பெண் சுதந்திரம் அதிகமாக உள்ள மேலை நாட்டில் முதன்மையானது அமெரிக்கா. இங்கே வெளியில் நின்னு புகைபிடிப்பவர்களில் பெண்களே அதிகம்.
புகைபிடிக்கும் கல்லூரி மாணவிகள் |
கல்லூரிக்குச் சொல்லும் அனைத்து மாணவிகளும் (எழுத்துப்பிழை இல்லை! ஆமாம், மாணவிகள்தான்) 18 வயதிலேயே மதுபானம் அருந்துகிறார்கள். அமெரிக்காவில் 21 வயதுதான் சட்டப்படி மது அருந்தலாம் என்கிற நிலை இருந்தும் இவர்கள் 18 வயதிலேயே மதுபானம் அருந்துவது சாதாரணம். இதுதான் இன்றைய அமெரிக்க கல்லூரி நிலைமை!
மாணவிகள் வைன் குடிக்கிறாங்க.. |
என்ன? அமெரிக்காலதான் அப்படியெல்லாம் நடக்குதுனு சொல்றீங்களா? |
கலாச்சாரக்காவலர்களை நாம் முட்டாள்கள் என்கிறோம்! சாரு நிவேதிதா அடிவருடிகள் ஒரு பக்கம்! கமலஹாசன் அடிவருடிகள் இன்னொரு பக்கம்! இவர்கள் நாளைய இந்தியா எப்படி இருக்கணும்னு மேலை நாடுகளில் நடக்கும் இதுபோல் முன்னேற்றைத்தைக் காட்டி நாமும் "நாசமாகப் போவோம்" என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.
நாம் எங்கே போகிறோம்?
இன்று ஒரு செய்தி, பால்ட்டிமோர் ரேவென்ஸ் என்கிற அமெரிக்க ஃபுட்பால் டீமில் ச்சியர் லீடராக இருந்ந்த 47 வயதுப் பெண்மணி இவர்.
இன்று Molly Shattuck வயது 47, ஒரு தாய் |
ஒரு காலத்தில் ச்சியர் லீடராக இருந்தவர் இவர் |
சரி, ஒரு காலத்தில் ச்சியர் லீடர். இன்று இவர் 47 வயதான ஒரு தாய்!
என்ன செய்தார்?
ஒரு 15 வயது பையனை வன்புணர்வு செய்துள்ளார்!!
அவனை எப்படித் தெரியும்?
இன்ஸ்டக்ராம் என்கிற சமூக வலைதளம் மூலம் பரிச்சயம்..
தன் மகனிடம் அவனுடைய அட்ரெஸ் வாங்கி தன் வீட்டிற்கு அவனை இன்வைட் பண்ணி, தனியாக இருக்கும்போது அவனை ஃபோர்ஸ் பண்ணி வன்புணர்வு செய்துள்ளார்.
தன் குழந்தைகளுடன் இவர் |
இது கதை எல்லாம் இல்லை!
நடந்த உண்மை!
முழுமையான பெண் சுதந்திரம் பெற்றவுடன் நாம் சாதித்தது என்ன? ஆண்களை விட நாங்க எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதே! ஏன் நாங்க சிறுவர்களை வன்புணர்வு செய்தால் என்ன? காலங்காலமா ஆண்கள் மட்டும்தான் செய்யணுமா என்ன? எங்களாலயும் முடியும்!
அதாவது, புகை பிடிப்பது, குடிப்பது, பால்ய பருவத்தில் உள்ள சிறுவனை வற்புறுத்தி "ஓரல் செக்ஸ்" கொடுப்பது!
உலகம் முன்னேறிவிட்டது!
முழுமையான பெண் சுதந்திரம் கிட்டிவிட்டது.
பாவம் பாரதி இதையெல்லாம் பார்க்காமல் போயிட்டாரே!!
அவர் என்னவோ நினைக்க.. நடப்பது என்னவோ வேறமாதிரிதான் இருக்கு! ஒரு வேளை இதைத்தான் அவரும் எதிர்பார்த்தரோ? யாருக்குத் தெரியும் அவர் என்ன கனவு கண்டார் என்று?
