Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, March 20, 2018

ஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு ஆளாளுக்கு இரங்கல்?!

அவர் ஒரு நாத்திக அறிவியலாளன் இறந்துட்டார். உடனே இரங்கல் தெரிவிச்சு நானும் மேதை தனக்கும்  சொந்தம்னு காட்டிக்கணும். இதுதான் இன்றைய "உலகம்". "மக்கள் நீதி". "மய்யக் கருத்து".

 இவர் யாரு? பிறப்பால் ஆங்கிலேயர். ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைகழகத்தில் பேராசிரியர். தியரிடிகல் ஃபிசிஸிஸ்ட்!  முக்கியமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இது ஒண்ணும் அபூர்வமெல்லாம் இல்லை. நான் பார்த்தவரையில் பொதுவாக அறிவியல்த்துறையில் உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அதிகம்.

அறிவியல் சாதனைகளுக்குப் பெரிய பரிசுனா.. நோபல் பரிசு எதுவும் பெறவில்லை.  அதனால் இவர் குறைந்தவர் இல்லை.  இவர் ஒரு பெரிய தியரிடிகல் ஃபிசிசிஸ்ட்தான். அப்படி என்னதான் ஆராய்ச்சி பண்ணினார்? "ப்ளாக் ஹோல்ஸ்" னு சொல்றாங்க. அப்படினா? அதைப்பற்றி நான் கவனமாக இன்னும் படிக்கவில்லை!

இப்போலாம் ஜெயமோகன்தான் பிரபஞ்சம் பத்தி ரொம்ப எழுதுறார். இன்னொரு பக்கம் நம்ம ஹார்வேட் மேதை கமலஹாசன். விஞ்ஞானத் துறையில் உள்ளவன் எல்லாம் ஏதாவது ஒரு சின்ன மூலையில் ஆராய்ச்சி பண்ணி சின்ன சின்ன விசயங்களைப் புரிந்துகொள்ள போராடிக்கொண்டு இருக்கார்கள். ஆனால் ஜெயமோஹனும், கமலஹாசனும்தான் எல்லாம் தெரிந்ததுபோல் உளறித் தள்ளுகிறார்கள்.

 "Credit hog" னு சொல்வார்கள். என்ன எழவைனாலும் பேசி பெரிய ஆள்னு காட்டிக்கணும். உளறுவது புரியவில்லை என்றால். உளறுபவந்தான் ஊனன். கேட்பவனல்ல என்கிற உண்மை விளங்காத மடமை நிறைந்த "உலகம்" இது.

மனிதன் சின்னச் சின்னப் பிரச்சினைகளை என்றுமே அனுகுவதில்லை. ஏனென்றால் அவனால் அதற்கு சின்ன சின்ன தன் கட்டுப்பாட்டில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவதில்லை. பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தான் தீர்வு காண்பதுபோல் நடிக்கிறது. இதுதான் இன்றைய "உலகம்"! எலி வேட்டையை விட புலி வேட்டைக்குச் என்று அது கடித்து சாவதுதான் பெருமை.

சரி நம்ம  ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி வேற ஒருகோணத்தில்  அனுகுவோம்.

ஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு என்ன நோய்?

ஏன் அவர் வாதம் வந்ததுபோல் ஆனார்?

எ எல் எஸ் என்கிறார்கள் இவருக்கு வந்த வியாதி. இதுவும் ஒரு  neurodegenerative disease என்பார்கள். அவ்வகையை சேர்ந்த வியாதி. Huntington disease. Alzheimer's disease  போல "நியூரான்" பாதிக்கப் படுவது. ஏதாவது ம்யூட்டேட்டட் ஜீன் வீரியமற்ற ஒரு ப்ரோட்டீனை உருவாக்குவதால் ஏற்படும் செல் சிதைவுகள் அல்லது டெப்பாஸிட்கள்தான் இதற்குக் காரணம்.

நியுரான் என்றால் என்ன? நேர்வ் செல்லுக்குப் பெயர் நியூரான்.

எ எல் எஸ் வியாதி வந்தவர்களுக்கு மூளை பாதிக்காது! இந்த வியாதி மூளையை பாதிக்காது என்பதால்தான் ஸ்டிஃபென் ஹாக்கிங் உடைய சிந்தனைகள் பாதிக்கப் படவில்லை. அவர் அறிவியற்பணியை கடைசிவரை தொடர முடிந்தது.

