Wednesday, July 3, 2013

வயாகரா தோற்றது கவர்ச்சியான அவள் இதழ்களிடம்!

அவள் ஒரு 30-32 வயதுப்பெண், படு கவர்ச்சியாக இருந்தாள். பங்களூர் செல்லும் அந்த பேருந்தில்  கொடை ரோட்டில் ஏறினாள். அவள் ஏறி வந்து தன் சீட்டை தேடி கண்டு பிடிக்கும் முன்னே, பஸ்ஸில் இருந்த அனைத்து ஆண்களும் அவளை அளவு பார்த்தார்கள், "முன், பின்" எடை போட்டார்கள். புடவைதான் கட்டியிருந்தாள். அவள் தலையில் மல்லிகைச்சரம், அவள் பின்னழகுகளும், முன்னழகுகளும் கவர்ச்சியாக இருந்ததற்கு காரணம், அவள் இடையும், இடுப்பும் கொடிபோல இருந்தததுதான். ரெகுலளராக உடல்பயிற்சி செய்பவள் போல. உள்ளே வந்தவள் தான் ரிசர்வ் செய்த  தன் இருக்கையை தேடிக் கண்டு கொண்டாள்.

அந்த வரிசையில் அவள் இடது பக்கம் ஜன்னல் பக்கம் உள்ள இருக்கையில் அமரவேண்டும். அதன் பக்கத்து இருக்கையில் ஏற்கனவே அமர்ந்து இருந்த ஒரு 35 வயது ஆண், அவள் உள் நுழைவதற்காக எழுந்துகொண்டான். அவள் உள்ளே சென்று அமர்ந்துவிட்டு அவனுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை!

அதே வரிசையில் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன், அவள் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நடுவயது ஆளை பொறாமையுடன் பார்த்தான் . ஏதோ அந்த ஆளுக்கு  மட்டும் சொர்க்கத்தில் ஒரு இருக்கை கிடைத்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது போலும். அவன் வயது அப்படி!  பங்களூர் போய் சேரும் வரை, அவள் மற்றும் அருகில் அமர்ந்து இருந்த அந்த ஆளின் அசைவுகளை நொடிவிடாமல் வேடிக்கைப் பார்ப்பதில் அந்த மாணவன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை!

************************

"பவித்ரா! எங்கம்மாக்கு கண்ல ஒரு சர்ஜரி செய்யணுமாம். 50 ஆயிரம் இந்த மாதம் அனுப்பப்போறேன்"

"ஏன் இப்போ என்ன கண் தெரியாமலா இருக்கு?"

"வர வர மங்கிக்கிட்டே வருதாம்! சர்ஜரி செய்தால் நல்லாத் தெரியுமாம்"

"போன முறை பார்த்தப்போ எல்லாம் நல்ல்லாத்தானே இருந்தாங்க!"

"உனக்கென்ன பிரச்சினை இப்போ? அவங்களுக்கு நான் இந்தப் பணம் அனுப்பப்போறேன். உன்னிடம் பர்மிஷன் எல்லாம் கேட்கவில்லை! பொது அக்கவுண்ட்ல இருந்து அனுப்புறதால சொன்னேன்!"

"நீங்க முடிவு செய்துவிட்டால் எதுக்கு சொல்லணும்?"

"சரி, அடுத்த முறை உன்னிடம் சொல்லாமலே அனுப்பி விடுறேன். சரியா?"

********************************

"வேலையில் இருந்து வரும்போது எம் ஜி ரோட்ல சிக்னல்ல உங்க காரைப்  பார்த்தேன். யார் அந்தப் பொண்ணு, உங்க பக்கதிலே, ரொம்ப கொஞ்ச வயசா அழகா இருந்தாள்?"

"என்னுடைய கோ வொர்க்கர். அவ  கார்ல ஏதோ பிரச்சினை. அதனால அவளுக்கு ரைட் கொடுத்துட்டு வர்ரேன்!"

"ரொம்பப் பெரிய மனசுதான் உங்களுக்கு?"

"பவித்ரா! Will you STOP your bullshit?"

"இல்ல.. மத்த பெண்களிடம் நீங்க காட்டுற அன்பில்தான் உங்களுக்கு எவ்ளோ  பெரிய மனசுனு எனக்குத் தெரியுது"

"இதில் அன்பெல்லாம் எதுவும் இல்லை. ஒரு சின்ன உதவி. டெய்லி ரைட் கொடுக்கப் போவதில்லை. ஒரு நாள். அவ்ளோதான்"

"அப்படியா?! எதைப் பத்தி பேசிட்டு வந்தீங்க அந்த 40 மினுட்ஸ் ரைடின் போது?"

