பிரபல ப்ளாகர்கள்/பதிவர்கள் மற்றும் திறமைமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி வேணா பெரிய ஆளாகிவிடுவார்கள். ஏன்னா அவர்களுக்கு சரக்கும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும் அதிகம். அவர்கள் வளர்வதற்கு தமிழ்மணம்போல் ஒரு திரட்டியின் உதவி தேவையா என்னனு எனக்குத் தெரியலை.
தமிழ்மணம், "அமெரிக்கன் ஐடல்"என்கிற ஃபாக்ஸ் டெலிவிஷனில் வருகிற ஷோ போல என்பேன்!
என்ன திடீர்னு என்னனென்னவோ சொல்றனு யோசிக்கிறீங்களா?
என்னைப்போல் ”அமெச்சூர் மற்றும் அரைகுறைகள்” தங்கள் எண்ணங்களை கொட்டி, தங்களிடம் இரண்டு வரி சில எழுத்துப்பிழையுடனாவது எழுத திறமை இருக்கிறதா? மேலும் ஒருவர் தன் உணர்வுகளை வெளி உலகத்திற்கு சொல்லத்தெரியுதா? என்பதையும் அறிய இப்படி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறோம். நான் அப்பப்போ புலம்புவதை இதன் மூலம் உலகமெங்கும் புலம்புவதற்காக, கயல்தான் இந்த ப்ளாக் ஆரம்பித்தது! ஏதாவது எழுதி என்னவோ பண்ணுனு என் தலையில் கிறுக்கிற வேலை எல்லாத்தையும் கட்டிவிட்டு இப்போ அவள் வேலையில் ரொம்ப பிஸியாயிட்டாள் :( . எப்படியோ சம்பாரித்து என்னை கண் கலங்காமல் பார்த்துக்கிட்டா சரிதான். :-) சரி ப்ளாக் ஆரம்னபிச்சு எதை எதையோ எழுதி பதிவு செய்றோம். இந்த ப்ளாகை தேடி கண்டுபிடிச்சு ஒரு 10 பேர் படிப்பார்கள். இது பல நூறுபேருக்கு போய் சேருவதுக்குள்ளே நமக்கு வயசாகிவிடும்.
இதில் நாங்கள் கிறுக்குவதை பல ஆயிரம் வாசகர்களுக்கு கொண்டு சென்று அவர்களை பின்னூட்டங்கள் எழுத ஊக்குவிப்பததும் தமிழ்மணம்தான். மேலும் பல வாசகர்களை அமைதியான விசிட் பண்ணவைத்து, அதன்மூலம் மேலும் மேலும் எழுத ஊக்குவிப்பது தமிழ்மணம் என்கிற இந்த திரட்டியால்தான். மற்றவர்களுக்கு எப்படியோ, ரிலாக்ஸ் ப்ளீஸ் ப்ளாக்ல செய்கிற பதிவுகளை இத்தனை தமிழ்மக்களுக்கு கொண்டு சென்ற பெருமை, தமிழ்மணத்தைத்தான் சாரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நம்ம கலாச்சாரத்தில நன்றி என்று வாயளவில் சொல்வதில்நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. நன்றி சொல்வதற்கும், அதை தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளவும் தயங்கும். ஷையாக ஃபீல் பண்ணும் மக்கள வாழும் கலாச்சாரம் நம்முடையது. ஆனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் உள்ளத்தில் உள்ள நன்றியை வாய்விட்டு சொல்வதில் தவறில்லை இல்லை சொல்லனும் என்கிறார்கள். மனதில் உள்ளதை வெளியில் சொன்னால் தவறில்லை என்கிறார்கள். நல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும் இல்லையா?
இங்கு நான் கிறுக்குவதை வாசிக்க வரும் வாசகர்கள், தோழ, தோழியர் அனைவருக்கும் நன்றி!
உங்கள் சேவைக்கு நன்றி தமிழ்மணம்! வாழ்க தமிழ்மணம்!
