Tuesday, March 10, 2009

பெண் முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?!

“உன்னை நேற்று தியேட்டரில் உன் ஃப்ரெண்டோட பார்த்தேன், காமினி”

“என்ன சொல்றீங்க!”

“ரெண்டு பேரும் ரசித்து ரசித்து அந்தப்படம் பார்த்தீங்க. உனக்கு நல்ல கணவனா அவர் இருப்பார்”

“---“

“டோண்ட் வொர்ரி, நான் இதை பெரிய விசயமாக்க போறதில்லை. என்னிடம் இல்லாதது அவரிடம் ஏதோ இருக்குனு புரிஞ்சுக்கிட்டேன். நம்ம ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிக்குவோம். நீ அவரையே கல்யாணம் பண்ணிக்கோ!”

“நீங்க நெனைக்கிறாப்பில அவர்..”

“என்ன காமினி? அவருக்கும் கல்யாணம் ஆயிருச்சா? இல்லைனா கல்யாணம்லாம் பண்ணிக்க மாட்டாரு, சும்மா அப்பப்போ படுத்து எந்திரிக்க வேணா வருவாறா?”அது என் பிரச்சினை இல்லை! I just don't care about it either. I cant live with a slut, Kamini!”

அழுகை

“ரொம்ப அழாதே, காமினி. உனக்கு ஒரு வேலை இருக்கு, உன்னை நீயே காப்பாத்துமளவுக்கு உனக்கு சம்பளம் வருது. அழகா வேற இருக்க! உனக்கு 26 வயதுதான் ஆகுது! நெறையா பாய்ஃப்ரெண்டு கிடைப்பார்கள். ஆம்பளைங்களுக்கா பஞ்சம்? நாய் மாதிரி அலைறானுக! சந்தோஷமா ஒரு நாளைக்கு ஒரு ஆளோட சுத்து. ரெண்டு பேரோடபடுத்து எந்திரி! தயவு செய்து என்னை மட்டும் விட்டுடு”

“-------”

“நான் என் ஹோம் டவுன் போறேன். திரும்பி இந்த வீட்டுக்கு வரமாட்டேன்! பார்க்கலாம்!”

------------------------

“என்னப்பா ராஜா, உன் மனைவி வரலையா?”

“இல்லைம்மா, நான் அவளை விவாகரத்து செய்யப்போறேன்”

“என்னப்பா இப்படி சொல்ற?”

“உண்மையைத்தானே சொன்னேன். எங்க ரெண்டு பேருக்கும் சரியா வரலை அம்மா! எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. அதனால் எந்த பிரச்சினையும் வராது"

"இதெல்லாம் நம்ம குடும்பத்தில் செஞ்சா நல்லா இருக்குமாப்பா?"

"உலகம் மாறிருச்சுமா! பெண்களுக்கு சுதந்திரம் கெடச்சிருச்சு! உங்களை மாதிரி அடிமையா வாழ இப்போ உள்ள பெண் தெய்வங்களுக்கு இஷ்டமில்லை! முழு சுதந்திர தாகத்தை தீர்க்கட்டுமே? அதிலென்ன தப்பு?”

“அப்போ, நீ வேற யாரையாவது இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறியாப்பா?”

“இல்லம்மா! ஒரு கல்யாணம் போதும் மா! வாழ்க்கையில் எல்லாப்பாடமும் படிச்ச திருப்தி வந்திருச்சு”

18 comments:

வால்பையன் said...

சத்தியமா கேணத்தனமா இருக்கு வருண்!
பெண் சுதந்திரம் என்பது இது தான் என்று நீங்கள் முடிவு செய்திருப்பது, உங்கள் முற்!?போக்கு சிந்தனையின் எல்லையை காட்டுகிறது!

தனிமனித ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் தான்!
அதற்காக பிரிய நினைப்பதும் அவர்களுது தனிப்பட்ட சுதந்திரமே!
ஆனால் இதை மையப்படுத்தி காட்டிருப்பது பெண்கள் எல்லோரும் ஒரு மாதிரியாக தான் திரிவது போல் இருக்கிறது.

என்னத்த தான் அமெரிக்காவுல கத்துகிறிங்களோ!

ரங்கன் said...

சாரி...
நாட் நைஸ்...

தோழி said...

enna solla vareenga. rendu per padam paarkka pona, adutha nimisham onna paduthuttu iruppangala. Enna varun ithu?

Oru pen oru aanoda padam partha, avangalukku per "slut"a. great thinking.

வருண் said...

வால்ப்பையன்:

எல்லாப்பெண்களும் இப்படி திரிவதாக நான் எங்கங்கசொன்னேன்?

நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெரியலை. கதையில் வருகிற காமினி க்கு ஒரு அஃபையர் இருக்கு. அதை பெட்ரூமில் பார்ப்பதாக எழுதவில்லை. அவளே அதை ஒத்துக்கொள்கிறாள்.

