Thursday, November 6, 2014

வருணின் உளறல்கள் (6)

மூத்த பதிவர் தருமிக்கு பதில் சொல்றேன்னு மதுரைத் தமிழன் கொடுத்த காணொளி மற்றும் பார்வையாளர்கள் "டேட்டா" பதிவர்களை ஊக்குவித்ததோ இல்லையோ, பல பதிவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத்தான்  உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அறிவாரா என்று தெரியவில்லை!

மதுரைத் தமிழர் தன்னுடைய ஒரு சில பதிவுகளை 30,000 முதல் 50,000 பேர் வாசிக்கிறார்கள்  என்று சொல்லி, அதற்கான ஆதாரத்தையும் கொடுத்து இருக்கிறார். வாழ்த்துக்கள்!

அவருடைய முயற்சி என்னவென்றால்.. பதிவுலகை குறைத்து மதிப்பிடாமல் முகநூல், ட்விட்டர் போன்றவைகளை புறக்கணித்துவிட்டு பதிவர்கள் பதிவுலகில் நெறைய ஆக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிப்பது.  அதாவது  பதிவர்கள் மனம் தளராமல் நீங்கள் பதிவு எழுத எழுத, வருடங்கள் கடக்கக் கடக்க அவருக்கு கிடைத்த வாசகர்கள்போல் உங்க பதிவுகளையும் குறைந்தது 10,000  வாசகர்களாவது  வாசிப்பாங்கனு சொல்ல முயன்றுள்ளார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? மதுரைத் தமிழரின் பார்வையாளர்கள் டேட்டா வைப் பார்த்துவிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு  எழுதும் பதிவர்கள் பலரும் பயந்து பீதியடைந்துள்ளனர். தன் தளத்தில் வந்து வாசித்த  வாசகர்களை எண்ணிப் பார்த்த இவர்கள் ..மிகச்சிறிய பார்வையாளர் வட்டத்தையே தங்கள் பதிவு இப்போதும் அடைகிறது  என்பதை உணர்ந்து  "10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே!  நம்ம எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறோம்?"  என்கிற ஒரு மனச் சோர்வுதான்  இப்பதிவால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு சில நேரங்களில் நம்ம செய்கிற "ஊக்குவிப்பு" முயற்சி  தடம் மாறி,  "டிஸ்கரேஜ்மெண்ட்" ஆகத்தான் முடியும்! அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! 

படைப்பாளிகள் கவனிக்கவும்!

நீங்க எத்தனை அழகாக எழுதினாலும், சிறந்த ஆக்கசக்தி உள்ளவராக இருந்தாலும் கவிதை, கட்டுரை, கதை போன்ற ஆக்கங்களுக்கு வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைக்காது. ஆக்கங்களுக்கு மிகவும் குறைவாகவே  வாசகர்கள் வருவார்கள். இது பதிவுலக அனுபவத்தில்  பலருக்குத் தெரியும். அதாவது தக்க  சமயத்தில் வம்பு, சினிமா, டி வி, அரசியல் போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதினால், அல்லது கவர்ச்சியான வார்த்தைகளை தலைப்பில் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றில் இட்டு எழுதினால் மட்டுமே அதிக வாசகர்கள் வருவார்கள்.

நீங்க என்னதான் தலைகீழா  நின்னு தண்ணி குடிச்சாலும் ஒரு பதிவுக்கு 30,000 - 50,000 வாசகர்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கமாட்டாங்க. அப்படி ஏதாவது வேணும்னா நீங்க "அவர்கள் உண்மைகள்" தளத்தை ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம். :) நான் சொல்வதெல்லாம் உண்மை!

********************
சொந்தக்கதை:

அமெரிக்க நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதுண்டு. அவர் வீட்டில் இரண்டு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள். அவைகள் மனிதருக்கு உதவி செய்யும் நாய்கள். ஹெல்ப்பர் டாக்ஸ் என்பார்கள்.

குறையுள்ள சிறுவனுக்கு உதவும் ஹெல்ப்பர் டாக்




வயதானவருக்கு ஷாப்பிங் செய்யும் ஹெல்ப்பர் டாக்


 அவைகளில்  ஒன்று கொஞ்சம் வயதானது. பெயர் பெத். 12 வயதாகிறது என்கிறார்கள். தன் வயதிற்கேற்றார்போல் நிதானமாக இருக்கும் பெத். இரண்டாவது ஒன்றுக்கு 4 வயதாகிறது. பெயர் ஜாஸ். முதலில் அன்னியமாகத் தெரிந்த நான் இப்போது ஜாஸ்க்கு நண்பனாகிவிட்டேன் . நண்பர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், ஜாஸுடன் ஒரு 10 நிமிடம் செலவழிக்காவிட்டால், (அதுக்கு உடம்பு சொறிந்துவிடணும், கொஞ்சணும்) என்னை வீட்டுக்கு உள்ளே போகவோ பேசவோ விட மாட்டான் ஜாஸ்! He demands me to give him attention FIRST!

மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் அவைகள் மேல் அன்பாக இருந்தால் நம்மிடம் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து அன்பைக் கொடுக்கும்படி "டிமாண்ட்" பண்ணுகிறதுகள். வீட்டிற்குள் நுழைந்தவுடன் "மொதல்ல என்னைய கொஞ்சிட்டு அப்புறம் போய் உன் நண்பன் வில்லியமைப் பார்!"  என்கிறது ஜாஸ்!

 *************************
பதிவர் சந்திப்பு:

வழக்கம்போல பதிவர்கள் சந்திப்பு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தவுடன், சிரத்தையுடன் அதை எடுத்து நடத்திய பதிவர்களுக்கு, சக பதிவர்கள் சிலருடைய விமர்சனங்களால் எரிச்சல், கோபம்!

கடந்த மூன்று  சந்திப்புகளில் ஒவ்வொரு பதிவர் சந்திப்பு நடந்த முடிந்த பிறகும் இதுபோல் ஒரு நிலையைத்தான் பார்க்கிறோம். இது பழகிப்போன விடயம் என்பதால் இந்த முறை இந்தச் சர்ச்சையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

அடுத்த பதிவர் சந்திப்பு முடிந்த பிறகும், அதை எடுத்து நடத்தியவர்களிடம் இருந்து  "இனிமேல் பதிவர் சந்திப்பு அவசியம்தானா?" என்று ஒரு பதிவு கட்டாயம்  வரத்தான் செய்யும் என்பதை இப்போதே சொல்வதற்கு உங்களுக்கு ஆரூடம் தெரியவோ, அல்லது நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியமோ  இல்லை! தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்! :)

***********************

புதிர் மாதிரி!




என்ன முழிக்கிறீங்க? என்னடா இது இழவு னு நினைக்காதீங்க. மேலே உள்ள என் பெயர் என்ன தெரியுமா?


வயாகரானு சொல்லுவாங்க இல்லை? அது ஷாத்சாத் நானேதான்! :)

38 comments:

Mahasundar said...

அய்யா,வணக்கம்.!முதலில் உங்கள் வலைக்கு வருகிறேன்.
நீங்கள் சொல்வது போல் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை.என் வலைத்தளத்திற்கு ஐம்பது பேர் வருவதே அதிசயம்.
அந்த நாய்கள் பற்றிய செய்தி,ஆச்சர்யமாக இருந்தது!.நன்றி.
என் "எண்ணப் பறவை"க்கு உங்களை வரவேற்கிறேன்!

Amudhavan said...

\\தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்!\\

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வருண். இதையும் மீறித்தான் சில விஷயங்களாவது நல்லமுறையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது ஒரு ஆச்சரியமே.

தருமி said...

// "10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே! //

என் மைண்ட் வாய்ஸ்:
ஆயிரமா ... எனக்கா ...ஹா... ஹா ...

என் நிஜ வாய்ஸ்:
அஞ்சோ ஐந்நூரோ .. என் கடன் ”பணி” செய்து கிடப்பதே... இப்போதெல்லாம் எழுதும்போது படிப்பவர்களை நினைத்து எழுதுவதில்லை.

அட... எல்லோருக்காகவும் ”தமிழ் மணத்திற்கு இன்னொரு கோரிக்கை” என்று சமீபத்தில் ஒரு பதிவு போட்டேன் - எல்லாருக்குமாக. அதற்கே படித்தவர்களும் கொஞ்சம்; பின்னூட்டமிட்ட நல்லவர்களே ரொம்ப ரொம்ப கொஞ்சம்.

சரி ...விடு ...

தொடருவோம்... இல்லை .. இல்லை .. தொடர்வேன்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சொல்ல வேண்டிய கருத்தை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நான் அதெல்லாம் போய்ப் பார்ப்பதில்லை..வரும் நண்பர்களைக் குறித்து மகிழ்ச்சி, அவ்வளவே

'பரிவை' சே.குமார் said...

கதை, கவிதைக்கு 1000 இல்லை 100 வர்றதே ரொம்பக் கஷ்டம்...
நீங்க சொல்றது ரொம்பச் சரிங்க...
மற்ற செய்திகளும் அருமை...

Avargal Unmaigal said...

