Tuesday, September 23, 2014

தமிழ்நாட்டில் ஏன் அம்பேத்கார்கள் உருவாகவில்லை?!

காந்தி, என்னதான் நம் தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப் பற்று அதிகம். காரணம்? காந்தி ஒரு பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம்!  காந்தி, கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை என்பதை நினைவில் கொள்ளுவோம்! சப்போஸ், காந்தியே ஒரு தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர் போராடி இவ்வளவு உயரத்திற்கு ஒரு பெரிய தலைவராக வந்திருக்க முடியுமா? என்றால்..,,சாண்ஸே இல்லை!  என்பதே கசப்பான உண்மை!

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள திறந்த மனது இருக்கிறதா உங்களிடம்?

தொடருங்கள்!

காந்தி, உயர் சாதியில் பிறந்தது அவர் தப்பில்லை! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா பிறந்து வளர்ந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! ஏன்? இருந்து இருக்க முடியாது! ஏன்? சக இந்துக்கள், தாழ்த்தப் பட்டவரான தன்னை இழிவு படுத்துவதை தாங்க முடியாமல், இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம், இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்!

காந்தி மேலே எனக்கு நெறையவே மரியாதை எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே கற்றுக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு நெறையவே அனுகூலங்கள்  இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. காந்தி பொறந்தது குஜராத்! நம்ம தமிழ்நாடு இல்லை! ஒரு வேளை அவர் தமிழ்நாட்டில் பொறந்து இருந்தால்  காந்தியும் வீணாப்போயி இருப்பார்!

அடுத்து நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு படித்து முன்னேறி மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்! இச்சாதனையை  உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கணும்! என்னைத் தவறா புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை நான் பெரிதாகச் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி வளர்ந்து  நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வளவு தன்னம்பிக்கை இருந்து இருக்கணும்?

ஒரு வேளை அம்பேத்கார் தமிழ் நாட்டில் பொறந்து இருந்தால்? 

நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு!  அம்பேத்கார் படித்து மேலே வளரவிடாமல் நம்ம ஊர் உயர்சாதி முட்டாள்களால், சுத்தமாக தடுத்து ஒடுக்கப்பட்டு அழிந்து இருப்பார்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கப்பட்டு இருப்பார்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா என்ன? மூளையைக் கசக்கி யோசிக்கவும்!

பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப் பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்று கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும் வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல் "அப்யூஸ்" செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அந்தக் குற்றச்சாட்டு  ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா? அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை, அவர்களுக்குகாக இரங்கச்சொல்லி இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும் மனிதர்கள்தான், ஏன் அவர்களை நாம் இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்?னு யோசிக்கவாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை இருந்ததா? இல்லை திறந்த மனதுதான் இருந்ததா? னு பார்த்தால்... கெடையவே கெடையாது என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டுத்  தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! கொஞ்சம்கூட பொது நோக்கில்லாமல் இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் எப்போதுமே முழு கவனம் செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல்களையோ பற்றி இவங்க ஒருபோதிலும் கவலைப்பட்டதே இல்லை! வடிகட்டின சுயநலம்!

பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்கொண்டு வந்து அவர்களை இழிவுபடுத்திய  "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!

அம்பேத்கார்கள் நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக அந்த காலகட்டத்தில் உருவாக முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனுதான் தோனுது. நிச்சயம் அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, உலகறியாமலே வளர்ந்து,  வாழ்ந்து பிறகு நாமறியாமலே மறைந்தும்தான் இருப்பார்கள். அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம்?  தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்களந்தான் நிச்சயம் இதில்  பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டாமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் இவ்விசயத்தில் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.

ரொம்ப யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்) எல்லாவற்றிற்கும் காரணம்னு பொத்தாம் பொதுவாக சொல்லிட்டுப் போகலாம்! இல்லைனா இருக்கவே இருக்காரு நம்ம கடவுள். ஆமா, அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் சீரழிக்கும்போது?

குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த சிந்தனைகளின் தொகுப்புதான் இது!

பின்குறிப்பு: இது ஒரு காலத்தில் எழுதிய பதிவு. ஆமாம் மீள் பதிவு இது! அதனால் காரசாரமாக இருக்கும்! பயந்துடாதீங்க! :)

8 comments:

Avargal Unmaigal said...

