Wednesday, April 8, 2015

பயணக்கட்டுரை எஸ் சசி ! என்னய்யா ப்ளாக்ஸ்பாட் நடத்துறீங்க?!

சமீபத்தில் வருண் என்ற பெயரில் தமிழ்மணத்தில் ஒரு பதிவு வந்தது! என்னடா இது நமக்குத் தெரியாமலே நம் தளத்தில் இருந்து நான் எழுதிய ஒரு பதிவா? அந்தப் பதிவை க்ளிக் பண்ணியதும் விளம்பரங்கள் நிறைந்த இந்தத் தளத்தில் கொண்டு போயி என்னை விட்டது. கொண்டுபோய் சேர்த்த இடத்தில் என்னனு போயிப் பார்த்தால், பயணக்கட்டுரை னு ஒரு தளம் நடத்துறாங்கப்பா. ஆகா, இங்கே இருந்துதான்  புதுசா ஒரு வருண் முளைத்து இருக்கானா?  இந்த வருண் யாருனு பார்த்தால்..

இந்த தளத்தின் ஆசிரியர் பெயர் எஸ் சசி  என்று வருகிறது.  அதுமட்டுமல்ல, வருண் என்கிற ஐ டி ல திரைமணம் பகுதியிலும் பல பதிவுகள்! எல்லாமே இந்தப் பயணக்கட்டுரை தளத்தில் இருந்துதான்! இந்தத் தளத்தை, நடத்தும், இணையதள மேதாவி எஸ் சசி க்கு என்ன  பொழைப்புனா. ஒரு பதிவை எழுதி, குப்பன், சுப்பன், வருண், ravi, varun  மயிறு, மண்ணாங்கட்டி னு ஏதாவது ஒரு பேரைப் போட வேண்டியது. அதை தமிழ்மணத் திரட்டியில் இணைக்க வேண்டியது! இதுமாதிரி   பல பெயர்களில் எதையாவது வெட்டி ஒட்டி பதிவு போட்டு  இந்தத் தளம் நடத்துறாரு.. அதாவது இந்தத் தளம் நடத்தும் ஜாம்பவான் சசிக்கு பெயர் எல்லாம் முக்கியமல்ல! எவனாவது ஒருவன்  பெயரைப் போட்டு ஒரு நாளைக்கு ஒரு 100 பதிவை இவன் தளத்தில் பதிவு செய்து  தமிழ்மணத்தில்  கோர்த்து விட வேண்டியது.

ஆக, எவன் தாலியை அத்தாவது, எவன் பேரைப் போட்டாவது இவன் தளத்துக்கு ஆட்களை கொண்டு வந்து சேர்க்கணும், அவ்வளவுதான்!

"இந்த வருண்"  யாருனு தெரியாமல் யாரோனு நினைத்து அங்கே போனவன்  நிலைமை பெரிய திண்டாட்டம்தான். அங்கே  விளபரங்கள் நிரம்பி வழியும் அந்தப் பயணக்கட்டுரை புதைகுழியில்  புதைந்து கிடக்கும் இவன் பதிவை வாசிக்குமுன்னாலே போனவன் ஒரு வழியாயிடுவான்.

உள்ள எழவு பத்தாதுனு இவனுக வேற நம்ம பேரைப் போட்டு நாரடிக்கிறாணுக.  தமிழ்மணம் ஏன் இதுபோல் பதிவர்களை எல்லாம் கட்டி அழுகிறது என்று விளங்கவே இல்லை!

பதிவரின் பெயர் : sasi s
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2015-01-11
3 Month Traffic Rank : 644


Tamil Blogs Traffic Ranking

ஒரு வேளை இந்த சசி தமிழ்மணத்திற்கு சந்தாக் கட்டி  தினமும் 100 பதிவு எழுதி எவன் பேரையாவது போட்டு இவன் தளத்துக்கு ஆள் சேர்க்கிறானா  என்ன எழவுனு தெரியலை.

இதுமாதிரி வேணுமென்றே, வருண் னு எவன் பேரையாவது வச்சு ஈனப்பொழைப்பு நடத்துறவனுக தளத்துக்குப் போயிட்டு என்னைத் திட்டாதீங்கப்பா!

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி வேறேயா...? ம்... தகவலுக்கு நன்றி...

ஊமைக்கனவுகள் said...

இதே போல அனுபவம் எனக்குப் பலமுறை ஏற்பட்டுள்ளது. தமிழ்மணத்திற்கு நான் இது பற்றியும் நான்கைந்து முறை தெரிவித்துவிட்டேன்.
இன்னொருதளமும் இப்படி இருக்கிறது.
பார்ப்பவர்களை உள்ளிழுக்கும் தலைப்புகளோடு, வெவ்வேறு ஆசிரியர்கள் பெயரில் எழுதப்படுவதால் ஏமாறாமல் இருக்க முடியவில்லை.
இப்பொழுதெல்லாம் தலைப்புகளை வைத்தே இது நிச்சயம் விளம்பரப் பதிவுதான் என்று ஊகிக்கக் கற்றதுதான் இவர்கள் பதிவால் வந்த நன்மை.