26 comments:
இதுக்கு நான் ரெஸ்பான்ஸ் பண்ணலாமா,கூடாதா எனும் உங்க வரையறையை கொண்டு இந்த கமெண்டை பப்ளிஷ் செய்வதும் டெலிட்டுவதும் உங்க விருப்பம் வருண்:))
அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம் நீங்க சொல்லவறீங்க குடிக்கிறது தப்பா? இல்லை பெண்கள் குடிகிறது தப்பா? எனக்கு தெரியும் பெண்கள் செய்தால் மட்டுமே அதை தப்பு என சொல்லும் குறுகிய புத்தி வருணுக்கு எப்போதும் இல்லை:) பெண்களும் இப்படி செய்கிறார்களே எனும் கவலை இல்லையா? உங்களுக்கு ரொம்ப ஜூனியர் என்றாலும் என் தாழ்மையான என்னால் வருணை புரிந்து கொள்ள முடிந்ததால் இந்த பதிவின் தீம் இதுன்னு புரியுது, ஆன யார் செய்தாலும் தப்புதான் இதை பெண்களும் செய்கிறார்களே? என்ற தொனியை that means அந்த mood டை நீங்க பதிவு செய்யலைன்னு தோணுது வருண். சொல்வதற்கு எனக்கு தகுதி பத்தாதுன்னு நினைச்சா சாரி.
---------------
நேற்று முன் தினம் நம்ம ஊர்ல (அப்படித்தானே) ஒரு கொடூர கொலை. ஆண் தலையை வெட்டி ஒரு மளிகை கடை வாசலில் வைத்து அதை கூல் drink crate கொண்டு மூடிவைதிருக்கிரார்கள். உடலின் மீத எல்லா உறுப்புக்களையும் குடல், ஈரல் என ஆட்டுக்கு வெட்டுவது போல் வெட்டி சாக்கில் கட்டி அருகில் உள்ள நீரற்ற வாய்காலில் சாக்கில் கட்டி எறிந்துள்ளனர். பொதுமக்கள் பேசிக் கொள்ளவதெல்லாம் இது தான். அந்த கொலைகாரர்கள் மிதமிஞ்சிய போதையில் இருந்திருக்கவேண்டும்.
-------------
மீடியாவிற்கு சட்டென தெரிந்துவிடுகிற இந்தியாவின் க்ரீமி மற்றும் ஹையர் மிடில் கிளாஸ் பெண்களை கொண்டு தயவு செய்து எல்லா பெண்களையும் ஜட்ஜ் செய்து பெண் சுதந்திரம் தறிகெட்டு போய்கொண்டிருப்பதாய் கருதவேண்டாம். எழுபது சதவித கிராம, கீழ்தட்டு மக்களின் வாழ்கையை அருகிருந்து பார்க்கும் அனுபவத்தில் நண்பனிடம் இந்த வேண்டுகோள்.
சுதந்திரம் என்றால்...
“இருவர்க்கும் அதனைப் பொதுவில் வைப்போம்“ என்ற பாரதிதாசன்தான் சரியாகச் சொல்லியிருக்கிறான்.
யார்செய்தாலும் தவறு தவறுதான்.
இதில் பெண் என்ன ஆண்என்ன?
இதுவரை ஆண்கள் “அனுபவித்து” வந்தது சுதந்திரம் எனில் இப்போது பெண்கள் அதைச்செய்வதுமட்டுமே தவறாகப் படுவதுதான் தவறு.
இதைப் பெண்களின் தவறு என்று சொல்லாமல் சமூதாயம் போகும் போக்கின் தவறு என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும் வருண். கொஞ்சம் அசந்தாலும் ஆண்கள் இதையே செய்தது சரிதான், பெண்கள் எப்படிச் செய்யலாம் எனும் தொனி வந்துவிட வாய்ப்பு உண்டு மைதிலி அதைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பதிவுகளுக்கு லிங்க் எதற்கு? அதை எடுத்துவிடுங்கள்.
வாங்க மைதிலி! :)
****Mythily kasthuri rengan said...
இதுக்கு நான் ரெஸ்பான்ஸ் பண்ணலாமா,கூடாதா எனும் உங்க வரையறையை கொண்டு இந்த கமெண்டை பப்ளிஷ் செய்வதும் டெலிட்டுவதும் உங்க விருப்பம் வருண்:))***\
பொதுவாக என்னுடைய பின்னூட்டங்களைத்தான் கவனமாக வடிகட்டி வெளியிடணும். நீங்க அந்தத் தகுதியை என்னிடம் இருந்து தட்டிப் பறிக்க முடியாது! :))
***அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம் நீங்க சொல்லவறீங்க குடிக்கிறது தப்பா? இல்லை பெண்கள் குடிகிறது தப்பா?***
குடிப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்கள் குடித்தால் பிறக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது என் புரிதல்.