உண்மையை உரத்து சொல்லும் பதிவு... முதல் பாராவில் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மையே....

'பரிவை' சே.குமார் said...

உண்மையைச் சொல்லும் கட்டுரை...
வாழ்த்துக்கள்.

மின் வாசகம் said...

நல்ல கட்டுரை. அம்பேத்கார் என்ற ஒரு அறிவுஞானி மட்டும் இந்தியாவில் உதிக்காமல் இருந்திருந்தால் இந்தியா என்றோ இருண்ட தேசமாக மாறி யிருக்கும். அவருடைய அறிவின் முன் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று தோன்றும். ஆனால் அவரது வழிகாட்டலை இந்த இந்திய தேசம் முழுமையாக ஏற்கத் தவறியதன் விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகின்றோம்.

என்ன தான் ஜாதியத்தை துறந்தாலும் இடைநிலை , உயர்நிலை சாதிகளில் பிறந்தவர்களால் முழுமையான ஒடுக்கப்பட்டோரது வலிகளை உணர முடியாது. ஒரு தாயின் பிரசவ வலியை மற்றொரு தாய் தான் உணர இயலும் என்பது போல ஒரு தலித்தின் வலிதனை ஒடுக்கப்பட்டவரால் மட்டுமே உணர இயலும்.

ஆனால் காந்தி தான் பெரியவர், பெரியார் தான் பெரியவர் என்றோ, காந்தி தாழ்ந்தவர் என்றோ பெரியார் தாழ்ந்தவர் என வகைதொகையாக பேஸ்புக் பக்கங்களில் விவாதிக்கும் போக்கில் எனக்கு உடன்பாடில்லை.

அந்தக் காலக் கட்டத்தில் அவரவரது சிந்தனை, சூழல், அறிவிற்கு எட்டிய விதத்தில் காந்தியும், பெரியாரும், அம்பேத்காரும் போராடியுள்ளார்கள். காந்தியால் தமது ஆரிய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க இயலவில்லை அதே சமயம் ஆரிய சமய நெறிக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் தலித்களையும், திராவிடர்களையும் இன்ன பிற மக்களையும் கொண்டு வந்து உயர்த்தலாம் என கணித்தார். ஆனால் அது மிகப் பெரிய தவறும் கூட என்பது அவருக்கும் தெரியும். ஆனால் வன்முறைகளை தவிர்க்க சில சமயம் அவ்வாறான அணுகுமுறைகள் அவசியம்.

பெரியாரோ ஆரியத்தை முற்றாக வெறுத்தார். ஆரியக் கலாச்சாரம் ஏனைய மக்களை ஒடுக்குவதாக கருதி போராடினார். குறிப்பாக தென்னிந்தியாவில் சமூகம், கல்வி, வேலைகள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை முதலில் நீக்கினால் மெல்ல மெல்ல இடைநிலை சாதிகளும் பார்ப்பனியத்தைக் கைவிடும் எனக் கருதினார். அவரது பார்வை மேலிருந்து கீழ் என்பதாக இருந்தது.

அம்பேத்கார் திராவிட மொழி பேசப்படாத ஆரிய நாட்டில் பிறந்தவர் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து ஆரிய மதத்தால் ஒடுக்கப்படுவதை நிறுத்தவும் சம உரிமையோடு வாழவும் இந்து மதத்தைச் சீர்த்திருத்த முயன்றார், சில சமயம் வெற்றியும் கண்டார். ஆனால் பார்ப்பனியத்தின் பிடியை உடைக்காமல் ஏற்றதாழ்வையும் சாதியத்தை களைய முடியவில்லை. அதனால் ஓரேயடியா பார்ப்பனித்தில் இருந்து விலகி பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

இவர்கள் மூவருமே பார்ப்பனியத்தையும் ஏற்ற தாழ்வுகளையும் ஒழிக்க முயன்றவர்கள். காந்தி பார்ப்பனியத்தை மெல்ல மெல்ல களையலாம் என்று எண்ணினார், பெரியார் ஒரேயடியாக களையலாம் என்று நினைத்தார், அம்ப்தேர்கார் பார்ப்பனியத்தை விட்டு விலகுவதே நல்லது என்று நினைத்தார்.

ஆனால் ஆரிய மாயையினால் மக்களில் பெரும்பாலானோர் பார்ப்பனியத்தை கைவிட முடியவில்லை என்பதே உண்மை. அதனால் தான் எவரது எண்ணமும் இன்றளவும் முழுமையடையவில்லை.

