Friday, May 16, 2014

பழைய நண்பரை, இ-மெயில், போன் எண் இல்லாமல் எப்படி தேடுவது?

நட்பு வட்டம் நாட்கள் ஆக ஆக மாறிக்கொண்டேதான் போகுது. புது நாடு, புது நண்பர்கள் என்று ஆரம்பித்து, புது ஊரு, புது நண்பர்கள்னு ஆகி வாழ்க்கை சக்கரம் ஓடுது. இருந்தாலும் ஒரு சில பழைய நண்பர்களை வாழ்நாள் பூராம் மறப்பது கஷ்டம். திடீர்னு அவரகளுடன் செலவழித்த அந்த இனிமையான நாட்கள் ஞாபகம் வந்து,

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே! 
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்?

னு சேர்ந்து பழசை எல்லாம் பேசணும்போல தோனுது!

 


அவர்களோட அடித்துக்கொண்டு உருண்ட, கருத்து வேறுபாடு வந்து கோபித்துக்கொண்டதெல்லாம் மறந்து போயிடுது.

You just feel like you want to say "Hi" to them. You do expect them to say a "hi" back. As you were a good friend to them you deserve a response back from them. Or not?

சரினு, இ-மெயிலை தோண்டி எடுத்து ஒரு பத்து இருபது இ-மெயில் அனுப்பியும் பதிலே வரலை! ரெண்டு தர ஃபோன் பண்ணி (அது இப்போ யாரு நம்பரோ?) மெசேஜ் விட்டாலும் இ-மெயிலையும் காணோம், ஒரு எழவையும் காணோம்.

சரி, "செத்துட்டான் விடு"னு போகவும் முடியவில்லை! இப்படி ஒரு பதிவை எழுதி "நண்பர்"  வாசிச்சு "ரெஸ்பாண்ட்" பண்ணுவான்னு ஒரு பதிவு இது.

Only in these occasions some of us realize how weak-minded we are though we pretend like that we are very tough! :(

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறதி என்றும் நல்லது...

என்றாவது ஒருநாள் சந்திப்போம்...!

வருண் said...

தனபாலன்: மறதி நல்லதுதான். அது இருவருக்குமே ஒரே அளவு (அதிகமாகவோ, குறைவாகவோ) இருந்தால் மட்டுமே! அப்படி இல்லையெனில் கஷ்டம்தான்.