கடவுள் நம்பிக்கை, பேய் நம்பிக்கை, மறுபிறவியில் நம்பிக்கை, எதிலுமே நம்பிக்கை இல்லாமைனு இப்படி பலவிதமான நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் நம்மோடு வாழும் பலருக்கும் உண்டு. இதெல்லாம் ஒருவருடைய "பர்சனல் பிலீஃப்"தான். இருந்தாலும் ஒருவர் தன்னை ஆத்திகரா இல்லை நாத்திகரா? னு வலையுலகில்கூட ஏதாவது ஒரு வகையில் சொல்லித்தான் விடுகிறார்கள். எதார்த்தமான ஒரு நிகழ்வைச் சொல்லும்போது, கோயிலுக்குப் போனேன் மனதில் நிம்மதி வந்துவிட்டதுனு சொல்லிடுவாங்க. நாத்திகர்கள், அதுபோல் சொல்வதை வலுக்கட்டாயமாகத் தவிர்ப்பார்கள்!
இதுதான் நாம் வாழும் நம்முலகம்!
இப்போ என் உலகத்தைப் பார்ப்போமா?
எனக்குத் தெரிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு கிருத்தவர். ஆனால் சர்ச்சுக்கு போறாரோ இல்லையோ, யோகா, தியானம் அது இதுனு இறங்கிக்கொண்டு இருக்கிறார். வயதில் ரொம்ப மூத்தவர். வாழ்க்கையில் ரொம்பவே அடி பட்டவர்னு நெனைக்கிறேன். அதனால் தற்போது ஆன்மீகம் அல்லது ஸ்பிரிச்சுவல் வாழ்க்கையில் நம்பிக்கை உள்ளவர்.
அவருடன் பேசும்போது திரும்பத் திரும்ப அவரிடம் இருந்து வரும் கேள்விகள் அல்லது அதைத் தொடர்ந்து வரும் அறிவுரைகள் என்னனா...
"நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?"
"நாம் ஏன் பிறந்தோம்?"
What is the purpose of "your life"?
There must be a reason why we are born!
இதுபோல் கேள்விகளை என்னிடம் கேட்பார். ஏன் என்றால் அவரும் தீவிரமாக இக்கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயல்கிறார். சீரியஸாகவே யோசனைகள் செய்து முயன்று கொண்டிருக்கிறார்.
சரி அவர், "பர்ப்பஸ் ஆஃப் லைஃப்" என்னனு கண்டுபிடிச்சுக்கட்டும்! நம்மளாலே இதெல்லாம் முடியாது! Wish you good luck! னு அவரிடம் சொல்லிட்டு இதிலிருந்து ஒதுங்கி விட முயன்றாலும் என்னை விடமாட்டார்.
நீயும் அதுபோல் யோசிக்கணும், அதற்கு விடை கண்டு பிடிக்கணும் என்பார் கனிவுடன். மறுபடியும்...நாம் இறந்த பிறகு நிச்சயம் ஏதோ நடக்கும். சரியா? என்பார். நிச்சயம் நாம் பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு, அதை நாம் சாகுமுன் புரிந்துகொள்ளணும் என்பார். ஒரே விசயத்தையே வேற வேற விதமாக அனுகி இதே கேள்விகளை ப்லவிதமாகக் கேட்பார். நாம் ஏன் பிறந்தோம்னு புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் வாழ்வது அர்த்தமில்லாதது என்பார். அவர் சும்மா எல்லாம் அப்படி சொல்லவில்லை! இதெற்கெல்லாம் விடை கண்டுபிடிக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை அது. அதனாலதான் சொல்கிறார்.
எனக்கு அவர் பதில் தேடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னால் அதற்கு பதில் தேடி கண்டுபிடிக்க முடியாது! என்று நன்கு தெரியும். என்னைப்பற்றி எனக்குத் தெரியாதா?
"உடனே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" னு சொல்லாதீங்க! அது சும்மா ஒரு பழமொழி, உங்களை மோட்டிவேட் பண்ணுவதற்காக சொல்லப்பட்டது. அவ்ளோதான். அப்சொலூட் மீனிங்னு பார்த்தால் அது உண்மை கெடையாது.
