Friday, February 27, 2009

நீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா?

“என்னம்மா வித்யா, மாப்பிள்ளை வரலையா?”

“இல்லைப்பா, நான் மட்டும்தான் வந்தேன்”

“என் மேலே இன்னும் கோபமா இருக்காராம்மா மாப்பிள்ளை?”

“என் கல்யாணத்திற்கு என்ன என்ன செய்வதாக நீங்க அவர் அப்பா அம்மாவிடம் ப்ராமிஸ் பண்ணுனீங்கப்பா?”

“உனக்கு 20 சவரன் போட்டு 2 லட்சம் கொடுப்பதாக சொன்னேன் அம்மா. ஆனா கடைசி நேரத்தில் 75,000 தான் புரட்ட முடிந்தது”

“அதை கல்யாணத்திற்கு முன்பே அவரிடம் சொன்னீங்களா,அப்பா?”

“இல்லைம்மா கல்யாண ஏற்பாடெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அதனால் சொல்ல முடியாம போயிருச்சும்மா”

“எதுகுப்பா இப்போ நீங்க தவறே செய்யாதமாதிரி பேசுறீங்க? இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு, அந்தப்பணம் கொடுத்துட்டீங்களா? தாலிதான் கழுத்துல ஏறிருச்சே!இனிமேல் என்ன? இதுக்காகவா அனுப்பிவிடுவார்னு ஒரு நம்பிக்கை! இல்லைப்பா?”

“இல்லைம்மா பணம் புரட்ட முடியலை. வீட்டு வேலை அது இதுனு செலவாயிடுச்சும்மா”

“ அவர் மேலே தப்பு இல்லைப்பா. வரதட்சணை வாங்குவது தப்புத்தான். ஆனா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கொடுக்காமல் விடுறது அதைவிட கேவலம். அவர் நீங்க ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார்”

“என் கெட்ட நேரம் அம்மா”

“அதெல்லாம் இல்லைப்பா, உங்க பேராசை! உங்களிடம் இருக்கிற சூழ்நிலைக் கேற்றார்போல் நீங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கனும். எதுக்காக அகலக்கால் வைக்கிறீங்க? உங்க தகுதிக்கேத்த ஒரு மாப்பிள்ளை, கொஞ்சம் குறைய சம்பாரிக்கிற ஆம்பளையா பார்க்க வேண்டியதுதானே?”

“என்னம்மா வரதட்சணை வாங்கிறது சரினு சொல்றயா?”

“நீங்க அம்மாவை கல்யாணம் செய்யும்போது நகை போடச்சொல்லி, வரதட்சணை ஒண்ணும் வாங்கலையா அப்பா?”

“இல்லைம்மா, அந்தக்காலத்தில் என் சூழ்நிலை வேறம்மா”

“இதேபோல் தான் அவரும் சொல்றார். நீங்க ஒண்ணும் அழ வேணாம். அவர் இதுக்காக என்னை அனுப்பப்போறதில்லை. இருந்தாலும் உங்களை அவர் வெறுப்பதில் எனக்கு எதுவும் தவறாக தோனலை”

15 comments:

benzaloy said...

அருமையான தித்திப்பான பதிவு --- மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

வருண் said...

***benzaloy said...
அருமையான தித்திப்பான பதிவு --- மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

28 February, 2009 5:32 AM***

உங்க வருகைக்கும், உங்கள் ஊக்குவிப்புக்கு ரொம்ப நன்றிங்க, benzaloy! :-)

Thamizhmaangani said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு.. short and sweet and very true! i agree with vithya's thoughts.:)

வருண் said...

***Thamizhmaangani said...
ரொம்ப வித்தியாசமா இருக்கு.. short and sweet and very true! i agree with vithya's thoughts.:)

28 February, 2009 6:16 PM ***

உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி, Thamizhmaangani! :-)

வெண்பூ said...

அட போடவைக்கும் வித்தியாசமான முடிவு.. நல்லா எழுதுறீங்க வருண்..

மருதநாயகம் said...

குமுதத்தில் ஒரு பக்க கதைகள் தான் என்னுடைய ஃபேவரைட். அது மாதிரி இருக்குது இந்த பதிவும். மிகவும் ரசித்தேன். உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா, நல்லாருக்கு தொடர்ந்து எழுதவும்

ராஜ நடராஜன் said...

வருண்!வரதட்சிணைக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி விடும் நிகழ்வுகள் உண்மையிலேயே நிகழ்கிறதா?அல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவா?சிரமப் படும் மாமனாரை விடுங்க.ஆனால் பெண்ணின் நேசம்,உதவி,உடல் தேவை பணத்தின் முன் இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறதா என்ன?கணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.

benzaloy said...