அது தவிர இது ஒரு கதைதான்.

நான் இதை முற்போக்கெல்லாம் சொல்லல!

அமெரிக்காவை விடுங்க பாவம் :-)

உங்க விமர்சனத்திற்கு நன்றி :-)

வருண் said...

***ரங்கன் said...
சாரி...
நாட் நைஸ்...

11 March, 2009 12:18 AM***

ஆமா, என்ன பண்றது? இதுபோலும் நடக்குத்தான் செய்கிறது :-(

வருண் said...

***Oru pen oru aanoda padam partha, avangalukku per "slut"a. great thinking.***

காமினிக்கு ஒருவருடன் அஃபையர் இருக்குங்க. அதை சினிமா தியேட்டரில் பார்த்ததாக சொல்லாமல் சொல்லி இருக்கேன் அவ்ளோதான்.

வால்பையன் said...

//கதையில் வருகிற காமினி க்கு ஒரு அஃபையர் இருக்கு. அதை பெட்ரூமில் பார்ப்பதாக எழுதவில்லை. அவளே அதை ஒத்துக்கொள்கிறாள்.

அது தவிர இது ஒரு கதைதான்.//

அப்படினா காமினி முன்னேற்றமெல்லாம் வெறும் பேச்சோடுதானா?!" என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்.

காமினியை மொத்த பெண்களின் பிரதிநிதி போல் தலைப்பு வைத்தால் வேறு எப்படி யோசிப்பது?

வருண் said...

***காமினியை மொத்த பெண்களின் பிரதிநிதி போல் தலைப்பு வைத்தால் வேறு எப்படி யோசிப்பது?

11 March, 2009 6:52 AM***

நீங்கள் யோசிப்பதுபோல் நான் யோசிக்கவில்லை :-)

sriram said...

Very Very wrong title. You cannot totally dissociate yourself claiming that it is just a story.After all, it is your imagination,right?

Penn munnetrathaiyum Extra marital affairaiyum edhukku connect pandreenga?

வருண் said...

sriram:

I agree that the title is misleading.

Tell me what is the attitude of "modern woman" today?!

If they see a girl like kamini, how do they react?

They get disappointed or they are upset or they justify?

Naresh Kumar said...

என்ன சொல்ல வர்றீங்க வருண்? முதலில் கதையில் காமினிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது என்று எங்கேயும் வரவில்லை. அவர் இன்னொருவருடன் சேர்ந்து சினிமாவிற்கு போனதாக மட்டுமே காட்டியிருக்கிறீர்கள்.

இதன் தலைப்பு மிக அபத்தம். பெண் முன்னேற்றம் என்று கொடுத்து விட்டு வேறொருவருடன் தொடர்பு என்று சொல்லுவது அபத்தத்தின் உச்சியாக நினைக்கிறேன்.ஒரு பெண் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள் அங்கே மறைமுகமாக இன்னொரு ஆணும் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறன் என்றே அர்த்தம்.

கடைசியில பெண் சுதந்திரம் கிடைச்சிருச்சு, அதனால பலருடன் சேர்ந்து சுத்தறாங்கன்னு, உங்க பாசையில சொன்னா படுத்து எந்திரிக்கறான்னு சொன்னீங்க பாத்தீங்களா, அங்கதான் அருவருப்பின் உச்சகட்டம் வெளிப்படுகிறது.

மொத்தத்தில், உங்கள் மனதில் பெண் சுதந்திரன் என்றால் என்ன நினைத்திருக்கிறீர்களோ, அதை சிறுகதை என்ற பேரில் தருகிறீர்கள், அவ்வளவே!!!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***Naresh Kumar said...
என்ன சொல்ல வர்றீங்க வருண்? முதலில் கதையில் காமினிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது என்று எங்கேயும் வரவில்லை. அவர் இன்னொருவருடன் சேர்ந்து சினிமாவிற்கு போனதாக மட்டுமே காட்டியிருக்கிறீர்கள்.***

Kamini was cheating on her husband and she thinks that that is her freedom!

**இதன் தலைப்பு மிக அபத்தம். பெண் முன்னேற்றம் என்று கொடுத்து விட்டு வேறொருவருடன் தொடர்பு என்று சொல்லுவது அபத்தத்தின் உச்சியாக நினைக்கிறேன்.ஒரு பெண் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள் அங்கே மறைமுகமாக இன்னொரு ஆணும் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறன் என்றே அர்த்தம்.***

Did I say men are perfect? They are filthy bastards! Now that women abuse their freedom as well. Cheating is not freedom. If you dont like your partner, divorce him! But some bimbos think fooling around is their freedom! That is not freedom!

***மொத்தத்தில், உங்கள் மனதில் பெண் சுதந்திரன் என்றால் என்ன நினைத்திருக்கிறீர்களோ, அதை சிறுகதை என்ற பேரில் தருகிறீர்கள், அவ்வளவே!!!***

I tried to imply, some women abuse their freedom! :-)

Naresh Kumar said...