பலருக்கு நேர்ந்த பாதிப்பிற்கான உங்களின் குரல்........

விழ வேண்டிய காதுகளில் விழுந்தால் நல்லதுதான்.

நன்றி.

saamaaniyan said...

தமிழ்மணம் பற்றிய பதிவுகள் வரும்போதெல்லாம் எனக்கு எழும் சந்தேகம்...

நீங்களெல்லாம் நம்புவது போல தமிழ்மணம் உண்மையிலேயே நிர்வாகிகளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறதா ?... !

எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது !

அப்புறம் இந்த பயணக்கட்டுரை "புத்திசாலியை" பற்றி...

வருண் ! ஏன் இவர்களின் அடையாளங்களையும் கொடுத்து பிரபலபடுத்துகிறீர்கள் ?! ஒரு கமெண்ட்டும் இல்லாத அந்த புதைக்குழி தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை உங்கள் பதிவால் சில நாட்கள் கூடும் என்பதுதான் உண்மை !!!

நன்றி
சாமானியன்

Thulasidharan V Thillaiakathu said...

அடேங்கப்பா இப்படியுமா? ரொம்ப புதுசா இருக்குப்பா....ம்ம்ம் பகிர்வுக்கு நன்றி வருண்..

G.M Balasubramaniam said...

வருண் . பெயர்களுக்குப் பட்டா இல்லை அல்லவா. ஒரே பெயரில் அவர் எழுதுவதால் உங்களுக்கு என்ன நட்டம் உங்கள் பதிவுகளை அவர் பெயர் போட்டு எழுதிக் கொள்ளவில்லையே இக்னோர் தெம் பாஸ்.

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி வேறேயா...? ம்... தகவலுக்கு நன்றி...***

பலருக்கு என்ன நடக்குதுனே புரிவதில்லை, தனபாலன். எடுத்துச் சொல்ல வேண்டியது நம்ம கடமை. அவ்வளவுதான் நம்ம செய்ய முடியும்.

வருண் said...

***ஊமைக்கனவுகள். said...

இதே போல அனுபவம் எனக்குப் பலமுறை ஏற்பட்டுள்ளது. தமிழ்மணத்திற்கு நான் இது பற்றியும் நான்கைந்து முறை தெரிவித்துவிட்டேன்.
இன்னொருதளமும் இப்படி இருக்கிறது.
பார்ப்பவர்களை உள்ளிழுக்கும் தலைப்புகளோடு, வெவ்வேறு ஆசிரியர்கள் பெயரில் எழுதப்படுவதால் ஏமாறாமல் இருக்க முடியவில்லை.
இப்பொழுதெல்லாம் தலைப்புகளை வைத்தே இது நிச்சயம் விளம்பரப் பதிவுதான் என்று ஊகிக்கக் கற்றதுதான் இவர்கள் பதிவால் வந்த நன்மை.

பலருக்கு நேர்ந்த பாதிப்பிற்கான உங்களின் குரல்........

விழ வேண்டிய காதுகளில் விழுந்தால் நல்லதுதான்.

நன்றி.***

நான்கைந்து முறை சொல்லியும் எதுவ்ம் செய்யவில்லைனா என்னங்க பண்ணுறது?

தமிழ்மணம் இதுபோல் அசட்டை செய்வது தமிழுக்கு இவர்கள் செய்யும் பச்சை துரோகம்!

வருண் said...

*** saamaaniyan saam said...

தமிழ்மணம் பற்றிய பதிவுகள் வரும்போதெல்லாம் எனக்கு எழும் சந்தேகம்...

நீங்களெல்லாம் நம்புவது போல தமிழ்மணம் உண்மையிலேயே நிர்வாகிகளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறதா ?... !

எனக்கு இல்லை என்றே தோன்றுகிறது !

அப்புறம் இந்த பயணக்கட்டுரை "புத்திசாலியை" பற்றி...

வருண் ! ஏன் இவர்களின் அடையாளங்களையும் கொடுத்து பிரபலபடுத்துகிறீர்கள் ?! ஒரு கமெண்ட்டும் இல்லாத அந்த புதைக்குழி தளத்தின் பார்வையாளர் எண்ணிக்கை உங்கள் பதிவால் சில நாட்கள் கூடும் என்பதுதான் உண்மை !!!

நன்றி
சாமானியன்***

சாம்: பலருக்கு என்ன நடக்கிறதென்றே புரிவதில்லை. இதுபோல் அவர்களை "பிரபலமாக்குவது" தவிர்க்க முடியாதது. தமிழ்மண நிர்வாகம்தான் இவர்கள் வளர்ச்சிக்குப் பொறுப்பு.

விஜு 4 முறை இதைப்பற்றி அவர்களிடம் சொல்லியும் எதுவும் செய்யவில்லை என்றால்?? என்ன அர்த்தம்.

