நான் ஏற்கனவே சொன்னேன். ஒரு புகைப்படத்தில் இவர் இருந்தால் அவர் பக்கம் உங்க கண்கள் திரும்பும் என்று. அதற்கு விதிவிலக்கும் உண்டு என்றேன். நீங்கள் அனைவருமே என்னை ஆமோதித்தீர்கள். இப்போது இன்னொரு சேலன்ஞ்.
இந்தப் படத்தை ஹிந்து தளத்திலிருந்து எடுத்து வந்தேன். லிங்கா ஆடியோ ரிலீஸ்ல எடுத்த புகைப்படம் இது.
உலகை எப்படிப் புரிந்து கொள்வது?
முதலில் உங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உலகைப் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவரையும் நீங்கள் விமர்சிக்கும்போது உங்களை அங்கே பொருத்தி, அந்நிலையை யோசிச்சுப் பாருங்க. பல உண்மைகள் வெளிப்படும்.
மேலே உள்ள படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத்தான் விமர்சிப்பார்கள். காரணம்? நாம் அனைவருமே ஒரே படத்தை பலவாறுதான் பார்க்கிறோம்.
உங்க விமர்சனத்தை வைத்து உங்களை எடை போடலாம். நீங்க வாயைத் திறக்கும்போது, வார்த்தைகளை கொட்டும்போது, உங்களை நீங்கள் உலகுக்கு காட்டுறீங்க என்பதே உண்மை.
ஏன் என்றால் ஒவ்வொருவர் விமர்சனமும் வேற வேற மாதிரி இருக்கே? படம் ஒண்ணுதானே?
பார்ப்பவர் கோணம் மாறுவதால் படமும் மாறுகிறது. படத்தை மாற்றுபவர் யார்?
நீங்கள்தான்!
எதுக்கு வம்பு வருண்? நான் விமர்சிக்காமலே போயிடுறேன். :)))
12 comments:
//பார்ப்பவர் கோணம் மாறுவதால் படமும் மாறுகிறது. படத்தை மாற்றுபவர் யார்?
//
ஹா ஹா :) உண்மைதான் எனக்கு இந்த படத்தில் வலப்பக்கம் நிக்கிற பொண்ணு கட்டியிருக்கும் அழகிய சேலையும் அவங்க விரலில் இருக்கும் தேன் நிற மோதிரமும் தான் பார்வைக்கு தென்படுது :)
கோணத்தை நானே மாத்திட்டேன் !! aaw
:)
ஹே!!! நான் இப்போ அனுஷ்கா ஷெட்டிவோட அட்டகாசமா டிசைனர் ஷால்லை தான் பார்த்தேன்:)) ஆமா இந்த சோனாக்ஷி பொண்ணு க்லோயிங்கா இருந்தாலும் நம்ம அனுஷ்கா பக்கத்தில் முகவெட்டு ரொம்ப திருத்தம் கம்மிய தெரியுதில்ல!!
/// உங்களை அங்கே பொருத்தி - பல உண்மைகள் வெளிப்படும்.... ///
100 %
இதென்ன கருத்து ஜோஸ்யமா? இருந்தாலும் நீங்கள் சொல்வது உண்மைதான்! எனக்கு சட்டென்று ரஜினியின் சொட்டைத்தலைதான் பார்வைக்கு கிடைத்தது! ஹிஹி! என் தலையும் சொட்டையாகி ரொம்ப நாளாவுது!
படம் மாறுவதில்லை. பார்க்கும் கோணம்தான் மாறுகிறது. அரை க்ளாஸ் எம்ப்டி, அரை க்ளாஸ் ஃபுல்...!
ஆனா ஸ்க்ரீன்ல யூத்தா தெரிவது என்னவோ தலைவர்தான்
***Angelin said...
//பார்ப்பவர் கோணம் மாறுவதால் படமும் மாறுகிறது. படத்தை மாற்றுபவர் யார்?
//
ஹா ஹா :) உண்மைதான் எனக்கு இந்த படத்தில் வலப்பக்கம் நிக்கிற பொண்ணு கட்டியிருக்கும் அழகிய சேலையும் அவங்க விரலில் இருக்கும் தேன் நிற மோதிரமும் தான் பார்வைக்கு தென்படுது :)
கோணத்தை நானே மாத்திட்டேன் !! aaw
:)***
வாங்க ஏஞ்சலின். :)
"நீங்க சொன்னது சரிதான் வருண்"னு பிள்ளையார் சுழி போட்டதற்கு நன்றி. :)
*** Mythily kasthuri rengan said...
ஹே!!! நான் இப்போ அனுஷ்கா ஷெட்டிவோட அட்டகாசமா டிசைனர் ஷால்லை தான் பார்த்தேன்:)) ஆமா இந்த சோனாக்ஷி பொண்ணு க்லோயிங்கா இருந்தாலும் நம்ம அனுஷ்கா பக்கத்தில் முகவெட்டு ரொம்ப திருத்தம் கம்மிய தெரியுதில்ல!! ***
நல்லவேளை ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. அதனால நீங்க தப்பிச்சீங்க! :)
*** திண்டுக்கல் தனபாலன் said...
/// உங்களை அங்கே பொருத்தி - பல உண்மைகள் வெளிப்படும்.... ///
100 %***
வாங்க, தனபாலன். உங்க "ஆமோதிக்கும் கருத்துரை"க்கு நன்றி. :)
*** ‘தளிர்’ சுரேஷ் said...
இதென்ன கருத்து ஜோஸ்யமா? இருந்தாலும் நீங்கள் சொல்வது உண்மைதான்! எனக்கு சட்டென்று ரஜினியின் சொட்டைத்தலைதான் பார்வைக்கு கிடைத்தது! ஹிஹி! என் தலையும் சொட்டையாகி ரொம்ப நாளாவுது!***
வாங்க சுரேஷ்! அடடா பெண்கள் பெண்களை கவனிக்கிறாங்க. ஆண்கள் ஆண்களை கவனிக்கிறாங்க! நான் கற்பனை பண்னியதைவிட வேற வேற கோணங்களில்தான் எல்லாரும் பார்க்கிறாங்க. :)
***G.M Balasubramaniam said...
படம் மாறுவதில்லை. பார்க்கும் கோணம்தான் மாறுகிறது. அரை க்ளாஸ் எம்ப்டி, அரை க்ளாஸ் ஃபுல்...!***
வாங்க ஜி எம் பி சார். நீங்கள் உங்க பஹ்டிவில் சொன்னதுபோல் என்னுடைய இப்பதிவுக்கு வித்திட்ட "ஒரிஜினல் சிந்தனை" நீங்க சொன்ன பழமொழியாகத்தான் இருக்கணும். தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் நன்றி, சார். :)
***Manimaran said...
ஆனா ஸ்க்ரீன்ல யூத்தா தெரிவது என்னவோ தலைவர்தான்.****
உங்களைப் போல் ரசிகர்களால் தான் அவர் இன்னும் #1 ஹீரோவாக தன் நிலையை தக்கவைத்துள்ளார். :)
Post a Comment