Friday, March 13, 2009

"கர்வம்பிடித்த நன்றிகெட்ட பதிவர்" பட்டம்!

அய்யோ நான் யாரையும் அப்படி சொல்லவில்லை! நெறையப்பேர் இதுபோல் ஒரு சில பதிவர்களை மனதுக்குள் திட்டிக்கொண்டு இருக்கார்கள். ஏன்? பல காரணங்கள். ஆனா நம்புங்க, இதுபோல் ஒரு சிலர் உங்களை தவறா புரிந்துகொள்வது பதிவுலகத்திலே ரொம்ப சாதாரணமா நடக்கிற ஒண்ணு.

நம்மை வளரவைக்கும் ஒரு நிர்வாகத்துடன் அனுசரித்துப்போனால், நீங்க தமிழினதுரோகி, இல்லைனா தமிழ்மண ஜால்ரா! நாளைக்கு நமக்கும் இதுபோல் ஒரு பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் செய்கிறோம். நம் பதிவுகளும் ஏதோ ஒரு பொது நோக்குடன் புறக்கணிக்க படலாம் என்று தெரியாதா என்ன? பொது நலத்தையும், பெரிய நோக்கிலும் அதை அனுகித்தான் நம் கருத்தை சொல்கிறோம் என்பது யாருக்கு தெரியும்?

கருத்து சுதந்திரம்னா என்ன? பதிவுலக நாகரீகம்னா என்ன? செய் நன்றிமறப்பதுனா என்ன? இவைகளின் அர்த்தம் பிரபல பதிவர்களுக்கு தெரியுமா? இல்ல தினமும் ஏதாவது ஒப்பாரி வைக்கும் பெரிய மனிதர்களுக்கு தெரியுமா? இல்லை ஒண்ணுமில்லாத என்னைப்போல் வெற்றுவேட்டு பதிவர்களுக்கு தெரியுமா? இல்லை பலமுறை யோசித்து கவனமாக பின்னூட்டமிடும் ஒரு சில வாசகர்களுக்கு மட்டும் தெரியுமா? இல்லை யாருக்குமே சரியாக தெரியாதா? இணையதளத்தில், தமிழ் பதிவுலகத்தில்தான் எவ்வளவு பிரச்சினை! எவ்வளவு மிஸண்டர்ஸ்டாண்டிங்! எவ்வளவு எதிரிகள்! எவ்வளவு பொறாமை!

நியாயம்னு எதுவும் இல்லையா? எல்லாமே சுயநலம்தானா? நம் சகோதரர்கள் தானே? மனம் திறந்து சொல்வோமேனு ஏதாவது சொன்னால், உங்களை தலைக்கனம் பிடித்த பதிவர்னு நினைப்பார்கள். உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தமிழ்பற்றாலர்களுக்கு புரியாது. ஏன்னா உங்களை பர்சனலா தெரியாது. நீங்க உண்மையில் எப்படிப்பட்டவர்னு ஒரு எழவும் தெரியாது.

இதைக்கேளுங்க, நீங்க நல்ல இந்தியனா இருந்தா, உங்களை தமிழ் துரோகி என்பார்கள்! தமிழனா இருந்தால் தேச துரோகி என்பார்கள்! இப்படி பல பட்டங்கள் வேறெங்கே வாங்க முடியும்?

இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும் ஏதாவது சொல்லனும், எழுதனும்னு ஒரு துடிப்பு. சரி எதையாவது எழுதி பதிவு செய்து தமிழ்மணத்தில் இணைத்தாச்சு! ஒருத்தராவது நம்மை சரியாக புரிந்துகொள்ள மாட்டாரா? என்கிற ஏக்கம்.

இந்த நேரத்தைல் பின்னூட்டங்களில் உள்ள குழப்பங்கள் பல.

ஒரு பதிவர்களுக்கு, ”நான் அவர் பதிவுக்கு பின்னூட்டமிடுகிறேன். ஆனா அவர் மட்டும் என் வலைதளம் வருவதே இல்லை” என்கிற குழப்பம், குற்றச்சாட்டு, கோபம்.