அதனால், சில் கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பது என்னால் முடியாது என்று நம்புவதால் அதில் நான் அதிக ஆர்வம் காட்ட மாட்டேன். அவர் சொல்வதை எல்லாம் ஏனோதானோனு கேட்டுவிட்டு ஒரு மாதிரி "நாகரிகமாக" த் தட்டிக் கழிப்பேன். என்னைப் பொருத்தவரையில் நான் ஒரு "ப்ராக்டிக்கல் பேர்சன்". என்னால் முடியாத ஒன்றை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒத்துக்கொண்டு, என்னால் முடிந்தவற்றை செய்ய முயல்வேன். இதை அவரிடம் பல முறை சொல்லியும் இருக்கிறேன்.
என் மனநிலை புரிந்த அவருக்கு என்னைப் பார்த்தால் அதிசயமாக இருக்கும். இப்படியும் ஒரு ஜடமா?னு அவர் என்னைப் பார்ப்பார். அவரைப் பார்த்தால் எனக்கு வினோதமாக இருக்கும். என்னைப் பொருத்தவரையில் இவர் கற்பனையில் கண்டுபிடிக்கும் விடையும் தவறானதாகத்தான் இருக்கும் என்கிற என் நம்பிக்கை.
இருந்தாலும் அடுத்த முறை பார்க்கும்போது இதேபோல் ஒரு வாதம் அவரிடம் நடக்கும். இது ஒரு தொடர்கதை..
*****************
அதைவிட இன்னொரு கொடுமை! எனக்குத் தெரிய ஒரு வெள்ளைக்கார அம்மா இருக்காங்க. அவர்களுக்கு மறுபிறவி மற்றும் முந்தைய பிறவி வாழ்க்கை என்பதிலெல்லாம் சீரியஸாவே நம்பிக்கை இருக்கு. ஆமா, அமெரிக்காவில் வாழும் வெள்ளையர்தான். ஏதாவது "குறி சொல்பவர்போல்" "சைக்கிக்" ட்ட போயி எதையாவது கேட்டுட்டு வந்து, முன்பிறவியில் இவர்தான் என் அப்பாவாம், தங்கையாம்னு கண்டுபிடிச்சு சீரியஸா சொல்லுவாங்க. சிரிக்காமல் இதையெல்லாம் கேட்பதே படு கஷ்டமாக இருக்கும். அவர் நம்பிக்கையை மதித்து சரி சரினு கேட்டுக்குவேன்.
மறுபடியும் நான் இதையெல்லாம் (மறுபிறவி பற்றி) அசட்டையாக கேட்பதைப் பார்த்து அவருக்கு என் மேல் பரிதாபம் உண்டாகும்! அவர் என்னைப்பார்த்து புன்னகைப்பார். எனக்கு அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும்!நானும் அவரைப்பார்த்து மறுபுன்னகை செய்வேன்.
*********************
இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா.. மனிதர்கள் மற்றும் அவர்கள் நம்பிக்கைகள் பலவிதம். ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல! ஒவ்வொருவர் வளர்க்கப்பட்ட விதம் வேறுபடுவதால அவர்களுடைய "கம்ஃபோர்ட் சோன்" ம் மாறுபடுகிறது.
பார்ப்பனர்கள் வீட்டில் பொதுவாக ஜீசஸையும் அல்லாவையும் சொல்லி சில நல்ல விசயங்களை அவர்களைக் காட்டி அல்லது அவர்கள் போதித்ததை முன் மாதிரியாகக் காட்டி வளர்ப்பதில்லை! அதேபோல் இஸ்லாமியர்கள், கிருஷ்டியன்ஸ் வீட்டில் ராமர், கிருஷ்ணர் அவதாரங்களை முன் மாதிரியாக எடுக்கச்சொல்லி சொல்லி வளர்ப்பதில்லை! ஆக, அவர்கள் எப்படி "ஊட்டப்பட்டு" வளர்க்கப் படுகிறார்களோ அதற்கேற்ப அவர்கள் சிந்தனைகள் இருக்கும். இப்படித்தான் மத வெறியர்களும், நாத்திகர்களும், தீவிரவாதிகளும் நம்மில் உருவாகிறார்கள்.
It all depends on how you are brainwashed! That's all! ஒரு சிலருக்கு அதிக போதனைகள் "பேக் ஃபயர்" ஆவதும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
என்னைக்கேட்டால் இதெல்லாம் நம்முடைய ஆறாவது அறிவால் வந்த விணை!
அவ்ளோதான்.
