Thursday, September 8, 2011

செக்ஸ் டார்ச்சர்! பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்த காஜல் அகர்வாலு காசுக்காகவோ, புகழுக்காகவோ வந்து டாப்லெஸா போஸ் கொடுத்துப்புட்டு, நான் அப்படி எதுவும் போஸ் கொடுக்கலைனு பொய் சொல்லிக்கிட்டுத் திரிறார். கொஞ்சக் காலத்துக்கு முன்னாலே ஐஸ்வர்யா ராய் பச்சன் சி பி எஸ்ல 60 மினுட்ஸ்ல வந்து "லிவிங் டுகெதெர்" சினிமால கிஸ் பண்ணுறதெல்லாம் ரொம்ப ரொம்ப தப்புனு சொல்லி காமெடி பண்ணினார். நடிகர் நடிகைகள் இப்படி ஒரு "பத்தினி வேஷம்" போட்டுக்கிட்டு ஒரு பக்கம் இருக்க, சமீபத்தித்தில் நக்கீரனில் வந்த செய்திகளில் பாதிக்கு மேலே எல்லாம் செக்ஸ் டார்ச்சராத்தான் இருக்கு!

* அடைந்தே தீருவேன்: தோழியின் கணவரை காதலிக்கும் பெண் போலீஸ்: பாதிக்கப்பட்ட இளம்பெண் கணவருடன் புகார்.

ஒரு திருமணமான பெண் இன்னொரு தம்பதிகளின் குடியைக்கெடுக்கும் வேடிக்கையான கதை இது!


* செக்ஸ் டார்ச்சர்: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

தலைமை ஆசிரியர். என்னத்தை சொல்ல?
* பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர் கைது!

இந்தாளூ படமும் போட்டு இருக்காங்க. நெத்தியிலே குங்குமம். பெரிய கடவுள் பக்தர் போல இந்தப் பொறுக்கி! இந்தப் பொறுக்கிக்கு ஏற்கனவே ரெண்டு மனைவிகளாம். இந்த மாதிரி டீனேஜரை அப்யூஸ் பண்ணுறவனையெல்லாம் தூக்கிலே போடனும்.



* காப்பகத்தில் செக்ஸ் கொடுமை! மாணவர்கள் அதிர்ச்சி தகவல்!
* காதலியின் முகத்தை பார்க்க ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து கல்லூரிக்கு சென்ற வாலிபர் கைது.

யாரோ ஒரு அண்ணே ரொம்ப ரொமாண்டிக்கா ஏதோ பண்ணியிருக்கு. :))))

* கள்ளக்காதலி கொலை: கள்ளக்காதலன் தற்கொலை முயற்சி.

இவரையும் கொன்னுபுடுவானுகனு பயமோ?

இப்போ செக்ஸ் செக்ஸுனு வரும்போது உணர்வுகளை மூடி மறைக்காமல் கலாச்சாரம், பண்பாடு எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு உடல், மனம்போகும் போக்குப்படி போனால் நம்ம நாடு முன்னேறிவிடுவோம்னு ஒரு சிலர் விவாதிக்கிறாங்க. இன்னொருபக்கம் அது உண்மை இல்லப்பூ.. நம்ம நாட்டுக்கு இதெல்லாம் ஒத்துவராதுனு அடிச்சுச்சொல்லி கட்டுப்பாடு முக்கியம்னு கலாச்சாரக் காவலர்கள் சொல்றாங்க. ஒரு சில கன்செர்வேட்டிவ்ஸ் குஷ்பு, சுஹாஷினியையெல்லாம் விட்டுத்தள்ளி கல்யாணத்துக்கு அப்புறம் செக்ஸ்னு வச்சிக்கிறதுதான் நல்லதுனு இன்னும் தன் பெண் குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்த்து அவள் மேஜர் ஆகுமுன்பே கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.

பொதுவாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் அவசியம், தவிர்க்க முடியாதது..அதைக் கட்டுப்படுத்துவதாலதான் நம்மாளு அலைகிறான்னு சொல்றதும் சரியா என்னனு தெரியலை. சரி, இந்த இந்த ப்ரிமாரிட்டல் செக்ஸ் விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

செக்ஸ் சம்மந்தப்பட்ட கெட்ட நடத்தை மேட்டர்களில் பெருந்தவறு செய்றவங்க எல்லாம் இந்த பள்ளி ஆசிரியர், மற்றும் அந்த போஸிஸ்காரம்மா மாதிரி கல்யாணம் ஆன நடுவயதில் உள்ளவர்கள்தான். இவங்களுக்கு எப்படி "பாடம் நடத்தி" நல்வழியில் கொண்டு வருவது?
பொதுவாக செக்ஸ்க்காக மற்றவர்களை டார்ச்சர் பண்ணுறவங்க, டீனேஜர்களை அப்யூஸ் பண்ணுறவங்கள எல்லாம் வெளிக்கொண்டுவந்து சட்டப்படி அவங்களை தண்டிக்கனும்னு எந்த ஆம்பளையும் போராடமாட்டான். நம்ம அன்னா ஹாசரேயையும் சேர்த்துத்தான்!

அதனால நம்ம தாய்க்குலங்க என்ன செய்யனும்னா ..

ஜெயலலிதா முதல்வராக உள்ள இந்தப்பொன்னான காலத்தில் பொங்கி எழுந்து முக்கியமாக தவறு செய்றவன் தன் மகனாகவோ, கணவனாகவோ, தந்தையாகவோ, நல்ல நண்பனாக இருந்தாலும்கூட இரக்கமே இல்லாமல் அந்தக்குற்றவாளி தண்டிக்கப்படனும்னு நெனைக்கும் நல்ல மனப்பக்குவம் வரனும்! அப்படி வந்தாலேபொழிய இந்த நாய்கள் ஒருபோதிலும் ஒழியாது என்பது என் நம்பிக்கை! மேலும் மிடில் ஈஸ்ட்ல மாதிரி இதுபோல பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கொடூரமாக கொண்டுவரனும். அப்படி தண்டனைகள் கொடூரமாக இருந்தால்தான் இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும்!

12 comments:

சுதா SJ said...

உண்மைதான் இப்படியான செக்ஸ் டாச்சர் செய்வவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயது ஆண்களே....
அவர்கள் ருசி கண்ட பூனைகள் அல்லவா????????

பஸ் ரயின் போன்றவற்றிலேயே இவர்கள் கைவரிசையை அதிகம் காட்டுவதை கவனித்து இருக்கேன்.

நக்கீரன் பற்றி சொல்லவே தேவை இல்லை, ஆபாச செய்தி வைத்தே பிரபலமானவர்கள், சும்மா மென்ற வாய்க்கு அவள் கிடைத்தால் போல் இப்படிப்பட்ட மேட்டர்கள் கிடைத்தால் அவர்கள் பாடு கொண்டாட்டம் தானே ஹீ ஹீ

வருண் said...

வாங்க துஷ்யந்தன்!

நம்ம ஊர்லாம் இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுங்க. போற போக்கப் பார்த்தால் யாராவது நன்னடத்தையோட ஒழுங்கா இருந்தா அவங்கள ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிற காலம் வந்துடும் போல. ரொம்ப மோசமா இருக்கு! :(

nila said...

எனக்கு கடைசி பத்தி ரொம்பவே புடிச்சிருக்கு... நிஜமாவே இதுக்கெல்லாம் கடுமையான சட்டம் கொண்டு வரணும்.. அதுவும் பஸ் ட்ரெயின் டார்ச்சர் பண்றவங்களுக்கு அதி பயங்கரமான தண்டனை குடுக்கணும்

வருண் said...

நிலா: இதேபோல் ஓர் பிரச்சினையை, இதே மாதிரி ஒரு முறை டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். :)

சட்டம் ஒழுங்க வச்சு இதுபோல் குற்றங்களை நிச்சயம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம்தான். ஆனால் இதைப் பேசிப் பேசிப் பெருசுபடுத்தினால்தான் முடியும். மூடி மறைத்தால் இது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!

வருண் said...

