Sunday, February 15, 2009

ஐ டி வேலை இழப்புகளும் முதலைக்கண்ணீரும்!

ஒரு சாதாரண என் ஜி ஜி வோ வேலை பார்ப்பவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கியில் வேலை செய்பவர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் எல்லோரும் ஐ டி மற்றும் கால் செண்டரில் வேலை பார்ப்பவர்களைப் பார்த்து வயிறெரிந்தார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, ஃப்ரீ செக்ஸ் கல்ச்சர் இதை எல்லாம் பார்த்து கோபமாக இருந்தார்கள். ஆனால், இன்றைய நிலைமையில், இதுபோல் மென்பொருள் தொழில் வள்ளுனர்கள் பலர் வேலை இழக்கும் நிலையில் இருக்கிறார்கள், பலர் வேலை இழக்கிறார்கள். ஒரு சாதாரண தொழிலாளி வேலை இழந்தால், அதற்கு சமமான சம்பளம் இன்னொரு வேலையில் பெறுவது எளிது. ஏன்னா அவன் வாங்கிய சம்பளம் யாராலையும் ஈடுகட்ட முடியும். ஆனால் ஐ டி தொழிலாளியின் வேலை இழப்புக்கு இன்னொரு ஐ டி வேலைதான் ஈடுகட்ட முடியும். ஏன்னா இவர்கள் வாங்கும் சம்பளம் அப்படி. வேற எந்த வேலையிலும் இவர்களுக்கு அதற்கு ஈடான சம்பளம் கொடுக்க இயலாது.

இப்போ, இவர்கள்தான் கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள், பணம் வருதுனு தலைகால் தெரியவில்லை என்று எரிச்சலுடன் இருந்த 90% மக்கள், இன்று வேலையிழக்கும் இந்த தொழிலாளிகளைப் பார்த்து கவலைப்படுவார்களா?

இல்லை, இவனுக ஆடிய ஆட்டம் தாங்க முடியலை. இப்போவாது அடங்குகிறார்களா பார்ப்போம் என்று எண்ணுகிறார்களா?

மனிதர்கள் பொதுவாக கேவலமானவர்கள். பலர் இன்று ஐ டி வேலை இழப்புகளைப் பார்த்து சந்தோஷமடைகிறார்கள் என்பது கசப்பான உண்மை!

ஆனால், அண்ணாமலையில் ரஜினி சொல்வது போல், “கெட்டுப்போனவன் நல்லா வாழலாம்! நல்லா வாழ்ந்தவன் கெடக்கூடாது” என்ற தத்துவம் உண்மைதான்.

ஈடுகெட்ட முடியாத இழப்பு, வரக்கூடாத வியாதி, இதுபோல் வேலை இழப்பு வரும் சூழ்நிலையில் மனிதன் தனிமையாகத்தான் இருக்கிறான்- அவனை சுற்றி பலர் இருந்தாலும். ஒருவரின் தன்னம்பிக்கையும், எதையும் தாங்கும் இதயமும்தான் முக்கியம். மற்றவர்விடும் முதலைக்கண்ணீரோ, கொடுக்கும் ஆறுதலோ நிலைமையை சமாளிக்க உதவாது.

11 comments:

செந்தழல் ரவி said...

some moral support will help..

ராஜ நடராஜன் said...

//வேலை இழப்பு வரும் சூழ்நிலையில் மனிதன் தனிமையாகத்தான் இருக்கிறான்- அவனை சுற்றி பலர் இருந்தாலும். ஒருவரின் தன்னம்பிக்கையும், எதையும் தாங்கும் இதயமும்தான் முக்கியம்//

இந்த வேலை பார்த்துட்டு வேலையில்லாம போகிற கொடுமை இருக்குதே.அனுபவிச்சாத்தான் அதன் வலி தெரியும்.எனக்கும் ஒரு அனுபவம் மாட்டிச்சு.கீழே விழுந்து எந்திருச்சு உட்காருவதற்குள் போதும் போதுமின்னாயிடுச்சு.

வருண் said...

***செந்தழல் ரவி said...
some moral support will help..

15 February, 2009 8:11 AM***

Certainly kind-hearted folks' moral support will help to some extent, Mr. Ravi. :-)

வருண் said...

**ராஜ நடராஜன் said...
//வேலை இழப்பு வரும் சூழ்நிலையில் மனிதன் தனிமையாகத்தான் இருக்கிறான்- அவனை சுற்றி பலர் இருந்தாலும். ஒருவரின் தன்னம்பிக்கையும், எதையும் தாங்கும் இதயமும்தான் முக்கியம்//

இந்த வேலை பார்த்துட்டு வேலையில்லாம போகிற கொடுமை இருக்குதே.அனுபவிச்சாத்தான் அதன் வலி தெரியும்.***

நீங்கள் சொவது புரிகிறது, திரு, நடராஜன்! :(

ஸ்ரீதர்கண்ணன் said...