****************************
பொதுவாக எனக்கு சொந்தக்கதை எழுதுவதே பிடிக்காது. என் பிரச்சினை என்னோடுனு உலகிற்கு இதையெல்லாம் சொல்வதில்லை. எனக்கு இப்போ ஒரு கோடி ரூபாய் தேவைனு சொன்னால் யாரு கொண்டு வந்து கொடுக்கப் போறாங்க? :) இல்லை எனக்குத் தலைவலினு சொன்னால் மாத்திரை வாங்கி நாந்தான் சாப்பிடணும். மற்றவர்களிடம் நம் பிரச்சினையைச் சொல்லி அவர்களை ஏன் கஷ்டப்படுத்தணும்?னு ஒரு "பெரிய" அல்லது "சின்ன" மனசு!
சரி, இதைமட்டும் சொல்லிக்கிறேன்..
எங்கவீட்டில் தோட்டம் வச்சிருக்கோம்! மல்லிகை, ரோஜா, தக்காளி, கறிவேப்பிலைனு இப்படி பல செடிகள் உள்ள தோட்டங்கள்!
தயவு செய்து உங்க கற்பனையை இங்கேயே நிறுத்தவும்! :)
உடனே ஏதோ ஏக்கர் ஏக்கரா தோட்டம் போட்டு பூக்களையும் காய்கறிகளையும் வருடா வருடம் அறுவடை செய்றோம்னு தப்பா நெனச்சுடாதீங்க.
சும்மா தொட்டியிலே போடுகிற தோட்டம்தான். பொதுவாக தண்ணீர், தொட்டி, மண்னு வாங்கி இதுக்கு செலவழிக்கிற காசுல 10% கூட திரும்ப வராது. சும்மா ஒரு பொழுதுபோக்கு! அவ்ளோதான்.
இவைகளால் ஒரு பத்து கார்பன் டை ஆக்ஸைட் மூலக்குறுகள் அத்தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு பொல்லுஷன் குறைந்தால் சரிதான் என்கிற ஒரு பொதுநலம்தான். :)
எங்க தோட்டம் பாருங்க!!!
ரிலாக்ஸ் ப்ளீஸ்!
தக்காளிக்காய் தெரியுதா? |
இது கறிவேப்பிலைச் செடி |
ரோஜா மொட்டு மலரப்போது (இது சிவப்பு ரோஜா) |
மல்லிகைச் செடியில் சில மல்லிகைகள் புன்னகைக்குதா? |
ரோஸ் கலர் ரோஜாவும் தக்காளியும் ஏதோ ரகசியம் பேசுறாங்க |
இது மலர்ந்த சிவப்பு கலர் ரோஜா |
27 comments:
Miltonஇன் Paradise Lostஐ நினைவு படுத்துகிறது உங்க நண்பரின் இறப்புக்கு பின்னான வாழ்கை குறித்த ஆராய்ச்சி:)
அதில் ஆதமும் ஏவாளும் இரவைப்பற்றி பயந்து கொண்டிருப்பார்கள். அப்போ சூரியன் இருக்காது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும், ஆனால் இரவு வந்ததும் வானில் தோன்றிய வர்ண ஜாலங்களை பார்த்து வியந்து போவார்கள். அதுபோல உயிர்(சூரியன்)அற்ற வாழ்வும் மிக அழகான ஒன்றாய் கூட இருக்கலாமே என்று கவிஞர் கேட்பார்:))
எது எப்படியோ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு உங்க உளறல்:))
**தயவு செய்து உங்க கற்பனையை இங்கேயே நிறுத்தவும்! :)**
நல்லவேளை ஸ்டாப் சொன்னீங்க, நான் பாட்டுக்கு போய்கிட்டே இருந்தேன்:))
beautiful garden:)) beautiful photos too:))
நம்பிக்கை இருக்கோ இல்லையோ சொல்பவரின் நம்பிக்கைக்காக கேட்கிறீர்களே..பெரிய விசயம் வருண்..பலரும் அப்படி இருப்பதில்லை. அட ஆமாம், ஆறாம் அறிவினால் ஏற்படும் பிரச்சினை தான். அந்த வெள்ளைக்கார அம்மணி சந்திரமுகி பார்த்திருக்க வாய்ப்பில்லையே..சரி, ஏதேனும் ஆங்கிலப்படம் அப்படி இருந்துருக்குமோ என்னவோ, அது எதுக்கு நமக்கு? சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு அம்மணி தான் தான் ஜோதா அக்பர் என்று சொன்னது நினைவு வந்துவிட்டது :)
உங்கள் தோட்டம் அழகாய் உள்ளது, வாழ்த்துக்கள்!