//Kamini was cheating on her husband and she thinks that that is her freedom!//

இதைத்தான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றால் நீங்கள் இன்னும் விளக்கமாக அல்லது வேறொரு கதை எழுதியிருக்க வேண்டும். நீங்கள் சொல்லும்படியான எந்த விதமான வாதங்களும் இந்தக் கதையில் வரவில்லை.

//I tried to imply, some women abuse their freedom! :-)//

கள்ளத் தொடர்பு ரொம்ப நாட்களாகவே இங்கு இருந்துதான் வருகிறது. அதனால் புதிதாக பெண்சுதந்திரத்தை காரணம் காட்டிதான் இப்படி தவறுகள் நடக்கின்றன என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அல்லது ஏற்றுக் கொள்ளூம்படி உங்கள் கதை அமைய வில்லை.

நந்தா said...

ஊரே கும்மி அடிச்சிருக்கு. நான் மட்டும் என்னத்தை சொல்ல.

1.தலைப்பு மகா அபத்தம். ஏதோ வித்தியாசமா கொடுத்திருப்பீங்கன்னு நினைச்சு வந்து பார்த்தேன். இவ்வளவு கேவலமா எழுதி இருப்பீங்கன்னு தோணலை.

2.ஒரு நல்ல ஆணை ஒரு மோசமான பெண் ஏமாற்றுகிறாள் என்று ஒரு கருவை வைத்து நீங்கள் ஒரு கதையை எழுத முயற்சித்திருக்கிரீர்களோ? அதுதான் உங்கள் நோக்கமாய் இருந்திருக்க்கும் பட்சத்தில் இந்த கதை சிறுகதைக்கான அடிப்படை புள்ளியைக் கூட தொட வில்லை. அந்த ஆண் மிகவும் நல்லவன் என்பது போன்ற சுட்டல்கள எங்கும் தரப்பட வில்லை. கற்பு, ஒழுக்கம் போன்ற இன்ன பிற பெண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட அடையாளங்களை மீறியதைத் தவிர காமினியும் வேறெந்தத் தவறும் செய்ய வில்லை. உண்மையான தவறு எங்கே ஆரம்பித்தது என்பதை எவர் சொல்ல முடியும்?

3. //நீங்கள் யோசிப்பதுபோல் நான் யோசிக்கவில்லை :-)//
நாங்க எல்லாம் தனியே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்க வி்ல்லைங்க. படிச்ச அடுத்த நொடி இந்த கேள்விதான் மனதில் எழுகிறது.

4.//Tell me what is the attitude of "modern woman" today?!//

கதையை விட இந்தக் கேள்விதான் மகா மட்டமா இருக்கு. ஒரு நூறு வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறவர்கள் போல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.

http://blog.nandhaonline.com

வருண் said...

***இதைத்தான் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றால் நீங்கள் இன்னும் விளக்கமாக அல்லது வேறொரு கதை எழுதியிருக்க வேண்டும். நீங்கள் சொல்லும்படியான எந்த விதமான வாதங்களும் இந்தக் கதையில் வரவில்லை.***

LIke I said, I did not want to go into the details of it. I just implied it. I agree that I did not do it very well.

***நீங்கள் சொல்லும்படியான எந்த விதமான வாதங்களும் இந்தக் கதையில் வரவில்லை.****

I am not arguing/debating anything here. I just have an opinion that the "freedom" is abused by some women!

வருண் said...

***கள்ளத் தொடர்பு ரொம்ப நாட்களாகவே இங்கு இருந்துதான் வருகிறது.***

I believe it got worse after women got the freedom as both men and women abuse the freedom and it sums up now!

**அதனால் புதிதாக பெண்சுதந்திரத்தை காரணம் காட்டிதான் இப்படி தவறுகள் நடக்கின்றன என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அல்லது ஏற்றுக் கொள்ளூம்படி உங்கள் கதை அமைய வில்லை.***

Fine, we can agree to disagree on that. I respect your opinion of calling the title as absurd. :-)

Take care! ;-)

வருண் said...

***1.தலைப்பு மகா அபத்தம். ஏதோ வித்தியாசமா கொடுத்திருப்பீங்கன்னு நினைச்சு வந்து பார்த்தேன். இவ்வளவு கேவலமா எழுதி இருப்பீங்கன்னு தோணலை.***

Sorry, I did not satisfy your anticipaion as the title is misleading, at this time!

***கதையை விட இந்தக் கேள்விதான் மகா மட்டமா இருக்கு. ஒரு நூறு வருடங்களுக்கு பின் தங்கி இருக்கிறவர்கள் போல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.***

Really?! Just laugh it off, my friend.

Thanks for stopping by.

You know I could get more people's attention by being absurd. LOL!