நான் அந்த பதிவை போட காரணம் பலரும் பேஸ்புக் வரவினால் வலைத்தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவு என்று கருதுகிறார்கள் அப்படி இல்லை என்று நிருபவிக்கவே அதை பதிந்தேன். மேலும் அதில் மிக அழுத்தமாக புதிய பதிவர்களுக்கு சொன்னது ஆரம்பத்திலே அதிக ஹிட் எதிர்பார்க்காதீர்கள் ஆனால் தொடர்ந்து எழுதுங்கள் என்றுதான் அதை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.

ஆரம்ப காலத்தில் நான் போட்ட பதிவுகள் அதிகம் ஹிட் ஆகவில்லை உதாரணமாக 2012ல் நான் போட்ட் பதிவு 300 ஹிட்டுக்களை மட்டும் பெற்றது அதே பதிவை போனவாரம் (10/31/2014) மறுபதிப்பு செய்தேன் அதற்கு கிடைத்த ஹிட் 3200.

யாரு என்னை திட்டினாலும் சரி பாராட்டினாலும் சரி அல்லது நான் யார் என்ன சொன்னாலும் அவர்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ளமாட்டேன் அதுதான் என் வெற்றிக்கு வழி....

கதை கவிதை மற்றும் சொந்த பயணக்கட்டுரைகள் மிக அருமையாக எழுதுபவர்களுக்கும் நான் சொல்லுவது இதுதான் நீங்கள் அதை மட்டும் எழுதாமல் எல்லா விஷயங்களையும் எழுதுங்கள் என்றுதான் அப்படி எழுதினால் நிச்சயம் பலன் கிடைக்கும்

Avargal Unmaigal said...

எனது தளத்திற்கு சராசரியாக 1000 லிருந்து 2000 பேஜ்வூயூ கிடைக்கிறது என்பது உண்மையே சில பதிவுகள் அதற்கும் மேலாக வருகிறது ஆனால் அந்த 30000 520000 வ்யூ கிடைத்தது எனக்கு இன்னும் ஆச்சிரியத்தையே தருகிறது நானும் அந்த பதிவுகளை மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன் அதில் என்ன வித்தியாசமாக சொன்னேன் என்று இன்று வர ஒன்றும் புரியவில்லை அந்த மூன்று பதிவுகளுக்கு அப்புறம் பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்ந்தவர்கள் 250 லிருந்து 600 ஆகியது.

வருண் said...

ம த: உங்கள் டேட்டாவின் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! நான் அப்படி எதுவும் இருப்பதாகவும் இப்பதிவில் எங்கும் சொல்லவில்லை! I KNOW you pretty well. Your data are UNQUESTIONABLE because I Know your quality.

I am talking about the "practicality" The bloggers need to realize that 50,000 view is NOT that easy to achieve!

நான் சொல்ல வருவது.

நானும் பிரபல மாகிவிட்டேன்.. எனக்கு எப்போ 30,000-50,000 வியூஸ் எனக்கு வரும்னு ஒரு பதிவர் காத்திருந்தால்.. அவர் நிலைமை கஷ்டம்தான். I dont think it is possible for any average Tamil blogger. 1000-5000 views for some posts may be possible but 50,000 views is a VERY hard target to achieve, imho!

மகிழ்நிறை said...

வருண்
எப்டி இருக்கீங்க?
தமிழனின் இந்த சாதனையை வாழ்த்துகிறேன்.
அந்த டாகீஸ் so cute:)
அன்பு பாராட்டுவார்களா??? உசாரா இருந்துக்கவேண்டியது தான்:)(ஆமா, சாமி மலைஎறங்கிடுச்சா?? மறுபடி கொஞ்சம் terrificஆ இருக்கு:)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சினிமா அரசியல் இவை பற்றி யார் எழுதினாலும் கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கும் என்பது உண்மை
ஆனால் மதுரைத் தமிழனைப் போல மிக அதிக பார்வையாளர்கள் கிடைப்பது அரிது.
அவரது வெற்றிக்குக் காரணம் அரசியலை வெறும் செய்திகளாகத் தராமல் நகைச்சுவை கலந்து தருவதே. படங்களை கூகிளில் இருந்து தேடி எடுத்து அப்படியே போடாமல் அதில் தன் படைப்புத் திறனை காட்டி வித்தியாசமாக அளிப்பார்.
மேலும் அவர் இதை எல்லாம் அதிக பார்வையாளர்கள் வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாகத் தெரியவில்லை.
தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதிகிறார். அவரது இயல்பான திறமையும் தொடர்ந்து பதிவிடுவதும் அவரது வெற்றிக்குக் காரணம்

இன்னொரு காரணமும் உண்டு. பிரபல பதிவர்கள் பலர் பிறருடைய பதிவுகளுக்கு கருத்திடுவதை கௌரவக்குறைவாக நினைக்கிறார்கள் ஆனால் மதுரைத் தமிழன் புதியவர்களாய் இருந்தாலும் பின்னூட்டமிட்டுகிறார். அவரது பின்னூட்டங்களும் நகைச்சுவை தன்மை கொண்டதாக இருப்பதால் எளிதில் கவர்ந்து விடுகிறார். அவர் செல்லும் வலைப் பக்கக் காரர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆகி விடுகிறார்கள். அவரது பதிவுத் தலைப்புகள் ஏற்படுத்தும் சுவாரசியமும் பார்வையாளர் எண்ணிக்கை அதிமாக்குவதில் ஒரு காரணியாக அமைகிறது.

