Friday, July 19, 2013

23 குழந்தைகள் பரிதாப சாவு! மதிய உணவில் கலந்த விஷம் என்ன?


பீஹாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பரிதாபமாக இறந்ததாக செய்தி. என்ன காரணம் என்று யாருக்காவது விபரம் தெரியுமா?

 New Delhi/Patna: The forensic report on Bihar mid-day meal deaths is expected to be out on Friday even as the toll climbed to 23.

Union Minister for Human Resource Development M M Pallam Raju said the Centre is awaiting the forensic report to know the reason why "food was contaminated" causing deaths in a school in Bihar's Saran district.

Children in many other schools in the state have, meanwhile, as per reports, refused to eat the food provided as part of mid-day meals, saying their parents had asked them to stay away from such meals.

Police have yet to make any arrests in the case as the headmistress of the Chhapra school, Meena Devi, who has been named in the FIR, is on the run.

Jolted by the tragedy, the Bihar government is set to issue stringent instructions for quality check and improving infrastructural facilities.

“The notice for strict quality check of food served under mid-day meal scheme in schools across Bihar will be issued,” R Lakshamanan, director, mid-day meal programme, said.

He said inquiries into the Saran tragedy have revealed that standing orders like quality check of food and its maintenance by teachers and cooks were not observed in the Dharmasati Gandavan Primary School.

Lakshamanan said notwithstanding the ‘mishap’ at Chhapra and another at Madhubani on Wednesday in which 50 children fell ill, the mid-day meal scheme is continuing in other schools but with extra precaution.

He, however, admitted that in many schools children are refusing to take food packets provided to them under the programme.

The mid-day meal scheme, a flagship programme of the Central government, covers 70,000 schools of the state providing food to 1.25 crore children.



Bihar mid-day meal tragedy: Forensic report to be out today
மதிய உணவு சாப்பிடும் ஏழைக்குழந்தைகளைப் பார்த்தாலே கண்ணில் நீர் வருகிறது! அதில் விஷம் கலந்து கொடுத்து இருக்கார்கள்!


அதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்தப்பள்ளியின் பேராசிரியை தலைமறைவாகிவிட்டாராம்!!!

ஏழைக் குழந்தைகள், பரிதாபமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் இந்திய ஜனநாயகத்தில் தண்டிக்கப்படுவார்களா?

நான் படித்தவரைக்கும், சமையல் எண்ணெயில் பூச்சுக்கொல்லி மருந்து கலந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது பூச்சிக்கொல்லி மருந்துபயன்படுத்திய ஒரு குடுவையை சரியாகக் கழுவாமல் அதில் எணெணெய் ஊற்றி வைத்திருந்ததாகவும், அந்த எண்ணெய்யை சமையல் செய்ய பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால்..

சாரின் என்னும் விஷம். பூச்சுக்கொல்லி மருந்து



அந்தக்குழந்தைகள் பரிதாபமாக இறந்து இருப்பார்கள். சமீபத்தில் "chemical warfare" பற்றி கொஞ்சம் விரிவாகப் படித்துக் கொண்டு இருந்தேன். அதாவது sarin எனப்படும் வேதிப்பொருள், கெமிக்கல் ஏவுகணையாக பயன்படுத்தப் பட்டது என்றும், அதை பூச்சுக்கொல்லி மருந்தாக பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டு இருந்தது.

"சாரின் எப்படி விஷமாக செயல்படுது, அது உடலில் எப்படி "Acetyl choline" என்னும் "neurotransmitter"ரை குழப்பத்தில் உண்டாக்கி அதை உட்கொண்டவர்கள்களை (பூச்சிகளை) கொல்லுகிறது என்று நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இன்று பிஹாரில் நடந்த இந்த பரிதாப சாவுகளைப் பார்த்தால்.. சாரின் போன்ற ஒரு விஷம் கலந்து அதுதான் உண்மையில் குழந்தைகள் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தோணுகிறது.

 "Acetyl choline" மற்றும் "neurotransmitter" மற்றும் பூச்சுக்கொல்லி மருந்து எப்படி பூச்சிகளை கொல்லுகிறது பற்றி பின்னால் நேரமிருந்தால் பார்ப்போம்.

இப்போதைக்கு, எப்படி இந்தக்குழந்தைகள் சாப்பாட்டில் விஷம் கலந்தது என்று கண்டுபிடித்து, இந்தக்குழந்தைகளை பரிதாபமாக கொன்றவர்களுக்கு விரைவில் தக்க தண்டனை கிடைக்கிறதா என்பதைப் பார்ப்போம்!

8 comments:

Anonymous said...