"எனக்கு ஞாபகம் இல்லை!"

"உங்களையே மறந்து பேசிட்டு வந்திருப்பீங்க, பாவம்!"

"வேணா அவ நம்பர் தர்ரேன். கூப்பிட்டு கேட்டுக்கோவேன்?"

"அவ்ளோ யோக்கியர்னா உண்மையான நம்பரை இல்லை தரணும்?"

" I can give you that! Here it is. I just gave her a ride. I did not fuck her! DO YOU UNDERSTAND?"

"சரி, கொடுங்க!"

************************************

"Is your wife crazy, Ram?"

"what happened?"

"She called me and asked me, what were we talking during your ride y'day"

"Are you serious?"

"She needs help, I think! I hung up immediately as she was getting on in my nerve. I am sorry I have to complain about her to you!"

" I apologize for her misbehavior. I never thought she would call you!"

"It's OK. I felt sorry for you!"

****************************************

நல்லவேளை, ராம் மற்றும் பவித்ரா தம்பதிகளுக்கு குழந்தை எதுவும் இல்லை. விவாகரத்து ஒரு வழியாக எளிதில் முடிந்து இப்போ இரண்டு வருடமாகிறது. பவித்ரா கவர்ச்சியானவள் என்பது அவளை ஆடையில்லாமல் பார்க்கும்போது மட்டுமல்லாமல் அவளுடன் வெளியே போகும்போது எல்லா ஆண்களும் அவளை எதிரில் பார்த்ததுடன் நிறுத்தாமல் திரும்பியும் பார்ப்பதில் இருந்து ராம்க்குத் தெரியும். ஆனால் அவள் வாயைத் திறந்து வம்பு பேச ஆரம்பித்தால், விஷமாக கக்குவாள்! அதன் பிறகு அவளிடம் அப்படியொரு உடல்வாகு இருந்தும் வயாகரா சாப்பிட்டாலும் அவளுடன் உடலுறவு வைத்துக்க முடியாது!  அந்த ரகசியம்  மட்டும் அவள் ஆம்படையானாக வாழ்ந்து "அனுபவித்த" அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

பங்களூர் புறநகர்ப் பகுதியில் பஸ் வந்து சேர்ந்தது. அவள் மட்டும் அந்த ஸ்டாப்பில் இறங்கினாள். அவள் இறங்கியவுடன், இரவு முழுவதும் தூங்காமல் வந்த  அந்த கல்லூரி மாணவன் ஒரு வழியாக தூங்க ஆரம்பித்தான்.

 "ஹாய் பவித்ரா!" என்று பஸ்ஸில் இருந்து இறங்கிய அவளை தன் காரில் ஏற்றிக்கொண்டாள் தோழி ஒருத்தி.

பாவம் அந்த மாணவனுக்கு எப்படித் தெரியும், அந்த அழகியின் அருகில் அமர்ந்து பயணித்தவர்தான் அவளை அறவே வெறுக்கும், அவளுடைய எக்ஸ் ஆம்படையான் என்று? தனித் தனியாக ரிசெர்வ் செய்தாலும் எப்படியோ எதார்த்தமாக ஒரே பஸ்ஸில் அடுத்த அடுத்த இருக்கைகளை ரிசெர்வ் செய்து பெற்றிருக்கார்கள் அந்த மாஜி தம்பதிகள். பஸ்ஸில் அமரும்போது ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும்  பொது இட நாகரிகம் கருதி இருவருமே அதை பெரிது படுத்தாமல் 12 மணி நேரத்தை கடத்தினார்கள்.

It was a LONG NIGHT not only for that college boy but for the couple too!

16 comments:

நம்பள்கி said...

Nice story! Very well written. பேச்சில் விஷம் கக்காமல் அழகே சுத்தாமாக இல்லாத [மனைவியுடன்]பெண்ணுடன்எத்தனை முறை வயாக்கரா இல்லாமல் [உடல்] உறவு வைத்துக்கொள்ளமுடியும்...

மேஜர் சுந்தர்ராஜன் சொல்கிராமதிரி படியுங்கள்...

All women are fair (here it means beautiful) at dark...எல்லாப் பெண்களும் விளைக்கை அணைத்தால் அழகிகளே!

வருண் said...

வாங்க நம்பள்கி!

இது சும்மா ஒரு கதைதான். வெறும் கற்பனை..

நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால், இதேபோல் பெண்கள் ஆண்களிடம் அழகு எதிர்பார்த்தாலும் ரொம்பக் கஷ்டம்தான். ஆமா, நம்ம என்னைக்கு பெண்கள் உணர்வுகளை மதிச்சோம், அதையெல்லாம் யோசிக்க? :))))

Avargal Unmaigal said...