//"நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?"
"நாம் ஏன் பிறந்தோம்?"
What is the purpose of "your life"?
There must be a reason why we are born!............................................................... எனக்கு அவர் பதில் தேடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னால் அதற்கு பதில் தேடி கண்டுபிடிக்க முடியாது!//
இப்படி ஒப்புதல் தருவது ஓர் அரிய நற்குணம்
இந்தக் குணம், இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பல ’பெரிய மனிதர்களுக்கு’ இருந்திருந்தால், எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு இந்த மனித இனம் பலியாகியிருக்காது. சிந்திக்கும் திறன் மேம்பட்டிருக்கும்.
உங்களின் சீரிய எண்ணங்களை மிக எளிய நடையில் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி வருண்.
//மண்னு வாங்கி இதுக்கு செலவழிக்கிற காசுல 10% கூட திரும்ப வராது. சும்மா ஒரு பொழுதுபோக்கு! அவ்ளோதான்.//
Fabulous !
கருவேப்பிலை எப்படி வளர்த்தீங்க வருண் ??
உங்க ஊர்ல நல்ல வெயில் போலிருக்கு எங்க வீட்டு தக்காளிஸ் பழுக்க மாட்டாங்க :( வெயில் போச்சு
தொட்டியில் வளர்க்கும்போது prune செய்தீங்களா தக்காளி செடியை ??
தோட்டம் போட்டு பராமரிக்கிரீங்க இதுல இருந்து என்ன தெரியுது நம்ம வருணுக்கு ரொம்ப டைம் கிடைக்குது. யாரப்ப்பா வருணுக்கு மேனேஜர் அவரை நீயூஜெர்ஸிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்கப்பா..
வருண் ரோஜா தோட்டம் போட்டீங்க சரி அதில் வளர்ந்த ரோஜாவை யாருக்கு பறித்து கொடுத்தீங்க அதை சொல்லவே இல்லை நீங்க
///Mythily kasthuri rengan said... Miltonஇன் Paradise Lostஐ நினைவு படுத்துகிறது///
இந்த டீச்சரம்மா அதிகமாக இங்கிலீஷ் புக் படிக்கிறாங்க அவங்கிட்ட கொஞ்சாம் ஜாக்கிரதையா இருக்கணும் இல்லைன்னா நம்மளையும் இங்கிலீஷ் படிக்க வைச்சுபுடுவாங்க போல இருக்கு நாங்க எல்லாம் படிக்கும் போதே டீச்சருக்கு அல்வா கொடுத்து இங்கீலீஷ் படிக்காம தப்பிச்ச ஆள் ஆச்சே....
என்ன வருண் இவ்வளவு நேரமும் உளறீநீங்களா நான் உண்மையை சொன்னீர்களோ என்று நினைத்தேன்.ஆஹா அழகான அந்த கார்டன் ஐ பார்க்க விடாமல் ஸ்டாப் பண்ணிவிட்டீர்களே. அதனால் நான் பார்க்கவேயில்லை. ஓ நீங்கள் கற்பனையை சொன்னீர்களா.அப்ப சரி தொடர்கிறேன். ஆமா என் வலைப்பக்கமும் வரலாமே.கவிதைப் போட்டிக்கான கவிதைகளை காண. தங்கள் கருத்துகளை காண ஆவலாக உள்ளேன். மிக்க நன்றி சகோ தொடர வாழ்த்துக்கள் ....!