எல்லோருமே மதுரைத் தமிழன் ஆக முடியாது என்று நீங்கள் சொல்வது உண்மை.
அவருக்கு வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

youtube வீடியோக்கள் சிலவற்றை பார்க்கும்போது இந்தியர்களை விட வெளி நாட்டவர் செல்லப் பிராணிகளுக்கு அதக செல்லம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

/// ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம்... ///

சரி தான்... ஹா... ஹா...

ஜாஸ் மாஸ்...!

http://www.bloggernanban.com/2010/09/google-analytics.html

Avargal Unmaigal said...

///ம த: உங்கள் டேட்டாவின் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! நான் அப்படி எதுவும் இருப்பதாகவும் இப்பதிவில் எங்கும் சொல்லவில்லை///

பாஸ் நீங்க தப்பா நினைச்சுட்டீங்க என்று இங்கு கருத்திடவில்லை அந்த என் பதிவைபடிக்காத யாரும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவே இங்கு விளக்கம் தந்தேன்

/50,000 view is NOT that easy to achieve!///
எனக்கே அது மாதிரி மீண்டும் வியூ கிடைக்குமா என்பது சந்தேகமே

முரளிதரன் உங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றிகள்

///இந்தியர்களை விட வெளி நாட்டவர் செல்லப் பிராணிகளுக்கு அதக செல்லம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.///

முரளிதரன் நான் பிறப்பால் இந்தியந்தான் நானும் என் டாக்கிற்கு அதிகம் செல்லம் கொடுத்துதான் வளர்க்கிறேன் எனது பெட்டில் என் கூட தூங்குவது என் நாய்தான்( என்னடா மனைவியை இவன் நாய்ன்னு சொல்லுறான்ன்னு நினைக்காதீங்க நான் சொல்வது என் நாய்க்குட்டி சன்னியைத்தான் சொன்னேன். என் மனைவியை அப்படி எல்லாம் சொல்ல முடியாதுங்க

சம்மரில் நாங்க் 2 வார வெகேஷந்தான் பிளான் பண்ணி போனோம் ஒரு வாரம் எங்களால் எங்கள் நாயை பிரிந்து இருக்க முடியாதால் நாங்கள் பாதியிலே திரும்பி வந்து விட்டோம்

விசு said...

பதிவிற்கு நன்றி வருண்..

மதுரை தமிழனின் எண்ணிகையை பார்த்து நானும் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இத்தனை பேர் பதிவுகளை படிக்கின்றனரா என்று நினைக்கையிலே மனது மகிழ்ச்சியானது. தாம் அறிந்தது போல் நான் எழுத ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகின்றது. என்னுடைய பதிவுகளில் சில 1000 பெற்று உள்ளது. அதை பார்க்கும் போது இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வரும். சட்டியில் இருபது தானே அகப்பையில் வரும்.

மதுரை தமிழன் இவ்வளவு வாசகர்களை தம்வசம் வைத்துள்ளார் என்றால் அவரின் எழுத்து நடையில் எதோ ஒரு காந்த சக்தி உள்ளது என்று அர்த்தம். என்றைக்காவது ஒரு நாள் அவரின் கந்த சக்தியை அறிந்து கொண்டு .. ....!

Iniya said...

நான் எல்லாம் பேராசைப் படுவதில்லை வருண் இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ ஆசைப்படுவேன். ஆகையால் சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப்பணத் தாலி காணாதோ என்று நினைப்பேன்.அவ்வளவு தான். ஆரம்பத்தில் பல பதிவுகள் யாரும் பார்க்கவே இல்லை. இப்ப ரொம்ப மகிழ்ச்சி தான். நீங்க எல்லாம் வந்து கருத்து போடுவதால் தான்.

Yarlpavanan said...

பதிவர்கள் வாசகர் விருப்பறிந்து
பதிவுகளை மேற்கொண்டால்
வாசகர் எண்ணிக்கை பெருகுமே!

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

தருமி said...

http://dharumi.blogspot.in/2014/11/799.html

Angel said...

