Friday, November 21, 2014

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்? தி ஜானகிராமன்

ஜானகிராமன் எழுத்து பொதுவாகவே ஆண்களுக்குத்தான் பிடிக்கும், பெண்களுக்கு பிடிக்காது என்பது என் நம்பிக்கை. கவனம்! நான் பொதுவாக னு சொல்லியிருக்கேன். விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு! காலங்காலமாக நமது கலாச்சாரத்தில் ஆண்கள், பெண்கள் உணர்வுகளை புரிந்துகொண்டதாக நம்பி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எழுத்தாளர்கள் விதிவிலக்கல்ல! அவர் கதைகளில்  பலவிதமான பெண்களை உருவாக்கி அவர்கள் உள்ளுணர்வுகளை காட்ட முயன்றிருக்கிறார் ஜானகிராமன். "அம்மணி", "ஜமுணா" "மரகதம்" "அலங்காரம்" "ரங்கமணி" "புவனா" எல்லாம் ஜானகிராமன் புரிந்துகொண்டதாக நம்பி அவர் உருவாக்கிய பெண்கள். ஜானகிராமனிடம் எஸ்ட்ரோஜன் இல்லை! அதனால் அவர் என்னதான் பெண்களை தன் கற்பனையில் சித்தரிச்சாலும, அது ஆண்களின் தேவைக்காக அவர் உருவாக்கிய பெண்கள்தான். உண்மையான பெண்கள் கெடையாது என்பதே என் எண்ணம். எஸ்ட்ரோஜன் இல்லாத ஜானகிராமனுக்கு பெண்களின் மென்மையான பகுதி என்றுமே விளங்கியதாக எனக்குத் தோணவில்லை...

கீழே படியுங்கள்..

ஜானகிராமனின் எழுத்துதான்..

“ராமரத்னம் எனக்கு பரம சினேகிதன். ரொம்ப நெருங்கிப் பழகுறேன். அத்தனை சூட்சுமமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. பரம ரசிகன். நம்ம மனசிலே இருக்கிற கவலை, வியாதி எல்லாம் பறந்துபோயிடும்- என்னமோ பீச்சிலே போயி இல்லே விசாலமா ஒரு இயற்கை காட்சிக்கு முன்னாலே உட்கார்ந்திருக்கிறாப்பிலே அவன் தனக்கு இப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டிருக்குனு வாயைத்திறந்து சொன்னதில்லை. அதைச்சொல்லி என்னை துன்புறுத்த வேணாம்னு நெனச்சானோ என்னவோ- நிச்சயமாக அப்படித்தான் நினைச்சிருப்பான். யார்கிட்டயும் சொன்னதில்லேனு நினைக்கிறேன்.”

“ஒரு அத்தியாயத்தையே கிழிச்சு எறிஞ்சுட்டார்னு சொல்லுவேன். ரொம்ப பெரிய மனுஷனாகத்தான் இருக்கணும். பெண்டாட்டி விட்டுட்டுப்போறாளே -அந்த ஒரு சர்ட்டி·பிகேட்டே போரும்யா அவர் பெரிய மனுஷன்கிறதுக்கு!”

“என்னையா ஒரேயடியா அப்படிச் சொல்லிவிட்டீர்?”

மது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கண்ணை மூடிக்கொண்டே சொன்னான்: “பொம்மனாட்டிகளுக்கு என்னப்பா வேணும்? அடுத்தாத்துக்காரியைவிட தான் செளக்கியமா இருக்கணும். நல்ல புடவை. சொந்த வீடு. தான் ரொம்ப நல்லவ. பெரியமனசு உள்ளவ. ஊதாரி- அப்படி இப்படினு காமிச்சுக்கணும். ஆமடையான் தன்கிட்ட எல்லாத்தையும் கலந்து ஆலோசிக்கணும். பத்துபேருக்கு நடுவிலே தங்கிட்ட ரொம்பப் பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். மற்றவர்களைவிட தன்கிட்ட விஷேசமா, பிரியமா இருக்கிறதா அவன் காமிக்கணும். உலகம் வேற, தன் குடும்பம் வேறனு ஆமடையான் உணர்ந்து பிரிச்சு வச்சுண்டு, முக்கால்வாசி நேரமும் சுவருக்கு இந்தப்பக்கமே பொழுதைப்போக்கணும். அந்தப்பக்கத்தைவிட இந்தப்பக்கம்தான் பெரிசென்று தான் நினைச்சுண்டு இருக்கதாக நிரூபிக்கணும். இப்படியெல்லாம் இருந்தா அவ இல்லத்தரசி, கற்புக்கரசின்னு ராஜ்யம் நடத்த முடியும். இந்தப்பேர் எல்லாம் அவளுக்கு வரதுக்கு ஆமடையான் ஓயாம ஒழியாம ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும். நான் சரிதாண்டீம்மான்னு என் ஆமடையாள்ட்ட சப்ஜாடா ஒத்துக்கிண்டு நடத்திண்டு வரேன். உம்ம (சினேகிதன்) ராமரத்னம் அப்படியில்லே போலயிருக்கு. நான் நிம்மதியா இருக்கேன். அவரு இல்லே- அனாதைப் பள்ளிக்கூடம் விமர்சனம் எல்லாம் எனக்கும் ஜாம்ஜாம்னு நடத்தத்தெரியும். ஆனா நானும் ஷட்டகர் கிட்ட பறிகொடுத்துட்டு உக்கார்ந்து இருக்க முடியுமா நிம்மதியை? சரி... "கூலா" ஏதாவது சாப்பிடுவோம்” காரில் இருந்துகொண்டே கடைக்காரனைக் கூப்பிட்டார் “மது”.
தி ஜானகிராமனின் “தேடல்”  என்கிற சிறுகதை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்!

