியலை. ஆனா ஒண்ணும் பெருசா நடக்கவில்லை. அவருக்கு கோபம் வந்து என்னை "உனக்கு எல்லாம் படிப்பே வராது! மாடு மேய்க்கத்தான் போவ" னோ (ஏதோ பெரிய முனிவர் போல!), என்னமோ அடாவடியா திட்டினார். இந்த முனிவர் என்ன படிச்சிருந்தார்னு தெரியலை. ஒரு எஸ் எஸ் எல் சி முடிச்சிருக்க வாய்ப்பிருக்கு! ஆனால் ஒரு பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள சிறுவன் தெரியாமல் செய்த தவறு என்பதைக்கூட அறியாமல் இதுபோல் தரித்திரமாக சாபம் விடுறாரே இவரெல்லாம் என்ன பெரிய மனுஷன்? னு எனக்கு அப்பவே தோனுச்சு. பெரியவர் சாபம் என்னவோ பலிக்கவில்லை! ஆமா நான் படிச்சு கிழிச்சுட்டேன் இல்லையா? எவனாவது யாரு மேலே உள்ள கடுப்புலயோ எதையாவது சொல்லுவான். அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு "முனிவர் சொல்லிட்டாரே.." னு வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன்.

அதென்னனு தெரியலை, "வாலிபால்" வெளையாடும்போது நெறைய நேரம் என்னுடைய டீம் மேட் களுக்கே எதிரா செயல்பட வேண்டியது வருது. வெளையாடுறது சும்மா பொழுது போக்குக்கு, கொஞ்சம் "காலரிகள்" எரிக்கலாமே என்பதற்காக அல்லது எக்ஸர்சைஸ்க்குத்தான், ஒண்ணும் சாதிக்க இல்லை! மேலும் எங்க டீம்ல யாரும் பெரிய "passer"ரோ "setter"ரோ,"hitter"ரோ "blocker"ரோ கெடையாது. எல்லாரும் எப்படியாவது மூனு தட்டு தட்டி அடுத்த பக்கம் அனுப்பிறதே பெரிய சாதனையா நெனைக்கிறவங்க.. ஆனால் எப்படியாவது, எப்படியாவது ஜெயிச்சே ஆகனும்னுதான் ஆடுவாங்க பாவம். நெறைய நேரத்தில் எதிராளி அடிக்கும் பந்து எங்க பக்கத்தில் "லைன்" ல விழுந்தாலும் அடிச்சு அது வெளியே போனதாக (அவ்ட்) கேவலமாகப் பொய் சொல்லுவாங்க! ரொம்ப பெரிய பெரிய ஆட்கள் இவங்க எல்லாம்! ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனம்?? எப்படியாவது செயிக்கனும் இல்லையா? ஆனால் நியாயஸ்தன் ஒருத்தன் இருக்கேன் இல்ல? நான் இல்லை "இன்"னு சொல்லி என் டீம் மெம்பர்களிடம் கெட்ட பேர் வாங்கி என் எதிராளிகளிடம் நல்ல பேர் வாங்கவேண்டி வரும். ஒவ்வொரு சமயம் எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க! இவனுக்கு வெளையாடவும் தெரியவில்லை, இப்படியும் நியாயம் பேசி உபத்திரவம் பண்ணுறான் இவன்னு! னு சொல்ற மாதிரி இருக்கும். ஒருவேளை எல்லாருமா சேர்ந்து நம்மள அனுப்பிட்டா? இருக்கவே இருக்கு டென்னிஸ்! ஒரு செக்ஸி பார்ட்னெர் கெடச்சு இருக்கார்! :-))) ஆனால் இது அவுட்டோர் வெளையாட்டு என்பதால் ஒரு 4-5 மாதம்தான் வெளையாடமுடியும்! :(. என்ன பார்க்குறீங்க? வாலிபால் இண்டோர் வெளையாட்டுதாங்க, இங்கே எல்லாம்!

அதென்ன புத்தர், ஏசு, காந்தினு என்ன அவங்களோட உன்னையும் சேர்த்துக்கிட்டேன்னு கேக்கிற/பாக்கிற மாதிரி தெரியுது?

புத்தர் புத்தமதத்தை ஆரம்பிச்சு, தன் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் விட்டுப்புட்டு வந்து எவ்வளவு மக்களைக்கவர்ந்து, இந்தியா சைனானு புத்த மதத்தை வளர்த்து..அப்புறம் ஜீஸஸ்.. அவருக்கு எம்மாம்பெரிய மக்களைக் கவரும் சக்தி இருந்துச்சு? தன் போதனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை மக்கள்.. அப்புறம் நம்ம காந்தி, அஹிம்ஷா முறையில் போராட்டம்னு ஒரு கண்சப்ட்டை உருவாக்கி உலகலவில் மஹாத்மானு பாராட்டுப்பெற்றவர்.. ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? ஏன்னா நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க! ஒருவேளை இது ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா? ஆனா ஒண்ணுங்க, புத்தர் கருத்தை இந்துக்கள் ஏத்துக்க மாட்டாங்க. ஏசு கருத்தை, போதனைகளை இந்துக்களும், முஸ்லிம்களும், யூதர்களும் ஏத்துக்க மாட்டாங்க. காந்தியை இந்து மத வெறியர்களே நெறையப் பேரு ஏத்துக்கலை, அப்புறம் எப்படி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏத்துக்குவாங்க? என்னதான் இவங்களுக்கு நெறைய பின்பற்றுவர்கள் இருந்து..இவங்க நெறைய சாதிச்சு இருந்தாலும் நம்ம லெவெலுக்கு இவங்க எப்படிங்க வரமுடியும்? நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் இல்லையே? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 200 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))