உண்மை.

அதற்கு சமமான சம்பளம் இன்னொரு வேலையில் பெருவது எளிது.

"பெறுவது" என்று நினைக்கிறேன்

வருண் said...

வாங்க ஸ்ரீதர்கண்ணன்!

ஆமாம், அது பெறுவது என்றுதான் வரவேண்டும்! என் தவறு! சரி செய்துவிட்டேன்! :)

நன்றி, கண்ணன்! :)

Sundar said...

//ஈடுகெட்ட முடியாத இழப்பு, வரக்கூடாத வியாதி, இதுபோல் வேலை இழப்பு வரும் சூழ்நிலையில் மனிதன் தனிமையாகத்தான் இருக்கிறான்- அவனை சுற்றி பலர் இருந்தாலும். ஒருவரின் தன்னம்பிக்கையும், எதையும் தாங்கும் இதயமும்தான் முக்கியம். மற்றவர்விடும் முதலைக்கண்ணீரோ, கொடுக்கும் ஆறுதலோ நிலைமையை சமாளிக்க உதவாது. //

குரூர திருப்தி படுபவர்கள் நிறைய பேர் நிச்சயம் உண்டு. சரியான புரிதல்களுக்கும், ஆறுதல்களும் நிச்சயம் உண்டு. தனிப்பட்ட முறையில் பெரும் சோதனை தான் என்றாலும், நம்மை உண்மையாக நேசிப்பவர்களையும், ஒவ்வொருவரின் உண்மையான உறவின் தன்மைகளையும் புரிந்து கொள்வதற்கு தனிப்பட்ட சோதனைகளை தவிர சந்தர்ப்பம் ஏது? its the time to focus on individual strengths, silver linings of opportunities, support of those who really love and build on a better future, fortunately with better dear and near ones to celebrate it with.

புருனோ Bruno said...

ஐடி துறையில் அதிகம் ஊதியம் கிடைத்ததற்கு காரணம் அங்கு மேலாண்மை அமெரிக்க பாணியில் இருந்ததே - தேவைப்படும் போது அதிக ஊதியம் கொடுத்து வேலைக்கு வைப்பதும் தேவையில்லாத போது வேலையை விட்டு துரத்தி விடுவதும் - hire and fire

இவ்வளவு நாள் hire
இப்பொழுது fire

இனிவரும் நாட்களில் கட்டாயம் மறுபடி hire இருக்கும். அப்பொழுது இந்த துறை மறுபடி பலம் பெறும்.

--

ஒரு மாதம் வேலை செய்து தான் வாங்கும் (அமெரிக்க காலச்சார) ஊதியம் உண்மையில் தான் வேலையில்லாமல் (அமெரிக்க) இருக்க போகும் மற்றொரு மாதத்திற்கு
என்று புரிந்து கொண்டு போதிய அளவு நிலம், வங்கி என்று முதலீடு செய்தவர்கள் இன்று (வேலை போனவுடன்) எந்த பதட்டமும் இல்லாமல் என்ன “கோர்ஸ் சேரலாம்” என்று பார்த்து தங்கள் திறனை மேலும் பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பளம் 60 வயது வரை என்று (அமெரிக்க கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாமல்) வாங்கிய சம்பளம் அனைத்தையும் செலவழித்து மேலும் கடன் வாங்கியவர்கள் தான் விழி பிதுங்கி நிற்கிறார்கள்

அதை விட கொடுமையான நிலை பணத்தை சேமிக்கிறேன் என்று பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை தான் :(

புருனோ Bruno said...

//ஒரு சாதாரண என் ஜி ஜி வோ வேலை பார்ப்பவர்கள், //

என் ஜி ஜி வோ
அல்லது
என் ஜி ஜி ஓவாக ??

குப்பன்_யாஹூ said...

IT ites SECTOR WILL BE UP SOON, SO THE YOUNG TALENTED PEOPLE WILL AGAIN SHINE BACK.

IN THESE IDLE TIME THE IT PEOPLE SHOULD CONCENTRATE ON SPRITUALISM, SOCILA SERVICE, GYM, TRAINING, SOFTSKILLS DEVELOPMENT ETC.

வருண் said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி, திரு. சுந்தர்,டாக்டர் புருனோ, திரு. குப்பன் யாஹோ!

டாக்டர் புருனோ,

நான் N G G O வைத்தான் "மீன்" பண்ணினேன்! :-)