Wednesday, March 18, 2009

நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!


தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


பாடல்கள்:

கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!

15 comments:

SUREஷ் said...

//இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது.//

//ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்!//

//தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது//

//தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார்,//எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது தல..

வருண் said...

வாங்க சுரேஷ்! :-)

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி!

உங்க வருகைக்கும் நன்றி :-)

தமிழன்-கறுப்பி... said...

வருண் எனக்கந்த மயக்கமென்ன பாட்டு பிடிக்கும்...

வருண் said...

அது ரொம்ப ரொமாண்டிக்கான பாடல்தான், தமிழன்! :-)

இதோ இருக்கு லின்க்!

http://www.youtube.com/watch?v=zV1QUS-Qt4A

பார்த்து மகிழுங்கள்! :-)

ராமலக்ஷ்மி said...

நல்ல படம்:)!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
நல்ல படம்:)!

18 March, 2009 8:07 PM***

ஆமாங்க, ராமலக்ஷ்மி!

நான் ரொம்ப ரசித்துப்பார்த்த படங்களில் இதுவும் ஒன்று! :-)

முரளிகண்ணன் said...

வருண், எனக்குப் பிடித்த இன்னொரு வசனம்.


“ஆண்டவன் எனக்கு மட்டும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால் அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழ்ப் போகும் இந்த வீட்டிற்க்கு தோரண்மாய் கட்டியிருப்பேன்”

கடைசி வரியில் பிழை இருக்கலாம்.

ஜோ / Joe said...

ஆஜர்.

ராஜ நடராஜன் said...

கதைக்கு தேவதாஸ்,திரைப்பட தெலுங்கு மூலத்துக்கு நாகேஸ்வர ராவ்,தமிழில் மெருகூட்டியதற்கு சிவாஜிக்கும்,அனுபவச்சு எழுதியதற்கு கண்ணதாசனுக்கும் இதில் பங்குண்டு.

வருண் said...

****முரளிகண்ணன் said...
வருண், எனக்குப் பிடித்த இன்னொரு வசனம்.


“ஆண்டவன் எனக்கு மட்டும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால் அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழ்ப் போகும் இந்த வீட்டிற்க்கு தோரண்மாய் கட்டியிருப்பேன்”

கடைசி வரியில் பிழை இருக்கலாம்.

18 March, 2009 9:44 PM***

வாங்க,முரளிக்கண்ணன்! :-)

ஆமாங்க அது மிகவும் ரசிக்கத்தக்கவுள்ள ரொமாண்டிக் வசனம்.

சிவாஜி வாணிஸ்ரீயிடம் தன் காதலிக்காக கட்டிய வசந்தமாளிகையைக் காட்டி அவளை எப்படியெல்லாம் காதலிக்கிறேன் என்று சொல்லும்கட்டம் அது!

வாணிஸ்ரீக்கு அவள்தான் அந்தக் காதலினு தெரியாது.

இதைப்பேசி முடித்துவிட்டு, அவர் இதயத்தைக்கொள்ளை கொண்டவள் வாணிஸ்ரீ என்பார்! அதை சொல்லும்விதமும் அழகாக இருக்கும்!

பிறகு ஒரு இமோஷனல் சீன் அதற்கப்புறம், மயக்கமென்ன பாடல் வரும்!

உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி, முரளிக்கண்ணன்! :-)

வருண் said...

**ஜோ / Joe said...
ஆஜர்.

18 March, 2009 10:08 PM***

வாங்க, ஜோ! :-))))

வருண் said...

***ராஜ நடராஜன் said...
கதைக்கு தேவதாஸ்,திரைப்பட தெலுங்கு மூலத்துக்கு நாகேஸ்வர ராவ்,தமிழில் மெருகூட்டியதற்கு சிவாஜிக்கும்,அனுபவச்சு எழுதியதற்கு கண்ணதாசனுக்கும் இதில் பங்குண்டு.

19 March, 2009 12:09 AM***

வாஙக, நடராஜன்! :-)

கண்ணதாசன் வரிகள், உண்மையின் தத்துவங்கள்! எல்லாப்பாடல்களும் அருமை! காலத்தால் அழியாதது.

சினிமா என்றாலே மட்டமாக பேசும் மேதாவிகள், இந்தப்படம் பார்த்தால், இதில் உள்ள பாடல் வரிகள் கேட்டால், அவர்களுக்கு குற்ற உணர்வு உண்டாக்கும் அளவுக்கு ஒரு சிறப்பான படம் இது என்பேன்!

லதானந்த் said...

”வருண்”

எனக்கு இந்தப் படத்தைக் கொண்டாடக் கூடுதல் தகுதி இருக்கு.
கதாநாயகன் பேரு கதாநாயகி பேரு என்னனு இன்னோரு முறைசொல்லுங்க

வருண் said...

***லதானந்த் said...
”வருண்”

எனக்கு இந்தப் படத்தைக் கொண்டாடக் கூடுதல் தகுதி இருக்கு.
கதாநாயகன் பேரு கதாநாயகி பேரு என்னனு இன்னோரு முறைசொல்லுங்க

19 March, 2009 6:44 AM ***

வாங்க லதானந்த் சார்! :-)

நீங்க சொன்ன பிறகுதான், லதா, ஆனந்த் என்று சொல்லிப்பார்த்து, அதை இணைத்து லதானந்த் என்று சொல்லிப்பார்த்து புரிந்துகொண்டேன், திரு. லதானந்த்! :)

நிச்சயமாக, உங்களுக்கு கொண்டாட உரிமை அதிகம்தான்! :-))))

zing513320 said...

arbuthamana kalaignan!