***Mythily kasthuri rengan said...
Miltonஇன் Paradise Lostஐ நினைவு படுத்துகிறது உங்க நண்பரின் இறப்புக்கு பின்னான வாழ்கை குறித்த ஆராய்ச்சி:)
அதில் ஆதமும் ஏவாளும் இரவைப்பற்றி பயந்து கொண்டிருப்பார்கள். அப்போ சூரியன் இருக்காது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும், ஆனால் இரவு வந்ததும் வானில் தோன்றிய வர்ண ஜாலங்களை பார்த்து வியந்து போவார்கள். அதுபோல உயிர்(சூரியன்)அற்ற வாழ்வும் மிக அழகான ஒன்றாய் கூட இருக்கலாமே என்று கவிஞர் கேட்பார்:))
எது எப்படியோ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு உங்க உளறல்:))***
மில்டன் கவிதைகள் எல்லாம் படித்ததே இல்லை. நீங்க சொல்லித்தான் தெரிந்து கொள்கிறேன், மைதிலி! :)
*** Mythily kasthuri rengan said...
beautiful garden:)) beautiful photos too:)) ***
Your comment also filled with "beautifuls"! Thanks :-)
***நம்பிக்கை இருக்கோ இல்லையோ சொல்பவரின் நம்பிக்கைக்காக கேட்கிறீர்களே..பெரிய விசயம் வருண்..பலரும் அப்படி இருப்பதில்லை.***
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் நான் ரொம்ப "நல்லவனாக" நடந்துக்குவேன். நம்மள நம்பி வந்துட்டாங்கள்ல? இதுவும் விருந்தோம்பல் அல்லது உபசரிப்புத்தான், கிரேஸ்! :)
***//"நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்?"
"நாம் ஏன் பிறந்தோம்?"
What is the purpose of "your life"?
There must be a reason why we are born!............................................................... எனக்கு அவர் பதில் தேடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் என்னால் அதற்கு பதில் தேடி கண்டுபிடிக்க முடியாது!//
இப்படி ஒப்புதல் தருவது ஓர் அரிய நற்குணம்
இந்தக் குணம், இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பல ’பெரிய மனிதர்களுக்கு’ இருந்திருந்தால், எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு இந்த மனித இனம் பலியாகியிருக்காது. சிந்திக்கும் திறன் மேம்பட்டிருக்கும்.
உங்களின் சீரிய எண்ணங்களை மிக எளிய நடையில் இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி வருண்.***
வாங்க, உலகளந்த நம்பி! :) மதங்களும் கடவுளும் மனிதனை பண்படுத்த உருவாக்கியவைகள் என்பது என் புரிதல்!
ஆனால் இத்தனை மதங்கள், கடவுள்களை உருவாக்கிய பிறகும் மனிதன் இன்னும் பண்படவில்லை! அதனால்தான் அவனுக்கு இன்னும் கடவுளும் மதங்களும் தேவைப்படுகின்றன!
கருத்துரைக்கு நன்றிங்க, நம்பி! :)
*** Angelin said...
//மண்னு வாங்கி இதுக்கு செலவழிக்கிற காசுல 10% கூட திரும்ப வராது. சும்மா ஒரு பொழுதுபோக்கு! அவ்ளோதான்.//
Fabulous !***
வாங்க ஏஞ்சலின்! :) தாங்க்ஸ்ங்க!
*** கருவேப்பிலை எப்படி வளர்த்தீங்க வருண் ??***
கறிவேப்பிலை நண்பர் ஒருவர் கொடுத்தாரு. அதை பராமரிப்பது ரொம்ப எளிதுங்க. சம்மரில் 4 மாதங்கள்தான் வெளியே இருக்கும். அக்டோபர் இறுதியில் வீட்டுக்குள் போய்விடும்.
சின்னத்தொட்டியில் வைத்தால், நெறைய குட்டிக்குட்டிச் செடியாக பக்கத்தில் வளரும்ங்க.(வாழைமரம் போல) நான் ஒரு செடியை வைத்து இப்போ 100 கறிவேப்பிலை செடியா குட்டி குட்டியா வந்து நிக்கிது! ஒரு 5-6 பேருக்கு நானே கறிவேப்பிலைச் செடி கொடுத்து இருக்கேன்!
***உங்க ஊர்ல நல்ல வெயில் போலிருக்கு எங்க வீட்டு தக்காளிஸ் பழுக்க மாட்டாங்க :(***
4 மாதங்கள் நல்ல வெயில் இருக்கும். தக்காளி, மல்லிகை எல்லாம் வெயிலில்தான் செழிப்பாக வளருகிறது. இங்கே தக்காளி நன்றாகப் பழுக்கிறது. ஆனால் அணிலார் வந்து நமக்கு முன்னால சாப்பிட்டு விடுவார். இந்த வருடம், பறவைகளுக்கு போடும் உணவை அணில் சாப்பிட்டுவிடுவதால் தக்காளியை சீண்ட மாட்டேன் என்கிறது.