ஒரே பெயரில் வருவார்கள் ஆனால் சம்மந்தமே இல்லாத இருவர். கவனித்து பார்த்தால் தெரியும், ஒரே பெயர் வைத்திருக்கும் வேற வேற ஆட்கள் என்று.

ஒரே ஆள் புகழ்றதுக்கு ஒரு ஐ டி, திட்ட ஒரு ஐ டி!

பிரச்சினை பண்ணுவதற்கும், சண்டை போடுவதற்குமே ஒரு சில ஐ டி க்கள் வைத்து அலையும் பல "சைக்கோ தமிழர்களும்" இருக்காங்க!

நமக்கு ஒரு பிரச்சினனயினு வந்தால், அதற்கு நெறைய வகையான தீர்வுகள் இருக்கு. ஆனா அதே தமிழர் பிரச்சினைனு வந்தால்? கவனம்! நீங்க ஈசியா தமிழ் துரோகி பட்டம் வாங்க வாய்ப்பிருக்கு! யார் கொடுப்பா? ஏதாவது ஒரு முதுகெலும்பு இல்லாத அனானி!

காந்தியும்தான் சுதந்திரம் வாங்கினார். அவர் ஒரு கோழை என்பார்கள். நீங்க காந்தியவாதியா? உங்களுக்கு ரத்தம் சிந்துவது பிடிக்காதா? ஆனால் தமிழர்கள் அழிவதை தடுக்க முடியவில்லையா? என்ன செய்வதுனே தெரியலையா? நீங்க ஒரு கோழை! யார் சொல்றா? பேரில்லாத ஒரு அனானி! பெயர் மட்டும்தான் இல்லை! திமிரை பார்க்கனும்! அனானியா வந்து வாய்கிழிய பேசுவார்கள்! உனக்கும்தான் ப்ரொஃபைல் இல்லை! அதனால் என்ன? எனக்கு ஒரு பேர் இருக்கு! நான் அதே ஐ டி யில் வந்து நான் சொன்ன கருத்தைப்பற்றி விவாதிப்பேன்! யார் வேணா அனானியா வரலாம். ஏன் நானே, நீயா வரலாம், அனானி! புரியுதா?

தமிழர் பிரச்சினையில் உங்களால் தெளிவான ஒரு கருத்தை சொல்ல முடியாததால் பேசாமல் இருந்தால், தமிழின உணர்வுக்காக பதிவே நீ எழுவதில்லை என்ற குற்றசாட்டு வரும்!
என்னைக்கேட்டல் பேசாமல் முத்துக்குமார் மாதிரி எரிச்சிக்கிட்டு செத்தால்தான் நீங்க தமிழின உணர்வைக்காட்டி தியாகியாக முடியும். சரி, அப்படியே செய்தால் இதற்கு ஒரு முடிவு வந்துவிடுமா என்ன? அதுபோல் வரலாறு எதுவும் இல்லையே? இருக்கா? எங்கே?

உங்களை நம்பி நெறையப்பேர் இருக்காங்களா? சாகட்டும் விடுங்க! தமிழின துரோகி பட்டம் ஒரு அனானிட்ட இருந்து பெறாமல் நீங்க தப்பிக்கனும் இல்லையா? உயிரா முக்கியம்?

14 comments:

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

மணிகண்டன் said...

வர வர ntamil எல்லாம் me the first போட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன கொடுமைடா இது !

வருண் said...

*** nTamil said...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

13 March, 2009 12:32 PM***

உங்க சேவைக்கு நன்றி, "என் தமிழ்"!

வருண் said...

***மணிகண்டன் said...
வர வர ntamil எல்லாம் me the first போட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன கொடுமைடா இது !

13 March, 2009 12:57 PM***

வாங்க மணிகண்டன்!

ஆமா, நீங்கதான் ஃபர்ஸ்டா இருக்கனும். ஏன் இவ்ளோ லேட்டா வந்தீங்க? :-)))))

குடுகுடுப்பை said...

