Tuesday, March 12, 2013

விஸ்வரூபர் வென்றதும் இழந்ததும் தோற்றதும்!

விஸ்வரூபத்தின், வியாபார வெற்றிக்காக கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆரம்பிப்போம். ஹே ராம்க்கு அடுத்து, கமலுடைய  இயக்கம், ராஜ் கமல் கம்பெணி தயாரிப்புனு என்று வந்த படம் இது! ஹே ராம் படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப் பட்டாலும், வியாபார ரீதியாக படு தோல்வியைத்தான் தழுவியது.

மல் அடைந்வெற்றி!

விஸ்வரூபம்! 

இயக்கி, தயாரித்து வெளியிட்ட எந்த ஒரு படத்திலும் இதுவரை பெரிய வெற்றிடையாத கமலே மறுபடியும் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு!  விஸ்வரூபம் என்ன ஆகுமோ? என்கிற பயம் எல்லாருக்குமே இருந்தது.  

90-95 கோடி செலவழிச்சு எடுத்த படம் இது! கமல் தன் வீட்டையே அடகு வச்சு  பெரிய தொகை "இண்வெஸ்ட்" செய்து  எடுத்த படம்! இம்பூட்டுப் பணம் போட்டு இது போல் ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு ரொம்பவே தைரியம் வேண்டும்.
என்ன ஆகப்போதோ?

படம் வெளிவரும் முன்பே..

* டி ட்டி எச்ல வெளியிட முயற்சி தோல்வி! அதனால பொங்கலுக்கு வெளிவரவில்லை!

* தியேட்டர் ஓனர் எல்லாம் ஒன்றுகூடி கமலுக்கு எதிராக  பலவிதமான பிரச்சினைகள்!

* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!

* ஆளுங்கட்சியின் அதிரடி 144 தடை உத்தரவு!

இப்படி பலவிதமான பிரச்சினைகள்.

கடைசியில் விஸ்வரூபம் எல்லாப் பிரச்சினைகளையும் உடைத்தெறிந்தது! அதைவிட முக்கியம், போட்டிக்கு வந்த படங்கள், பெரிய பட்ஜெட் அகெக்ஸ் பாண்டியன், மணிரத்னத்தின் கடல் போன்றவைகளை உருத்தெரியாமல் ஆக்கிவிட்டு  மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. 

ஹே ராம் தோல்விக்குப் பிறகு  14 வருடங்களுக்குப் பிறகு, தன்  58 வயதில் கமலின் விஸ்வரூபம் அடைந்த வியாபார வெற்றி தமிழ் சினிமா வரலாற்றில், கமலுக்கு இன்னொரு  முக்கியக் மைல்க்கல் என்றுதான் சொல்லணும்.  இந்தப்படத்திற்கு இன்றுவரை வசூல் 205-220 கோடி என்கிறார்கள். இதை கமல் தரப்பே சொல்வதால் ஏற்றுக்கத்தான் வேணும்.

தியேட்டர்காரன், விநியோகஸ்தர்கள் அது இதுனு போக, இதில் தயாரிப்பாளர் கமல் கைக்கு 100 கோடி வந்தாலே கமல் போட்ட காசை எடுத்ததாக ஆகிவிடும். பிறகு சாட்டலைட் ரைட்ஸ், லொட்டு லொசுக்குணு ஒரு 20-30 கோடி வந்ததுனா, கமல் சம்பளம் 25 கோடியைச் சேர்த்து 50 கோடிபோல கமல் சம்பாரித்ததாக ஆகும்.

ஆக, புகழ், பணம், விமர்சங்கள் எல்லாவற்றிலுமே விஸ்வரூபம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. தடைகளை உடைத்து கமல் வென்றார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! வாழ்த்துக்கள்!

------------

கமல் இழந்தது என்ன?

* கமல்,  இஸ்லாமியர்கள், பல இஸ்லாமிய நாடுகளும் இவர்மேல் வைத்திருந்த மதிப்பை இழந்துட்டார்னுதான் சொல்லணும். இவர் தாலிபன்களுக்கு எதிராகதான் கொடிபிடிக்கிறார் என்றெல்லாம் இவரைப் புரிந்து கொள்ளவில்லை! இஸ்லாமியரையும், இஸ்லாமையும் இவர் அவமானப்படுத்துவாதத்தான் எடுத்துக்கொள்ளப்பட்டது..

அதன் விளைவால்

 * மலேசியா, மையக்கிழக்கு நாடுகளில் வசூல் ஆகவேண்டிய ஒரு 15-20 கோடி கமலுக்கு ஒழுங்காக வந்துசேரவில்லை.

* காலங்கடந்து மலேசியாவில் ரிலீஸ் செய்ததால், திருட்டு வி சி டி ஏற்கனவே வெளிவந்துவிட்டதால் வரவேண்டிய வசூலில் 20% தான் கமலுக்கு வந்து இருக்கு.

