Friday, November 18, 2011

அம்மா எனக்கு துரோகம் பண்ணிடுத்து!!

தமிழ்நாட்டில் அம்மா ஆட்சி வந்ததும் தமிழ்நாட்டின் பொற்காலம் ஆரம்பமாயிடுச்சுனு நம்பி மோசம் போயிட்டேன். நான் கண்ட தமிழ்நாட்டின் பொற்காலக்கனவு இன்னும் என்னுடைய பதிவில் அப்படியே இருக்கு! கனவு நனவாகும்னு பார்த்தால்.. அம்மா என்னையும் என் பதிவையும் என் கணக்கை எல்லாம் தப்புக் கணக்காக்கிடுச்சு!

அப்படி என்ன கனவு கண்டடா மூதேவி?னு கேக்குறீங்களாப்பூ!

இங்கே இருக்கு படிச்சுப் பாருங்கப்பூ!


இப்போ நம்ம ஜெயலலிதா என்ன செய்யப்போகிறாரு தெரியுமா?

* சங்கர் ராமன் கொலைவழக்கை முட்டுக்கட்டை போட்டு வைத்ததே கருணாநிதிதான். சங்கராச்சார்யா கேஸ் விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்! எப்போ? இன்னும் ஒரு வருடத்திற்கு முன்னால் குற்றவாளிக்கு இருக்கு ஆப்பு!

* தமிழக மீனவர்கள் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், படகுல ஏறி "அதோ அந்தப் பறவை போலே வாழ வேண்டும்னு" பாடிக்கிட்டே மீன் பிடித்து சந்தோஷமாக வாழலாம்! மீனெல்லாம் கடல்ல இருந்து பாய்ந்துவந்து படுகுக்குள்ளே படுத்துக்கும்! அப்படி பாய மறுத்துச்சுனா மேலே உள்ள காங்கிரஸை விரலை விட்டு ஆட்டிருவாரே நம்ம தமிழினத் தலைவி!

* ஈழம்? ஈழத்தமிழர்களுக்காக தன் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கொடுத்து அவர்களை தனிநாடு பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பார், தமிழினத்தலைவி!

* ஆமா "பவர்கட்" னா என்ன? அப்படினு ஒரு நிலை தமிழ்நாட்டில் விரைவில் வந்துவிடும்!

* டாஸ்மாக் மது, கருணாநிதி ஆட்சியில்தான் பலகோடிக்கு விற்பனையானது. ஜெயா ஆட்சியில் மது விற்பனை குறையும்! பதிவுலகில்கூட இனிமேல் யாரும் தண்ணியடிக்க மாட்டாங்க! May be alcohol consumption will reach all-time LOW!

* விலைவாசி ஏற்றத்திகு காரணம் கருணாநிதிதான். வந்துகொண்டிருக்கிற ஜெயாவின் ஆட்சியில் விலைவாசி ஏற்றமா? இனிமேல் "விலைவாசி இறக்கம்"தான் போங்கோ!

* பெட்ரோல், குக்கிங் கியாஸ் விலையும் ஜெயா ஆட்சியில் மிகவும் குறையும் என நம்புவோம்! பருப்பு எண்ணெய் விலையெல்லாம் இப்போ இருக்கிறதுல பாதி ஆகிவிடும்.

* "பார்ப்பணர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்" என்கிற "போர்ட்" அல்லது "விளம்பரம்" வந்தால் அவர்களை பிடித்து உள்ளே போடுவார் இந்த திராவிடர்களின் "பார்ப்பணத் தலைவி"!

தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. ஆமா, நம்ம குத்துப் பாட்டு விசய் படமெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கும்! அப்புறம் என்ன? இனிமேல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு எல்லாம் பொற்காலம் தான்.


* விலைவாசி ஏறிக்கிட்டே போகுது. மாடையெல்லாம் ஏழைகளுக்கு இனாமாக்கொடுத்துப்புட்டு இப்போ பால் வெலையை ஏத்துது!

* சங்கர் ராமன் ஆவி இன்னும் ஷாந்தி அடையாமல் அலையுது! பாவம் அதை கவனிக்காமல் அம்மா என்னடானா ரித்தீஸ் அடிச்சுட்டுப் போன கறுப்புப்பண ஷூட்கேஸை எல்லாம் திருப்பி வாங்க நில அபகரிப்பு வழக்கைப்போட்டு "கறுப்பாவே" வசூல் பண்ணிக்கிட்டு இருக்கு!

* தாழ்த்தப்பட்டவர்களை எல்லாம் ஏறி மிதிக்குது!

ஏண்டா வருண் இப்படி ஒரு எழவுப்பதிவைப் போட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்க?

என்ன பண்ணுறதுப்பூ? எனக்காகவா நான் ஒப்பாரி வைக்கிறேன்? அம்மாக்கு ஓட்டுப்போட்டு, அம்மாக்கு பிரச்சாரம் பண்ணி, ஆரியத்தாய் திராவிடர்களை ஆண்டால்த்தான் எங்க நாடு முன்னேறும், மக்கள் நிம்மதியா இருப்பாங்கனு அம்மாக்கு கொடிபிடிச்ச திராவிடர்கள் எல்லாம் விலைவாசி ஏறும்போது மூடிக்கிட்டு இருக்கும்போது நாந்தான் அவங்களுக்கும் சேத்து ஒப்பாரி வைக்க வேண்டியதாப்போச்சு!