ஒரே ஆள் புகழ்றதுக்கு ஒரு ஐ டி, திட்ட ஒரு ஐ டி! பிரச்சினை பண்ணுவதற்கும், சண்டை போடுவதற்குமே ஒரு சில ஐ டி க்கள் வைத்து அலையும் பல "சைக்கோ தமிழர்களும்" இருக்காங்க!

//சைக்கோவை நமக்கேன் கவலை

வருண் said...

வாங்க குடுகுடுப்பை! :-)

நமக்கு ஏன் கவலையா?

நம்ம ரத்தத்தின் ரத்தங்கள் இல்லையா?

அதான் கவலை! :-)

ILA said...

:) Freeya விடனும், இல்லாட்டி .. இல்லாட்டி.. ஒன்னும் நடக்காது? செத்துப் போனாலே நியாயம் கிடைக்கல இதுல பதிவு போட்டா கெடைக்குமா? அதுவும்......ல

வருண் said...

***ILA said...
:) Freeya விடனும், இல்லாட்டி .. இல்லாட்டி.. ஒன்னும் நடக்காது? செத்துப் போனாலே நியாயம் கிடைக்கல இதுல பதிவு போட்டா கெடைக்குமா? அதுவும்......ல****

வாங்க, இளா! :-)

வால்பையன் said...

எனக்கு ஒன்னும் பிரியல!

ஏன் உங்களுக்கு இம்புட்டு நெகட்டிவ் ஓட்டு விழுகுது.

நீங்க நல்லவரா
கெட்டவரா

டெட் டெட்ட டெய்ங்
டெட் டெட்ட டெய்ங்

வருண் said...

வால்பையன் said...
***எனக்கு ஒன்னும் பிரியல!

ஏன் உங்களுக்கு இம்புட்டு நெகட்டிவ் ஓட்டு விழுகுது.

நீங்க நல்லவரா
கெட்டவரா

டெட் டெட்ட டெய்ங்
டெட் டெட்ட டெய்ங்***

வாங்க வால்பையன்!

நெகடிவோ, பாஸிடிவோ, வந்து ஓட்டுப்போட்டவங்களுக்கு நன்றிதான் சொல்லுவேன். :-)

கிரி said...

சொல்கிறவர்கள் ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பாங்க.. நம் செயல்கள் நியாயமாக இருந்தால் சரி

வருண் said...

***கிரி said...
சொல்கிறவர்கள் ஏதாவது சொல்லிட்டே தான் இருப்பாங்க.. நம் செயல்கள் நியாயமாக இருந்தால் சரி

14 March, 2009 7:42 AM ***

கிரி: ரெண்டுவரியில் எல்லாத்தையும் சொல்லீட்டீங்க!!!!

”மனசாட்சி” படி நடந்தால் சரிதான் என்பது முற்றிலும் உண்மை, கிரி.

ஆனால், நமக்கு எதிராக வாதம் செய்பவர்களின் நோக்கை கவனித்து புரிந்து கொண்டு, நம்மை ஓரளவுக்கு காலப்போகில் மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.

நம் கற்பனை நமக்கு உண்மைபோல் தோன்றும். நம் சுயநலம் நம் கற்பனையில் கலந்துவிடும். அதனால் அடுத்தவர்கள் பாயிண்ட் ஆஃப் வியூ வை திறந்த மனதுடன் பார்க்கனும்னு நினைக்கிறேன் . இதை எனக்கும் சேர்த்துதான் சொல்றேன், கிரி ;-)

பதி said...

//நெகடிவோ, பாஸிடிவோ, வந்து ஓட்டுப்போட்டவங்களுக்கு நன்றிதான் சொல்லுவேன். //

;)

மனசுக்கு தோன்றியதை எழுதி உள்ளீர்கள் !!!! பாராட்டுக்கள்...

வருண் said...

***பதி said...
//நெகடிவோ, பாஸிடிவோ, வந்து ஓட்டுப்போட்டவங்களுக்கு நன்றிதான் சொல்லுவேன். //

;)

மனசுக்கு தோன்றியதை எழுதி உள்ளீர்கள் !!!! பாராட்டுக்கள்...

14 March, 2009 11:50 AM ***

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, பதி :-)