ஹெல்பர் செல்லம்ஸ் :) (doggies kitties ) நான் இன்னிக்கு ஒரு பதிவு இவங்களை பற்றி போடநிம்னு நினைச்சேன் இங்கே வந்தா நீங்களும் :) சர்ப்ரைஸ் !! ஐ அம் ஆல்ஸோ எ pet lover ..நீங்க சொன்ன அந்த அன்புள்ள ஹெல்பர்ஸ் இங்கே நிறைய பேருக்கு அவங்கதான் வலது இடது கைகள் ....நான் நேரிலேயே நிறைய பார்த்திருக்கேன் இங்கே வெளிநாட்டில் .

”தளிர் சுரேஷ்” said...

கதை, கவிதை,போன்றவற்றிற்கு அதிக ஹிட்ஸ் கிடைக்காது என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. எனது தளத்திலும் ஒரு நாளைக்கு 150லிருன்ந்து 250 பேஜ்வியு மட்டுமே முன்பு கிடைக்கும். இத்தனைக்கும் நான் அப்போது ஒன் இண்டியா செய்திகளை அதிகமாக பகிர்ந்து கொண்டிருந்தேன். இப்போது பகிர்வுச்செய்திகள் தவிர்த்து சொந்தமாக கவிதை, நகைச்சுவை, கதைகள், ஆன்மீகம் என்று பல்சுவையாக எழுதி வருகிறேன். கடந்த ஆறுமாதமாக திடீரென பேஜ் வியு அதிகரித்துள்ளது. அதிலும் நான் எப்போதோ பகிர்ந்த ஒரு பகிர்வு செய்தி நிறைய படிக்கப் படுகிறது. அதே சமயம் எனது படைப்புக்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மதுரைத் தமிழன் அளவிற்கு ஹிட்ஸ் பெறுவது சாத்தியம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக எழுதினால் நல்ல சுவையாக எழுதினால் பார்வையாளர்கள் வருவார்கள் என்பது என் கருத்து. நல்லதொரு பகிர்வு! நன்றி!

வருண் said...

*** Mahasundar said...

அய்யா,வணக்கம்.!முதலில் உங்கள் வலைக்கு வருகிறேன்.
நீங்கள் சொல்வது போல் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை.என் வலைத்தளத்திற்கு ஐம்பது பேர் வருவதே அதிசயம்.
அந்த நாய்கள் பற்றிய செய்தி,ஆச்சர்யமாக இருந்தது!.நன்றி.
என் "எண்ணப் பறவை"க்கு உங்களை வரவேற்கிறேன்!***

வாங்க மஹாசுந்தர்! பிற தளங்களில் உங்க பின்னூட்டங்கள் பார்த்து இருக்கிறேன். உங்க தமிழ் உயர்தரமானது என்றும் நீங்க சிறந்த படிப்பாளி என்பது மட்டும் என் யூகம். மற்றபடி உங்களை இனிமேல்தான் தெரிந்து கொள்ளணும். :)

வருண் said...

***Amudhavan said...

\\தமிழ் அன்பர்கள் எப்படி "அன்பு பாராட்டுவார்கள்" என்பது பற்றிக் கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும்!\\

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வருண். இதையும் மீறித்தான் சில விஷயங்களாவது நல்லமுறையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது ஒரு ஆச்சரியமே. ***

வாங்க அமுதவன் சார். உலகில் சர்ச்சை இல்லாமல் போன நாள் தமிழர்கள் இல்லாமல்ப் போன நாளாகத்தானே இருக்கும்? தமிழர்கள் வாழும் வ்வரையில் அவர்களுக்குள் சர்ச்சையும் வாழத்தான் செய்யும்> :)

வருண் said...

*** தருமி said...

// "10 வருடம் எழுதும் நம்ம ஒவ்வொரு பதிவுக்கும் 1000 பார்வையாளர்கூட வரவில்லையே! //

என் மைண்ட் வாய்ஸ்:
ஆயிரமா ... எனக்கா ...ஹா... ஹா ...

என் நிஜ வாய்ஸ்:
அஞ்சோ ஐந்நூரோ .. என் கடன் ”பணி” செய்து கிடப்பதே... இப்போதெல்லாம் எழுதும்போது படிப்பவர்களை நினைத்து எழுதுவதில்லை.

அட... எல்லோருக்காகவும் ”தமிழ் மணத்திற்கு இன்னொரு கோரிக்கை” என்று சமீபத்தில் ஒரு பதிவு போட்டேன் - எல்லாருக்குமாக. அதற்கே படித்தவர்களும் கொஞ்சம்; பின்னூட்டமிட்ட நல்லவர்களே ரொம்ப ரொம்ப கொஞ்சம்.

சரி ...விடு ...

