Thursday, March 5, 2009

சாருநிவேதிதாவின் "எதிர்வினைகள்"!

எதிர் வினைனா என்ன? An opposite reaction? A criticism on what you write or believe? இல்லையா? ஆனா நம்ம திரு சாருநிவேதிதா என்னங்க இவர் கருத்துடன் ஒத்து போயி, இவரையும் இவருடைய நான் கடவுள் விமர்சனத்தையும் புகழ்ற பின்னூட்டங்களை எல்லாம் எதிர்வினைனு சொல்றார்?

I dont know why an appreciation on his review is called as an opposite reaction?


அவர் எதிர்வினைனு சொல்கிறதெல்லாம் எதிர்வினைகளாக தோணவில்லை. அவைகள் அவர் கருத்தை எதிர்க்கும்/மறுக்கும் விமர்சகர்களின் கருத்தும் அல்ல


நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள திண்ணை ஆர்டிக்கிளை ("சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்"- சேதுபதி அருணாசலம்) வேண்டுமானால் எதிர்வினைனு சொல்லுவேன்!

[ ***இந்த விமர்சனத்தை சாருநிவேதிதா கொஞ்சம் முன்னரே வெளியிட்டிருக்கலாம். சாருநிவேதிதாவின் விசிலடிச்சான் குஞ்சுகளிலேயே பலபேர் இந்தத் திரைப்படத்தின் இசையை அவசரப்பட்டு சிலாகித்து இளையராஜாவை மேதை, கீதை என்றெல்லாம் எழுதித் தொலைத்துவிட்டார்கள். அவர்களுடைய நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது!*** ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20902261&format=html

Now someone is going to come and tell me that you have got it all wrong!

Educate me, geniuses, by your "opposite reactions"!

குறிப்பு: சும்மா சண்டைக்கு வராதீங்கப்பா. எனக்கு உண்மையிலேயே எதிர்வினை னா என்னனு தெரிந்துகொள்ளனும்! உங்க எதிர்வினை யில் சொல்லுங்க!

6 comments:

rajadhi raj said...

na ninaikren, inga edhir means badhil, not opposite. Like, edhir parthal/ edhir oli.

Makes any sense?

வருண் said...

***rajadhi raj said...
na ninaikren, inga edhir means badhil, not opposite. Like, edhir parthal/ edhir oli.

Makes any sense?

5 March, 2009 10:30 AM***

You certainly made some sense out of it. :-)

பதில் வினை நல்லாயிருக்கு!

நன்றி, திரு. rajadhi raj :-)

அமர பாரதி said...

எதிர் வினைன்னா என்னன்னா. பதிவுக்கு வருவது பின்னூட்டம். அதுல பின்னூட்டப் பெட்டிய தூக்கிட்டு ஈ-மெயில் மூலமா பின்னூட்டம் வாங்கி, ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ஒரு பதிவா போடுறது.

வருண் said...

***அமர பாரதி said...
எதிர் வினைன்னா என்னன்னா. பதிவுக்கு வருவது பின்னூட்டம். அதுல பின்னூட்டப் பெட்டிய தூக்கிட்டு ஈ-மெயில் மூலமா பின்னூட்டம் வாங்கி, ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ஒரு பதிவா போடுறது.

5 March, 2009 11:06 AM***

LOL!

நித்யகுமாரன் said...

நண்பருக்கு,

சாருவின் பதிவுகளையெல்லாம் சீரியஸாக எண்ணி படிக்கும் உங்கள் போக்கினை மாற்றிக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். அவர் ஒரு காம நெடி மற்றும் காமெடி பதிவர் அவ்வளவுதான்.

அமரபாரதி அவர்களின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன். ”சாரு நீங்க ஒரு ஸ்டாரு” என்கிற ரீதியில் நீங்கள் எதுனாச்சும் கடுதாசி எழுதிப்போட்டா அது ”எதிர்வினை”யாக வர பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

என்னுடைய இந்த பதிவையும் படித்துப் பாருங்களேன்...
http://nithyakumaaran.blogspot.com/2009/02/blog-post.html

அன்பு நித்யன்

வருண் said...

நித்யா: உங்க எழுத்து ரொம்ப நல்லா இருந்தது. உங்க பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தின் நகல் இங்கே இருக்கு!

///அழகா, ஆழமா எழுதி இருக்கீங்க, நித்யா. அவர் எழுத்துக்களையும் பலர் எழுத்துக்களையும் ஆழமாகப் படித்த ஒருவர்தான் இது போல் எழுத முடியும்.

உண்மைதான் அவருக்குனு ஒரு ஜால்ரா கூட்டம் அலையுது. என்னை கேட்டால் உங்களைப் போல் என்னைப் போல் அவருடைய பலஹீனத்தை, குறைகளை தைரியமாக விமர்சனம் செய்பவர்கள்தான் அவருக்கு ஒரு வகையில் உதவுகிறோம். ஜால்ரா அடிப்பவர்கள் சாருவை மேலும் மேலும் கெட்ட வழியில் அனுப்புகிறார்கள். அவரின் எதிரிகள் அவர்கள்தாம்.

உங்கள் விமர்சனத்தை படித்து அவரை நல்ல எழுத்தாளாராக மாற்றிக் கொள்வாரா? அந்த அளவுக்கு திறந்த மனப்பாங்கு அல்லது பக்குவம் உண்டா அவரிடம்? இல்லை அவர் தன்னை துதிபாடுபவர்களை ரசிக்கும் "கடவுள்" போன்ற மூளையும், இதயமும் இல்லாத ஒரு கல் இனமா?

இல்லை ஜால்ராக்கள் ஆசையை நிவர்த்திசெய்ய காமப்பாதையில் முழுவதும் இறங்கிவிடுவாரா?

பார்க்கலாம்! :)////