Tuesday, November 18, 2014

என் கனவில் வர பயந்த காந்தி! பஹுத் அச்சா!

 எனக்கு ஹிந்தி தெரியாது. காந்திக்கு தமிழ் தெரியாது. இது தொடர் பதிவும் கெடையாது! காந்திக்கும் எனக்கும் தெரிந்த ஒரே பொதுமொழி ஆங்கிலம்! ஆனால் ஆங்கிலம்  அன்னியர் மொழியாச்சே? நீங்களே சொல்லுங்கள், ஆங்கிலேயரை நம் நாட்டில் இருந்து துரத்தப் பாடுபட்ட காந்தி என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் நல்லாவா இருக்கும்? மஹாத்மா காந்தியும் ஒரு "ஹிப்போக்ரைட்"னு ஆயிடும். இல்லையா?

அவர் கனவில் வந்து  ஆங்கிலத்தில் கேள்வி கேக்க அரம்பித்தால் நான் விட்டுடுவேனா? " பெரிய மகாத்மா இவர்" "உலகிற்கே பாடம் கற்றுக் கொடுத்தவர்" என்பதற்காகவெல்லாம் அவரை பெரிய மனசு பண்ணி  ஆங்கிலத்தில் கேள்வி கேக்க விட்டுடுவேனா என்ன? என்ன காந்தி அவர்களே! நீங்களே ஆங்கிலத்தில் கேள்வியெல்லாம் கேக்குறீங்க? நீங்களும் ஒரு ஹிப்போக்ரைட் தானா?"னு நான் கேட்டுவிடுவேன் என்கிற பயத்தில்,  வருணின் உள் மனதையும், தைரியத்தையும் புரிந்த காந்தி வருண் கனவில் வராமல் தப்பி ஓடிட்டாரு!

ஆக ஒரு தொல்லை ஓய்ந்ததுனு நிம்மதியாக இருக்கலாம்னு இருந்தால் நம்ம மதுரைத்தமிழன் எப்படியோ அவர் கனவில் வந்த காந்திட்ட அவர் வாயைத் திறக்குமுன்பே மளமளனு பத்து கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லிட்டார். இவர் சொன்ன பத்து பதில்களும்  தமிழில்! அதுவும் காந்தி இவரிடம் ஹிந்தில கேள்விகள் கேட்குமுன்னாலேயே படார் படார்னு பதில்களைத் தமிழில் கொடுத்துவிட்டார்! கேள்விகள்தான் இணையத்தில் எல்லா மூலைகளிலும்  இருக்கே! நீங்க என்ன கேக்க வேண்டிக் கிடக்கு, காந்தியாரே?  இந்தாங்க இதுதான் என் பதில்கள்னு தமிழ்லயே பதில் சொல்லி கனவில் வந்த காந்தியை அவசரமாக அனுப்பி வச்சுட்டாரு.

காந்தி என்ன செய்வாரு பாவம்? வேற வழியே இல்லாமல், தமிழில் பதில்களைப் பெற்ற காந்தி அவசரமாகத் தமிழ் கற்றுக்கொண்டு மதுரைத் தமிழன் பதில்களை ஒரு வழியாகப் புரிந்து கொண்டார். அதோட  அதற்கான கேள்விகள் தமிழில் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அரைகுறையாக கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்து  தமிழ் கேள்விகளை "ஸ்டாக்" வைத்துக்கொண்டார்.

 மறுபடியும் என் கனவில், தமிழ் கேள்விகளுடன்  வந்து சேர்ந்துட்டார, காந்தி.
வந்தவர், அமெரிக்காவில் போய் குடியிருக்கும் இவனிடம் எதுக்கு அர்த்தமில்லாத பல கேள்விகள் கேட்க என்று நினைத்து

"ஒரே ஒரு கேள்வியை மட்டும் உன்னிடம் கேக்கிறேன். அதுவும் உன் தாய் மொழி தமிழில்! அதுக்கு மட்டும் பதில் சொல்லு" னு கேட்டார், காந்தி.

"சரி கேளுங்க காந்திஜி" என்றேன்.

"நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கிறாய்?" என்றார்.

கேள்வி புரியாத நான்.  

"எங்கா? இல்லைனா யாராகப் பிறக்கணும்னு ஆசைப்படுவேனா?" என்று காந்தியைத் திருப்பிக் கேட்டுக் குழப்ப ஆரம்பித்தேன்.