தொடருவோம்... இல்லை .. இல்லை .. தொடர்வேன்!***

வாங்க தருமி சார். பதிவுலகில் ஒரு சிலரை "வைரம் பாய்ந்த கட்டை" இவர் எனலாம்! :)

வருண் said...

***ரூபன் said...

வணக்கம்
சொல்ல வேண்டிய கருத்தை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-**

எல்லோருமே நற்பெயர் எடுக்கத்தான் முயல்றாங்க. யாராவது ஒரு சில விடயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என்பது என் எண்ணம். :)

வருண் said...

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நான் அதெல்லாம் போய்ப் பார்ப்பதில்லை..வரும் நண்பர்களைக் குறித்து மகிழ்ச்சி, அவ்வளவே***

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்..தரமான ஒரு பின்னூட்டம் 10,000 ஹிட்ஸ் களுக்கு சமம்! ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் என் தலை உருளாமல் காப்பாத்துவீங்கதானே, கிரேஸ்? :)

வருண் said...

***-'பரிவை' சே.குமார் said...

கதை, கவிதைக்கு 1000 இல்லை 100 வர்றதே ரொம்பக் கஷ்டம்...
நீங்க சொல்றது ரொம்பச் சரிங்க...
மற்ற செய்திகளும் அருமை...***

உங்களுக்கு பதிவுலக அனுபவம் ஜாஸ்தி! அதனால் நாம் ஒருவர் எண்ணங்களை இன்னொருவர் புரிந்துகொள்வது எளிது. புதியவர்களுக்கு அனுபவிக்கும்போதுதான் இதெல்லாம் புரியும். உண்மை என்றுமே அழியாது. :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

வருண்
எப்டி இருக்கீங்க?
தமிழனின் இந்த சாதனையை வாழ்த்துகிறேன்.
அந்த டாகீஸ் so cute:)
அன்பு பாராட்டுவார்களா??? உசாரா இருந்துக்கவேண்டியது தான்:)(ஆமா, சாமி மலைஎறங்கிடுச்சா?? மறுபடி கொஞ்சம் terrificஆ இருக்கு:) ***

உங்களை பதிவுலகில் திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி, மைதிலி! :)

வருண் said...

*** டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சினிமா அரசியல் இவை பற்றி யார் எழுதினாலும் கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கும் என்பது உண்மை
ஆனால் மதுரைத் தமிழனைப் போல மிக அதிக பார்வையாளர்கள் கிடைப்பது அரிது.
அவரது வெற்றிக்குக் காரணம் அரசியலை வெறும் செய்திகளாகத் தராமல் நகைச்சுவை கலந்து தருவதே. படங்களை கூகிளில் இருந்து தேடி எடுத்து அப்படியே போடாமல் அதில் தன் படைப்புத் திறனை காட்டி வித்தியாசமாக அளிப்பார்.
மேலும் அவர் இதை எல்லாம் அதிக பார்வையாளர்கள் வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததாகத் தெரியவில்லை.
தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதிகிறார். அவரது இயல்பான திறமையும் தொடர்ந்து பதிவிடுவதும் அவரது வெற்றிக்குக் காரணம்

இன்னொரு காரணமும் உண்டு. பிரபல பதிவர்கள் பலர் பிறருடைய பதிவுகளுக்கு கருத்திடுவதை கௌரவக்குறைவாக நினைக்கிறார்கள் ஆனால் மதுரைத் தமிழன் புதியவர்களாய் இருந்தாலும் பின்னூட்டமிட்டுகிறார். அவரது பின்னூட்டங்களும் நகைச்சுவை தன்மை கொண்டதாக இருப்பதால் எளிதில் கவர்ந்து விடுகிறார். அவர் செல்லும் வலைப் பக்கக் காரர்கள் அவருக்கு ரசிகர்கள் ஆகி விடுகிறார்கள். அவரது பதிவுத் தலைப்புகள் ஏற்படுத்தும் சுவாரசியமும் பார்வையாளர் எண்ணிக்கை அதிமாக்குவதில் ஒரு காரணியாக அமைகிறது.

எல்லோருமே மதுரைத் தமிழன் ஆக முடியாது என்று நீங்கள் சொல்வது உண்மை.
அவருக்கு வாழ்த்துக்கள் ***

இந்தமுறை, உங்களிடம் நான் வாதம் செய்வதாக இல்லை! உங்க ஆழ்ந்த கருத்துக்களை கேட்டுக்கிறேன், this is my turn to listen when you are talking and explaining things. Thanks, muraLi!

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

/// ஹேக் பண்ணி உங்க தளமாக்கிக் கொண்டால் மட்டுமே சாத்தியம்... ///

சரி தான்... ஹா... ஹா...