மின் வாசகம் said...

மற்றபடி மற்றுமொரு அம்பேத்கார் உருவாகாமைக்கு தமிழகம் மட்டுமல்ல எந்தவொரு இந்திய மாநிலௌம் தோற்றுத் தான் போயுள்ளது. தலித்களும் சாதி அடையாள அரசியலுக்குள் தள்ளப்பட்டதன் விளைவு, அம்ப்தேகார் போன்ற பெருந்தலைவரைக் கூட சாதி தலைவர்களாக்கப்பட்டு மழுங்கடிக்கப்பட்டது தான். அம்பேத்காரை கொண்டாடும் தலித்கள் கூட சாதிய அடிப்படையில் ஆதரிக்கின்றனரே ஒழிய அவரது கருத்தியல் அடிப்படையில் ஆதரிப்பது குறைவு. இது அம்பேத்கர் மட்டுமில்லை அனைத்து சாதிகளில் பிறந்த அனைத்து தலைவர்களுக்குமான கொடுமையான நிலை.

மற்றுமொரு அம்பேத்கார் தமிழகத்தில் மட்டுமில்லை விதர்பாவில் கூட உருவாக முடியாமல் குட்டப்பட்டு குனிய வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தான் வருகின்றனர் ஆதிக்க சாதிகளால்.

என்று நம் மக்கள் மதங்களையும் சாதிகளையும் துறக்க நினைப்பரோ அன்று தான் ஒழிக்கப்பட்டு வரும் எண்ணற்ற அம்ப்தேகார்களை உலகமறியும்

மகிழ்நிறை said...

wonderful boss:)இவங்க இம்சை தாங்க முடியாமல் தான் நம்ம பெரியார்தாசன் போல அப்பவே அம்பேத்கர் புத்த மதத்தை தழுவினார். நாம இந்த தலைமுறைல பிறந்ததுக்கு ரொம்ப சந்தோசபட்டுக்கணும். கருப்பாயி என்கிற நூர்ஜஹான் எனும் ஒரு நாவல் இருக்கு. டைம் கிடைச்ச, வாய்ப்பு கெடச்சா படிச்சு பாருங்க. தங்கதமிழ் நாடு ஒரு காலத்தில் எப்டி இருந்துச்சு என்கிற உண்மை முகத்தில் அறையும். இப்போவரை டீச்சர்கள் சிலருக்கே ஜாதி வெறி இருக்கு என்பது எவ்ளோ கொடுமையான விஷயம். மீள் பதிவு!!! அப்போ நீங்கலாம் அப்பவே அப்படின்னு சொல்லுங்க:)))

saamaaniyan said...

" தேசபிதா " என்ற நிலையில், காந்தியை விமர்சனத்துக்கு அப்பால் கொண்டு நிறுத்திவிட்ட நிலையில் உங்கள் பதிவு தைரியமான ஒன்று ! ஆமாம் காந்தியிடமும் குறைகள் இருந்தன ! அவரின் " புத்திசாலி அரசியல்வாதி " பக்கத்தை பற்றி யாரும் விமர்சிப்பது கிடையாது !

அம்பேத்கார் பற்றிய உங்கள் எண்ணம் முற்றிலும் உண்மை !

பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் சமூக அவலங்களை தாக்கியதில் காந்தியைவிட பெரியார் மேல் என நான் நினைத்தாலும் தங்களின்,

" பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்கொண்டு வந்து அவர்களை இழிவுபடுத்திய "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை! "

வரிகள், நிறைய யோசிக்க வைக்கின்றன !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

வருண் said...

@ நண்பர் மதுரைத் தமிழன்
@ நண்பர் குமார்
@ நண்பர் மாநகரன்
@ நண்பி மைதிலி
@ நண்பர் சாம்

உங்கள் அனைவருடைய கருத்துப் பகிர்தலகளுக்கும் நன்றி!

"தமிழன் பெருமை" பேசுவதுடன், "தமிழன் சிறுமைகளை"யும் அப்பப்போ பேசித் தீர்த்தால்தான் நாம் இன்னும் பண்பட முடியும் என்பது என் தாழ்மையான கருத்து! :)

Kasthuri Rengan said...

மீள்...

மீட்சிப் பதிவு...
மீட்பரின் பதிவு..

இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் மாறிவிடும்..

நம்பிக்கை இருக்கிறது..