"ஆமா ஆமா, எங்கு பிறந்தால் என்ன? யாராகப் பிறக்க ஆசைப்படுகிறாய்? என்று சமாளிக்க..

"நான் எப்போ செத்தாலும் சரி, சாகும்போது என்னால் முடிக்கப் படாத வேலைகள், தெளிவு படுத்தப் படாத விடயங்கள், எழுதப்படாத எழுத வேண்டிய பின்னூட்டங்கள் எல்லாமே பாதியில் அனாதையாக நிற்கும். அதனால மறுபிறவி எடுத்து வந்து நிற்பவைகளை தொடர்வதில்  எனக்கு ஆட்சேபனை இல்லை! மறுபிறவினு ஒண்ணு இருந்து, பிறந்து வந்தால் பாதியில் நிற்கும் வேலைகளையும், சில சந்தேகங்களையும் தெளிவு படுத்த  நான் நானாகவேதான் பிறக்கணும்.  அதாவது இதே  46 குரோமசோம் களுடன், இதே வருணாகவேதான் எங்கே பிறந்தாலும்  பிறக்கணும் என்பது என் அவா!" என்றேன்.

"ஏன் உன்னைவிட உயர்தர மக்கள் எத்தனையோ பேர் இருக்காங்க.. மறு பிறவியில் நீ ஏன் ஒரு உயர்வான மனிதனாகப் பிறக்கக்கூடாது?"

அவர் சொன்னதை அவமானமாக எடுத்துக்கொண்ட நான்..

"காந்திஜி! எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும். என்  கணிப்பின்படி நான் ரொம்ப நல்லவனும் இல்லை! படு அயோக்கியனும் இல்லை! ஒரு சராசரி மனிதன். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடினால், நான் ஒண்ணும் அவ்வளவு மட்டமான ஆள் கெடையாது. அதனால் மறுபிறவியிலும் நான் இதே வருணாகவேதான்  பிறக்க  ஆசைப்படுகிறேன்! மன்னிக்கணும், மறுபிறவியில் நான் காந்தியாகவோ, புத்தராகவோ, இல்லை சகலகலாவல்லவரு, மாமேதை கமலஹாசனாகவோ பிறக்க ஒரு போதிலும் ஆசை இல்லை! என்னைவிட நான் அவர்களை உயர்வாகக் கருதுவது என்னை நானே அவமானப்படுத்துவது போல்" என்றேன்

இதுபோல் ஒரு பதிலை என்னிடம் இருந்த எதிர்பார்க்காத காந்தி உணர்ச்சி வசப்பட்டு, ஹிந்தியில்,

"பஹுத் அச்சா!"  என்றார்! 

ஆனால் மனதுக்குள்ளேயே ..This guy is an egoist என்று ஆங்கிலத்தில் காந்தி நினைப்பது எனக்கும் புரிந்துவிட்டது என்று அவருக்குத் தெரியாது!

21 comments:

Avargal Unmaigal said...

//எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும்///

இதில் என்னை மட்டும்தான் எனக்கு தெரியும் என்ற வரிகள் மிகவும் பிடித்தது அது உண்மையும் கூட..

Avargal Unmaigal said...

மீண்டும் வருகிறேன்... வேலைக்கு நேரமாச்சு பாஸ்

'பரிவை' சே.குமார் said...

பஹூத் அச்சா...

.This guy is an egoist ன்னு நினைச்சாரா இல்லை

This guy is a genious அப்படின்னு நினைச்சாரா?

நல்ல பகிர்வு வருண்....

G.M Balasubramaniam said...


பாவம் கில்லர்ஜி. நிச்சயமாக தொடர்பதிவு இப்படி எல்லாம் திசை மாறும் என்று எண்ணி இருக்க மாட்டார்.நீங்கள் நீங்களாகவே இருங்கள். don't compromise...!

அருணா செல்வம் said...

பஹூத் அச்சா.. வருண் ஜி.

மகிழ்நிறை said...

காந்திக்கு தமிழ் நல்ல பேசவும் எழுதவும் தெரியும். கரந்தை ஜெயகுமார் அண்ணா இதே தொடர்பதிவில் கூட இதைப்பற்றி விரிவான சொல்லியிருகிறார்!!http://tamil.oneindia.com/news/2008/07/09/tn-old-man-who-preserves-gandhijis-tamil-signature.htmlபடிச்சு பாருங்க
_________________

முதல் பதில் பொறுப்புணர்வின் உச்சம் பாஸ்!!
___________________

you once again proved that you are so unique!! well said Varun:)) KUDOS to you!!