11 comments:
சூப்பர்! தமிழிஷ்-லும், தமிழ்மணத்திலும், (முன்பு தேன்கூட்டிலும்) என் பதிவுகளும் வருவதால் மிக்க மகிழ்ச்சி! இந்த பதிவின் வாயிலாக என் நன்றிகளைச் சொல்கிறேன்!! நானும் நினைச்சேன்.. யூத்ஃபுல் விகடனில் வர்றதைக் குறித்து பதிவுகளைப் பார்க்கிறோமே!! இணையத்தில் இவ்வளவு நாளா அதைவிட பல மடங்கு அதிகம் செய்த தமிழ்மணத்திற்கு பதிவின் மூலம் பாராட்டிய உங்கள் செயல் நல்லாருக்கு!
வருண் நான் உங்கள் கட்சி. இணைய இதழ்களில் முன்னரே நான் எழுதியிருந்தாலும் வலைப்பூ+தமிழ்மணம் நமக்கு பெரிய advantage. பின்னூட்டம் என்கிற feed back ஊக்கமளிப்பதையும் தாண்டி நம் சிந்தனையைத் தூண்டுகிறது. கருத்துப் பரிமாற்றுங்கள் நாம் எழுதும் விஷயங்களுக்குப் பல கோணங்களில் அர்த்தங்களைக் கொடுக்கிறது. தமிழ் மணத்தில் இணைந்திருக்கும் எவரும் இதை மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர் சதங்கா தனது 100-வது பதிவில் நமக்கெல்லாம் ‘வரம் தந்த சாமி’ எனத் தமிழ் மணத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்!
***சந்தனமுல்லை said...
இணையத்தில் இவ்வளவு நாளா அதைவிட பல மடங்கு அதிகம் செய்த தமிழ்மணத்திற்கு பதிவின் மூலம் பாராட்டிய உங்கள் செயல் நல்லாருக்கு!***
உங்கள் வருகைக்கும், உங்கள் வரிகளுக்கும் நன்றி சந்தனமுல்லை! :_)
***ராமலக்ஷ்மி said...
வருண் நான் உங்கள் கட்சி. இணைய இதழ்களில் முன்னரே நான் எழுதியிருந்தாலும் வலைப்பூ+தமிழ்மணம் நமக்கு பெரிய advantage. பின்னூட்டம் என்கிற feed back ஊக்கமளிப்பதையும் தாண்டி நம் சிந்தனையைத் தூண்டுகிறது. கருத்துப் பரிமாற்றுங்கள் நாம் எழுதும் விஷயங்களுக்குப் பல கோணங்களில் அர்த்தங்களைக் கொடுக்கிறது. தமிழ் மணத்தில் இணைந்திருக்கும் எவரும் இதை மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர் சதங்கா தனது 100-வது பதிவில் நமக்கெல்லாம் ‘வரம் தந்த சாமி’ எனத் தமிழ் மணத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதை நான் அப்படியே வழி மொழிகிறேன்!
19 February, 2009 10:52 PM***
வாங்க ராமலக்ஷ்மி! உங்கள் கருத்தையும் பரிமாறிக்கொண்டதற்கு மிகவும் நன்றிங்க!
சாதங்கா அவர்களின் பதிவை நான் பார்க்கத் தவறிவிட்டேன். உங்கள் மூலம் அறிந்துகொண்டேன். நானும் அதை முழுமனதுடன் வழிமொழிகிறேன் :-)
உங்களோடு சேர்ந்து நானும் சொல்லிக் கொள்கிறேன்: தமிழ்மணமே உனக்கு நன்றி.
தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லவந்ததற்கு நன்றி திரு. தருமி அவர்களே! :)
யோவ் வருன்,
நன்றிய நேரா சொல்லிட வேண்டியது தான ! அதுக்கு என்ன டிஸ்கி !!!
(மேலை நாட்டு மக்கள் நன்றி சொல்லுவாங்க, நம்ப சொல்றது இல்லன்னு)
நான் ரொம்ப "ஷை டைப்" மணிகண்டன்! உங்களை மாதிரி இல்லை :)
இருங்க அந்த சுப்பிரமணியபுரம்-நான் கடவுள் பதிவு வந்துகொண்டே இருக்கு!
நன்றி நன்றி ..
தமிழ்மணம் பற்றி கூறுவதென்றால் கூறி கொண்டே இருக்கலாம் வருண், அந்த அளவிற்கு விசயம் உள்ளது.
நன்றி மறப்பது நன்றன்று!
வருகைக்கு நன்றி,திரு ரவி, திரு கிரி! :)
Post a Comment