*** வெயில் போச்சு
தொட்டியில் வளர்க்கும்போது prune செய்தீங்களா தக்காளி செடியை ??**
ப்ரூன் எல்லாம் ரெகுலராக செய்வதில்லைங்க. அப்பப்போ ஏதாவது மூட் இருந்தால் பழைய கிளைகளை கிள்ளி எரிவதுண்டு. :)
இந்த வருடம், நல்ல வெயில் மற்றும் மழை. தக்காளியும் மல்லிகையும் நல்லாவே வருதுங்க. :)
***Avargal Unmaigal said...
தோட்டம் போட்டு பராமரிக்கிரீங்க இதுல இருந்து என்ன தெரியுது நம்ம வருணுக்கு ரொம்ப டைம் கிடைக்குது. யாரப்ப்பா வருணுக்கு மேனேஜர் அவரை நீயூஜெர்ஸிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்கப்பா..****
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு தல. நம்ம எப்படி நமது நேரத்த்தை செலவழிக்கிறோம் என்பதை நாம்தான் முடிவு செய்றோம், தல. :)
***Avargal Unmaigal said...
வருண் ரோஜா தோட்டம் போட்டீங்க சரி அதில் வளர்ந்த ரோஜாவை யாருக்கு பறித்து கொடுத்தீங்க அதை சொல்லவே இல்லை நீங்க***
ரோஜா, மல்லிகை எல்லாம் பறிப்பதே இல்லைங்க. செடிக்குத்தான் அவைகள் சொந்தம்னு விட்டுடுறது. தக்காளிப் பழங்கள் மட்டும் பறித்து சமைக்காமலே சாப்பிட்டு விடுவதுண்டு. :)
***Iniya said...
என்ன வருண் இவ்வளவு நேரமும் உளறீநீங்களா நான் உண்மையை சொன்னீர்களோ என்று நினைத்தேன்.ஆஹா அழகான அந்த கார்டன் ஐ பார்க்க விடாமல் ஸ்டாப் பண்ணிவிட்டீர்களே. அதனால் நான் பார்க்கவேயில்லை. ஓ நீங்கள் கற்பனையை சொன்னீர்களா.அப்ப சரி தொடர்கிறேன். ஆமா என் வலைப்பக்கமும் வரலாமே.கவிதைப் போட்டிக்கான கவிதைகளை காண. தங்கள் கருத்துகளை காண ஆவலாக உள்ளேன். மிக்க நன்றி சகோ தொடர வாழ்த்துக்கள் ....!***
வாங்க இனியா! உங்க கவிதையை என்னனு பார்த்து கருத்துச் சொல்றேங்க.
நீங்க தமிழ்மணத்தில் இணைப்பதில்லைபோல இருக்கு. அதான் தவறவிட்டுவிட்டேன். :(
உங்க உளறல்கள் எல்லாமே உண்மையில் நன்றாக இருக்கு. நீங்கள் ஒரு நாத்திகராக இருப்பதால்தான் 'வருணின் சுமாரான உளறல்கள்' என்று பெயர் வைத்தீர்கள். அதுவே நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராகவோ, ஆன்மிகவாதியாகவோ(இரண்டிற்கும் வித்தியாசம் உண்டோ?) இருந்திருந்தால் 'தத்துவ உளறல்கள்', என்றோ 'ஞான உளறல்கள்' என்றோ பெயர் வைத்திருப்பீர்கள்.
இந்த வாதங்களில் உள்ள சுவாரஸ்யமே இரண்டு பேராலுமே தீர்க்கமாக 'இதுதான் முடிந்த முடிவு' என்ற முடிவுக்கு வரமுடியாது என்பதுதான்.
உங்கள் எழுத்திலும் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களிலும் ஒரு 'மாறுதல்' தெரிகின்றது.தொடரட்டும்..........