உங்க கேள்விக்கு பதில்.. பெண்கள் குடிப்பதும் தப்புத்தான். அதுவும் இதுபோல் மைனர்கள் குடிப்பது சட்டப்படி தப்பு. அப்படி குடிக்கும் பெண்கள், அருகில் உள்ள ஆண் என்னும் மிருகங்களால் வன்புணர்வு செய்யப்படுவது சாதாரனமாக நடக்கிறது.
பெண் குடிப்பதை தவிர்க்கணும். என்ன் என்றால் அவர்களைச் சுத்தி ஆண் மிருகங்கள் இருப்பதால்! :)
***நேற்று முன் தினம் நம்ம ஊர்ல (அப்படித்தானே) ஒரு கொடூர கொலை. ஆண் தலையை வெட்டி ஒரு மளிகை கடை வாசலில் வைத்து அதை கூல் drink crate கொண்டு மூடிவைதிருக்கிரார்கள். உடலின் மீத எல்லா உறுப்புக்களையும் குடல், ஈரல் என ஆட்டுக்கு வெட்டுவது போல் வெட்டி சாக்கில் கட்டி அருகில் உள்ள நீரற்ற வாய்காலில் சாக்கில் கட்டி எறிந்துள்ளனர். பொதுமக்கள் பேசிக் கொள்ளவதெல்லாம் இது தான். அந்த கொலைகாரர்கள் மிதமிஞ்சிய போதையில் இருந்திருக்கவேண்டும்.***
பதிவர் சந்திப்பு முடிந்த பிறகு (சென்னையில் நடந்த "முதல்"?) ஒரு பெரிய சண்டை நடந்தது.
அதில் யாரோ ஒரு இஸ்லாமியப்பதிவர் பதிவர் சந்திப்பின் போது குடிப்பது தவறு என்று சொல்லவும். குடிகாரர்கள் நிறைந்த நம் தமிழ்ப் பதிவுலகம், அந்த இஸ்லாமியப்பதிவரை "வில்லனாகவும்" "முட்டாளாகவும்" சித்தரித்தது. பதிவுலகமே குடிக்கு வக்காலத்து வாங்காமல் வாங்கியது. நான் நின்று வாதாடிய அணி, இஸ்லாமிய அணி. இதெல்லாம் பதிவுலக வரலாறு. உங்களுக்குத் தெரிந்து இருக்காது. வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேணும்னா சில பதிவுகளை தோண்டி எடுத்துக் காட்டுகிறேன். :) என்னுடைய நிலைப்பாடு என்றுமே குடிக்கு எதிராகத்தான். இதில் ஆண் பெண் என்கிற பாகுபாடெல்லாம் கெடையாது. Again I am talking about "non-fictions"! Not my fictions. :)
***மீடியாவிற்கு சட்டென தெரிந்துவிடுகிற இந்தியாவின் க்ரீமி மற்றும் ஹையர் மிடில் கிளாஸ் பெண்களை கொண்டு தயவு செய்து எல்லா பெண்களையும் ஜட்ஜ் செய்து பெண் சுதந்திரம் தறிகெட்டு போய்கொண்டிருப்பதாய் கருதவேண்டாம். எழுபது சதவித கிராம, கீழ்தட்டு மக்களின் வாழ்கையை அருகிருந்து பார்க்கும் அனுபவத்தில் நண்பனிடம் இந்த வேண்டுகோள். ****
இந்தப் பதிவை வாசிப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்!
நீங்கள் சொல்லும் 70 விழுக்காட்டில் உள்ளவர்களா? இல்லைனா நீங்க சொல்லும் க்ரீமீ லாயெரில் இருந்து கொண்டு வாழும் அரைவேக்காடுகளா?
99% க்ரீமிலேயரில் உள்ளவர்கள்தான் "ஆண் லைன்" வர்ராங்க என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆக, என்னுடைய இவ்விமர்சனம், அப்பாவிகளான கிராம மக்களை அடையவில்லை! க்ரீமிலேயரைத்தான் அடைகிறது என்பது தெரிந்துதான் நான் எழுதுகிறேன். :)
தேவையான மக்களுக்குத்தான் இவ்விமர்சனம் சென்றடைகிறது. அப்பாவி கிராம மக்களுக்கு அல்ல, மைதிலி! :)
***இதில் பெண் என்ன ஆண்என்ன?***
வாங்க முத்து நிலவன் சார்! :)
ஆண் செய்யலாம்னு நான் சொன்னதுபோல் இருக்கு உங்க வாதம். அப்படி எதுவும் இக்கட்டுரையில் சொல்லப்படவில்லை.
