தி மு க, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழண்டு கொண்டதாமே?
அதனால என்ன இப்போ?
ஸ்டாலின் வீட்டிலே சி பி ஐ ரெய்ட் நடந்ததாமே?
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே? இதைப்போட்டு ஊதிக்கிட்டு
ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் மாணவர்கள் எல்லாரும் தொடர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்துறாங்களாம். அவர்களை பாராட்டி எதாவது?
மனசுலேயே பாராட்டியாச்சு விடு!
சினிமா?
ஆமா, விஸ்வரூபத்தைப் பத்தி நூத்தி எட்டு எழவை எழுதியாச்சு! பாலாவின் பரதேசி பத்தி எல்லாரும் ஒட்டுமொத்தமா நல்லாயிருக்குனு சொல்லிட்டாங்க! புதுசா என்னத்தைச் சொல்ல?
இப்படி எதைப் பற்றி யோசித்தாலும், இதைப் பத்தி என்னத்தை எழுதிக் கிழிக்க? என்ற மாற்றுக் கருத்து உடனே தோன்றுகிறது.
ஏதாவது காதல் கதை?
சாதாரண காதல் கதை எல்லாம் எல்லாரும் எழுதிட்டாங்க. அன்பு, இதயம், பிரிவு, கண்ணீர்னு கோடிக்கணக்கான கதைகள் எழுதிட்டாங்க. ஏதாவது புதுமாதிரியா கள்ளக்காதல், அடல்ட்டரி, த்ரீசம், ஸ்விங்கிங், வைஃப் ஸ்வாப் போல டாப்பிக்ல எழுதினால்த்தான் நாலு பேரு இண்டெரெஸ்டா வந்து படிப்பான். நம்மாளெல்லாம் "அந்த லெவெல்"லதான் இப்போ இருக்கான்! எதுக்கு கஷ்டப்பட்டு கேவலமா அப்படி ஒரு கதை எழுதி கிழிச்சுட்டாலும்? அதான் ஏற்கனவே இன்னைக்கு நம்மாளுக எல்லாரும் ஊர் மேஞ்சிட்டுத்தானே இருக்காங்க இந்த நவீன உலகில்?
சரி விட்டுத்தொலை! பதிவுலகம் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கட்டும்! நீ எழுதிக்கிழிக்கலைனா இங்க ஒண்ணும் குடி முழுகிப் போகப் போவதில்லை! எல்லாம் சரிதான், பதிவெழுத வேண்டாம்ங்கிறது நல்ல முடிவுதான்! ஆனால் இந்த ஔறலை எல்லாம் டைப் அடிச்சு, அதை ஒரு பதிவாப் போட்டு தலைப்புக்கு எதிர்மாறா எதையாவது செஞ்சுபுடாதே!
ச்சே சே! அப்படியெல்லாம் செய்வேணா? :-)
11 comments:
ஏன் இப்படி ஒரு முடிவு? ரிலாக்ஸ் ப்ளிஸ்
உங்களுக்கு மட்டுமா எனக்குந்தான் நீங்கள் சொல்லிய காரணங்களால் எழுத மூட் வரலை....ஆனாலும் ஏதாவது பதிவு போட்டுவிடனும் என்று யோசிக்கிறேன் காரணம் நான் பதிவு போடலைன்னா தமிழ்மக்களுக்கு படிக்கிற பழக்கம் விட்டு போய்விடும் என்பதால் தான். என்னங்க நான் சொல்லுறது சரிதானே
நீங்க சொல்ற மாதிரி எல்லாருக்குமே ஒரு சமயம் தோணும். எனக்கும் அப்படி தோணும். பர பரப்பான விஷயங்களை தள்ளி வச்சிட்டு இயல்பா நடக்கிற விஷயங்கள்ல பார்வையை செலுத்தும் போது புதுசா எதாவது கிடைச்சிடுது. எழுதுவது நம் விருப்பம்தான். மூட் இல்லை என்பது ஒரு நாளில்.. அல்லது ஒரு வாரத்தில் மாறிவிடும். ரிலாக்ஸா மீண்டும் எழுதிடுங்க.
நீங்க சொல்ற மாதிரி எல்லாருக்குமே ஒரு சமயம் தோணும். எனக்கும் அப்படி தோணும். பர பரப்பான விஷயங்களை தள்ளி வச்சிட்டு இயல்பா நடக்கிற விஷயங்கள்ல பார்வையை செலுத்தும் போது புதுசா எதாவது கிடைச்சிடுது. எழுதுவது நம் விருப்பம்தான். மூட் இல்லை என்பது ஒரு நாளில்.. அல்லது ஒரு வாரத்தில் மாறிவிடும். ரிலாக்ஸா மீண்டும் எழுதிடுங்க.
****காப்பிகாரன் said...
ஏன் இப்படி ஒரு முடிவு? ரிலாக்ஸ் ப்ளிஸ்***
இன்னும் முடிவு எதுவும் எடுக்கலைங்க. தோன்றியதை சொன்னேன். :)
***Avargal Unmaigal said...
உங்களுக்கு மட்டுமா எனக்குந்தான் நீங்கள் சொல்லிய காரணங்களால் எழுத மூட் வரலை....ஆனாலும் ஏதாவது பதிவு போட்டுவிடனும் என்று யோசிக்கிறேன் காரணம் நான் பதிவு போடலைன்னா தமிழ்மக்களுக்கு படிக்கிற பழக்கம் விட்டு போய்விடும் என்பதால் தான். என்னங்க நான் சொல்லுறது சரிதானே****
நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும்! :-)
****உஷா அன்பரசு said...
நீங்க சொல்ற மாதிரி எல்லாருக்குமே ஒரு சமயம் தோணும். எனக்கும் அப்படி தோணும். பர பரப்பான விஷயங்களை தள்ளி வச்சிட்டு இயல்பா நடக்கிற விஷயங்கள்ல பார்வையை செலுத்தும் போது புதுசா எதாவது கிடைச்சிடுது. எழுதுவது நம் விருப்பம்தான். மூட் இல்லை என்பது ஒரு நாளில்.. அல்லது ஒரு வாரத்தில் மாறிவிடும். ரிலாக்ஸா மீண்டும் எழுதிடுங்க. ***
ஆமங்க, எழுதுவது நமக்காகவும் நம் விருப்பத்திற்காகவும்தான் முக்கியமாக.
ஆனால் ஒவ்வொரு சமயம் இதுபோல் எண்ணங்கள் தலை காட்டுகிறது.அதை அப்படியே பகிர்ந்துகொண்டேன். மாறுவது மனம். அதனால் மறுபடியும் ஏதாவது எழுதத்தோணத்தான் செய்யும்னு நம்புறேன்.
உங்க கருத்துக்கு நன்றிங்க.
உங்களையே நம்பியிருக்கும் தமிழ் பதிவர்களை புறக்கணீக்காதீர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்
உங்களையே நம்பியிருக்கும் தமிழ் பதிவர்களை புறக்கணீக்காதீர்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்
//
பிரேம் -:) போட மறந்துட்டாருன்னு நினைச்சா கோவிச்சுக்குவீங்களா வருண்?
ரெவெரி!
அவர் செய்தது மிகப்பெரிய பிழை! :( உங்களக் கண்டு "அந்த எழுத்துப் பிழை"யை புரிஞ்சுக்க முடியுது. எல்லாரும் புரிஞ்சுக்குவாளா? கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி இருக்காரே, பிரேம்? :)))
ஏண்டா நாராயணா! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலெ.கரண்டு வேற இல்லை.ஏதாவது கொசுவத்தி வாங்கிட்டு வாயேன்.
Post a Comment