**இந்த டீச்சரம்மா அதிகமாக இங்கிலீஷ் புக் படிக்கிறாங்க**
அப்படியெல்லாம் இல்ல சகா. நான் பாடமா எடுத்து படிச்சதே எனக்கு பிடிச்ச இலக்கியம் தான். மற்றபடி தமிழ் புத்தகங்கள் அளவுக்கு ஆங்கிலம் இன்னும் படிக்கவில்லை என்பது தான் உண்மை:)
@வருண்
எனக்கும் பூக்களை செடியிலேயே விடுவது தான் பிடிக்கும்:))so nice of you:)
நாலு மாதம் தொடர்ச்சியா வெயில் எங்களுக்கு நோ சான்ஸ் ..ஆனால் ஒரு பஞ்சாபி பெரியவர் ஏப்ரலில் தக்காளி விதைத்து ஜூலையில் 1400 தக்காளி ஹார்வஸ்ட் செய்திருக்கார் எங்க ஊரில் .கின்னசிலும் அவர் பேர்வந்திருக்கு .. மணதக்காளியை கூட வளர வைச்சிட்டேன் ..கரிவேப்பிலை மட்டும் எனக்கு எட்டா இலை :)
btw காயாக இருந்தாலும் பழுக்க வைக்க முடியாமல் போனாலும் டோன்ட் வொர்ரி :) அதையும் சமைக்கலாம் .டேஸ்ட் அபாரம் ..
***உங்க உளறல்கள் எல்லாமே உண்மையில் நன்றாக இருக்கு. நீங்கள் ஒரு நாத்திகராக இருப்பதால்தான் 'வருணின் சுமாரான உளறல்கள்' என்று பெயர் வைத்தீர்கள். அதுவே நீங்கள் கடவுள் நம்பிக்கையாளராகவோ, ஆன்மிகவாதியாகவோ(இரண்டிற்கும் வித்தியாசம் உண்டோ?) இருந்திருந்தால் 'தத்துவ உளறல்கள்', என்றோ 'ஞான உளறல்கள்' என்றோ பெயர் வைத்திருப்பீர்கள்.
இந்த வாதங்களில் உள்ள சுவாரஸ்யமே இரண்டு பேராலுமே தீர்க்கமாக 'இதுதான் முடிந்த முடிவு' என்ற முடிவுக்கு வரமுடியாது என்பதுதான்.
உங்கள் எழுத்திலும் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களிலும் ஒரு 'மாறுதல்' தெரிகின்றது.தொடரட்டும்.......... ***
வாங்க சார்! :)
உங்க கருத்துரைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி, சார்! :)
****@வருண்
எனக்கும் பூக்களை செடியிலேயே விடுவது தான் பிடிக்கும்:))so nice of you:)***
:-)
***கரிவேப்பிலை மட்டும் எனக்கு எட்டா இலை :)***
எங்க மாநிலத்தில் சம்மர்ல வெயில் கொளுத்தும். நார்த்ல அல்லது கனடாவில் இருப்பவர்களுக்கு உங்க நிலைமைதான்.
ஃப்ளாரிடா மற்றும் கலிஃபோர்னியா மாநிலங்களிலும் கறிவேப்பிலை செடி வைத்துக்கொள்ள முடியாது. காரணம் என்னனா? அதில் இருந்து பரவும் ஒரு கிருமி, அம்மாநிலங்களில் உள்ள ஆரஞ்சு, லெமன் போன்ற செடிகளுக்குப் பரவினால் அவைகளை அழித்துவிடும் என்பதால் அவர்கள் ஆசைப்பட்டாலும் கறிவேப்பிலை செடி வளர்க்க முடியாது.
***btw காயாக இருந்தாலும் பழுக்க வைக்க முடியாமல் போனாலும் டோன்ட் வொர்ரி :) அதையும் சமைக்கலாம் .டேஸ்ட் அபாரம் ***
தக்காளி செடியிலேயே எளிதாகப் பழுத்து விடுகிறதுங்க. :)
அருமையான பகிர்வு
தொடருங்கள்
ரொம்ப நாளா இந்த relaxplease படிக்கிறேன். மே மாதத்துக்கு அப்புறம் எழுத்தில் மாற்றம் தெரிகிறது. இந்த மாதிரி கனிவா, அன்பா எழுதுவது யார்??மின்னாடி எழுதியவர் ஆஸிட் கொண்டு எழுதுவார். இப்ப ரெண்டு மாதம் மயில் இரகால் எழுதுவது யார்?? இப்பவே உண்மை தெரியணும்.
எங்க வீட்லயும் இந்த வருஷம் தக்காளி செம அறுவடைங்க :) non ஸ்டாப்பா காய்க்குது !! so far i've harvested nearly about 45 yummy ones :)
நேரமிருக்கும்போது படங்களை பாருங்க இங்கே http://kaagidhapookal.blogspot.co.uk/2014/09/loud-1.html
Post a Comment