மேலும் குடி ஒரு அடிக்ஷன். டீனேஜில் குடிக்க ஆரம்பித்தால் அதை விடுவது கடினம். கருத்தரித்து இருக்கும்போதும் விடுவது கடினம். பெண்கள் டீனேஜிலேயே குடிக்கு அடிமையாவதால் விளைவுகள் பயங்கரமாக முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!
***இதுவரை ஆண்கள் “அனுபவித்து” வந்தது சுதந்திரம் எனில் இப்போது பெண்கள் அதைச்செய்வதுமட்டுமே தவறாகப் படுவதுதான் தவறு.***
ஆக, இக்கட்டுரையை எழுதிய மேதாவி, ஆண்கள் குடிக்கும்போது அதை கண்டுக்கவில்லை என்கிறீர்கள்?
பெண்கள் குடிப்பதை மட்டுமே மிகைப் படுத்துகிறார் என்கிறீர்கள்?
அது உண்மை அல்ல! என்பதை நீங்கள் இப்போதாவது புரிந்து கொள்வது நல்லது!
***இதைப் பெண்களின் தவறு என்று சொல்லாமல் சமூதாயம் போகும் போக்கின் தவறு என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும் வருண்.***
ஆண்கள் தவறு செய்தால் அது ஆண்கள் செய்யும் தவறு
பெண்கள் தவறு செய்தால் அது சமுதாயம் செய்த தவறு.
நீங்க ஆணும் பெண்ணும் சமம்ணு நம்புபவர்??? அப்படித்தானே???
நீங்கள் பேசுவதில் நியாயமே இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்றால் பெண்கள் செய்யும் தவறுக்கு பெண்கள்தான் பொறுப்பு. சமுதாயம் பொறுப்பு என்பது சொல்வது சப்பைக்கட்டுதல். பெண்களை சமமாக கருத்தாத "ஆணியவாதி" களின் பச்சையான ஏமாற்று வேலை! என்பது என் தாழ்மையான கருத்து.:)
***இதுபோன்ற பதிவுகளுக்கு லிங்க் எதற்கு? அதை எடுத்துவிடுங்கள்***
இதுபோல் கருத்துக்களை சொல்லும்போது தொடுப்புக் கொடுக்க வேண்டியது அவசியம் என்பது என்னுடைய புரிதல்.ஏன் என்றால் தொடுப்பு இல்லை என்றால் இது வெறும் கதை என்றாகிவிடும் அபாயம் உண்டு. தொடுப்புக் கொடுத்தால்தான் இது "கட்டுரை" ஆகும். இருந்தாலும் நீங்கள் தேவை இல்லை என்று நம்புவதால் தற்சமயம் தொடுப்பை அகற்றியுள்ளேன். மீண்டும் சேர்க்கப்படும். தொடுப்பு கொடுப்பதுதான் முறை என்பதால அது பிறகு சேர்க்கப்படும்.
இருந்தாலும் உங்கள் ஆதங்கம், வேண்டுதலை சரியாகப் புரிந்து கொண்டேன். நன்றி, முத்துநிலவன் ஐயா! :)
ஆஹா! நான் எப்போதும் யாருடமும் இருந்தும் தட்டிப்பறிக்கும் வழக்கம் இல்லாதவள், ஆனால் உங்கள் சுதந்திரத்தில் நான் தலையிட்டதாக நினைத்தால் ஏற்கனேவே ஒருமுறை மன்னிப்பு கேட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சாரி. இந்த நொடி இதை வார்த்தையாக பதியவில்லை.
---------
பழைய பதிவுகள் பார்த்து தான் நான் அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை வருண். நீங்கள் தமிழன் சகாவின் க்வாட்டர் பதிவுகளுக்கு இடும் பின்னூடங்களை நானும் படித்திருக்கிறேன்:)
----------
of course I agree. ஆனா நான் தான் வேறுயாருக்கோ அட்வைஸ் பண்ணுகையில் இடையில் வந்துவிட்டேன் போல, ஏன்னா நானும் teetotaler:))
good night/morning!!
பெண்ணை வீட்டில் 'பூட்டிவைத்துவிட்டு' ஆண் வெளியில் சென்று சம்பாதித்துவந்தான் என்றுதான் நிறையப்பேர் தவறாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அந்தக் காலத்தில் வெளியில் சென்று வருவதில் இருந்த அபாயங்களுக்காகத்தான் பெண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு அவளுக்காகவும் சேர்ந்து சம்பாதித்து வந்தான ஆண். இப்படித்தானே அடிப்படை துவங்குகிறது?