நம்முடைய தசைகள் ஒழுங்காக இயங்க ஒரு சில நியூரான்கள், தசை செல்களோடு கம்யுனிகேட் செய்தால்தான் மூளை,  நியூரான் மூலம்  சொல்லும் விசயத்தை, தசைகள் செய்ய இயலும். இப்போ ஒரு காஃபி கப்பை எடுத்து அதிலுள்ள காஃபியை பருக வேண்டுமென்கிற சிந்தனை. மூளையில் தோன்றி, அது நியூரான்கள் மூலம் உங்க தசைகளுக்கு "எலெக்ட்ரிகல் சிக்னல்" ஆக கம்யுனிகேட் செய்யப் படும். அந்த தகவலை எடுத்து செல்வது "மோட்டார் நியூரான் கள்". அந்த மோட்டார் நியுரான்கள் தசைக்கு சொல்லி, தசை, எ டி பி, கால்சியம் போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்தி, ஆக்டின், மயோசின், ட்ரோப்போமைசின், ட்ரோப்பனின் என்று பல ப்ரோட்டின்களை பயன்படுத்தி செயல்படுத்தணும். நீங்க ஒரு சிப் காஃபி குடிப்பதற்கு எத்தனை ப்ரோட்டின்கள் வேலை செய்யணும்தெரியுமா? :) மலைத்துப் போய்விடுவீர்கள் அதையெல்லாம் கேட்டால்.

இந்த வியாதி வந்தவர்கள் உடலில் உள்ள மோட்டார் நியூரான்களில் குறைபாடு உண்டாகி, அது தசை செல்களிடம் ஒழுங்காக கம்யுனிகேட் பண்ண இயலாது. அதனால் உண்டாகும் விளைவே இந்நோயாளிகள் படும் கஷ்டங்கள்!

சரி, இந்த மோட்டார் நியுரான் செயல்திறன் இழந்ததால் ஏற்படும் வியாதிதான் எ எல் எஸ்?

இந்த நியூரான்கள் ஏன் செயல் திறன் இழக்குது?

ஜெனடிக்ஸ்.

நம்முடைய ஜீன்களில் ஏற்படும் சில "இடம் பெயர்தல்" கோளாறு. அதாவது ஜீனில் உள்ள கோளாறு, ப்ரோட்டீன்களில் கோளாறாகி, ப்ரோட்டீன்கள் செய்ய வேண்டியதை சரியாக செய்ய முடியாமல்ப் போய்விடுவதால்.

ஏன் இதுபோல் ம்யூட்டேசன் நடக்குது? இதில் வேடிக்கை என்னவென்றால் இயற்கையில் ம்யூட்டேசன் நடக்கவில்லை என்றால் நாமே உருவாகி இருக்க மாட்டோம். அதனால் ம்யூட்டேசனை ஒரேயடியாக குறை சொல்லிவிட முடியாது. இதுபோல் சில ம்யூட்டேசன்களால் ஒரு சிலர் பாதிக்கப்படுறாங்க. அவ்வளவே!



 Image result for motor neuron


மேலே உள்ள படத்தில் சரியாக வேலை செய்யும் மோட்டார் நியுரானும், நம்முடைய தசைகளும் எப்படி கம்யுனிக்கேட் பண்ணுகிறது என்கிறது காட்டப்பட்டுள்ளது.


Wednesday, May 21, 2014

அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்! மூன்று

அறிவியல் என்பது கடல்! அது சரி, எதுதான் கடல் இல்லை? தமிழும் கடல்தான்!  பெண்கள் மனமும் கடல்போல ஆழமானதுதான். உண்மைதான் அறிவியல்போலவே அவைகளும் கடல்போல ஆழமானதுதான். ஆமா, ஏகப்பட்ட கடல்கள் இருக்கு நம்மைச் சுத்தி! :-))

"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது  நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர்  அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ?

இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும்  ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!

நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது!  மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட்,  மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!

எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!

கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!

இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.

சரி, ப்ரோட்டீன்னா என்ன?

அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?



மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!

சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?


டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும்,  என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.

நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ  சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து படுவேகமாக உருவாக்கிவிடும்!

அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?




என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
 

பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.

நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!

இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))

-தொடரும்

******************

ப்ரோட்டீன் என்றால் என்னவென்று மறுபடியும் ஒரு முறை சொல்லி யிருக்கிறேன்.