நம்பள்கி தமிழக பெண்கள் எல்லாம் அழகாக இருக்கதான் என்னவோ தமிழகத்து அம்மா விளக்கை( பவர்கட்) அணைக்கிறார்களோ

Avargal Unmaigal said...

பெண்கள் ஆண்களிடம் அழககை எதிர்பார்பதில்லை அவர்களின் பர்ஸின் எடையைதான் பார்ப்பார்கள் வருண்

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் கவர்ச்சி என்றாலும் மனம் ஒத்து போகாவிட்டால் நரகம்தான் அந்த பந்தமே தேவையில்லாமல் போய்விடும் இல்லையா...?

கிரி said...

வருண் இந்தக் கதை அருமை...என்ன.. நீங்க கொஞ்சம் கூட கவர்ச்சி சேர்த்துட்டீங்க :-)

நீதி என்னவென்றால் அது ஐஸ்வர்யா ராயாகவே இருந்தாலும் எதுக்கு எடுத்தாலும் சண்டைப் போட்டால் / சந்தேகப்பட்டால் கணவனுக்கு அவள் வெறுப்பாகத் தான் தெரிவாள். நீங்க சொன்ன மாதிரி வயாகரா போட்டாலும் வேலைக்காகாது.

இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆள் பார்க்க சல்மான்கான் மாதிரி இருந்து நடவடிக்கையில் சைக்கோவாக இருந்தால்... எனவே கூட இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அருமை.

எல்லோரும் முதலில் விரும்புவது உடல் அழகை தான் என்றாலும் இறுதியில் நினைப்பது என்னவோ துணை புரிந்து கொள்பவராக இருந்தால் போதும் என்பது தான்.

இரண்டுமே வாய்க்கபெற்றவர்கள் பாக்கிய சாலிகள்.

வருண் said...

****Avargal Unmaigal said...

பெண்கள் ஆண்களிடம் அழககை எதிர்பார்பதில்லை அவர்களின் பர்ஸின் எடையைதான் பார்ப்பார்கள் வருண்***

உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! :)

வருண் said...

***MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் கவர்ச்சி என்றாலும் மனம் ஒத்து போகாவிட்டால் நரகம்தான் அந்த பந்தமே தேவையில்லாமல் போய்விடும் இல்லையா...?***

உண்மைதாங்க, நாஞ்சில் மனோ! :)

கோவை மு சரளா said...

இருவருக்கும் பொருந்தும் என்று சொன்னதால் வேறு எதுவம் பேச வழியில்லை ஆனாலும் ஒரு கதைக்கான அம்சங்கள் நிறைந்து இருக்கு வாழ்த்துக்கள் சுவாரஸ்ய நடையுடன் கூடிய பதிவிற்கு

வருண் said...

***கிரி said...

வருண் இந்தக் கதை அருமை...என்ன.. நீங்க கொஞ்சம் கூட கவர்ச்சி சேர்த்துட்டீங்க :-)***

வாங்க கிரி. நன்றிங்க!

நெஜம்மாவே, நான் குறைவாத்தான் கவர்ச்சி சேர்த்ததாக நெனச்சுண்டு இருந்தேன். நல்லவேளை சொன்னிங்க. எழுதுறவங்களை விட வாசிக்கிறவங்கதான் சரியா எடைபோட முடியும்போல!:)

சங்கவி said...

வருண் இதில் நிறைய உண்மையான அனுபவம் இருக்கும் போல.. முக்கியமா அந்த பேருந்தில்...

சே. குமார் said...

அருமையான கதை...

ராஜி said...

நல்லா இருக்கு. முடிவு எதிர்பாராதது

காமக் கிழத்தன் said...

அன்பில்லாத மனைவிமீது கணவனுக்குக் காமம் வராது என்ற உங்கள் கருத்து, ’செக்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை’ என்று நினைக்கும் கணவர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.

‘அது’ விஷயத்தில் பலவீனமான பெண் பித்தர்களுக்குப் பொருந்தாதுதானே?கலாகுமரன் said...

தலைப்பு ஒரு முரண்சுவையா இருந்தாலும் உள்ள (உள்ளம்/இருக்கும்) அழகே அழகுன்னு தெளிவா சொல்லுது கதை.

Avargal Unmaigal said...


@வருண் //உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! :)///

எல்லாம் உங்கள் பதிவை படித்துவருவதால் கிடைத்த தைரியம்தான் நண்பரே