"வணக்கம் சாரு சார்"
"வணக்கம்!"
"உங்ககிட்ட ஒரு சில கடினமான கேள்விகள் கேக்கலாமா?"
"கேளுங்க"
"விமர்சகரா இருப்பது எளிது. ஆனால் ஏதாவது உருவாக்குவது கடினம்னு உங்களுக்கு தெரியுமா?"
"அது உண்மைதான். ஒரு விமர்சனம் எழுத அடுத்தவர்கள் குறைகளை பார்க்கத்தெரிந்தால் போதும். அதை நம்மால் செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டியதில்லை"
"அப்போ அது உங்களுக்கே தெரியும்?"
"எல்லோருக்கும் தெரியும்"
"நீங்க கமலஹாஷன் நடிப்பில் எவ்வளவு திறமைசாலியோ அந்த அளவுக்கு திறமையான எழுத்தாளர்னு உங்களுக்கு தெரியுமா?"
"அப்படினு சொல்றீங்களா?"
"அதுதான் உண்மை! நம்புங்க"
"என்ன சொல்ல வர்ரீங்க?"
"கமலஹாஷன் ஆஸ்கர் பெற தகுதி இருந்தும் அவர் ஹாலிவுட் படங்கள், ஆங்கிலப்படங்கள் செய்யாததால் அவருக்கு கிடைக்கலை.. அது மாதிரி..."
"சொல்லுங்க"
"அதே மாதிரி, இலக்கியத்தில் நீங்க நோபல் பரிசு பெற தகுதி இருந்தும் நீங்க தமிழில் உங்க படைப்புகளை படைப்பதால் உங்களுக்கு கிடைக்கலை"
"அப்படினா சொல்றீங்க?"
"அப்படித்தான் சார்"
"சரி அதை அடைய நான் என்ன செய்யனும்?"
"கம்லஹாஷனிடம் கேளுங்க! உங்களுக்கு அவர் குறைகள் தெரிவதுபோல், உங்க குறைகள் அவருக்குத்தான் தெரியும்! நீங்க இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்க எப்படி எப்படி எழுதனும், எப்படி உலகத்திற்கு உங்க படைப்புகளை அடையச் செய்யலாம் என்று சொல்வார். உங்க "பட்" உங்களுக்கு தெரியாது பாருங்க!"
"நான் இதைப்பத்தி கொஞ்சம் யோசிக்கனும்"
"நல்லா யோசிங்க. நான் வரேன் சார்!"
6 comments:
நல்லா யோசிச்சிருக்கீங்க
வாங்க முத்துராமலிங்கம்! :-)
உங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றிங்க! :-)
ஏங்க அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
எல்லாரும் தமிழ்மக்களை மாதிரி பொறுமைசாலி கிடையாது...
இது சாருவை வாரல் சீசனோ. Any way லாஜிக்கலா வாரியிருக்கீங்க. (By the by உங்களது முந்தைய பதிவில் என்னுடைய பின்னூட்டத்தை நீக்கியதற்கு என் மென்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
***நாஞ்சில் பிரதாப் said...
ஏங்க அவரை வம்புல மாட்டிவிடறீங்க...
எல்லாரும் தமிழ்மக்களை மாதிரி பொறுமைசாலி கிடையாது...***
வாங்க ப்ரதாப்! :-)
பொறுமையில் மட்டுமல்ல தமிழர்களுக்குனு ஒர் தனித்துவம் எல்லாவற்றிலும் உண்டுங்க :-)))
***Rajaraman said...
இது சாருவை வாரல் சீசனோ. Any way லாஜிக்கலா வாரியிருக்கீங்க. (By the by உங்களது முந்தைய பதிவில் என்னுடைய பின்னூட்டத்தை நீக்கியதற்கு என் மென்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.***
சமீபத்தில் இவர் நடிகர் திலகத்தைக்கூட அவமானப்படுத்துகிறார். எதற்கெடுத்தாலும் கமலஹாஷனை விமர்சனம் வேற.
இவர் என்னத்தை இலக்கியத்தில் பெருசா கிழிச்சார்னு கேக்கனும் இல்லையா?
Mr. Rajaraman: My apologies for removing your response in the other thread. :-(
Post a Comment