ஆமாம், மீள்பதிவுதான்.. வேலை அதிகம்.. அதனாலதான்..

16 comments:

மகிழ்நிறை said...

உங்க views சை பகிர்ந்திருக்கிங்க. படிச்சு தெரிஞ்சுக்கிறேன் வருண்:)எனக்கு தேடல் பிடிக்கும், so நீங்க பரிந்துரைத்த தேடல் புத்தகத்தை படித்துப்பார்க்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

பெண்களால் எப்படி ஆண்களைப் புரிந்து கொள்வது கடினமோ ,அதுபோலவே ஜானகிராமனாக இருந்தாலும் ஒரு எல்லை வரைதான் போய்ப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் அவர் கதையில் வரும் நிறையப் பெண்களை எனக்குப் பிடிக்கும். உயிர்த்தேன் நாயகிகள் அனைவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள்.படிக்க ருசியாக இருந்தால் ஆராய்ச்சி எதற்கு.

காரிகன் said...

வருண்,

நமது கதைகளிலும் சினிமாக்களிலும் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்ன பேசுவாள் என்பதையே ஒரு ஆண்தானே தீர்மானிக்கிறான். இதுவே ஒரு ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடே. தி ஜா ஒன்றும் விதிவிலக்கல்ல.

வருண் said...

***Mythily kasthuri rengan said...

உங்க views சை பகிர்ந்திருக்கிங்க. படிச்சு தெரிஞ்சுக்கிறேன் வருண்:)எனக்கு தேடல் பிடிக்கும், so நீங்க பரிந்துரைத்த தேடல் புத்தகத்தை படித்துப்பார்க்கிறேன்:)***

வாங்க மைதிலி!

பார்த்தீங்களா? ஜானகிராமன் ஒருபுறம் இருக்கட்டும், நானும் (ஒரு ஆண்தான்) பெண்கள் உணர்வுகள் வேறமாதிரி இருக்கும்னு "தியரி" விடுறேன். ஆக, எப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் நீங்க இருக்கீங்க என்று தெரிஞ்சுக்கோங்க! :))))

வருண் said...

வாங்க வல்லியம்மா! :) உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி! :)

***வல்லிசிம்ஹன் said...

பெண்களால் எப்படி ஆண்களைப் புரிந்து கொள்வது கடினமோ ,அதுபோலவே ஜானகிராமனாக இருந்தாலும் ஒரு எல்லை வரைதான் போய்ப் புரிந்துகொள்ளமுடியும். ***

உண்மை!

***ஆனால் அவர் கதையில் வரும் நிறையப் பெண்களை எனக்குப் பிடிக்கும். உயிர்த்தேன் நாயகிகள் அனைவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள்.***

நான் உயிர்த்தேன் மற்றும் மலர் மஞ்சம் இன்னும் படிக்கவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது அங்கே வேறு பெண்களைக் காணலாம்னு தோனுது. உயிர்த்தேன் விரைவில் வாசிக்கிறேன். :)

***படிக்க ருசியாக இருந்தால் ஆராய்ச்சி எதற்கு.***

நல்ல பாலிஸி, அம்மா! :)

ஆனால் கதையை ருசித்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு, கதையை உருவாகியவன் சிந்தனைகளை ஆராய்ச்சி செய்யும் மனநிலை ஒரு சிலருக்கு இருக்கே! என்ன செய்வது? :(

வருண் said...

*** காரிகன் said...

வருண்,

நமது கதைகளிலும் சினிமாக்களிலும் ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்ன பேசுவாள் என்பதையே ஒரு ஆண்தானே தீர்மானிக்கிறான். இதுவே ஒரு ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடே. தி ஜா ஒன்றும் விதிவிலக்கல்ல.***

ஆஹா! என் பதிவில் நான் சொல்ல வந்ததை, உங்க பின்னூட்டத்தில் இரெண்டே வரியில் தெளிவாக் சொல்லீட்டீங்க, காரிகன்! :))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
படிக்க ஆவலைத்தூண்டும் வகையில் எழுதியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

RajalakshmiParamasivam said...