உடனே, தானியங்கியாக இயங்குது, எவனும் எங்களுக்கு காசு கொடுப்பதில்லை, தமிழ்மணமத்த்ற்கு எந்த வருமானமும் இல்லை என்பார்கள். ஃபெட்னா போன்ற அமைப்புகள் தமிழ்மணத்திற்கு நிதியுதவி வழங்கலாம். இவர்கள் அதுபோல் எம்முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை!

வருண் said...

****Thulasidharan V Thillaiakathu said...

அடேங்கப்பா இப்படியுமா? ரொம்ப புதுசா இருக்குப்பா....ம்ம்ம் பகிர்வுக்கு நன்றி வருண்..***

வாங்க துளசிதரன். பலருக்கும் ஒண்ணும் புரிவதில்லை, லாவன்யா, ரவி, இப்படி பல பெயர்களில் ஒரு நாளைக்கு இத்தளதிலிருந்து ஒரு 50 பதிவு வருது.

வருண் said...

***G.M Balasubramaniam said...

வருண் . பெயர்களுக்குப் பட்டா இல்லை அல்லவா. ஒரே பெயரில் அவர் எழுதுவதால் உங்களுக்கு என்ன நட்டம் உங்கள் பதிவுகளை அவர் பெயர் போட்டு எழுதிக் கொள்ளவில்லையே இக்னோர் தெம் பாஸ். ***

இல்லை சார், நீங்க நினைப்பதுபோல் இது "என் பேரில்பதிவெழுதிவிட்டான்? அதெப்படி செய்யலாம்?" என்று நான் ஒரு குற்றச்சாட்டை வைக்கவில்லை. ஆனால் பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தோனும். வருண் என்கிற பேரில் யாருவேணா பதிவிடலாம். வருண் என்கிற பெயர் என்னால் பட்டாப் போடவில்லை என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதே வருண், varun, lavanya, ravi, என்ற் உருமாறிக்கொண்டே போவதுதான் பிரச்சினை. There is a "criminal mind" behind this. He is just fooling around here with several "identities". These blogs should not be aggregated by Tamilmanam.

S.Raman, Vellore said...

இரண்டு நாட்களாக எனது வலைப்பக்கத்தில் ஒரு அனாமதேயம் "வாந்தி பேதி வருண்" என்ற பெயரில் பின்னூட்டங்கள் இட்டு வருகிறது. நானும் அவற்றை அகற்றி வருகிறேன். யாரோ உங்கள் பெயரில் கிளம்பியுள்ளார்கள்.

வருண் said...

***S.Raman, Vellore said...

இரண்டு நாட்களாக எனது வலைப்பக்கத்தில் ஒரு அனாமதேயம் "வாந்தி பேதி வருண்" என்ற பெயரில் பின்னூட்டங்கள் இட்டு வருகிறது. நானும் அவற்றை அகற்றி வருகிறேன். யாரோ உங்கள் பெயரில் கிளம்பியுள்ளார்கள்.***

வாங்க ராமன்! :)

நான் உங்க தளத்திற்கு வந்து ரொம்ப நாளாச்சு. எங்கேயாவது என்னிடம் "செருப்படி வாங்கினவன்" இப்படி அனானியாகி மெண்டலா அலைகிறான் போல இருக்கு! :)

எனி வே, பதிவுக்கு சம்ம்ந்தமில்லாத பின்னூட்டங்களை உடனுக்குடன் அகற்றியதற்கு நன்றிங்க, ராமன்! :)

bandhu said...

இது முழுக்க முழுக்க மென்பொருள் மூலம் செயல்படும் தளம் என நினைக்கிறேன். பற்பல தளங்களில் இருந்து மானாவாரியாக பதிவுகள் காப்பி செய்யப்பட்டு பற்பல பெயர்களில் இந்த தளத்தில் வெளிவருகிறது. தளத்திற்கு சென்றால் ஒரு 10 வினாடிகள் கடந்தவுடன் பக்கத்தை மறைக்கும் விளம்பரங்கள் இந்த தளத்தின் நோக்கத்தை தெரிவிக்கிறது!

வருண் said...

*** bandhu said...

இது முழுக்க முழுக்க மென்பொருள் மூலம் செயல்படும் தளம் என நினைக்கிறேன். பற்பல தளங்களில் இருந்து மானாவாரியாக பதிவுகள் காப்பி செய்யப்பட்டு பற்பல பெயர்களில் இந்த தளத்தில் வெளிவருகிறது. தளத்திற்கு சென்றால் ஒரு 10 வினாடிகள் கடந்தவுடன் பக்கத்தை மறைக்கும் விளம்பரங்கள் இந்த தளத்தின் நோக்கத்தை தெரிவிக்கிறது!***

Bandhu! இத்தளம் மென்பொருளை இயக்கி நடத்துவது யார் என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இத்தளத்தை திரட்டுவதை தமிழ்மணம் தவிர்க்கணும். That's very simple. அதில் என்ன தமிழ்மணத்திற்கு தயக்கம் என்று தெரியவில்லை!