நாகரிகம் உயர உயர எல்லாமே மாறுகிறது.
(பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் ஆண்கள் பற்றியும், ஆண் சமூகம் பற்றியும் நான் இங்கே பேசவில்லை)
பெண்ணுக்கு இங்கே சுதந்திரமே இல்லை என்று சொல்லும் பல பெண்கள் 'எது சுதந்திரம்?' என்பதில் தவறான கற்பிதங்களேயே நினைத்திருக்கிறார்கள்.
இன்னமும் நம்முடைய தொண்ணூறு சதவித வீடுகளில் 'எல்லா முடிவுகளையும்' எடுப்பவர்கள் பெண்கள்தாம்.அப்படிப்பட்ட குடும்பங்கள் எல்லாம் நல்லபடியாகவே இருக்கின்றன.
சுதந்திரம் என்பது என்னவென்று பெங்களூரிலும் டெல்லியிலும் நடத்திக்காட்டினரே சில பெண்கள்.......பொது இடத்தில் கூடி இஷ்டப்படி வாயோடு வாய் பொருத்தி முத்தமிடுவது என்றும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் உதடுபொருத்தி முத்தமிட்ட லீனா மணிமேகலையின் படங்களும் 'பெண் சுதந்திரத்தை வலியுறுத்துபவை' என்பதை ஏற்க முடியவில்லை.
என்ன வருண் இது? பெண்கள் முன்னேற நினைப்பது தவறா? ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண். :-)
ஆண்கள் செய்தார்கள்...
இப்போ பெண்களும் செய்கிறார்கள்...
இங்கே தவறு இருவர் பக்கமுமே...
கட்டுபாடான முஸ்லீம் நாட்டில்தான் நான் வேலை செய்கிறேன். எல்லாக் கம்பெனியிலும் சிகரெட் பிடிப்பதற்கு என்றே ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். அங்கே ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்று சிகரெட் குடிக்கிறார்கள்.
இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக சிகரெட் வகைகள்...
வியாழன் இரவு ஆண்களைப் போல் பெண்களும் கருப்பு பாலிதீன் கவரில் தண்ணி வாங்கிப் போகிறார்கள்....
பாரதி கண்ட சமுதாயம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டது.
இப்போது எல்லாவற்றிலும் சம உரிமைதான்...
அது நல்ல விஷயங்களில் இருந்தால் நல்லது.
நன்றி.
****ஆஹா! நான் எப்போதும் யாருடமும் இருந்தும் தட்டிப்பறிக்கும் வழக்கம் இல்லாதவள், ஆனால் உங்கள் சுதந்திரத்தில் நான் தலையிட்டதாக நினைத்தால் ஏற்கனேவே ஒருமுறை மன்னிப்பு கேட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை சாரி. இந்த நொடி இதை வார்த்தையாக பதியவில்லை.
---------
பழைய பதிவுகள் பார்த்து தான் நான் அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை வருண். நீங்கள் தமிழன் சகாவின் க்வாட்டர் பதிவுகளுக்கு இடும் பின்னூடங்களை நானும் படித்திருக்கிறேன்:)
----------
of course I agree. ஆனா நான் தான் வேறுயாருக்கோ அட்வைஸ் பண்ணுகையில் இடையில் வந்துவிட்டேன் போல, ஏன்னா நானும் teetotaler:))
good night/morning!!***
என்னிடம் உள்ள "கெட்ட தகுதியை" தட்டிப் பறித்தல் உதவிதானே?? Double negative makes it positive. So, it was only a "positive approach" and a "helping attitude"! Nothing to feel bad about it, mythily! :)
***பெண்ணை வீட்டில் 'பூட்டிவைத்துவிட்டு' ஆண் வெளியில் சென்று சம்பாதித்துவந்தான் என்றுதான் நிறையப்பேர் தவறாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அந்தக் காலத்தில் வெளியில் சென்று வருவதில் இருந்த அபாயங்களுக்காகத்தான் பெண்ணை வீட்டிலேயே விட்டுவிட்டு அவளுக்காகவும் சேர்ந்து சம்பாதித்து வந்தான ஆண். இப்படித்தானே அடிப்படை துவங்குகிறது?
நாகரிகம் உயர உயர எல்லாமே மாறுகிறது.
(பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் ஆண்கள் பற்றியும், ஆண் சமூகம் பற்றியும் நான் இங்கே பேசவில்லை)
பெண்ணுக்கு இங்கே சுதந்திரமே இல்லை என்று சொல்லும் பல பெண்கள் 'எது சுதந்திரம்?' என்பதில் தவறான கற்பிதங்களேயே நினைத்திருக்கிறார்கள்.
இன்னமும் நம்முடைய தொண்ணூறு சதவித வீடுகளில் 'எல்லா முடிவுகளையும்' எடுப்பவர்கள் பெண்கள்தாம்.அப்படிப்பட்ட குடும்பங்கள் எல்லாம் நல்லபடியாகவே இருக்கின்றன.
சுதந்திரம் என்பது என்னவென்று பெங்களூரிலும் டெல்லியிலும் நடத்திக்காட்டினரே சில பெண்கள்.......பொது இடத்தில் கூடி இஷ்டப்படி வாயோடு வாய் பொருத்தி முத்தமிடுவது என்றும், ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் உதடுபொருத்தி முத்தமிட்ட லீனா மணிமேகலையின் படங்களும் 'பெண் சுதந்திரத்தை வலியுறுத்துபவை' என்பதை ஏற்க முடியவில்லை.****
லீனா மணிமேகலை எல்லாம் நம்ம மரப்பசு அம்மணி மாதிரித்தான் சார். அம்மணிக்கு ஆடி அடங்கி கிழவியானவுடன்தான் எல்லாம் தெளிவுபடும்.
ஆடி அடங்கட்டும்!
இருக்கிறப்போத்தானே ஆட முடியும்?
****என்ன வருண் இது? பெண்கள் முன்னேற நினைப்பது தவறா? ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண். :-)***
வாங்க அமரபாரதி!
நவீன ஆண்களில் வாழ்நாள் பூராம் பெண்ணியவாதியாக நடித்து தன் கருத்துக்களை சொல்லாமலே போய் சேர்ந்துடுறாங்க.. நம்மளும் எதுக்கு ஆயிரத்தோட ஆயிரத்து ஒண்ணாவது பெண்ணியவாதியா நடிக்கணும்னு தான் ? :)
வாங்க குமார்!!
****கட்டுபாடான முஸ்லீம் நாட்டில்தான் நான் வேலை செய்கிறேன். எல்லாக் கம்பெனியிலும் சிகரெட் பிடிப்பதற்கு என்றே ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். அங்கே ஆண்களும் பெண்களும் ஒன்றாக நின்று சிகரெட் குடிக்கிறார்கள்.
இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக சிகரெட் வகைகள்...
வியாழன் இரவு ஆண்களைப் போல் பெண்களும் கருப்பு பாலிதீன் கவரில் தண்ணி வாங்கிப் போகிறார்கள்....***
அடேங்கப்பா!!!
நம்ம ஊர்லயும் "பெண்கள் மட்டும்"னு பேருந்து ஓடுவதுபோல் பெண்கள் மட்டும்னு "டாஸ் மாக்" வரப்போதாம். தெரியும்தானே?
இந்தக் காலத்து ஆண்களுடன் வாழணுனா "குடி" "புகை" இவை ரெண்டும்தான் அதுக்கு மருந்து னு சொன்னால் நம்ம என்ன செய்யமுடியும்?
வாழ்த்திட்டுப் போக வேன்டியதுதான். :)))
தேடித் தேடி பெண்களின் தவறுகளை எடுத்துப் போட்டது போல இருக்கு..
யுகம் யுகமா நம்ம பசங்க போட்ட ஆட்டத்திற்கு முன்னால் இதெல்லாம் தூசு.
விடுதலை கிடைத்த பின்னர் ஒரு ஆட்டம் ஆடித்தான் சிலர் இயல்புக்கு வருவர்.
மாண்புகள் இருவருக்கும் பொதுவானவைதான் ..
பலர் மாண்புடன்தான் இன்னும் இருக்கிறார்கள் ..
சோ மைனாரிட்டியை விட்டுத் தள்ளுங்க ...
அந்த இஸ்லாமியபதிவரை பின்தொடர விரும்புகிறேன்
முகவரி ப்ளீஸ்
மது!
நான் ஆண்களை என்றுமே உயர்த்தி எழுதியது கெடையாது..
முடிந்தால் நான் எழுதிய இந்தக் கதையை வாசிச்சுப் பாருங்க..
-------------
ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-3
பலவருடங்கள் முன்னால் விஜி வாழ்க்கையில் நடந்தது பற்றி இங்கே சொல்லணும்.