Today, I was traveling in the train. Something very interesting happened. A young woman who was standing was wearing some sort of formal outfit which has a zip in her upper back. Somehow the zip got unzipped to 5-6 inches reavealing her back and SHE DID NOT REALIZE IT!. There was a gentleman standing nearby her told her "the situation". She realized and tried but she could not zip herself and, then she asked that guy (who is a stranger) to zip it. He helped her! She thanked him. People noticed what is going on around and they all well behaved and pretending to be not noticing anything big. This is what happens in a civilized society! :)

nila said...

ஆம்... இத பத்தி ஏற்கனவே பேசி இருக்கோம்.. நான் ஒரு பதிவு கூட எழுதினேன்...
http://pirainila-nila.blogspot.com/2010/03/blog-post.html

பேசி பெருசுபடிதினா.. கத்தி கூச்சல் போட்டா ஒரு ஈ காக்காய் கூட உதவிக்கு வரதுக்கு யோசிக்குது.. இதுல எங்க பெரிசு படுத்த...??

வருண் said...

இந்தப்பதிவை நான் ஏற்கனவே வாசிச்சதா ஞாபகம் இல்லை. :( Now I learn why you liked the last paragraph of this post, nila!

nila said...

எல்லாம் ஒரு ஆதங்கம், கையாலாகாத்தனம் வயித்தெரிச்சல் தான் சார்...

வருண் said...

இதனால் ஏற்படும் எரிச்சல் மன உளைச்சலை நீங்க உங்க பதிவில் சத்தமாக எழுதிட்டீங்க. அது நீங்க செய்ய வேண்டியது. நிச்சயம் பலர் படிப்பாங்க. இந்த பிரச்சினையை எப்படி சரிபண்ணுறதுனு யோசிப்பாங்க.இதுபோல தவறு செய்ற பலரில் சிலர், உங்க உணர்வுகளை மதித்து திருந்துவாங்கனு நம்புவோம். நீங்க சொல்லாமல் விட்டுவிட்டால், திருந்த சாண்ஸே இல்லை. You spoke up! That is what most important thing women need to do!

nila said...

இந்த மனஉளைச்சல் ரொம்பவே அதிகம்... பொதுவாவே ட்ராவல் பண்றதுன்ன எனக்கு ரொம்ப இஷ்டம்.. இரண்டு மணிநேர பயணமே எப்போதுமே கான்ஷியஸா இருக்க நிலமைனா எட்டு மணி நேரம் பத்து மணிநேர பயணம் பத்தியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை.. பதிவுல நான் குறிப்பிட்ட ஒரு நிகழ்வுன்னு இல்ல.. எங்கப்பா என் பக்கத்துல உட்காந்திருக்கும்போதே பின்னாடி இருந்து வேலைய கட்டின ஜென்மங்கள் எல்லாம் உண்டு.. எங்கப்பா எந்திருச்சு அடிக்கப்போன கதையெல்லாம் கூட உண்டு.. தினமும் நூறாயிரம் பொண்ணுங்களுக்கு பஸ்ல ட்ரெயின்ல இதெல்லாம் நடந்துட்டு தான் இருக்கு... இத சொல்றதுக்கு நான் வெட்கபடலை.. நம்ம ஊர் பொண்ணுங்க இத சொல்ல வெட்கப்படுற நிலைமை இருக்குறதுதான் வெட்கப்பட வைக்குது...

துளசி கோபால் said...

கடுமையான சட்டம் கொண்டு வந்தால் போதுமா? அதை நடைப்படுத்த முடியாதே..... ஆளாளுக்கு சிபாரிசு கொண்டுவந்து சட்டத்தை அப்படியே கிடப்புலே போட்டுரு'வாய்'ங்களே:(

வருண் said...

வாங்க டீச்சர்! இதை கண்டுக்காமல், எதுவுமே செய்யாமல் விட்டுப்போவதும் சரி இல்லையே! ஒரு சில நாடுகளில் இந்தப் பிரச்சினை இல்லை! நம்ம நாட்டில்தான் இது படுமோசமா இருக்கு! கடுமையான சட்டம்தான் ஒரே வழி, நம்பிக்கை!