ஜாஸ் மாஸ்...!

http://www.bloggernanban.com/2010/09/google-analytics.html***

தங்கள் கருத்திற்கும், தொடுப்பிற்கும் நன்றி தனபாலன். :)

வருண் said...


***/50,000 view is NOT that easy to achieve!///
எனக்கே அது மாதிரி மீண்டும் வியூ கிடைக்குமா என்பது சந்தேகமே ***

நீங்க இதை உங்க பதிவிலேயே தெளிவு படுத்தியிருந்தால் நான் "உளற" வேண்டிய அவசியமே வந்திருக்காது. நன்றி, மதுரைத் தமிழன். :)

வருண் said...

***விசுAWESOME said...

பதிவிற்கு நன்றி வருண்..

மதுரை தமிழனின் எண்ணிகையை பார்த்து நானும் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இத்தனை பேர் பதிவுகளை படிக்கின்றனரா என்று நினைக்கையிலே மனது மகிழ்ச்சியானது. தாம் அறிந்தது போல் நான் எழுத ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகின்றது. என்னுடைய பதிவுகளில் சில 1000 பெற்று உள்ளது. அதை பார்க்கும் போது இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வரும். சட்டியில் இருபது தானே அகப்பையில் வரும்.

மதுரை தமிழன் இவ்வளவு வாசகர்களை தம்வசம் வைத்துள்ளார் என்றால் அவரின் எழுத்து நடையில் எதோ ஒரு காந்த சக்தி உள்ளது என்று அர்த்தம். என்றைக்காவது ஒரு நாள் அவரின் கந்த சக்தியை அறிந்து கொண்டு .. ....!***

நண்பனைப் பார்த்து உண்மையில் பொறாமைப் பட்டாலும் "பெருமைப் படுகிறேன்" என்று சொல்வதுதான் நாகரிகம். அதைத்தான் இவ்வுலகம் செய்துக கொண்டிருக்கிறது! இதெல்லாம் தெரிந்தும்தான் ஒரு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டியிருக்கு, விசு! :)

வருண் said...

***Iniya said...

நான் எல்லாம் பேராசைப் படுவதில்லை வருண் இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ ஆசைப்படுவேன். ஆகையால் சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப்பணத் தாலி காணாதோ என்று நினைப்பேன்.அவ்வளவு தான். ஆரம்பத்தில் பல பதிவுகள் யாரும் பார்க்கவே இல்லை. இப்ப ரொம்ப மகிழ்ச்சி தான். நீங்க எல்லாம் வந்து கருத்து போடுவதால் தான்.***

இதுபோல் புரிதல் இருந்தால் எந்நாளும் உங்களுக்கு இனிய நாள்தான். :)


வருண் said...

***Yarlpavanan Kasirajalingam said...

பதிவர்கள் வாசகர் விருப்பறிந்து
பதிவுகளை மேற்கொண்டால்
வாசகர் எண்ணிக்கை பெருகுமே!**

நீங்க யாருக்காக எழுதுறீங்க? பிறருக்காக எழுதினீங்கனா நீங்க என்ன எழுதினீங்கனு உங்களுக்கே சில ஆண்டுகளில் ஞாபகம் இருக்காது. உங்களுக்காக, உங்க திருப்திக்காக எழுதினீங்கனா அது என்றைக்கும் மறக்காது. இதெல்லாம் தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.

கருத்துப் பகிர்தலுக்கு நன்றிங்க.

வருண் said...

***தருமி said...

http://dharumi.blogspot.in/2014/11/799.html**

நன்றி தருமி சார். என் கருத்தை உங்க பதிவில் சொல்லிவிட்டேன். :)

வருண் said...

**8Angelin said...

ஹெல்பர் செல்லம்ஸ் :) (doggies kitties ) நான் இன்னிக்கு ஒரு பதிவு இவங்களை பற்றி போடநிம்னு நினைச்சேன் இங்கே வந்தா நீங்களும் :) சர்ப்ரைஸ் !! ஐ அம் ஆல்ஸோ எ pet lover ..***

:-)))

***நீங்க சொன்ன அந்த அன்புள்ள ஹெல்பர்ஸ் இங்கே நிறைய பேருக்கு அவங்கதான் வலது இடது கைகள் ....நான் நேரிலேயே நிறைய பார்த்திருக்கேன் இங்கே வெளிநாட்டில் .***

வெளி நாட்டில் உள்ளவங்கதான் அவைகள நன்கு பழக்கப் படுத்துறாங்க. ஒரு சிலர் கண் தெரியாதவங்க ஒரு ஹெல்ப்பர் நாயின் உதவியுடன் ரயிலில் ஏறி இறங்கி செல்வார்கள். நானும் வெளிநாட்டில்தான் இதையெல்லாம் பார்க்கிறேன், ஏஞ்சலின். :)

வருண் said...