இது ஒரு மீள் பதிவே!

This is for reminding myself to start writing about this science articles. Because of lack of time I could not write more. Trust me, writing this kind of article in "taminglish" takes much more time than writing a "hot topic post" and get easy attention!

Wednesday, June 12, 2013

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 2- அறிவியல் பகுதி-7

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி ஒண்ணைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ரெண்டாவது பகுதியைப் பார்ப்போம்.

ஒண்ணு தெரிந்துகொள்ளுங்கள்! க்ரிஃபித் இதுபோல் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது, ப்ரோட்டீன் என்கிற மூலக்கூறுதான் மரபுகுணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கிறது என்று பரவலாக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டது. மேலும் டி என் எ வின் கட்டமைப்பு, வடிவமைப்பு, அதாவது டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பு அறிவியளாலன் யாருக்கும்  தெரியாது. வாட்சன் மற்றும் க்ரிக், டி என் எ டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பை கண்டுபிடிக்கும் முன்னால நடந்த ஆராய்ச்சி, விளக்கம் இது!

நான் இங்கே பேசுவது அறிவிலாளன் உலகைப் பற்றி! ஒரு வேளை எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோஹன் மாதிரி பண்டாரங்களுக்கு, குறி சொல்றவனுக்கு, நம்ம ஊரு பூசாரிகளுக்கு, அப்புறம் ஆன்மீகவாதிகளுக்கு, பகவத்கீதை படிக்கிறவாளுக்கு, அந்தக்காலத்து க்ரியேஷனிஸ்ட்களுக்கு, பரிணாமத்தை இஷ்டத்துக்கு விமர்சிக்கும் அரைவேக்காடு களுக்கெல்லாம் டி என் எ பற்றி அப்போவே தெரிந்து இருக்கலாம்.

 நான் இங்கே பேசுவது, "எனக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளணும்"னு எண்ணுகிற சாதாரண அறிவியளாலன் பற்றி! நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், "தாந்தான் பெரிய மேதை! எனக்கு எல்லாம் தெரியும்" என்று பிரபஞ்சம் பற்றி வியாக்யாணம் பேசிப் பிதற்றும் பண்டாரங்கள் பற்றி அல்ல!  

******************************

அடுத்து க்ரிஃபித் என்ன செய்தார் என்றால்..

எக்ஸ்பெரிமெண்ட் 3:

நிம்மோனியா உருவாக்கும் பாக்டீரியாக்களை நாம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு சென்று அவைகளை கொன்றுவிடலாம். அதன் காரணமாகவே நாம் உணவுகள் பலவற்றையும் வேகவைத்து சாப்பிடுறோம் னுகூட சொல்லலாம்.

அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை (smooth strain) ஆட்டோக்லேவ் ல போட்டு பெப்பப்படுத்தி கொன்றுவிட்டார், கிரிஃபித்.

அப்படி இறந்த அந்த பாக்டீரியாவை, ஒரு எலிக்கு ஊசியின்மூலம் இன்ஞெக்ட் செய்து  கொடுத்தார், க்ரிஃபித்.

கீழே உள்ள படத்தில் இடது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க! அவர் எதிர்பார்த்தது போலவே


எலி உயிருடன் இருக்கு!


அந்த  அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை வெப்பத்தால் கொன்று அதை எலிக்கு கொடுத்ததால், அந்த  பாக்டிரியா ஏற்கனவே செத்துவிட்டதால், அதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், எலி உயிருடன் இருக்கிறது!


அவர் எதிர்பார்த்தது போலவே, அந்த ஹார்ம்ஃபுள் பாக்டீரியா, ஏற்கனவே வெப்பத்தால்  இறந்துபோய் விட்டதால், எலி உயிருடன் இருந்தது.


*********************************

எக்ஸ்பெரிமெண்ட் 4:

அதுக்கப்புறம் இன்னொரு எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறார், க்ரிஃபித்.

இதை ஏன் செய்றார்னு பலருக்குப் புரியாது, விளங்காது. ஆனால் அறிவியலாளன் எதையாவது இதுபோல் செய்வதால்தான் அவனால் இன்று இந்த அளவுக்கு அறிவியலில் முன்னேற்றமடைய முடிந்தது!

அப்படி என்ன செய்றார், க்ரிஃபித்?