விஜி, மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல் எல்லாம் அவள் சொந்த ஊரான மதுரையிலிருந்து படிக்காமல் பக்கத்தில் இருந்த திண்டுக்கலில் ஹாஸ்டலில் சேர்ந்து படித்தாள். விஜியின் அம்மா, கமலா, மதுரையில் ஒரு ஆசிரியை. ஹையர் சக்கண்டரிக்கு பாட்டனி டீச் பண்ணிக்கொண்டு இருந்தார். அவள் அப்பா பாலசுப்பிரம்ணியன் மதுரையில் செளராஷ்டிரா கல்லூரியில் ஒரு இயற்பியல் பேராசிரியர். மதுரையில் ஆயிரம் நல்ல பள்ளிகள் இருந்தும் விஜியையும் அவள் தங்கை மாலாவையும் திண்டுக்கல்லில் ஹாஸ்டலில் சேர்ந்த்து படிக்க வைத்தார் அவர் அம்மா, கமலா.
ப்ளஸ் 2 படிக்கும்போதுதான் விஜிக்கு அவள் அப்பா "ஒரு மாதிரியான ஆள்" என்று புரிந்தது. தோழி ஒருத்தி ஒரு சாதாரண சண்டையில் எதையோ விஜி அப்பாவைப்பற்றி மோசமாக சொல்லிவைக்க..ஒன்றும் புரியாமல் விழித்த விஜி, அதன் பிறகு மற்றவர்களிடம் விசாரிக்கும்போதுதான் அவள் "வெல்விஷர்கள்" அவளுக்கு அந்த உண்மையை தெளிவுபடுத்தினார்கள். அதாவது விஜியின் அப்பா பாலாவுக்கும் அவர் கல்லூரியில் பணிசெய்த இன்னொரு பெண்ணிடம் தகாத உறவுத் தொடர்பு இருப்பதும், அதனால் அவங்க அம்மா, கமலா, அவள் அப்பா, பாலாவுடன் உண்மையில் சேர்ந்து வாழவில்லை என்பதும் விஜிக்கு அப்போத்தான் விளங்கியது. இதைப்பற்றி அவள் அம்மா, கமலா, விஜியிடம் பேச விரும்பியதில்லை. ஊருக்காக அவள் அம்மா, அவள் அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் வாழ்நாள் முழுவதுக்கும் உறவு முறிந்துவிட்டது என்பதும் விஜிக்கு இந்தச் சண்டைக்குப் பிறகு தெளிவுபடுத்தப் பட்டது. அப்பாவின் இந்த "நன் நடத்தையால்"தான் விஜி ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்று முழுவதும் நம்பினாள்.
அதன் பிறகு ஒரு நாள், இவளைப் போலவே மதுரையில் இருந்து வந்து படிக்கும் தோழி பவித்ராவிடம், ஆண்கள் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் என்று இதைப்பற்றிப் பேசியபோது பவித்ரா சொன்ன இன்னொரு விசயம் அதைவிட பயங்கர ஷாக்கிங்காக இருந்தது விஜிக்கு.
பவித்ராவுடைய தாய் மாமா, கோபால், அவருக்கு வயது 48 இருக்கும், பெரிய பணக்காரர், கோடி கோடியாக சம்பாரிப்பவர் இவர். இவருக்கு 12, 14 வயதில் இரண்டு பையன்கள். இவர் மனைவி காந்திமதி ஏழை வீட்டில் இருந்து வந்தவள், ஒரு அப்பாவி. கணவனை நிமிர்ந்துகூட பார்த்து பேசமாட்டார். பணத்திலேயே புரளும் கோபால், தன் சொந்த பந்தங்கள்னு பல குடும்பங்களுக்கு பண உதவி பொருளுதவி எல்லாம் செய்பவர். அப்போது, பவித்ராவுடைய பெரியம்மா மகனுக்கு, அதாவது, கோபாலுடைய அக்கா மகன் வினோத்க்கு, பெண் பார்ப்பதற்காக சுமாரான வசதியுள்ள ஒரு பெண்ணை பார்க்க சென்றார்கள். தாய் மாமா, கோபால்தான் பெரிய பணக்காரர், பெரும்புள்ளி என்பதால், கோபாலும் அந்த பெண்ணைப் பார்க்கச் சென்றாராம். எதிர்பார்த்ததைவிட பெண் பார்க்கப்போன அந்தப் பெண், பேரழகியாக இருந்தாளாம். ஆனால் அவர்கள் குடும்பத்தில் வசதி கம்மி என்பது தெளிவாகியது. பெண்ணைப் பார்த்தவுடன், பவித்ராவின் கசின், வினோத்திடம், உனக்கு வேற பெண் பார்க்கலாம் என்று முறையாக சொல்லிவிட்டார் அந்த பிசினஸ் மேக்னட், கோபால். அதற்கு