வருண் said...

***Avargal Unmaigal said...

//எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும்///

இதில் என்னை மட்டும்தான் எனக்கு தெரியும் என்ற வரிகள் மிகவும் பிடித்தது அது உண்மையும் கூட..***

வாங்க மதுரைத் தமிழரே! :)

வருண் said...

***-'பரிவை' சே.குமார் said...

பஹூத் அச்சா...

.This guy is an egoist ன்னு நினைச்சாரா இல்லை

This guy is a genius அப்படின்னு நினைச்சாரா?

நல்ல பகிர்வு வருண்....***

வாங்க குமார். காந்திதாங்க ஜீனியஸ்! நம்ம எல்லாம் சராசரி மனிதர்கள்தாம். எல்லாரும் காந்தியாகிவிட்டால் அப்புறம் காந்திக்குத்தான் என்ன மரியாதை? நம்ம நாமாகவே இருப்போமே? :)

வருண் said...

***G.M Balasubramaniam said...


பாவம் கில்லர்ஜி. நிச்சயமாக தொடர்பதிவு இப்படி எல்லாம் திசை மாறும் என்று எண்ணி இருக்க மாட்டார்.நீங்கள் நீங்களாகவே இருங்கள். don't compromise...!**8

வாங்க ஜி எம் பி சார்.

ஒரு சில நேரம் அழகான கவிதை எழுதிய கவிஞரின் விருப்பமில்லாமலே அதை தன் இஷ்டத்துக்கு விரிவுரை, பொருளுரை எழுதுபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அந்தக் கவிஞர் நிலைமைதான் நம் தேவகோட்டைக்காரர் நிலைமையும். Honestly I dont like to call him as Killergee! It sounds so offensive! :(

Thank you for your thoughts, Sir!

வருண் said...

***அருணா செல்வம் said...

பஹூத் அச்சா.. வருண் ஜி.***

வாங்க அருணா! நன்றி. :)

வருண் said...

***Mythily kasthuri rengan said...

காந்திக்கு தமிழ் நல்ல பேசவும் எழுதவும் தெரியும். கரந்தை ஜெயகுமார் அண்ணா இதே தொடர்பதிவில் கூட இதைப்பற்றி விரிவான சொல்லியிருகிறார்!!http://tamil.oneindia.com/news/2008/07/09/tn-old-man-who-preserves-gandhijis-tamil-signature.htmlபடிச்சு பாருங்க***

நீங்க சொல்லித்தான் காந்தியின் தமிழ் அறிவைத் தெரிந்து கொண்டேன், மைதிலி. :)
-------------

***முதல் பதில் பொறுப்புணர்வின் உச்சம் பாஸ்!!***

:)))

------------------

***you once again proved that you are so unique!! well said Varun:)) KUDOS to you!! ***

எனக்கு மட்டுமல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு "தனித்துவம்" இருக்கிறது மைதிலி! :)

Iniya said...

நான் நானாகவேதான் பிறக்கணும்

எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும்///
உண்மை தான் வருண் அசத்தல் பதில்கள் சூப்பர் நியாயமான பதில்கள் தான்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆமாம் காந்திக்குத் தமிழ் தெரியும்.,பிடிக்கும் :)

உங்க பதில்கள் 'பஹூத் அச்சா' வருண்..
//என்னை மட்டும்தான் நல்லாத் தெரியும்// உண்மை!! நீங்க நீங்க தான்.. :)

உஷா அன்பரசு said...

உங்களை எங்களுக்கும் தெரியும்ங்க... வருண் மனதில் பட்டதை நேர்மையாக பேசும் நல்ல மனிதர்!

”தளிர் சுரேஷ்” said...

நான் படித்து அறிந்த வரையில் காந்திக்கு தமிழ் படிக்கத்தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! மற்றபடி உங்களின் கேள்வியும் பதிலும் மிகச்சிறப்பு! நன்றி!

Amudhavan said...

எல்லாம் சரி; காந்தி உண்மையாகவே கனவில் வந்தாரா அல்லது இப்படி எழுதுவதும் ஒரு அனுமதிக்கப்பட்ட பாணிதான் என்பதனால் எழுதினீர்களா? அப்படியானால் தனித்துவம், ஹிப்போக்கிரட் என்ற விஷயங்களெல்லாம் உங்களைப் பொறுத்தவரை அடிவாங்குமே. ஆனாலும் உங்களைப் பற்றிய அந்த தனிமனிதச் செருக்கு நன்று.