கரடுமுரடான, ஆனால் ஹார்ம்லெஸ் பாக்டீரியா யும் (உயிருடனும்), செத்துப்போன (வெப்பத்தால் கொன்று), அந்த ஹார்ம்ஃபுள்ளான், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினையும் சேர்த்து எலிக்கு கொடுக்கிறார்.

இப்போ என்ன எதிர்பார்ப்பீங்க?

* கரடு முரடான ஹார்மெல்ஸ் பாக்டீரியாவை நம்ம உடல் (எலியின் உடலில் உள்ள) எதிர்ப்பு சக்தி கொன்னுடும். 

* அழகான கவசமணிந்த ஹார்ம்புள் பாக்டீரியாவைத் தான் ஏற்கனவே வெப்பம் கொன்னுபுடுச்சே?

* இப்போ எலி உயிருடன்தான் இருக்கும் ??

க்ரிஃபித் என்ன நெனச்சாருனு எனக்குத் தெரியலை! நான் மேலே சொன்னதுபோல்தான் நெனைப்பேன். அதாவது, எலி நிச்சயம் உயிருடன் இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேற!

கீழே உள்ள படத்தில் வலது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க!

எலி செத்துருச்சு!!!







இது எப்படிங்க சாத்தியம்??



அறிவியல்ல என்ன செய்வாங்கனா.. ஒரு முறை அதுபோல் ஏதாவது ஏடாகூடமாக ரிசல்ட் வந்தால், மறுமுறை கவனமாக அதே எக்ஸ்பெரிமெண்ட்டை செய்வார்கள். அப்படி  பல முறை செய்தாலும் எலி சாகிறது என்பதை அறிந்தார் க்ரிஃபித்.

கிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும்  மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (அறிவியல் ஆராய்ச்சி பத்திரிக்கைகள் மூலம்). (எனக்குத் தெரிய ஒரு சில மாணவர்கள் இதுபோல் ஏடாகூடமா ரிசல்ட் வந்தால் அதை மறைத்து விடுவார்கள்! :)).

அவர் என்ன சொன்னாருனா??

இந்த உயிருடன் உள்ள பாக்டீரியா எப்படியோ, செத்த பாக்டீரியாவுக்கு உயிர் வர வைத்துவிட்டது. ஹார்ம்ஃபுள் ஆன உயிரற்ற பாக்டீரியாவுக்கு உயிர் வந்ததால், அதுதான் எலியை கொன்னுடுச்சுனு!
 
இவருடைய இந்த ஆராய்ச்சிக்குறிப்பை, பெரிய பெரிய அறிவியல் மேதைகளெல்லாம், சாத்தியமில்லை என்பதுபோல்  பலவாறு விமர்சிச்சு, க்ரிஃபித் ஏதோ கவனக்குறைவாக எக்ஸ்பெரிமெண்ட் செய்துள்ளார்னுகூட என்றெல்லாம் சொல்லி  இருக்காங்க!

ஆனால் க்ரிஃபித் செய்த எக்ஸ்பரிமெண்ட்ல பிழை இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவர் ரிசல்ட் சரி என  நிரூபணம் ஆக பல ஆண்டுகள் ஆச்சு!

In English..

Griffith concluded that the type II-R (கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியா) had been "transformed" into the lethal III-S strain (அழகான, கவசம் போட்டு இருக்கும், ஹார்ம்ஃபுள் பாக்டீரியா) by a "transforming principle" that was somehow part of the dead III-S strain bacteria.


க்ரிஃபித்  எக்ஸ்பெரிமெண்ட் 4 விளைவை எப்படி நாம் இன்னைக்கு விளக்குவது? 

இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, டி என் எ தான் மரபு குணத்தை குழந்தைகளுக்கு எடுத்துட்டுப் போகுதுனு தெரிந்த காலகட்டத்தில், க்ரிஃபித் எக்ஸ்பெரிமஎண்டில் உண்மையிலே என்ன நடநததுனு சொல்லு! அப்படினு நீங்க கேட்டால்..

* அந்த "கவசத்துடன் உள்ள ஹார்ம்புள் பாக்டீரியா" வெப்பத்தால் இறந்தது என்பது உண்மைதான்.

* அந்த "கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியாவை" எலியின் எதிர்ப்பு சக்தி கொன்னுடும் என்பது உண்மைதான்.

ஆனால்..

* கவசமணிந்த இறந்த பாக்டீரியா, இறந்தாலும் அதன் இறந்த செல்லில் உள்ள  டி என் எ (ஜீன்கள்) எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கு! சரியா?

