Friday, February 13, 2009

Feb 14! இன்று காதல் பொங்கி வழியனும்!

“ஏங்க! இன்னைக்கு “காதலர் தினம்”

“அப்படியா?”

“என்னங்க இது இன்னைக்கு ஸ்பெஷலா எதுவும் இல்லையா?”

“எனக்கு காதலர் தினம் அன்று காதல் கம்மியாத்தான் வருது. அதுவும் இன்னைக்கு வொர்க்ல ஒரு பிரச்சினை. அதை எப்படி ரிசால்வ் பண்ணுவதுனு ஒரே கவலையா இருக்கு”

“இல்லைங்க நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. அதுக்குள்ளே உங்களுக்கு “காதலர் தினம்” அன்றுகூட என் மேலே காதல் இல்லாமப் போச்சா?”

“ஒண்ணு கேக்கிறேன் பதில்சொல்றியா?”

“கேளுங்க!”

“வென் டிட் வி ஹேவ் தி பெஸ்ட் செக்ஸ் இன் அவர் லவ்லைஃப்?'

“அப்படினா?”

“எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது இல்லையா? அதுக்கு இருவர் மனமும், இருவர் உடம்பும் பர்ஃபெக்ட்டா இருக்கனும். அது ஒவ்வொரு நாள்தான் நல்லா அமையும். சரி, நீ நிறைய முறை உச்சமடைந்து, அதை நினைத்து நினைத்து ரசித்த ஒரு நாள்”

“அது என் டைரியைத்தான் பார்க்கனும். நிச்சயம் எழுதி வச்சிருப்பேன்”

“நிச்சயமா அது காதலர் தினம் அன்று அல்ல!”

“அதனால?”

“நம்ம அந்த நாளைத்தான் காதலர் தினமா கொண்டாடனும். சும்மா ஒரு நாள "சூஸ்" பண்ணி என்னை இன்னைக்கு நெறைய லவ் பண்ணுங்கனு சொன்னா எனக்கு லவ் வராது”

"என்னவோ போங்க நான் டைரியை வாசிக்கிறேன்" என்று ஓடினாள் அவள்.

4 comments:

Anonymous said...

அப்ப பொங்கல்ல மட்டும்தான் பாலும் சோறும் பொங்கணுமா? தினம் பொங்கினால்தான் நல்லது. அதனால் இனி பொங்கல் தினத்தை தடை செய்து விடலாம்.

வருண் said...

***Anonymous said...
அப்ப பொங்கல்ல மட்டும்தான் பாலும் சோறும் பொங்கணுமா? தினம் பொங்கினால்தான் நல்லது. அதனால் இனி பொங்கல் தினத்தை தடை செய்து விடலாம்.***

இதென்னங்க வம்பாப்போச்சு! நீங்க பொங்கலுக்கு பொங்கியே ஆகனும்னு நான் சொன்னேனா?

தடை கிடைனு பெரிய வார்த்தையெல்லாம் நான் சொல்லல சார்!

superlinks said...

உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

வருண் said...

சூப்பர் லிங்க்ஸ்:

உங்கள் வருத்தம், எரிச்சல், கோபம், ஆதங்கம் எல்லாம் புரிகிறது.

உங்களுக்கு நாந்தான் கெடச்சேனா? :(