[[[ “இதேபோல் தான் அவரும் சொல்றார். நீங்க ஒண்ணும் அழ வேணாம். அவர் இதுக்காக என்னை அனுப்பப்போறதில்லை. இருந்தாலும் உங்களை அவர் வெறுப்பதில் எனக்கு எதுவும் தவறாக தோனலை” ]]]

திறமான யதார்த்தமான துணிவான பெண்ணின் தெளிவான முடிவு

ராஜ நடராஜன் said..
[[[ கணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.]]]

ராஜ நடராஜன் சார் நீங்க மேல சொன்னது எனக்கு யதார்த்தமாக படல ---

வரதட்சணை நியாமான நோக்கத்தில் எமது சமுதாயத்தில் ஆதி காலத்தில் இருந்து பாரம்பரியமாக கடை பிடித்தாலும் அதனது பலன்கள் பல
சந்தர்பங்களில் அசம்பாவிதமான முடிவுகளை தந்துள்ளன என்பதை பரவலாக ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது --- பொலிஸ் நிலைய பதிவுகளும் மருத்துவமனை சாட்சியங்களும் உறுதி தரும் விஷயம்.

எனது ஆண் வர்க்க அங்கத்தவர் இப்படி ஓர் பெண்ணினது முயற்சியை மழுங்கடிக்க எத்தனிப்பது இழி செயலாகும்.

எமது அம்மா ஓர் பெண் தானே ஐயா !

இச் சிறுகதையை குமதத்தில் வந்த ஒரு ''பக்க கதை'' கு ஒப்பிடபட்டுளது ---

வேறு சிலர் ''வித்தியாசமாக'' உள்ளது என பாராட்டியுள்ளனர் ---

இதை நீங்கள் கொச்சை படுத்துவது நியாமானதா ?

சிறு கதைகளுக்கு இலக்கணம் படைத்த O,Henry அவர்களின் கதைகள் வாசித்து ரசித்தவன் சொல்கின்றான் : ''உன்னால் உயிர் கொடுக்க இயலாது போனால் அனுபவி ... விரும்பாது போனால் விட்டுரு''.

உங்களை வாசிக்கும் படி எவராவது - - - ? !

வருண் said...

***வெண்பூ said...
அட போடவைக்கும் வித்தியாசமான முடிவு.. நல்லா எழுதுறீங்க வருண்..

1 March, 2009 1:44 AM ***

ரொம்ப நன்றிங்க வெண்பூ :-)

-----------------------------------

***மருதநாயகம் said...
குமுதத்தில் ஒரு பக்க கதைகள் தான் என்னுடைய ஃபேவரைட். அது மாதிரி இருக்குது இந்த பதிவும். மிகவும் ரசித்தேன். உங்களுக்குள்ள இவ்வளவு திறமையா, நல்லாருக்கு தொடர்ந்து எழுதவும்

1 March, 2009 2:09 AM***

ரொம்ப நன்றிங்க மருதநாயகம்! :-)

வருண் said...

***ராஜ நடராஜன் said...
வருண்!வரதட்சிணைக்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி விடும் நிகழ்வுகள் உண்மையிலேயே நிகழ்கிறதா?அல்லது சினிமாக்களும் உங்கள் பதிவு போன்றவைகளும் மிகைப் படுத்துகின்றனவா?***

என்னுடைய அனுபத்தில் நம்ம ஊரில் உண்மை நிகழ்வுகள் சினிமாவைவிட மோசமாக இருக்கிறது. :-(

***சிரமப் படும் மாமனாரை விடுங்க.***

நடராஜன், கல்யாணம் என்பது ஒரு வியாபாரம். சொன்ன வார்த்தையை காப்பாத்துவது வியாபாரிக்கு அழகு.
வரதட்சணை கொடுப்பது அசிங்கம்னு நினைத்தால், முதலில் எதற்க்குமே ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இப்படி ஒரு கேவலமான மாப்பிள்ளை என் மகளுக்கு வேணாம் என்று சொல்லிவிட்டு புரட்சிகரமான ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக அவர் வெயிட் பண்ணி இருக்கனும்.

He should have lookded for an affordable "groom" with no trouble or one who does not want dowry! There are millions of men like that available I suppose but they may be struggling to make their living.

***ஆனால் பெண்ணின் நேசம்,உதவி,உடல் தேவை பணத்தின் முன் இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறதா என்ன?கணவனின் வரதட்சனைக்கு பெண் வக்காலத்து வாங்கும் பதிவின் கடைசி வரிகளில் நிகழும் ஒன்றென எனக்கு உடன்பாடில்லை.