* அதேபோல் கரடு முரடான "கவசம் அணியாத" பாக்டீரியா எல்லாம் எதிர்ப்பு சக்தியால் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்தில், கரடுமுரடான பாக்டீரியா,  தன் சகோதரரான கவசமணிந்த பாக்டீரியாவின் "டி என் எ" வை, தன் டி என் எ போல பாவித்து, தன் செல்லுக்கு உள் எடுத்து, அதில் உள்ள "மரபு குணத்தை, ஜெனட்டிக் கோட்" டை வைத்து அந்த "கவசமணிந்த பாக்டீரியாவை"  தன் செல்லில் உருவாக்கி, அதன் சந்ததிகளை உருவாக்கி விடுகிறது! இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் "டி என் எ" மற்றும் ப்ரோட்டின்களைக் கொண்டு, உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியால், "கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க  பாக்டீரியாக்கள்" உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது! :)


-தொடரும்


தொடர்புடைய பதிவுகள்! 

Tuesday, June 11, 2013

க்ரிஃபித் ! பகுதி 1- அறிவியல் பகுதி-6

மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது.

அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர். நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம்.

அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்..

நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு:

 இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை  மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம்  கரடு முரடாத் தெரியுமாம். 

He called this as ROUGH STRAIN. 

கரடுமுரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால், அது உட்செல்லும்  விலங்கை கொல்ல முடியாது!!! அதற்கு காரணம் என்னனா.. அந்த பாக்டீரியா இன்னொரு விலங்கின் உடம்பில் சென்று, அதன் ரத்தத்தில் கலந்த உடன், பாக்டீரியா தன் இனத்தை இனப்பெருக்கம் மூலம் பெருக்கமுடியாமல் அதனை அந்த விலங்கின் எதிர்ப்பு சக்தி, அடித்து நொறுக்கி கொல்ல முடியும். அதாவது நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியல் ஸ்ட்ரைன், நம் செல்லுக்குச் சென்று, தன் வேலையை ஆரம்பிக்குமுன்னே, எளிதில் கொன்றுவிட முடியும். சரியா? இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன்  பார்க்க கரடு முரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால் அது உள்நுழையும் விலங்கை கொல்ல முடியாது.

இன்னும் புரியலையா?

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் எல்லாம் என்ன செய்யும்னா...

 நம்ம உடம்புக்குள்ள போயி ரத்தத்தில் கலக்கும். கலந்து நம்ம செல் க்கு உள்ள போயி, அவைகளுக்கு, அவைகளுடைய செல்லுக்குத்தேவையான எல்லா மூலக்கூறுகளையும் நம்ம செல்லை வச்சே உருவாக்கும்! அப்படி உருவாக்கிய அதையெல்லாம் வச்சு அதைப்போல இன்னொரு பாக்டீரியாவை உருவாக்கும். மேலும் எந்த செல்லில் இதை எல்லாம் செய்ததோ அந்த செல்லையும் கொன்றுவிடும். இதுபோல் பல ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்களை உருவாக்கி, நம்ம செல்களைஎல்லாம் கொன்னுடும், கடைசியில் நம்ம செல் எல்லா செத்ததனால் நம்மளயும் கொன்னுபுடும்.

ஆனால் அது போல் பாக்டீரியா உள்ள நுழைந்து இனப்பெருக்கம் செய்ய முயலும்போது..அதை நம்ம உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தடுக்க முயலும். எப்படி? 

அதுக்கு தேவையான மூலக்குறுகளை உருவாக்க தடைகள் ஏற்படுத்தி! அப்படி நம்ம எதிர்ப்பு சக்தியால் முடியலைனா, நம்ம ஏதாவது ஆண்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்டு அதை கொல்ல முயலுவோம். நம் எதிர்ப்பு சக்தியால் முடியாததை நம்ம சாப்பிடுற ஆண்ட்டி பயாட்டிக் செய்து சாதிக்கும். அதுவும் நம்ம உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி செல்களால் முடியலைனா, நம்ம கடவுளைப் போயி பார்க்க வேண்டியதுதான்- செத்தபிறகு!

சரி, இந்த கரடுமுரடான பாக்டீரியாவை எளிதில் நம்ம உடம்பு கொன்னுபுடும்.

 எக்ஸ்பெரிமெண்ட் 1:

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!

கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் உள்ளதைப் பாருங்க!  எலி இன்னும் உயிரோட இருக்கு! சரியா?






 

நிம்மோனியா-பாக்டிரியல் ஸ்ட்ரைன் ரெண்டு!

இது என்னனா, நிம்மோனியாவை நமக்குக் கொடுக்கும் இன்னொரு வகை பாக்டீரியா. இது பார்க்க ரொம்ப அழகா, சாஃப்ட்டா இருக்குமாம் (மைக்ராஸ்கோப்ல பார்க்கும்போது). 

He called this as SMOOTH STRAIN! 

ஆனால், இந்த பாக்டீரியா செல்லுக்கு ஒரு "பாதுகாப்புக் கவசம்" ஒண்ணு இருக்குமாம்! 

அது என்ன அது "பாதுகாப்புக் கவசம்"? 

இந்த பாக்டீரியல் டி என் எ மற்றும் ப்ரோட்டின்களை வைத்திருக்கும் செல்களை ஒரு "பாலி சாக்கர்ரைட்" "என்வெலப்" சுத்தி இருக்குமாம். அப்படி இருப்பதால், நம்ம எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியா செய்கிற இனப்பெருக்கத்தை தடுக்க முடியாதாம். ஆகையால், இந்த பாக்டீரியாவுக்குத் தேவையான, டி என் எ, ப்ரோட்டீன் எல்லாவற்றையும் நம்ம செல்லை பயன்படுத்தி தயாரிச்சு, நம்ம செல்லை எளிதில் கொன்னுபுடுமாம்! அப்படி இனப்பெருக்கம் செய்து நம்ம செல்லை எல்லாத்தையும் அழிச்சு நம்மளயும் கொன்னுபுடுமாம்! 

  எக்ஸ்பெரிமெண்ட் 2:

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!


கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் இருந்து ரெண்டாவது உள்ளதைப் பாருங்க! அந்த எலி இறந்து விடுகிறது! சரியா?




 இப்போ இதுவரை என்ன ஃப்ரெட்ரிக் க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்ல இருந்து  கத்து இருக்கோம்?

ஒரு முறை விவியூ பண்னுவோம்..

* நிம்மோனியா உருவாக்கும் ரெண்டு பாக்டீரியா வைத்திருந்தார் நம்ம க்ரிஃபித்.

* அதில்  பாக்டீரியா ஒண்ணு... பார்க்க கரடுமுரடா இருக்கும். ஆனால் அதை எலியோ, நாமோ எளிதில் "டாக்கிள்" செய்து நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தியை வச்சு ஒழிச்சுடலாம். அதனால் அந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன் ஹார்ம்லெஸ்!


* இன்னொரு வகை பாக்டீரியா ரெண்டு, பார்க்க அழகா சாஃப்ட்டா இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த பாக்ட்டீரியா செல்களை சுத்தி ஒரு "பாலிசாக்கரைட்" (கார்போஹைட்ரேட், க்ளுக்கோஸ்மாரி பல மூலக்கூறு ஒண்ணு சேர்ந்த) "கவசம்" இருக்கும். அதனால, இந்த பாக்டீரியா நம்ம எதிர்ப்பு சக்தியை எல்லாம் கடந்து போயி, நம்ம செல்லில் நுழைந்து, நம்ம செல்லை பயன்படுத்தி, தன் சந்ததிகளை உட்ருவாகி நம் செல்களை கொன்னுபுடும். கடைசியில் நம்மளும் போய் சேர்ந்துவிடுவாம்! இது ஒரு ஹார்ம்ஃபுள் பாக்டீரியா!

இப்போ பாக்டீரியா ஒண்ணு எப்படி இருக்கு பாருங்க!

 கீழே இடதுபக்கம் உள்ளது (அதனுடைய மேல்ப் பகுதி கரடுமுரட்ட இருக்கா? ஆனால் இது ஹார்ம்லெஸ்)

பாக்டீரியா ரெண்டு எப்படி இருக்குனு பாருங்க!

கவசம் போட்டது எப்படி இருக்கும்னு பாருங்க.! வலது பக்கம் உள்ளது. இது ஹார்ம்ஃபுள்)

 
கிரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட், முதல்ப்பகுதிதான் பார்த்து இருக்கோம். ரெண்டாவது பகுதியை அடுத்த பதிவில் பார்ப்போம்.

-தொடரும்

தொடர்புடைய பதிவுகள்!