வருண் said...

***Iniya said...

நான் நானாகவேதான் பிறக்கணும்

எனக்கு மற்றவர்களைப் பற்றி தெரியாது. அவர்கள் வெளியுலகில் எப்படி நடந்துகொள்கிறார்கள், உள்ளுக்குள் அவர்கள் யார், எப்படிப் பட்டவர்கள் என்று அவர்களைப் பத்தி எனக்கு சுத்தமாகத் தெரியாது. வெளியில் அவர்கள் நடந்துகொள்வதை வைத்து நான் அவர்களாகப் பிறக்க ஆசை என்று சொல்வது அபத்தம். உலகிலேயே என்னை மட்டும்தான் எனக்கு நன்கு தெரியும்///
உண்மை தான் வருண் அசத்தல் பதில்கள் சூப்பர் நியாயமான பதில்கள் தான். ***

வாங்க இனியா! கருத்துரைக்கு நன்றி :)

வருண் said...

***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆமாம் காந்திக்குத் தமிழ் தெரியும்.,பிடிக்கும் :)

உங்க பதில்கள் 'பஹூத் அச்சா' வருண்..
//என்னை மட்டும்தான் நல்லாத் தெரியும்// உண்மை!! நீங்க நீங்க தான்.. :)***

வாங்க கிரேஸ்! காந்திக்கு தமிழ் தெரியும்னு எனக்கு மட்டும்தான் தெரியாமல் இருந்து இருக்கும் போல இருக்கு! :))

வருண் said...

***உஷா அன்பரசு said...

உங்களை எங்களுக்கும் தெரியும்ங்க... வருண் மனதில் பட்டதை நேர்மையாக பேசும் நல்ல மனிதர்!***

வாங்க உஷா! ரொம்ப நாளாச்சு நீங்க பின்னூட்டமிட்டு! நன்றி. :)

வருண் said...

*** ‘தளிர்’ சுரேஷ் said...

நான் படித்து அறிந்த வரையில் காந்திக்கு தமிழ் படிக்கத்தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்! மற்றபடி உங்களின் கேள்வியும் பதிலும் மிகச்சிறப்பு! நன்றி!***

வாங்க சுரேஷ்!

ஒரு சில உண்மைகளை (காந்தியின் தமிழறிவு) ஒண்ணு நம்மளாப் படிச்சு கத்துக்கலாம். இல்லைனா தவறாகச் சொல்லிவிட்டு மற்றவர் சரி செய்து அதை சரியாகக் கற்றுக்கலாம். இந்த ரெண்டாவது வகையில் கற்றால் மனதில் ஆழமாகப் பதியும்னு சொல்லுவ்வாங்க! திருத்தத்திற்கு நன்றி. :)

வருண் said...

***Amudhavan said...

எல்லாம் சரி; காந்தி உண்மையாகவே கனவில் வந்தாரா அல்லது இப்படி எழுதுவதும் ஒரு அனுமதிக்கப்பட்ட பாணிதான் என்பதனால் எழுதினீர்களா? ***

ஏதோ ஒரு "மூடில்" என்னவோ எழுதினேன் சார். நன்கு யோசித்து இதை எழுதவில்லை என்பதே உண்மை.

**அப்படியானால் தனித்துவம், ஹிப்போக்கிரட் என்ற விஷயங்களெல்லாம் உங்களைப் பொறுத்தவரை அடிவாங்குமே. **

நிச்சயம் சார். நானும் சாதாரண மனிதந்தானே? என் கட்டுரையை நானே விமர்சித்தால் கட்டுரை எழுதிய என்னுடைய குறைகளை நானே விமர்சிக்க வேன்டியது வரத்தான் செய்யும்.

*** A hypocrite is a person who - but who isn't?
Don Marquis***

மேலே உள்ளதுக்கு "வருண்" நிச்சயம் விதிவிலக்கல்ல, சார்! :)


***ஆனாலும் உங்களைப் பற்றிய அந்த தனிமனிதச் செருக்கு நன்று.***

மூன்றே வரியானாலும், உங்க ஆழ்ந்த விமர்சனத்திற்கு நன்றி சார்! :)