10 comments:

nila said...

விடுங்க ... நாம தான் பெரிய ஆளு ... :D
உங்க முதல் பாரா ரொம்ப புடிச்சிருந்தது .. neengalavathu padikatha periyavar vaila vzihunthinga.. naanga பத்தாங்க்ளாஸ் படிக்கும்போது.. எங்க ஸ்கூல் பிரின்சிபால் சலச்சல இருந்த பன்னிரண்டு போரையும் அப்படித்தான் சொன்னார்.. அதுவும் ஒரு கேவலமான விஷயத்துக்கு... உருப்புடவே மாட்டிங்க பொது தேர்வுல என் பாடத்துல எல்லாரும் பெயில் ஆயிடுவிங்கனு சாபம் குடுத்தார்.. நாங்க அத்தனை பேரும் ஓரளவுக்கு நல்ல நிலைமைல தான் இருக்கோம்.. இந்த டுபாக்கூர் சாபத்தைஎல்லாம் நம்பகூடாது

இராஜராஜேஸ்வரி said...

நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் இல்லையே? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 200 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))/

சந்தேகமென்ன நீங்கதான் பெ..ரீ..ய.. ஆளு!

துஷ்யந்தன் said...

ஹா ஹா.. ரசனையான எழுத்து பாஸ்  ^_^

Philosophy Prabhakaran said...

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க வருண்... தொடர்ந்து இதுமாதிரியான பதிவுகளையே (மற்ற பதிவர்களை சீன்டாத) உங்களிடம் எதிர்பார்க்கிறேன்... நன்றி...

ராமலக்ஷ்மி said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள்:)!

வருண் said...

***nila said...

விடுங்க ... நாம தான் பெரிய ஆளு ... :D
உங்க முதல் பாரா ரொம்ப புடிச்சிருந்தது .. neengalavathu padikatha periyavar vaila vzihunthinga.. naanga பத்தாங்க்ளாஸ் படிக்கும்போது.. எங்க ஸ்கூல் பிரின்சிபால் சலச்சல இருந்த பன்னிரண்டு போரையும் அப்படித்தான் சொன்னார்.. அதுவும் ஒரு கேவலமான விஷயத்துக்கு... உருப்புடவே மாட்டிங்க பொது தேர்வுல என் பாடத்துல எல்லாரும் பெயில் ஆயிடுவிங்கனு சாபம் குடுத்தார்.. நாங்க அத்தனை பேரும் ஓரளவுக்கு நல்ல நிலைமைல தான் இருக்கோம்.. இந்த டுபாக்கூர் சாபத்தைஎல்லாம் நம்பகூடாது

30 September 2011 8:32 AM***

வாங்க நிலா! ஆக "சாபம்" உங்க கேஸ்லயும் பலிக்கவில்லை போல இருக்கு! :)

வருண் said...

***இராஜராஜேஸ்வரி said...

நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் இல்லையே? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 200 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))/

சந்தேகமென்ன நீங்கதான் பெ..ரீ..ய.. ஆளு!

30 September 2011 9:24 AM***

வாங்க, ராஜராஜேஸ்வரி! நீங்களே ஊர்ஜிதம் பண்ணியபிறகு எனக்கு சந்தேகமே இல்லை போங்க!! :)))

வருண் said...

***துஷ்யந்தன் said...

ஹா ஹா.. ரசனையான எழுத்து பாஸ் ^_^

30 September 2011 2:32 PM***

வாங்க துஷ்யந்தன். ரசித்ததற்கு நன்றிங்க! :)

வருண் said...

***Philosophy Prabhakaran said...

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க வருண்... தொடர்ந்து இதுமாதிரியான பதிவுகளையே (மற்ற பதிவர்களை சீன்டாத) உங்களிடம் எதிர்பார்க்கிறேன்... நன்றி...

30 September 2011 3:34 PM***

அடிக்கடி இல்லாட்டினாலும் எப்போவாவது உங்களை திருப்திப்படுத்துறேன், ஃபிளாசஃபி! உங்க கருத்துக்கும் கண்டிப்புக்கும் நன்றிங்க! :-)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள்:)!

1 October 2011 10:05 AM***

வாங்க ராமலக்ஷ்மி! நன்றிங்க! :-)