***‘தளிர்’ சுரேஷ் said...

கதை, கவிதை,போன்றவற்றிற்கு அதிக ஹிட்ஸ் கிடைக்காது என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. ***

நல்ல ஆக்கங்களுக்கு என்றுமே பார்வையாளர்கள் குறைவுதான்.

***எனது தளத்திலும் ஒரு நாளைக்கு 150லிருன்ந்து 250 பேஜ்வியு மட்டுமே முன்பு கிடைக்கும். இத்தனைக்கும் நான் அப்போது ஒன் இண்டியா செய்திகளை அதிகமாக பகிர்ந்து கொண்டிருந்தேன். இப்போது பகிர்வுச்செய்திகள் தவிர்த்து சொந்தமாக கவிதை, நகைச்சுவை, கதைகள், ஆன்மீகம் என்று பல்சுவையாக எழுதி வருகிறேன். கடந்த ஆறுமாதமாக திடீரென பேஜ் வியு அதிகரித்துள்ளது. அதிலும் நான் எப்போதோ பகிர்ந்த ஒரு பகிர்வு செய்தி நிறைய படிக்கப் படுகிறது. அதே சமயம் எனது படைப்புக்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.***

திரட்டிகள் நிச்சயம் பதிவர்களுக்கு உதவுகின்றன. சமீபத்தில் ஒரு சிலர் முகநூல், ட்விட்டர்களிலிருந்து மேலும் வாசகர்களை இழுக்கிறார்கள்.

ஆனால் முகநூல், ட்விட்டரையும் ப்ளாகருடன் இணைத்து "வாசகர் கணக்குச் சொன்னால்" ப்ளாக்ரையும் முகநூல்/ட்விட்டரையும் எப்படி "கம்பேர்" பண்ண முடியும்??

*** மதுரைத் தமிழன் அளவிற்கு ஹிட்ஸ் பெறுவது சாத்தியம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிறப்பாக எழுதினால் நல்ல சுவையாக எழுதினால் பார்வையாளர்கள் வருவார்கள் என்பது என் கருத்து. நல்லதொரு பகிர்வு! நன்றி!***

தொடர்ந்து எழுதுனீங்கனா நிச்சயம் வாசகர் எதை எதிர்பார்க்கிறார்கள்னு தெரியும்.

ஆனால்.. ஆனால்..

நம் உணர்வுகளை அள்ளிக்கொட்டினால் மட்டுமே அதில் "உண்மைக் கலப்பு" அதிகம் இருக்கும். வாசகரை ஈர்க்கணும்னு எழுதினால் ஹிட்ஸ் வேணா கூடலாம், நமக்கு திருப்தி இருக்காது. நமக்கு மன திருப்தி இல்லை என்றால் நம்மால் தொடர்ந்து எழுத முடியாது என்பது என் எண்ணங்கள்.. :)

Mahesh said...

eppavum pol ungalin pathivu super sir!

வெளி நாட்டில் உள்ளவங்கதான் அவைகள நன்கு பழக்கப் படுத்துறாங்க. ஒரு சிலர் கண் தெரியாதவங்க ஒரு ஹெல்ப்பர் நாயின் உதவியுடன் ரயிலில் ஏறி இறங்கி செல்வார்கள். நானும் வெளிநாட்டில்தான் இதையெல்லாம் பார்க்கிறேன்///

guide dogs pathi nan kelvi pattu iruken. evvalvu thuram athu help pannum nu oru doubt irukkum enakku.
ninga sonnatha vechu paarkumpothu nallave help pannum pola sir!
indiavilum athul pola dogs vaithu sella asai taan but inga manushan nadanthale uyirukku uthiravatham illa dog ku safety inga irukkavaa pokuthu!!!

Mahesh said...

eppavum pol ungalin pathivu super sir!

வெளி நாட்டில் உள்ளவங்கதான் அவைகள நன்கு பழக்கப் படுத்துறாங்க. ஒரு சிலர் கண் தெரியாதவங்க ஒரு ஹெல்ப்பர் நாயின் உதவியுடன் ரயிலில் ஏறி இறங்கி செல்வார்கள். நானும் வெளிநாட்டில்தான் இதையெல்லாம் பார்க்கிறேன்///

guide dogs pathi nan kelvi pattu iruken. evvalvu thuram athu help pannum nu oru doubt irukkum enakku.
ninga sonnatha vechu paarkumpothu nallave help pannum pola sir!
indiavilum athul pola dogs vaithu sella asai taan but inga manushan nadanthale uyirukku uthiravatham illa dog ku safety inga irukkavaa pokuthu!!!