Sunday, July 21, 2013

யோகா, தியானம் செய்றவாளுக்கு அற்ப ஆயுசாமே?!

பகவத்கீதை படிங்கோ! யோகா பண்ணுங்கோ! தியானம் பண்ணுங்கோ! கெட்ட சிந்தனைகளை எல்லாம் தூக்கி குப்பையில் எறிங்கோ! இப்படி எல்லாம் அறிவுரை சொல்றவாள நீங்களும் பார்த்து இருக்கலாம். பொதுவா இளவயதில் எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சுட்டு சாவு பயம் வந்ததும்தான் இதுமாரி தத்துவம் எல்லாம் பேசுவா!

சரி, அப்படியெல்லாம் செய்தால் என்னாங்காணும் ஆகும்?னு கேட்டால்  என்ன சொல்லுவா?

* நீண்ட ஆயுள் உனக்குனா?

* இல்லைனா நிம்மதியா சீக்கிரம் போய் சேர்ந்துடுவனா???

என்ன இப்படி ஒரு சந்தேகம், உமக்கு? ணு கேள்வி கேட்காமல் பதிலை சொல்லுங்காணும்!

உலகில் இன்று நடப்பதென்ன? எல்லாமே அரைக்கிணறு தாண்டுறதுதான்.

ஒரு சிலர், எனக்கு ரத்தக் கொதிப்பு இருந்துச்சு (எப்படி கண்டு பிடிச்ச? ஹோமியோபதிக்காரன் சொன்னானா?), நான் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்தினேன், தியானம் பண்ணினேன், யோகா பண்ணினேன்  எல்லாம் போயிடுச்சுனு சிலவருடங்களோ மாதங்களோ சாப்பிட்டுக்கிட்டு இருந்த மாத்திரையை நிறுத்திடுறாங்க! ஆனால் "அல்லொப்பதி"ப் படிப் பார்த்தால் ஒரு சில மாதங்கள் இந்த மருந்தினை எடுத்துவிட்டால் அதன் பிறகு வாழ்நாள் பூராம் அதே மருந்து இல்லைனா அதேபோல் இன்னொரு மருந்தை சாப்பிடணும் என்பதே விதி!

நம்மாளு சாப்பிட்டுக்கிட்டு இருந்த மாத்திரையை நிறுத்தி கொஞ்சநாள் ஒழுங்கா வண்டி ஓடும். அப்புறம் மறுபடியும் திடீர்னுஒரு நாள் வேர்த்துக் கொட்டுச்சு, மூச்சுவிட முடியலை, என்னவோ பண்ணுதுனு ஹோமியோபதி டாக்டரிடம் போகாமல், அல்லோப்பதி வைத்தியரிடம் நம்பிக்கையே இல்லாமல் போய் நிக்கிறது. போனால், அவன் சொல்லுவான் "உனக்கு இதயத்திலே ஆர்ட்டரில 95% ப்ளாக்கேஜ் இருக்கு, ஆஞியோ ப்ளாஸ்ட்டி செய்யணும்" னு. நான் மாமிசம் சாப்பிடுற்து இல்லையே? யோகா பண்ணுறேன்! தியானம் பண்ணுறேன்! னு ஒப்பாரி வைக்கிறது! அதானல என்ன? என்ன எழவை சாப்பிட்டயோ, என்ன பண்ணினயோ, உனக்கு ஆர்ட்டரில 95% ப்ளாக்கேஜ் இருக்குடா முண்டம்!னு சொல்லுவான் அவன்!

உடனே அல்லோப்பதி வைத்தியப்படி, ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டி  பண்ணிப்புட்டு மறுபடியும் அல்லோப்பதி மருந்தை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் லட்ச லட்சமா பில்லைப் போட்டுட்டாங்கனு திட்டிண்டே அலையிறது.

இதுபோதாதுனு சில அரைவேக்காடுகள், பதிவுலகில் மற்றும் பிற இடங்களில் வாய் கிழிய பிரசங்கம்! அதான் யோகா, ஹோமியோபதி, தியானம் மண்ணாங்கட்டிணு வியாக்யாணம் பேசுறது!  எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாதிரித்தான் பேசுவாணுக. ஆமா, ஹார்ட் அட்டாக் வர்ர வரைக்கும்! ஆனால் உண்மையில் "இவனுக"  என்ன பண்ணுறாணுகனு பார்த்தால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றுதான் போயிக்கிட்டு இருக்கும். மனசாட்சியை எல்லாம் பகவான் கிருஷ்ணனுக்கு காவு கொடுத்துடுவாணுக! மனசாட்சியே இல்லாமல், வாய் கிழிய, யோகா பண்ணு, மூத்திரத்தைக் குடி, பகவத்கீதை படிணு ஊருக்கு உபதேசம். இதில் நம்ம கடவுளா வாழ்ந்து செத்த சத்ய சாய்பாபாகூட விதிவிலக்கு இல்லை!

நான் சொல்ல வர்ரது என்னனா..

இந்த மண்டுகள் சொல்வதுபோல யோகா பண்ணி, தியானம் பண்ணி வாழ்றவனும் பலர் அற்ப ஆயிசுல போயிடுறான் என்பதே உண்மை!

இல்லைனு எவனாவது தில்லு இருந்தா சொல்லு பார்ப்போம்!

இங்கே கவனி!

உன்னைத்தான்!!! யோகா, தியானம்னு அலையிறவனா நீ? அப்போ கவனி!

* ஒழுங்கா மரியாதையா வருடம் ஒருமுறை physical check up, பண்ணித் தொலை! ஹோமியோபதிக்காரனிடம் இல்லை! அல்லோப்பதி வைத்தியனிடம் போயி! அப்போத்தான் யோகா எப்படி உதவுதுனு தெரியும்! சரியா?

 * மரியாதையா லைஃப் இன்சூரண்ஸ் ஒரு நல்ல தொகைக்கு செய்து வை. அப்புறம் போயி யோகா பண்ணு இல்லைனா காம சூத்திரம் படி, என்ன கருமாந்திரத்தை வேணா பண்ணு! 

புரியுதா?