திரு ஜானகிராமணனின் கதைகள் நான் அவ்வளவாகப் படித்ததில்லை. பெண்களின் நிலை நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, கதைகளில் கூட மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
திருமதி வல்லி சிம்மன் " உயிர்த்தேன் " கதைப் பற்றி முன்பொரு முறைக் கூட சொல்லியிருந்தார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தேடல், உயிர்த்தேன் இரண்டும் படிக்வேண்டும்.

வருண் said...

***வணக்கம்
படிக்க ஆவலைத்தூண்டும் வகையில் எழுதியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- ***

வாங்க ரூபன்!

ஒரு சிறுகதை தொகுப்பில் இதுவும் ஒரு சிறுகதையாக வந்து இருந்தது. வாசிச்சுப் பாருங்க ரூபன். :)

வருண் said...

வாங்க ராஜி மேடம்! :)

*** rajalakshmi paramasivam said...

திரு ஜானகிராமணனின் கதைகள் நான் அவ்வளவாகப் படித்ததில்லை. பெண்களின் நிலை நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, கதைகளில் கூட மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன்.***

இன்றைய நிலையில் நிஜத்திலும், ஏன் கதைகளிலும்கூட மாறித்தான் இருக்கிறது.

***திருமதி வல்லி சிம்மன் " உயிர்த்தேன் " கதைப் பற்றி முன்பொரு முறைக் கூட சொல்லியிருந்தார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தேடல், உயிர்த்தேன் இரண்டும் படிக்வேண்டும்.***

தேடல் ஒரு சிறுகதை தொகுப்பில் ஒரு சிறுகதையாகப் படித்தேன். உயிர்தேன் னும் சிறுகதைத் தொகுப்பு என்றுதான் நினைக்கிறேன்.

முடிந்தால் "சக்தி வைத்தியம்" மும் படிங்க. அந்தக் கதை ஒரு "புதுமைப் பெண்" ஆசிரியையை பற்றியது. பள்ளியில் அவள் நடப்பதையும் வீட்டில் அவளுக்குள்ள பிரச்சினைகளையும் சொல்லியிருப்பார். :)




வருண் said...

இப்போத்தான் பார்த்தேன். கீதா சாம்பசிவம் உயிர்த்தேன் பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருக்காங்க போல!

தி. ஜானகிராமனின் "உயிர்த்தேன்!

G.M Balasubramaniam said...


பெண்களைப் பற்றி ஆண்கள் கணிப்பதுதானே எழுத்தில் வரும். இது எஸ்ர்ரொஜன் சமாச்சாரமா. நானும் பெண்களைப் பற்றி பல பதிவுகள் எழுதி உள்ளேன் உதாரணத்துக்கு இங்கு ஒரு சுட்டி
http://gmbat1649.blogspot.in/2012/05/blog-post_06.html

Kasthuri Rengan said...

நல்ல பார்வை
தி.ஜாவெல்லாம் படிக்கிற ஆளா நீங்க ...
நான் படித்ததாக நினைவே இல்லை ..
அனேகமாக படித்துவிடுவேன்.

வருண் said...

**** G.M Balasubramaniam said...


பெண்களைப் பற்றி ஆண்கள் கணிப்பதுதானே எழுத்தில் வரும். இது எஸ்ர்ரொஜன் சமாச்சாரமா. நானும் பெண்களைப் பற்றி பல பதிவுகள் எழுதி உள்ளேன் உதாரணத்துக்கு இங்கு ஒரு சுட்டி
http://gmbat1649.blogspot.in/2012/05/blog-post_06.html***

வாங்க, ஜி எம் பி சார். உங்க கதையை படிச்சேன்.

மணவினை சிறைவாசம்தான். ஆனால் ஜெயிலரை, ரசிக்க, மதிக்கக் கற்றுக்கொண்டால், ஜெயிலரும் அன்பாக இருப்பார்.. சிறைவாசமும் இன்பகரமாக அமையும்.

நான் சிறைவாசத்தை எப்படி இன்பகரமான நாட்களாக ஆக்குவதென்ரு எளிதாக டைப் அடிச்சுட்டேன், அதை செயல்படுத்துவது கஷ்டம்தான். :)

வருண் said...

***Mathu S said...

நல்ல பார்வை
தி.ஜாவெல்லாம் படிக்கிற ஆளா நீங்க ...
நான் படித்ததாக நினைவே இல்லை ..
அனேகமாக படித்துவிடுவேன். ***

வாங்க மது!

தேடல் என்கிற இக்கதை, மனிதாபிமானம் என்கிற சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதை.

நான் வாசித்தது ரெண்டாம் பதிப்பு (1997 ல வெளி வந்தது) அதில் போடப்பட்டிருக்கும் விலை 36 ரூபாய்தான்!!!! :)))

Last time when I visited India, I grabbed this from my home.

தி ஜா வின் சிறுகதைகள் நாவல்களைவிட நல்லாயிருக்கும் என்பது என் எண்ணம். :)

'பரிவை' சே.குமார் said...

நல்ல பார்வை வருண்....
தேடலை நானும் தேடிப்படிக்கிறேன்..
தி.ஜானகிராமன் எல்லாம் படித்ததில்லை...