1 March, 2009 3:10 AM***

சொன்ன வார்த்தைய காப்பாத்தத் தெரியாத அப்பா, தன் பெண் வாழக்கையை நாசம் செய்துவிட்டார் என்ற எரிச்சல் வித்யாவுக்கு.

75,000 க்கு "ப்ரைஸ் டேக்" போட்ட மாப்பிள்ளைகள் நெறையயவே மார்க்கட்ல கிடைக்கும்போது இவர் ஏன் இப்படி செய்தார் என்ற வேதனை அவளுக்கு! She thinks her dad should have known how much he can afford.

வருண் said...

****சிறு கதைகளுக்கு இலக்கணம் படைத்த O,Henry அவர்களின் கதைகள் வாசித்து ரசித்தவன் சொல்கின்றான் : ''உன்னால் உயிர் கொடுக்க இயலாது போனால் அனுபவி ... விரும்பாது போனால் விட்டுரு''.***

எனக்கு ஹென்ரி பற்றியெல்லாம் தெரியாதுங்க, benzaloy!

உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்!

திரு நடராஜன் அவர்கள் வரதட்சணை வாங்குபவர்கயையே அடியோடு வெறுப்பவர் என்பதால் அபப்டி சொல்கிறார்னு நினைக்கிறேன். ;-)

ஆனால், ஜாதி, வரதட்சணை என்பதெல்லாம் இன்னும் நம் கலாச்சாரத்தில், நம் மக்களிடம் இருக்கத்தானே செய்கிறது அன்றும், இன்றும், என்றும்?

benzaloy said...

[[[ திரு நடராஜன் அவர்கள் வரதட்சணை வாங்குபவர்கயையே அடியோடு வெறுப்பவர் என்பதால் அபப்டி சொல்கிறார்னு நினைக்கிறேன். ;-)
ஆனால், ஜாதி, வரதட்சணை என்பதெல்லாம் இன்னும் நம் கலாச்சாரத்தில், நம் மக்களிடம் இருக்கத்தானே செய்கிறது அன்றும், இன்றும், என்றும்? ]]]

அம்மா வருண் எனக்கு 40 லும் 30 லும் பிள்ளைகளுடன் இரு மகள்கள்
உள்ளனர் ---
இரண்டாமவர் ஜாலியானவர் உங்களை போல ப்லோக்
எல்லாம் சென்று கமெண்ட் அடிப்பார் --- என்னையே எனக்கு தெரியாது எதிர் வாதம் போட்டு எனது சிந்தனையை மாற்றியவர் --- ஆனால் உங்களது எழுத்து வன்மை இல்லாதவர் !

சமுதாயத்தை மாற்றுவது கற்றோரது கடமை அல்லவா ?
ஒரு பெண் படித்தால் அவளது சமுதாயமே படித்ததுக்கு சமன் !
படிப்படியாக சாதி வரதட்சணை மாறும் ---
மாத்தணும் !!
கறுப்பர் அமெரிக்கால அனுபவித்த அநியாயங்களை விடவா எமது சமுதாயம் மோசம் ?
அங்கெ ஒரு முற்போக்கு கறுப்பர்
சிம்மாசனம் ஏறிவிட்டாரே !!!

வருண் said...

****சமுதாயத்தை மாற்றுவது கற்றோரது கடமை அல்லவா ?***

நிச்சயம் ஓரளவுக்கு முயற்சிக்கலாம் :-)

ஜி said...

//வரதட்சணை கொடுப்பது அசிங்கம்னு நினைத்தால், முதலில் எதற்க்குமே ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இப்படி ஒரு கேவலமான மாப்பிள்ளை என் மகளுக்கு வேணாம் என்று சொல்லிவிட்டு புரட்சிகரமான ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக அவர் வெயிட் பண்ணி இருக்கனும்.//

எனக்கு தெரிஞ்சு ஒருத்தங்க இப்படித்தான் வரதட்சணை கேக்குறவங்களுக்கு பொண்ண கொடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சுட்டு இருந்தாங்க... கடைசில வேற வழி இல்லாம வரதட்சணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிஞ்சது... இப்பல்லாம் எதையுமே கண்டுக்காம, அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் வாழ முடியும் :))

கதை நல்லா இருந்தது.... ஆனா, ரொம்ப சிறப்பா எல்லாம் இல்ல... :)) (I know you can take both positive and negative comments in the same way :))

வருண் said...

ஜீ:

கதை நல்லா இருந்தது நீங்க சொன்னதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. I completely agree with your rating!

Honestly I spent just half-hour to write this one, ji. Just felt like writing something and wrote this one. Of course I sort of had this plot in my mind for a while.

Anywy, the responses I received (including your comment)for that half-hour time I spent is just unbelievable! It is really very encouraging!

Hey! Thanks for your honest opinion, and for stopping by here, ji! :-)