உண்மையில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து கவனமின்மையால் சம்பவம் நிகழ்ந்தததா, அல்லது தலைமை ஆசிரியர், பணியாளர்கள் தரங்குறைந்த எண்ணெய்களை, கடைகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை வேண்டும் என்றே பயன்படுத்தியதால் மரணம் ஏற்பட்டதா? என்ற எண்ணம் எழுகின்றது. உண்மையில் இது விபத்து எனில் ஏன் தலைமை ஆசிரியர் தலைமறைவாக வேண்டும், ஆக, விசாரணைகள் நடத்தப்பட்டால் பல பூதங்கள் கிளம்பக் கூடும். கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடந்து 9-ம் ஆண்டில் பிகாரில் 23 குழந்தைகள் மரணித்து இருப்பது. இன்னும் ஏழைக் குழந்தைகள் மீது இந்த நாட்டுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகின்றது. :(

வருண் said...

வாங்க நிரஞ்சன் தம்பி: தமற்ற எண்ணெய் (என்ன எண்ணெயாக இருக்கட்டுமே) பயனபடுத்தினால் "அக்யூட் டெத்" என்பது பாஸிபிள் இல்லைங்க. நிச்சயம் கொடிய விஷம் கலந்து இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து கொடிய விஷம்தான். இருந்தாலும் என்ன செஒல்கிறார்கள்னு பொறுத்துப் பார்ப்போம்.

பீஹார் ஏற்கனவே ஒரு முட்டாப்பயளுக மாநிலம். அங்கே வாழும் மரமண்டைகளுக்கு ஏழைகள் உயிரைத் தன் உயிரைப்போல நினைக்க முடியாது.

கவியாழி said...

ஒரு மனிதனின் கவனக் குறைவு பலபேரை பழிவாங்கியது வருத்தமான செய்தி

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

வாங்க கண்ணதாசன் சார்!

அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு சமைக்கும்போது இதுபோல் தவறெல்லாம் நடக்காது. ஊரில் உள்ள ஏழைக்குழந்தைகள்தானேனு இளக்காரம், அதனால் வரும் கவனக்குறைவு.

தண்டனை இல்லாமல் மன்னிக்கப்பட்டு தப்பித்தால் இன்னும் பல நூறு குழந்தைகள் வரும் காலத்தில் பலியாகும்!

அனைவருக்கும் அன்பு  said...

நீங்கள் சொல்லுவது போல பூச்சி கொல்லி மறுத்து குடுவையை சரியாக சுத்தம் செய்யாமல் எண்ணையை ஊற்றி இருப்பார்கள் அதில் சமைத்த சமையலால் தான் குழந்தைகள் உயிர் பரிதாபமாக போய் இருக்கும் இப்படி பட்டவர்களை கண்டறிந்து அவர்களை வேரறுக்க வேண்டும் .இவர்களை நம்பி குழந்தைகளை நாள் முழுதும் அனுப்புகிறார்களே என்கிற பொறுப்புணர்ச்சி கொஞ்சமாவது இருந்திருந்தால் இப்படி பன்னுவார்களா? இவர்கள் எல்லாம் மனித இனமாகவே கருத்தில் கொள்ள கூடாது .

என்ன செய்து என்ன போன உயிர் திரும்ப கொண்டு வர முடியுமா ஏழைகள் உயிர் என்றால் இளக்காரம் தான் ? எப்போது மாறுமோ இந்நிலை ? வேதனை மட்டுமே மிச்சம் ?

'பரிவை' சே.குமார் said...

கவனக்குறைவால் பச்சிளம் குழந்தைகளை இழக்க நேரிட்டு விட்டதே...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என்னதான் தரமற்றதாக இருந்தாலும் எண்ணையினால் உய்ரிஷப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. நிச்சயம் கடுமையான விஷம் ஏதோ தெரியாமல் கலந்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் தலைமரைவானதற்குகாரணம் மக்களிடம் சிக்கி விட்டால் அதோ கதிதான். தமிழ்நாட்டில் சத்துணவு கல்வித் துறையில் அல்லாது வேறு துறையின் கீழியங்கி வருகிறது. சமையலறைக்குள் நுழைந்து ஆய்வு செய்ய இயலாது. இது போன்ற சம்பவங்களில் ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப் படுவார்கள். சமையல் செய்பவர்கள் பெரும்பாலும் உள்ளுர் மக்களாகவே இருப்பார்கள். அவர்கள் தப்பித்துக் கொள்ள தலைமை ஆசிரியர் பலிகடா ஆக்கப் படுவது வழக்கம். ஓரளவுக்கு மேல் சத்துணவுக்குள் தலை நுழைத்தால் போலிப் புகார்கள் பறக்கும்.
இந்த சம்பவம் தமிழ் நாட்டிலும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.