காரணம்? கோபாலுக்கு அக்கா மகனுக்குப் பார்க்கப்போன அந்தப் பெண்ணை ரொம்பவே பிடித்துவிட்டதாம். ஆமாம், இந்த 48 வயதில் அந்த 20 வயது அழகியைப் பார்த்து மயங்கிவிட்டாராம், கோபால். மனைவியென்றால் இவளைப் போல்தான் இருக்கணும் என்று ஞானோதயம் வந்து எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவளை தான் மணக்க ஏற்பாடு செய்தாராம்-கோபாலின் மனைவி, காந்திமதி உயிரோட இருக்கும்போதே. கணவனின் இந்தக் கேவலமான ஆசையை உணர்ந்த மனைவி , காந்திமதி, தற்கொலை செய்து செத்துவிட்டாளாம். இருந்தும் கோபால், மனைவி, காந்திமதி இறந்து சிலமாதங்களில் மருமகனுக்கு பெண் பார்க்க சென்று பார்த்து மயங்கிய அந்தப் பெண்ணையே இரண்டாம் தாரமாக மணந்துகொண்டாராம்! இது உண்மைக்கதை என்றாள், பவித்ரா, தோழி விஜியிடம். விஜியின் அப்பா மட்டுமன்றி, ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்பதை தோழி பவித்ரா ஊர்ஜிதம் செய்தாள்!
விஜியுடைய தனிப்பட்ட வாழக்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் அவளை இப்படி சந்தேகப்பட, உணர்ச்சி வசப்பட வைத்தது. இந்தக் கதைகளை மட்டும் அவள் ஒரு நாளும் மோஹனிடம்கூட சொன்னது இல்லை!
-தொடரும்
-----------------
ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-3
-------------
****Mathu S said...
அந்த இஸ்லாமியபதிவரை பின்தொடர விரும்புகிறேன்
முகவரி ப்ளீஸ் ***
இதைப் பாருங்க..
பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!
இந்தப் பதிவு எல்லாவற்றையும் தெளிவு படுத்துமா என்பது சந்தேகமே!
அவர் என்னவோ நினைக்க.. நடப்பது என்னவோ வேறமாதிரிதான் இருக்கு! ஒரு வேளை இதைத்தான் அவரும் எதிர்பார்த்தரோ? யாருக்குத் தெரியும் அவர் என்ன கனவு கண்டார் என்று?//
யாருக்குத் தெரியும் ஒருவேளை இப்படியும் பாரதி கனவு கண்டிருக்கலாம் வருண்..
மேலை நாடுகளில் நடப்பது நம் நாட்டிற்குள் வருவதற்கு எவ்வளவு காலம் ஆகிடப் போகுது.... பலரைப் போல் ஒப்புக்கு நடிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்ன உங்களுக்கு என் வணக்கங்கள் வருண்.
பெண்களைக் காலம் மாற்றியதா?
காலத்தைப் பெண்கள் மாற்றினார்களா?
நாடு நிறையக் கெட்டுப் போச்சு...
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
வாங்க அரசன் சே! உங்க கருத்துரைக்கு நன்றி!
எல்லோருக்கும் நல்லவர்களாக நடித்தால் நாம் வருணாகவோ, அரசன் சே யாக்வோ இருக்க மாட்டோமே? "நல்ல நடிகன்" என்கிற பெயர்தானே உங்களுக்கும் எனக்கும் வரும்?
Let us be unique by being ourselves! Not just being an "one another actor" in our short life!
Take it easy!
****Yarlpavanan Kasirajalingam said...
பெண்களைக் காலம் மாற்றியதா?
காலத்தைப் பெண்கள் மாற்றினார்களா?
நாடு நிறையக் கெட்டுப் போச்சு...
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்***
வாங்க யாழ்பாவணன்!
ஆணென்ன பெண் என்ன? னு நம்ம ஆம்பளங்களேயே கேள்வி கேட்டுக் கேட்டு நமக்குப் பழகிப் போய்விட்டது!
புதுமைப் பெண் என்கிற கணோட்டத்தில் சீரழியும் பெண்களையும் "ஆணென்ன பெண் என்ன?" னு கேக்கலாமே? ஏன் கூடாது?
Post a Comment