 *அதேபோல் மையக்கிழக்கு நாடுகளில் இந்தப்படம் ரிலீஸே ஆகவில்லை! அங்கிருந்து வர வேண்டியது சுமார் 6-8 கோடி.

* இவருடைய டி ட்டி எச் வெளியீடு முயற்சி என்று ஆரம்பிச்சு வெற்றிபெறாமல் விட்ட ஒரு பிரச்சினையால் தியேட்டர் ஓனர் எல்லாம் இன்னும் கடுப்பாகத்தான் இருப்பாங்க.

* டி ட்டி எச் முயற்சியால் கடுப்பான கேரள திரையரங்கு ஓனர்கள், கடைசிவரை பெரிய மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் தரமான திரையரங்குகளில் இந்தப்படத்தை  வெளியிடத் தயாராக இல்லை. கடைசியில் வேற வழியில்லாமல் சாதாரண திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டதால், விஸ்வரூபத்திற்கு 3.5 கோடி போலதான் கேரள வசூல் வந்தது என்கிறார்கள். டி ட்டி எச் பிரச்சினை வராமலிருந்து இருந்தால் நல்ல உயர்தர திரையரங்குகளில் படம் வெளிவந்து இருந்தால், 8-10 கோடி வசூல் செய்து இருக்கும் என்கிறார்கள்.

* கமல் என்றாலே காண்ட்ரோவெர்ஸி என்று இருந்தது ஒரு உச்சத்தை அடைந்துவிட்டது இந்த விஸ்வரூபப் பிரச்சினை. இப்போ ஒரு மாதிரி காண்ட்ரோவெர்ஸி க்ளைமேக்ஸ் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த சூழலில், இனிமேல்  மறுபடியும் விஸ்வரூபம் ரெண்டு, மூனுனு ஆரம்பிச்சு இன்னொரு புதிய காண்ட்ரோவர்ஸி தொடர்ந்து வந்தால், இந்தாளுக்கு வேற வேலை இல்லைனு மக்கள் கடுப்பாகிவிடுவார்களோ? என்ற பயம் கமலுக்கு வந்து இருக்கலாம். வரணும்.

தோல்விகள்???

என்னதான் விஸ்வரூபம் பெரிய வெற்றியடைந்தாலும்,  எந்திரனின் கலக்சனில் ஒரு 60-65% கலக்சன் தான் பெற்றது இந்த மெஹா பட்ஜெட் படம். 

மற்றவர்கள் எப்படியோ, கமல், நிச்சயம் தன்னுடைய விஸ்வரூபம் முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கணும்னு (முக்கியமாக எந்திரன்) எதிர்பார்த்துத்தான் இருப்பார். கமலுக்கு இந்தப் போட்டி போடும் மனம் இருப்பதை அவரே பச்சையாக சொல்லியுள்ளார். அது நடக்கவில்லை! இது ஒரு மாதிரியான தோல்விதான்.

சென்னையில் வசூல் நிலவரம்..

விஸ்வரூபம் எந்திரனை வீழத்தவில்லை என்பது மட்டுமல்ல, விஸ்வரூபம், துப்பாக்கியைக்கூட வீழ்த்தவில்லை என்பதே நிதர்சனம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டேட்டா வை வைத்து புரிந்து கொள்ளுங்கள்!


 துப்பாக்கி! (5 வார வசூல்)

Week : 5

Thuppakki

Total collections in Chennai : Rs. 13,25,91,260
Verdict: Blockbuster


 விஸ்வரூபம் (5 வார வசூல்)

 Week : 5

Vishwaroopam
Total collections in Chennai : Rs. 11,74,50,039
Verdict: Blockbuster


எந்திரன் (4 வாசூல்தான் கொடுத்து இருக்கேன்)

 

Week 4:

 No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

16 comments:

vimal said...
This comment has been removed by the author.
vimal said...

ஏனுங்க ... வீட்ட அடமானம் வச்சா 90- 95 கோடி எந்த சேட்டுங்க கொடுப்பார் ? எனக்கும் கொஞ்சம் அட்ரெஸ் வாங்கி தருவீங்களா ?

வருண் said...

"Mortgage liquidity" னு சொல்லலாமா? அதைத்தான் அடமானம்னு சொன்னேன். :)

காப்பிகாரன் said...

பாஸ் எந்திரன் தயாரிப்பு செலவே 160 கோடின்னு சொன்னங்க அது எந்த இல்லாம வந்து வெற்றி அடைந்தது. இந்த படம் மிக பெரிய எதிர்ப்புல படம் வருமா வராத இதுல்ல 2 போட்டி படம் வேற வந்தது இவ்ளவையும் தகர்த்து ஒரு இடத்துல்ல வெளி வந்து இன்னொரு இடத்துல்ல வெளி இட முடியாம்மா வந்து வெற்றி பெற்று இருக்கு பாஸ் எதிர் பார்த்த மாதிரி பொங்கலுக்கு வெளி ஆகி இருந்தா படம் எல்லாதயும் அடிச்சு நொறுக்கிருகும் பாஸ்

வருண் said...

காப்பி காரன்:

விஸ்வரூபம் பட்ஜெட் எவ்ளோ வென்று ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட தொகை என்ன??

உங்களால் தர முடியுமா?

வருண் said...

***///The guessing game has to end now. The makers of the biggest film of 2010 'Endhiran-The Robot', Sun Pictures have come out with the financials of the magnum opus starring Rajinikanth and Aishwarya Rai.

A release from the Sun Group announcing the Q3 financial results said: 'During this quarter, the Company released a blockbuster movie simultaneously in three languages titled 'Endhiran' in Tamil and 'Robot' in Telugu and Hindi. Superstar Rajinikanth starrer 'Endhiran' has earned a revenue of Rs 179 crore in total until now including Rs.15 crores expected towards satellite rights which has not been included in the revenues in this quarter. The Company has spent Rs.132 crores on the production of this blockbuster.

Kalanidhi Maran promoted Sun Television Network today reported a net profit of Rs 225.49 core for the quarter ending December 31, 2010 up by 48.4 per cent over the corresponding period of previous year.***

சன் வெளியிட்ட அதிகாரப் பூர்வமான தொகையே 132 கோடிதான். நீங்க என்னனா 160 கோடினு சொல்றீங்க. அவர்கள் செலவழிச்சதைவிட குறைத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!

Hope said...
This comment has been removed by the author.
Hope said...

நான் கமலுடைய விசிறி. ஆனால் இந்த படம் ஒரு அப்பட்டமான பொய். வியாபார நோக்கமும், அமெரிக்காவின் அடிமை ஆகிவிட்டார்.

drogba said...

Mr Vimal,
அவர் 90-95 கோடிக்கு அடகு வைத்ததாக எங்கு சொன்னார்? பெரிய வீடு நல்ல வசதிகளுடன் கூடிய வீடு அந்த விலைக்கு போகாதோ? கீழே காணப்படும் இணைப்பில் உள்ள வீடுகள் இந்தியாவில் உள்ளதுதான்.
http://omgtoptens.com/misc/structures/top-10-most-expensive-houses-of-india-2012-2/

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... முடிஞ்சது முடிஞ்சி போச்சி...

தகவல்களுக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

விஸ்வரூபம் முடிஞ்சிருச்சு...

இன்னும் எதற்கு அதை இழுத்துக்கிட்டு...

சரி நண்பரே...
தகவலுக்கு நன்றி...

வருண் said...

***Hope said...

நான் கமலுடைய விசிறி. ஆனால் இந்த படம் ஒரு அப்பட்டமான பொய். வியாபார நோக்கமும், அமெரிக்காவின் அடிமை ஆகிவிட்டார்.***

என்னவோ ஒரு ஆஸ்கரை பிச்சையாப் போட்டா போட்ட கணக்கு சரினு வரும்! :)))

வருண் said...

***drogba said...

Mr Vimal,
அவர் 90-95 கோடிக்கு அடகு வைத்ததாக எங்கு சொன்னார்? பெரிய வீடு நல்ல வசதிகளுடன் கூடிய வீடு அந்த விலைக்கு போகாதோ? கீழே காணப்படும் இணைப்பில் உள்ள வீடுகள் இந்தியாவில் உள்ளதுதான்.***

வாங்க ட்ரோக்பா! :)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... முடிஞ்சது முடிஞ்சி போச்சி...

தகவல்களுக்கு நன்றி...***

இதெல்லாம் நாளைய வரலாற்ரில் பேசப்படும், தலைவா!

நம்ம வரலாறை என்னைக்குமே தப்புத்தப்பா எழுதிவச்சிட்டுப் போயிடுவோம்.. அது வேணாமேனுதான்!

இல்லைனா சண்டியர் கரன்னு ஒரு புளுகுமூட்டை பொய்யா நிரப்பி வச்சுடுவான்!

வருண் said...

***சே. குமார் said...

விஸ்வரூபம் முடிஞ்சிருச்சு...

இன்னும் எதற்கு அதை இழுத்துக்கிட்டு...

சரி நண்பரே...
தகவலுக்கு நன்றி...***

இதுபோல் "டேட்டா" எல்லாம் வரலாறு, நண்பரே. இதுக்கு சாவே கெடையாது. எங்க முடிய??

Jayadev Das said...

* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!\\ இது படத்துக்கு வந்த பிரச்சினை அல்ல, ஓடாது என்னும் படத்தை போட்ட முதலாச்சும் வரும் என உறுதி செய்தது இவர்கள் எதிர்ப்புதான்.

வருண் எந்திரன் ரிலீஸ் நேரத்தில் டிக்கட் விலை என்ன இப்போ என்ன? விலே எரிபோன காலத்து வசூலை பழைய ரெட்டோடு ஒப்பிடுவது சரியாகுமா?